17/04/2025
*🕯️திருமணி✝️ஆராதனை🕯️*
ஆண்டவர் இயேசுவோடு இருந்து ஒருமணிநேரம் அவருடைய பாடுகளை அவருடைய வியாகுலங்களை தியானிக்க கீழ் வரும் ஜெபங்களை செய்ய ஆயத்தமாவோம். இந்த ஜெபத்தை செய்து ஆண்டவருடைய கருணையை, அவரிடம் வரங்களை பெறாதவர்கள் இல்லை. எனவே..!
*👇🏻விசுவாசத்துடன் ஜெபிப்போமே👇🏻*
*தொடக்க செபம்:-*
எனதன்பான சேசுவே! என் ஏக நேசமே! எங்கள் பாவங்களினாலேயும், அசட்டைத்தனத்தினாலேயும் உமது நேச இருதயத்திற்கு நாங்கள் கொடுக்கிற கஸ்தியின் நிமித்தம் நீர் உமது மனம் நொந்து பெருமூச்செறிந்து ”என்னோடு துக்கப்படும்படி ஒருவரைத் தேடிப் பார்த்தேன், அப்படிப்பட்டவர் ஒருவரையும் காணேன், எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி ஒருவரைத் தேடினேன்; அப்படிப்பட்ட ஒருவரும் கிடைக்கவில்லை” (சங் 68.21) என்று வசனித்தீரே! உம்முடைய இந்த முறைப்பாட்டைக் கேட்டு என் இருதயம் துக்க சாகரத்தில் அமிழ்ந்து, சிநேக அக்கினியால் சுவாலை விட்டெரிந்து என்பேரில் வைத்த சிநேகப் பெருக்கத்தால், சற்பிரசாதத்தில் இராப்பகலாய் வீற்றிருக்கும் உட்முடைய திரு இருதயத்திற்கு ஆறுதல் தர ஆசையாயிருக்கிறேன்.
ஆ! துயரம் நிறைந்த சேசுவே, தேவரீருடைய துக்கப் பெருக்கத்திற்கு காரணம் என்னுடைய கணக்கற்ற பாவத் துரோகங்களல்லவோ! ஆயினும், என் அன்பான சேசுவே, என் பாவங்களைப் பற்றி என் மேல் கோபமாயிராமல் நீர் எனக்காகப் பட்ட திருப்பாடுகளைப் பார்த்து, பட்சமுள்ள தகப்பனார் தனது ஊதாரிப் பிள்ளையை ஏற்றுக்கொண்டது போல (லூக். 15.20.24) என்னையும் ஏற்றுக்கொண்டு என் பேரில் இரக்கமாயிரும். பாவியாயிருந்த மரிய மதலேனம்மாளுக்கு நீர் சொன்னதுபோல எனக்கும் ”உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லும். உமது திரு இருதயத்தின் நேசமகள் மார்கரீத் மரியம்மாளுக்கு ”என் மகளே, என் இருதயத்துக்கு ஆறுதலாக ஒரு உயிர்ப்பலியைத் தேடுகின்றேன், உன்னை நான் தெரிந்துகொண்டேன்.” என்று நீர் சொல்லியது போல் ஏழைப் பாவியாகிய எனக்கும் சொல்லி என்னை உம்முடைய திரு இருதயத்துக்குள் ஏற்றுக் கொள்ளும். அங்கே எப்போதும் நான் இருந்து சீவிக்கும்படி என்னை ஆசீர்வதித்தருளும். உமது அன்பினால் என் இருதயத்தைப் பற்றியெரியச் செய்தருளும். சேசுவின் மதுரமான திருஇருதயமே, என் சிநேகமாயிரும்.
ஆ! என் நல்ல சேசுவே, எனது பாவங்களுக்குத் துக்கப்பட்டு உமக்காக சிநேகத்தால் எரிந்து, உம்முடைய பிரிய மகளிடத்தில் நீர் கேட்டதுபோல் இந்த ஒருமணி நேரத்தில் நீர் ஜெத்சமனித் தோட்டத்தில் பட்ட துக்க துயரத்தோடும், சொன்ன செபத்தோடும், நானும் சேர்ந்திருக்கும்படி எனக்குக் கிருபை செய்தருளும்.
