Infant Jesus Church Vasanthapuram

Infant Jesus Church Vasanthapuram Devotion to the Infant Jesus of Vasanthapuram. "Holy Infant Jesus, bless and protect us"

⛪ அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்

Devotion to the Infant Jesus of Vasanthapuram 🙏

🎊 ”நீ என்னை மகிமை செய்யச் செய்ய நான் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பேன்” என்ற குழந்தை இயேசுவே உமது திருக்கரங்களால் எங்களை உமது அருளாலும், ஆசீராலும் நிரப்பும் 🎊

31/07/2026
26/07/2026

Saints Joachim and Anne Feast

நமது பங்கு மூன்றாவது அன்பியத்தை சார்ந்த திரு மரிய லாரன்ஸ் அவர்கள்  இன்று (20 JUN 2026)   காலமானார். அவரது நல்அடக்கம் இன்...
21/06/2026

நமது பங்கு மூன்றாவது அன்பியத்தை சார்ந்த திரு மரிய லாரன்ஸ் அவர்கள் இன்று (20 JUN 2026) காலமானார். அவரது நல்அடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஓளி இவா்மீது ஒளிர்வதாக! 🙏

நமது பங்கு ஒன்றாவது அன்பியத்தை சார்ந்த திருமதி தெரசம்மாள் அவர்கள்  இன்று (20 Jun 2026) காலை காலமானார். அவரது நல்அடக்கம் ...
20/06/2026

நமது பங்கு ஒன்றாவது அன்பியத்தை சார்ந்த திருமதி தெரசம்மாள் அவர்கள் இன்று (20 Jun 2026) காலை காலமானார். அவரது நல்அடக்கம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஓளி இவா்மீது ஒளிர்வதாக! 🙏

🎊 புனித அந்தோணியார் திருவிழா 🎊💐 Happy Feast of St. Anthony of Padua 💐🙏 புனித அந்தோணியாரே எங்களுக்காக இயேசுவிடம் பரிந்து ...
13/06/2026

🎊 புனித அந்தோணியார் திருவிழா 🎊
💐 Happy Feast of St. Anthony of Padua 💐
🙏 புனித அந்தோணியாரே எங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசும் 🙏
✝️ இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
தூய்மை துலங்கும் லீலியே!
விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
விண்ணுலக மண்ணுலக காவலரே!
கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சஞ்சீவியானவரே!
பாவிகளின் தஞ்சமே!
உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே!
சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே!
திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே!
உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
எங்கள் தஞ்சம் நீரல்லவோ!
எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ!
நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.
பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ?
உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்.
அழுகிறவர்களை அரவணையும்.
அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்?
நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்?
நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்.
பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே!
தயைக்கடலே!
தவிப்பவர்களுக்குத் தடாகமே!
தனித்தவர்க்கு தஞ்சமே!
உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம்.
துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ?
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ?
எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ?
ஐயா எங்களின் அன்பான தகப்பனே!
எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம்!
எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும். ஆமென். ✝️
🙏புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் 🙏
புதுமைகள் பல புரிய அருள் பெற்ற புனித அந்தோணியாரே! எங்கள் விண்ணப்பங்களை
ஏற்று எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தாரும்.
குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறு பெற்ற புனித அந்தோணியாரே!
துன்பப் படுவோருக்கு துணை புரியும்
வள்ளலே!
ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன்
அரவணைக்கும் நேசத் தந்தையே,
இதோ, உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன்
உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம்.
நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எம்
ஆன்மாவிற்கும் உடலிற்கும் வேண்டிய
வரங்களைப் பெற்றுத் தாரும்.
இறை அருளை எரளாமாய் பெற்ற புனித அந்தோணியாரே! நாங்கள் உம் வாழ்வைப் பின்
பற்றி, எல்லாவற்றிற்கும்
மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம்
சேர எங்களுக்கு
அருள் பெற்றுத் தந்தருளும். எங்கள் பாதுகாவலரான
புனித அந்தோணியாரே!
மகிமையில் விளங்கும் புனித லீலியே!
துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே!
அழுவோரின் ஆறுதலே! உம்மை நாடி
நிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து
ஏற்றுக் கொள்ளும். துன்பதுயரங்களினின்றும் எங்களைக்
காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள்
வாழ்வை வளமாக்கும். சோதனைகளை
வெல்ல வலிமையைப் பெற்றுத்தாரும்.
அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ்வதற்கு அறியாது வருந்தும்
எமக்கு வாழ
வழிக் காட்டும்.
எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத
வியாதிகளை
உமது வல்லமை நிறைந்த மன்றாட்டால் எங்களிடமிருந்து நீக்கியருளும். 🙏
🎊 தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை 🎊
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியரில் உத்தம கன்னிகையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தவ வலிமை மிக்க தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விஷஉணவு அருந்திய தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
🙏 மன்றாடுவோமாக 🙏
தூய அந்தோனியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

நமது பங்கு ஒன்றாவது அன்பியத்தை சார்ந்த திரு T. ஸ்டார்வின் ராஜ் அவர்கள்  இன்று (08 May 2026) காலை மாரடைப்பால் காலமானார். ...
08/06/2026

நமது பங்கு ஒன்றாவது அன்பியத்தை சார்ந்த திரு T. ஸ்டார்வின் ராஜ் அவர்கள் இன்று (08 May 2026) காலை மாரடைப்பால் காலமானார். அவரது நல்அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஓளி இவா்மீது ஒளிர்வதாக! 🙏

🕊️ Happy Feast of Pentecost! 🔥May the Holy Spirit fill your heart with peace, love, and divine blessings. 🔥✨
24/05/2026

🕊️ Happy Feast of Pentecost! 🔥
May the Holy Spirit fill your heart with peace, love, and divine blessings. 🔥✨

🎊🎉 Heartfelt wishes to our beloved Parish Priest, Fr. Alwin Vijay, on your Priestly Ordination Anniversary. May your lif...
07/05/2026

🎊🎉 Heartfelt wishes to our beloved Parish Priest, Fr. Alwin Vijay, on your Priestly Ordination Anniversary. May your life continue to inspire faith, hope and love in everyone you serve. Thank you for being a wonderful shepherd to our parish family. May God bless you abundantly with good health, happiness, strength and many more years of fruitful ministry 🎊💫✨

ஆண்டவரின் உயிர்ப்பு திருவிழா நல்வாழ்த்துக்கள்.Happy Easter 🥚🧺✨
05/04/2026

ஆண்டவரின் உயிர்ப்பு திருவிழா நல்வாழ்த்துக்கள்.
Happy Easter 🥚🧺✨

03/04/2026

புனித வாரம் நிகழ்வில் சிலுவை முத்தம் செய்யும்
நிகழ்வின் ஒரு பகுதி

Address

Vasanthapuram, Azhaganparai Post, Kanniyakumari District
Nagercoil
629252

Opening Hours

Monday 6am - 7pm
Tuesday 6am - 7pm
Wednesday 6am - 7pm
Thursday 6am - 8pm
Friday 6am - 7pm
Saturday 6am - 7pm
Sunday 6am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Infant Jesus Church Vasanthapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share