வியாகுலம் நிறைந்த தேவ தாயாரே, உம்முடைய திருக்குமாரன் ஜெத்சமனித் தோட்டத்தில் தனிமையாய் மரணமட்டும் துக்கமாயிருந்த நேரத்தில், அவருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்வதற்கு இயலாமல் நீர் பட்ட துக்கத்தை நினைத்து இந்தத் திருமணி ஆராதனையில் உம் திரு இருதயத்தோடு என் இருதயத்தையும் ஒன்றித்துக் கொள்ளும். உம்மோடு அழுது பிரலாபித்து சற்பிரசாதத்தில் யாரும் கவனியாமல் இருக்கிற உமது திருமகனை நேசித்து அவருக்கு ஆறுதல் கொடுக்கும்படி எனக்குத் தயை செய்யும்.
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃
*உத்தம மனஸ்தாப மந்திரம்:*
சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான்முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்டதேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்தமனஸ்தாபப்படுகிறேன். எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கு இதுவே
துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலம் போதாமையால், சேசுநாதர் சுவாமி பாடுப்பட்டுச் சிந்தின திரு
இரத்தப்பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடையவரபிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.
ஆமேன்.
*பொறுத்தருளும் கர்த்தாவே உமது சனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும்.*
*என்றென்றைக்கும் எங்கள் பேரில் கோபமாயிராதேயும் சுவாமி.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*🕯️முதலாம் கால் மணி🕯️*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*”என் ஆத்துமம் மரணமட்டும் துயரத்தால் நிறைந்திருக்கிறது”. மத். 26.39*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தியானம்:-*
ஆ! நேச இயேசுவே! நீர் எங்கள் மேல் வைத்த அன்பினால், எங்களோடு உலக முடிவுபரியந்தம் வசிக்கும்படிக்கும், எங்கள் ஆத்தும போசனமாகவும், எங்கள் இருதயம் உமது நேசத்தால் எரியும்படிக்கும் திவ்விய சற்பிரசாதத்தை ஏற்படுத்தினீர்.
அதன்பிறகு, அதே இரவில் எங்களைப் பாவத்திலும், பசாசின் அடிமைத்தனத்திலும் நின்று, மீட்பதற்காக புங்காவனத்திற்கும் எழுந்தருளி முகங்குப்புற சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை உயிர்ப்பலியாக உமது பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தீர்.
ஆ! என் ஆத்துமமே, பாவத்தின் குரூரமும் கொடுமையும் எத்தகையதென்று இதிலிருந்து நீ அறிந்துகொள்ளக்கூடும். சேசுக்கிறீஸ்துநாதர் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படி அவை எல்லாவற்றையும் தம்மேல் சுமந்துகொண்டார். அப்பொழுது இந்தப் பாவங்களின் அழுக்கினாலும், ””அரோசிகத்தினாலும் அவலட்சண குஷ்டரோகம் நிறைந்த ஒரு தேவதுரோகியைப் போல பயங்கரமான துக்க துயரங்களுக்குள்ளானார். அப்பொழுது இந்தத் துயரத்தைத் தாங்க மாட்டாமல் முகங்குப்புற விழுந்து ”மரணமட்டும் என் ஆத்துமம் துயரத்தால் நிறைந்திருக்கின்றது” (மத். 26.38) என்று வசனித்தார். பின்னும் அதைப் பொறுக்க இயலாததுபோல ”இரத்தத் துளிகளாக அவருக்கு வியர்வையுண்டாகி நிலத்தில் சிந்திற்று” (லூக். 22.44). சேசுக்கிறீஸ்துநாதர் தாம் பட்ட இந்தப் பாடுகளைப்பற்றி அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளுக்குப் பின்வருமாறு வசனித்தார். "பாவத்தினுடைய குரூரத்தையும், அரோசிகத்தையும் மனிதர் அறியாதபடியால் நான் பூங்காவனத்தில் பட்ட துக்கத்தை விளங்கிக்கொள்ள முடியாது”.
அது மட்டுமல்ல, இவ்வளவு கடுமையான வேதனைகளைப் பட்ட பிறகும் சதாகாலத்துக்கும் நரகத்திற்குப் போகிற திரளான மனிதர்களைப் பற்றி நினைத்து இன்னும் துக்கத்துக்குள்ளாகி அதிகமதிகம் செபித்தார். (லூக். 22.43).
ஆ! இரக்கம் நிறைந்த சேசுவே, எங்கள் பாவங்களை உமதுமேல் சுமந்துகொண்டு அதற்கு உத்தரிக்கும்படி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது உமது பிதாவின் பயங்கரமான பார்வையை சகிக்க முடியாமல் ”என் தேவனே, என் தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?” (மத். 27.46) என்று சொல்லிக் கதறினீராகில், பாவத்தில் அமிழ்ந்தி மரணத் தறுவாயிலிருக்கிறவர்களுக்கு அது எவ்வளவு பயங்கரமுள்ளதாயிராது.
மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திரு இருதயமே, மரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஆ! என் ஆத்துமமே, உனக்கு இவ்வளவு நேசம் காட்டுகிற தேவனுக்கு விரோதமாக எப்படிப் பாவம் செய்யத் துணிந்தாய்? நீசத்தனமாக திரும்பவும், திரும்பவும் எத்தனையோதரம் பாவம் செய்தாய்! ஆ! என் நேச சேசுவே, என் பாவங்களைப் பொறுத்தருளும். இனிமேல் உம்முடைய உதவியால் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டேன் என்று கெட்டியான பிரதிக்கினை செய்கின்றேன்.
*வியாகுல மாதாவே, என் நேசத்தாயே, எனக்குக் கிருபை செய்தருளும்.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*சேசுநாதருடைய திருப்பாடுகளின் செபம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எங்களுக்காக மனிதனாய்ப் பிறந்து, எங்கள் மேல் வைத்த அன்பினால் சிலுவையில் அறையுண்டு உயிர்விட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
எங்களுடைய பாவச்சுமையை தேவரீர் சுமந்து, அதன் கனத்தால் தேவரீருடைய இருதயம் நைந்து, மரணமட்டும் துக்கமாய் உம்முடைய சரீரம் இரத்த வியர்வையில் தோய்ந்து,ஜெத்சமனித் தோட்டத்தில் கடின அவஸ்தைப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
பூங்காவனத்தில் மிகுந்த துக்கப்பட்டு ”பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கடவது” என்று பிதாவை வேண்டிக்கொண்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்டு, முத்தமிட்ட துரோகியாகிய யூதாஸ் என்பவனால் யூதருக்குக் கையளிக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சங்கிலிகளாலும், கயிறுகளாலும் கட்டப்பட்டு வழியில் தேவ தூஷனை சொல்லி அடிக்கப்பட்டு ஒரு குற்றவாளி போல நீசமான மரணத் தீர்ப்புப்பெற இழுத்துக்கொண்டு போகப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
அன்னாஸ், கைப்பாஸ், பிலாத்து, ஏரோது இவர்கள் முன்னால் அவமானமாய் கொண்டுபோய் நிறுத்தப்பட்டு, அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு, கன்னத்தில் அறையப்பட்டு, நிந்திக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
திருமுகம் மூடப்பட்டவருமாய், சட்டைகள் கழற்றப்பட்டவருமாய், கற்றூணில் கட்டுண்டு மிகுந்த நிஷ்டூரத்தோடு அடிக்கப்பட்ட இயேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
முள்முடி தரிக்கப்பட்டு, திருமுகத்தில் துப்பப்பட்டு, திருச்சிரசில் மூங்கிற்றடியினால் அடிக்கப்பட்டு, ஓர் பரிகாச இராஜாவாக அவமானப்படுத்தி நிந்திக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய திருச்சரீரமெல்லாம் அடிகளால் கிழிக்கப்பட்டு, திருஇரத்தம் வெள்ளமாய் ஓட, யூதர்களுடைய கோபம் தீரும்படியாய் பிலாத்து என்பவனால்”இதோ மனிதன்” என்று யூதர்களுக்குக் காட்டப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீர் அவர்களுக்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்திருந்தும், இருதயம் வெடிக்கும்படி தேவரீருடைய திருச்சரீரம் கிழியுண்டிருந்ததைக் கண்டும், உம்மை விட்டுக் கொலைகாரனான பரபாசைத் தெரிந்துகொண்டதைப் பார்த்தும் அதிக துயரமடைந்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பு பெற்ற சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
நிந்தையும் அவமானமுமான சிலுவையைச் சுமந்து மிகவும் சாதுள்ள ஓர் செம்மறிப் புருவையைக் கொலைக்களத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறதுபோல கொண்டு போகப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
அகோர வேதனையினாலும், தேகத்தில் இரத்தமெல்லாம் குன்றிப்போனபடியாலும், சிலுவையின் பாரத்தால் அநேகதரம் கீழே விழுந்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும். சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையில், தேவரீருடைய பரிசுத்த வியாகுல மாதாவை சந்தித்துப் பொறுக்க முடியாத கஸ்தியும், உருக்கமும் அனுபவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையை சுமந்து கொண்டு போகத் தேவரீருக்கு உதவி செய்த சீரேன் நகர சீமோனின் இருதயத்தை தேவசிநேக அக்கினியால் மூட்டி எரியப்பண்ணின சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும். வேற்றுருவாயிருந்த தேவரீருடைய திருமுகத்தை வெரோணிக்கம்மாள் துடைத்தபொழுது, அந்தத் துகிலிலே உம்முடைய திருமுகம் அற்புதமாய் பதியச் செய்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையைச் சுமந்துகொண்டு போகையில் உம்மைப் பார்த்து அழுதப் பரிசுத்தப் பெண்களுக்கு ஆறுதல் சொன்ன சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய காயங்களோடே ஒட்டியிருந்த ஆடைகள் உரியப்பட்டதினாலே அகோர வேதனையும் மானபங்கமும் அனுபவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
திருப்பாதங்கள் கொடூர இரும்பாணிகளாலே துளைத்து அறையுண்டு, இரு கள்வர் நடுவில் சிலுவையில் உயர்த்தப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையில் தேவரீர் அனுபவித்த கடைசி மரண அவஸ்தை நேரத்தில் எங்கள் மேல் கொண்ட இரக்கத்தால் உம்முடைய திருமாதாவை எங்களுக்குத் தாயாகக் கையளித்து, அவருடைய தயாளமுள்ள மாதாவுக்குரிய அன்புக்கு எங்களை ஒப்புக்கொடுத்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீரோடு சிலுவையிலே அறையுண்டு பச்சாதாபக் கள்ளனுக்கு மோட்ச இராச்சியத்தை அன்றே வாக்களித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய துக்க சாகரத்தில் உம்முடைய பரமபிதாவினால் கைவிடப்பட்டு, உம்முடைய தாகத்துக்கு மனிதர் கசப்பான காடியைக் கொடுக்க, அந்நேரத்தில் எவ்வித ஆறுதலும் இன்றித் தவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையில் மரித்த எங்களுடைய பாவப் பொறுத்தலுக்காக தேவரீருடைய உயிரைப் பரமபிதாவுக்குப் பலியாக்கின சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
எங்கள் மேல் சொரிந்த தேவசிநேகத்தினாலே உம்முடைய உயிரை எங்களுக்கு பலியாக்கின பின்னும், உயிரற்ற உமது திரு இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டுக் கடைசித்துளி இரத்தமும், தண்ணீரும் சிந்திய சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு வியாகுலம் நிறைந்த உம்முடைய திருமாதாவின் மடியில் வளர்த்தப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய திருச்சரீரமானது பரிமளத் தைலத்ததால் பூசப்பட்டு, பரிசுத்த கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
*செபிப்போமாக:-*
மதுரமான சேசுவே! தேவரீருடைய பரிசுத்த பாடுகளினாலும், சிலுவை மரணத்தினாலும், திருக்காயங்களினாலும், திரு இரத்தத்தினாலும் எங்களைச் சடுதி மரணத்தினின்றும், நிர்ப்பாக்கிய சாவினின்றும் காப்பாற்றி, பாவத்தினின்றும், நித்திய நரகத்தினின்றும் இரட்சித்து, என்றென்றும் உமது திரு இருதயத்திற்குள் எங்களை வைத்துக் காப்பாற்றியருளும் சுவாமி.
*ஆமென்.*
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
*🕯️இரண்டாம் கால் மணி🕯️*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*”என் பிதாவே! இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்; ஆனால் என் மனதின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்!” (மத். 26.38)*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
*தியானம்*
நேச சேசுவே, மனிதருடைய ஆங்காரத்தினாலேயும், கீழ்ப்படியாமையினாலேயும் பாவம் விளைந்தபடியால், உம்முடைய தாழ்மையான கீழ்ப்படிதலினால், அதற்கு உத்தரித்து பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றக் கிருபைகூர்ந்தீரே! உம்முடைய திருச்சரீரத்திலிருந்து இரத்த வியர்வை வடிந்து, உம்முடைய திரு இருதயம் துக்கத்தால் நொறுங்கி நடுநடுக்கமுற்றுப் பயங்கரத்துக்குள்ளாகி, ”என் பிதாவே! இந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று வசனித்தீரே! உம்முடைய மனித சுபாவத்துக்குப் பயங்கரமான கடின வேதனைகளைக் கையேற்றுக் கொண்டு நீர் தாழ்மையாகச் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் சமயத்தில் இந்தக் கசப்பான பாத்திரத்தைப் பிதாவின் சித்தப்படி விருப்பத்தோடு கையேற்றுக்கொண்டீரே!
ஆ! எனது ஆத்துமமே, உன்னுடைய சகல துக்க துயரங்களிலும் சேசுக்கிறீஸ்து நாதர் உனக்குக் காட்டுகிற நேசத்தைப் பார்த்து, இவ்வளவு நேசமுள்ள தேவன் எனக்கு நன்மையன்றி தீமை ஒருபோதும் வரவிடமாட்டாரென்று விசுவசிப்பாயாக. சேசுநாதர்சுவாமி நமக்காகப்பட்ட துக்கத்தை நினைத்து நம்முடைய துக்கங்களை அவருடைய திருப்பாடுகளோடு சேர்ப்போம். இன்னும் அவர் பூங்காவனத்தில் செபித்ததுபோல் நாமும் அவரோடு செபிப்போம். ”என் பிதாவே! இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும். ஆனால் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படியாகட்டும். என் பிதாவே, நான் இந்தப் பாத்திரத்தைக் குடித்தாலொழிய அது நீங்கிப்போகக் கூடாதாகில், உமது சித்ததப்படியே ஆகட்டும்”.
என் அன்பான தாயாரே! உம்முடைய திருக்குமாரனின் தூய இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவும். அவருடைய திருப்பாடுகளைப் பார்த்து சகலப் பாவச் சோதனைகளிலுமிருந்து என்னை இரட்சித்துக்கொள்ளும். அவருடைய மகிமைப் பிரதாபத்தால் என்னை உடுத்தியருளும். உம்முடைய புண்ணியங்களால் என்னை அலங்கரியும். உம்முடைய திருக்கரங்களில் என்னை ஏந்தி, நான் என்னுடைய சீவியத்தை உம்முடைய திருக்குமாரனின் சித்தப்பிரகாரம் நடத்த எனக்குக் கிருபைபுரிந்து அவருடைய திரு இருதயத்துக்கு என்னையும் ஓர் உயிர்ப்பலியாக ஒப்புக்கொடுத்தருளும்.
நன்மரணமடைய சேசுநாதரை நோக்கி செபம்.
ஓ! மதுரமான சேசுவே, தயை மிகுந்த ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதரே, மிகுந்த மனஸ்தாபப்பட்டுக் கலங்கிப் பிரலாபித்து உமது திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிற அடியேனைப் பாரும். பாவத்துக்கு ஆசைப்பட்டு உமது நேச அழைத்தலைக் கவனியாமல், தேவரீரை இப்பொழுது நான் புறக்கணித்து நிந்திக்கலாம். ஆனால் ஒருநாள் நான் சாவது நிச்சயம். நான் நினையாத நேரத்தில் மரணம் வந்து என்னைப் பிடித்துக்கொள்ளும். மின்னலலைப் போலும், அதிதுரிதமாக அது வந்தென்னைக் கைப்பற்றும். அதன்பின் எனது தீர்வை நடக்கும். அது மோட்ச இன்பத்திற்கோ, நித்திய நரக வேதனைக்கோ என்னை நிச்சயிக்கும்.
என் அன்பான சேசுவே, என் பலவீனத்தையும், பாவச் சார்பையும் அறிந்திருக்கிற நான், என் நிர்ப்பாக்கியத்தில் உம்மையே, ஓ சேசுவே, உலக சீவியத்தின் முக்கியமான நேரமாகிய மரண அவஸ்தையில், என்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சி மன்றாடுகின்றேன்.
என் கால்கள் இரண்டும் அசைவின்றி, உஷ்ணமின்றி என் படுக்கையிலே கடினமாய் வலித்து, நான் இவ்வுலகில் செய்த பயணம் முடிந்ததென்று காட்டும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் கைகளிரண்டும் அதிர்ந்து, நடுநடுங்கிப் பலனற்று, கடைசிச் சரணமாக ஏந்தியிருக்கிற உமது திருச்சிலுவை சுரூபத்தை கைநெகிழ விடும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் உதடுகள் குளிர்ந்து, கறுத்துக், கிடுகிடுத்து, உமது திருநாமத்தைக் கடைசிவிசையாய் உச்சரிக்கும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் கன்னங்களிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டி, மரணத்தின் அடையாளமாய் வெளுத்து, என் தலையோடு மயிரொட்டி, என் நெற்றியிலே வியர்வை எழ, என்னைச் சூழ்ந்து நிற்பவர்களுக்குப் பயங்கரமும் அருவருப்பும் வருத்துவிக்கும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் கண்களிரண்டும் பஞ்சடைந்து, அகோரமாய்த் திகைத்து, பயங்கரமாய் விழித்து, இவ்வுலகத்திலுள்ள பொருட்களை ஒன்றும் காணாமல், தன்னந்தனியே அச்ச நடுக்கத்தோடு நான் சரணடைகிறபோது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் காதிரண்டும் கேள்வியற்று, மனித சம்பாஷனையை விட்டுப் பிரிந்து, நீர் ஊழியுள்ள காலம் இடப்போகிற தீர்வையைக் கேட்கத் தயாராகும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
மயங்கும் என் மனதிலே அச்சம் உறுத்த, வீண் எண்ணங்களும் அவலட்சணத் தோற்றங்களும் தோன்றி, பயங்கரமாயிருக்கும் அந்நேரத்தில், தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
இப்பயங்கரத்தினால் என் இருதயம் கலங்கியிருக்கும் வேளையில், பசாசு என் பாவங்களை மிகுவித்து, உமது நீதியைப் பெருக்கி, உமது அளவில்லாத கிருபையை மறைத்து, நான் அவநம்பிக்கையாய்ச் சாக என்னோடு கடைசி யுத்தம் நடத்தும்போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாயிருக்கும் போது, தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
மரணம் மட்டும் கடைசிக் குறியாக என் கண்களிலே நின்று கண்ணீர் சொரிந்து விழ, அந்தக் கண்ணீரை என் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு பயங்கரமான அவ்வேளையில் என்னைக் கைவிடாதேயும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சுவாசம் விட நான் படும் பாட்டையும், மரண இக்கட்டுக்குள்ளே அகப்பட்டு நான் படும் வேதனையையும் என் பாவங்களுக்குப் பரகாரமாக, நான் அனுபவிக்கிற தண்டனையாக ஏற்றுக்கொண்டு என்பேரில் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட, நான் கடைசி மூச்சை வாங்கி, என் ஆத்துமம் சரீரத்தை விட்டுப்பிரிய கடும் போர் புரியும்போது உமதுபேரில் எனக்குள்ள சிநேகத்தால் உம்மிடம் வர நான் படும் பிரயாசையை ஏற்றுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் சுற்றத்தார், சிநேகிதர் என்னைச் சூழ்ந்துகொண்டு, அலறிப் பதறி மாரடித்து எனக்காக உம்மை மன்றாடி, ஐயோ சாகிறானே என்று சொல்லியழும்போது, என்மேல் இரக்கமாயிரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
குளிர்ந்த உணர்வற்ற என் சரீரத்தினின்று என் ஆத்துமம் பிரியும்போது, நான் அதை உம் திரு இருதயத்துக்கு நேசப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன். என் அன்பான பலியை ஏற்றுக்கொள்ளும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
நான் நினையாதபோது திடீரென்று மரணம் எனக்கு வந்தாலும், ஓ! ஆண்டவரே, எனக்கு உதவ தீவிரித்து வரத் தாமதியாதேயும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
கடைசியாய் என் ஆத்துமம் மகிமைப் பிரதாபமுள்ள உமது சமூகத்திலே நிறுத்தப்பட்டு, தன்னுடைய தீர்வையை கேட்க நடுநடுங்கி நிற்கும்போது மதுரமான சேசுவே, எனக்கு நடுவராயிராமல், என் இரட்சகராய் இரும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
என் நல்ல தகப்பனே, என்னைப் புறக்கணித்துத் தள்ளாமல், என்னைக் கிருபாகடாட்சத்தோடேபார்த்து உம்மை என்றென்றும் வாழ்த்தித் துதிக்க நான் உமது இராச்சியத்திற்கு வரப்பண்ணியருளும் சுவாமி. தயாபர சேசுவே! என்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃
*செபிப்போமாக:-*
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா, எங்கள் மரண நேரத்தையும், இடத்தையும், சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு மறைக்கத் தேவரீருக்குச் சித்தமாயிற்று. ஆகையால் மரண நேரம் வரும்போது நாங்கள் இஷ்டப்பிரசாத அந்தஸ்திலே மரித்து, உமது நித்திய மகிமைப் பாக்கியத்திற்குப் பங்காளிகளாகிறதற்கு, எப்பொழுதும் பரிசுத்த புண்ணிய சீவியம் சீவிக்கும்படி எங்களை ஆசீர்வதிக்க வேணுமென்று தேவரீரைப் பிரார்த்திக்கிறோம். இந்த மன்றாட்டுகளை சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளையும், திரு இரத்தத்தையும், திருக்காயங்களையும் பார்த்து, பூங்காவனத்தில் அவர் பட்ட மரண அவஸ்தையினாலேயும் எங்களுக்குத் தந்தருள அவருடைய திருநாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறோம்.
*ஆமென்.*
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
*🕯️மூன்றாம் கால் மணி🕯️*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*”என்னோடு கூட ஒரு மணிநேரமாவது விழித்திருக்க உங்களால் முடியாமல் போனதோ?” (மத். 26.40)*
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
*தியானம்*
ஆ! என் ஆத்துமமே! சேசுநாதர் சுவாமி தம்முடைய நேச மகள் அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளுக்குப் பெருமூச்செறிந்து சொன்ன வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பாயாக. என்னுடைய திருப்பாடுகளில் நான் பட்ட சரீர வேதனைகளைப் பார்க்கிலும் பூங்காவனத்தில் என் இருதயத்தில் அதிகம் பாடுபட்டேன். மனிதரின் பாவங்களையெல்லாம் என்மேல் சுமந்துகொண்டு சர்வேசுரனுடைய அதிபரிசுத்ததனத்திற்கு முன் நின்றேன். அவரும் என் மாசில்லாத்தனத்தை அறிந்தபோதிலும், அவரது உண்மையான நீதியின்படி பாவங்களுக்காக கசப்புள்ள காடி நிறைந்த பாத்திரத்தைக் குடிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். நான் பட்ட துக்க வேதனைகளை எந்த மனிதனாலும் அறிந்துகொள்ள முடியாது.
ஆ! பொறுக்க முடியாத இந்தத் துக்க துயர வேளையில் தம்முடைய சிநேகிதர்களாகத் தெரிந்துகொண்ட சீஷர்களிடம் மும்முறை திரும்பி வந்தார். அப்பொழுது அவர்கள் யாதொரு கவலையின்றித் தூங்கிக் கொண்டிருக்கிறதைக் கண்டு, அதிகத் துயரத்திற்குள்ளானார்.
”என்னோடு ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியாதோ?” என்று முறையிட்டார். இப்படி ஆண்டவர் பட்ட பாடுகளை நாம் நினைத்து இந்தத் திருமணி தியனப்பக்தியால் அவருக்கு ஆறுதல் தரும்படி அவர் அர்ச். மர்கரீத் மரியம்மாளிடம் கேட்டுக்கொண்டார்.
எல்லோரும்: சேசுவே, உமக்காகவே சீவிக்கிறேன், உமக்காகவே மரிக்கிறேன், சீவியத்திலும் மரணத்திலும் உம்முடையவனாகிறேன்.
ஆ! சேசுவே! பூங்காவனத்தில் அவர்கள் நித்திரையிலிருந்ததைக் கண்டு நீர் இவ்வளவு துக்கத்துக்குள்ளானீர் என்றால், நீர் எங்களைப் பற்றித் திவ்விய நற்கருணையில் ஒரு மறியல்காரனைப் போல இராப்பகலாய் வீற்றிருந்தும் மனிதரிடமிருந்து உமக்குக் கிடைப்பது அசட்டைத்தனமும் அவமானங்களும், துரோகங்களுமே! உம் திரு இருதயத்துக்கு எவ்வளவோ துயரம் உண்டாக்குகிறதற்கு இவை காரணமாகின்றன.
”மனிதரை இவ்வளவாக சிநேகித்த என் இருதயத்தைப் பார்! அதற்குப் பிரதிபலனாக மனிதருள் அநேகரிடம் எனக்குக் கிடைக்கிறது என்னவென்றால், என்னுடைய சிநேக தேவதிரவிய அநுமானத்தின் மட்டில் அவர்களுக்குள்ள குளிர்ந்ததனமும், கவலையின்மையும், தேவ துரோகமும் தான். திருப்பாடுகளில் நான் பட்ட சகலப் பாடுகளைப் பார்க்கிலும் இவையே எனக்கு அதிக துக்கம் வருவிக்கின்றன. அவர்கள் கொஞ்சமாகிலும் என் நேசத்திற்குப் பிரதிநேசம் காட்டினால்... அவர்களைப் பற்றி இன்னும் கூடுமானால் அதிகம் பாடுபட நான் ஆசையாயிருக்கிறேன்.” என்று வசனித்தீரே!
ஐயோ எனது நேச சேசுவே, சில சமயங்களில் செபம் பண்ணுவதற்கு அல்லது தேவ ஊழியத்தில் எந்தக் காரியத்திலாவது கவனம் இல்லாமல் நடக்கிறதற்கு ஒரு சோதனை வந்தால், அந்தச் சமயங்களில் நீர் துக்கத்தால் நிறைந்து ”என்னோடுகூட ஒரு மணிநேரமாவது விழித்திருக்க உன்னால் முடியாமல் போனதோ?” என்று சொன்ன முறைப்பாட்டை நினைத்து உம்மை மெய்யாகவே சிநேகித்து, உமது பேரிலுள்ள சிநேகத்தால் அப்பாவ சோதனைக்கு இடம் கொடுக்காமலிருக்க எனக்குக் கிருபை செய்தருளும்.
ஆ! எனது அன்பான சேசுவே, இனிமேல் நான் எவ்விடத்திலிருந்தாலும், இராக்காலங்களில் நான் எழுந்திருக்கும் சமயங்களில் எனக்காக திவ்விய சற்பிரசாதத்தில் வீற்றிருக்கும் உம்மை எப்பொழுதும் நினைத்து உமக்கு என்னுடைய நேசத்தைக் கொடுக்க உதவி செய்யும். சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன் ஞான விதமாய் உம்மை என் இருதயத்தில் பெற்றுக் கொள்ளுகிறதற்கும், கோவில்களுக்கு முன்பாகப் போகும்போது உம்மை நான் நினைத்து சங்கை மரியாதை செய்யவும், நேரமிருந்தால் கோவிலுக்குள்ளே போய், சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்றாவது சொல்லவும், கூடுமானால் தினந்தோறும் உம்மை சற்பிரசாதத்தின் வழியாய் என் இருதயத்துக்குள் பெற்றுக்கொள்ளவும் எனக்குக் கிருபை புரியும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பரிகாரச் செபம்*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஓ! சேசுவே, தெய்வீக இரட்சகரே, ஒரே விசுவாசம், ஒரே பரிகாரம், ஒரே சிநேகத்தின் ஆசையால் தூண்டப்பட்டு இங்கு ஒன்றுகூடி தங்களுடைய சொந்தத் துரோகங்களுக்காகவும், தங்கள் சகோதரராகிய சகல நீசப் பாவிகளுடைய துரோகங்களுக்காகவும், அழுது பிரலாபிக்கும் உமது பிள்ளைகளாகிய எங்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். நாங்கள் ஒருமனப்பட்டு இப்போது விசேஷித்த விதமாகச் செய்யவிருக்கும் வார்த்தைப்பாடுகள் உமது தெய்வீக இருதயத்தைத் தொட்டு, எங்கள் பேரிலும், உலகத்தின் பேரிலும், உம்மை சிநேகிக்காத சகல நிர்ப்பாக்கியர்களின் பேரிலும் உமது இரக்கத்தை அடைந்தருளும்படி செய்வீராக.
இன்றையிலிருந்து நாங்கள் எல்லோரும் வாக்களிப்பதாவது.
மனிதருடைய மறதிக்கும் நன்றிகெட்டதனத்திற்கும் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
தேவ நற்கருணைப் பெட்டியில் தேவரீர் கைவிடப்பட்டிருப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
பாவிகளின் அக்கிரமங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
துஷ்டர்களின் பகை விரோதத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
தேவரீர் பேரில் சொல்லப்படும் தூஷணங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உம்முடைய தெய்வீகத்திற்கு செலுத்தப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உம்முடைய அன்பின் தேவத்திரவிய அநுமானத்தை அவசங்கைப்படுத்தும் தேவதுரோகங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உமது பரிசுத்த சந்நிதியில் கட்டிக்கொள்ளப்படும் அவமரியாதை, அநாச்சாரங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
ஆராதனைக்குரிய உயிர்ப்பலியாகிய தேவரீருக்கு, மனிதர் செய்கிற தீமை பக்கங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உம்முடைய பிள்ளைகளுக்குள்ளே அநேகர் உமக்குக் காட்டுகிற அசட்டைத்தனத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உமது நேச அழைப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
உமது அன்பர் என்று சொல்லிக்கொள்ளுவோருடைய அவிசுவாசத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
தேவரீருடைய வரப்பிரசாதங்களை அவமதிப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
எங்களுடைய சொந்த அவிசுவாசத்துக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
புத்திக்கு ஒவ்வாத எங்களுடைய மூடக் கல்நெஞ்சத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
தேவரீரை நாங்கள் நேசிக்க வெகுநாள் தாமதம் செய்ததற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
தேவரீருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பற்ற எங்கள் தன்மைக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.
ஆத்துமங்கள் சேதமாவதினால் நீர் அடையும் கடுந்துயரத்திற்குப்