Youth Fellowship Moonkilvilai

Youth Fellowship Moonkilvilai Youth Fellowship is dedicated to develop Youth for Christ.

12/03/2022
கடவுளின் குணம்:கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்கடவுளை நாம் எந்த விதமாக புரிந்துக்கொள்கிறோம் என்பதை வைத்துதான் நம்மு...
08/02/2022

கடவுளின் குணம்:

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்

கடவுளை நாம் எந்த விதமாக புரிந்துக்கொள்கிறோம் என்பதை வைத்துதான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. கடின பாடுகள், துன்பம் , வேதனை நிறைந்த வாழ்வின் மத்தியில் கடவுளின் குணநலன்களை அறிந்துக்கொள்வது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க செய்யும்.

இரக்கம் உள்ளவர்
வேதாகமத்தில் மிக முக்கியமான வசனங்களில் ஒன்று

‘யாத் 34:6 கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவர்.’

இதில் இரக்கம் என்கிற வார்த்தை ‘rakhum’ என்கிற மூலபாசையில் இருந்து வந்தது.

இது பாலூட்டும் தாய் தன் குழந்தை மீது காட்டும் அக்கறையை குறிக்கிறது.

எ:கா: இஸ்ரவேல் மக்கள் அடிமை தனத்தில் இருந்து அழுதபோது கர்த்தர் இரக்கம் கொண்டார்.

ஒரு பால் குடிக்கும் குழந்தை அழும்போது அதன் அம்மா எப்படி இரக்கம் கொண்டு அதற்கு பால் கொடுக்கிறாளோ அதேபோல் கர்த்தரின் பிள்ளைகள் அழும்போது அவர் இரக்கம் கொள்கிறார். இது தான் கடவுளின் குணம்.

எ:கா: இயேசு துன்ப படுகிறவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்கள் தேவைகளை சந்திப்பதை சுவிஷேச பகுதிகளில் நாம் காண்கின்றோம்.

நடைமுறை சாத்தியம்
நாம் பிதா, ஆண்டவர் என்று கூப்பிடுவதைவிட ‘அப்பா’ என்று கூப்பிடுவதயே கர்த்தர் விரும்புகின்றார். நாம் இதை மறந்து விட கூடாது.

When you call God as Daddy. He will be happy.

நாம் நல்லது செய்யும் போது மட்டும் அல்ல தீய காரியங்களில் இருந்து மனம் திரும்பும்போதும் அவர் இரக்கம் கொள்கிறவராகவே இருக்கிறார்.

நம்முடைய கண்ணீரை காண்கிறார் கதறலை கேட்கிறார். வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்.

20/01/2022

சீராக்கின் ஞானம் அதி: 42 (திருவிவிலியம்)

மகளைப்பற்றிய தந்தையின் கவலை

9. தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப்பற்றி விழிப்பாய் இருக்கிறார்; அவளைப்பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் அவர் கவலைப்படுகிறார்.

10. கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாதபடியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார்.

11. அடக்கமற்ற மகள்மேல் கண்ணும் கருத்துமாய் இரு; இல்லையேல், பகைவரின் நகைப்புக்கும் நகரின் ஏச்சுக்கும் மக்களின் பேச்சுக்கும் அவள் உன்னை ஆளாக்குவாள்; நகர் மன்றத்தில் உன்னை வெட்கத்திற்கு உட்படுத்துவாள்.

18/01/2022

சீராக்கின் ஞானம் – 18 (திருவிவிலியம்)

தன்னடக்கம்

30. கீழான உணர்வுகளின்படி நடவாதே; சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.

31. கீழான உணர்வுகளில் இன்பம் காண உன் உள்ளத்தை அனுமதிக்கும்போது உன் பகைவரின் நகைப்புக்கு அவை உன்னை உள்ளாக்கும்

32. அளவு மீறி உண்டு குடிப்பதில் களிகூராதே; அதனால் ஏற்படும் செலவு உன்னை ஏழையாக மாற்றிவிடும்.

33. உன் பணப்பையில் ஒன்றும் இல்லாதபோது கடன் வாங்கி விருந்துண்டு ஏழையாகாதே.

In this world heart will still break............Be Grateful is the key to live.முதுமை வியாதியால் பாதிக்கப்பட்ட Youtuber ...
17/01/2022

In this world heart will still break............

Be Grateful is the key to live.

முதுமை வியாதியால் பாதிக்கப்பட்ட Youtuber அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் காலமானார்.

அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் 3-ம் வயது முதலே முதுமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15 வயதான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என எழுதியிருக்கிறார். அவரது இந்த FB பதிவை 805,000 க்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். 158,000 க்கும் மேற்பட்டோர் comment செய்துள்ளனர்.

''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே சென்றுவிட்டாள். இருப்பினும், மில்லயன் கணக்கான மக்களின் மனதில் முத்திரை பதித்துவிட்டாள்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் Youtube-பில் video-களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார்.

Youtube-பில் அவருக்கு 2.91 million-னுக்கும் அதிகமான suscribe-களும், instagram-மில் 379,000-க்கும் அதிகமான followers-களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

17/01/2022

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 9 (திருவிவிலியம்)

பெண்கள்

1. உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே; உனக்கே தீங்கு விளைவிக்கும்
தீய பழக்கங்களை அவளுக்குச் சொல்லிக்கொடாதே.

2. ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே; இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும்.

3. நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே; அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.

4. பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம்.
அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய்.

5. கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே;
நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய்.
6விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே;
உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.

7. நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே; ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே.

8. அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்; பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே. பெண்களின் அழகால்
பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்; இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.

9. அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே; அவளுடன் மது அருந்திக் களிக்காதே; உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;
முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

16/01/2022

சீராக்கின் ஞானம் அதிகாரம் - 9 (திருவிவிலியம்)

நட்பு

5. இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.

6. அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் 1,000-தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.

7. ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.

8. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

9. பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை (குற்றத்தை) மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக்
கொண்டு வருவார்கள்.

10. உன்னுடன் விருந்துண்ணும்(சாப்பிடும்) நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

11. நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள் (வேலை வாங்கு);

12. நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.

13. உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்;
உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு.

14. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.

15. நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு(ஆதரவுக்கு) அளவுகோல் இல்லை.

16. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.

17. ஆண்டவருக்கு அஞ்சுவோரே
முறையான நட்புப் பேணுவோர்.
அவர்களை அடுத்தவர்களும்
அவர்களைப்போலவே இருப்பார்கள்.

08/01/2022

மூங்கில்விளையை சார்ந்த திரு. பழனி என்கிற வேதநாயகம் நாயகம் முதல் முதலாக இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவராக மாறினார்.

பின்னர் அவர் 1855-ல் லண்டன் மிஷனரிகளோடு சேர்ந்து கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் இயேசுவை அன்பை அறிவித்தார். அவருடைய பணியின் மூலம் 1857-ல் ஞாயிறு ஆராதனை அவரது வீட்டு முற்றத்தில் முதல்முதலாக நடத்தப்பட்டது .

இதன் மூலம் இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொண்ட இந்தப் பகுதியின் முக்கியமானவர்களில் ஒருவர் கோட்டவிளை சார்ந்த திரு. லாவுத்தர் என்கிற யோவான் மற்றும் மூங்கில்விளையை சார்ந்த திரு. அருளானந்தம்.

இதன் விளைவாக தான் நம்முடைய திருச்சபை இன்று ஓங்கி எழும்பி நிற்கிறது.

நம்முடைய திருச்சபை மட்டும் அல்ல, என்னுடைய புரிந்துக்கொள்ளுதலின்படி ஆதிக்கால திருச்சபைகள் வீட்டில் தான் நடந்து உள்ளது. கொரோனா லாக்டவுன் மறுபடியும் நமக்கு இந்த அரிய வாய்ப்பை தந்து இருக்கிறது.

வீட்டில் உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து ஆராதனை நடத்துங்கள். சிறு வயது முதலே ஆராதனைகளை பார்த்து வளர்ந்த நமக்கு ஆராதனை எப்படி நடத்த வேண்டும் என்று செல்லியா தரனும்?

There were House Churches in Jerusalem where there was not only worship and breadbreaking but also teaching and preaching (Acts 2:46; 5:42).

வீட்டில் திருச்சபை நடத்துவதால் வரும் பயன்கள்

1) வெறும் பார்வையாளர்களாக இருந்தவர்கள், செயல்பட தொடங்குவர்.

2) திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு வழி

3) புதிய தலைவர்கள் உருவாகுவார்கள்

4) கிறிஸ்தவர் அல்லாதவர்கள் ஆலயத்துக்குவர தயங்குவார்கள், ஆனால் உங்கள் வீட்டுக்கு வர தயங்கமாட்டார்கள்.

5) நல்ல முறையில் வேதாகமத்தை புரிந்துக்கொள்ளலாம்

6) ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கலாம்

04/01/2022

'Must Read'

கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த கால கட்டத்தில் பல சமுதாய பிரச்சனைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்து வந்தனர்.

குறிப்பாக சாதி அடிப்படையிலான பிரச்சனைகள் தலை தூக்கி ஆடியது.

தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, தொழில் மற்றும் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் மார்பகங்களை மறைக்க விரும்பினால் பிராமண மன்னருக்கு மூலக்கரம் (மார்பக வரி) செலுத்த வேண்டும்.

இந்த வரி அவர்களின் மார்பக அளவைப் பொறுத்து இருந்தது.

இந்த கொடுமையை மிஷனரிகளும், திருச்சபைகளும் பலமாக எதிர்த்தனர்.

லண்டன் மிஷனரி இயக்கம் இதை கடுமையாக எதிர்த்தது மட்டும் அல்ல பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி 1859-ம் ஆண்டு விடுதலையும் பெற்று தந்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியத் தொடங்கினர்.

அனைவரையும் கடவுளால் சமமாக படைத்துள்ளார் என்ற வேதாகம கொள்கை மிஷனரிகளால் நிலை நிறுத்தப்பட்டது.

அனைவரையும் சமமாக நடத்தும் பண்பு மற்றும் மிஷனரிகள் காட்டிய அன்பால் மக்கள் இயேசுவுக்கு நேராக ஈர்க்கப்பட்டனர்.

இந்த காலக்கட்டத்தில் தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பல நாடார் இனத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். இதனால் 18-ம் நூற்றாண்டு மிஷனரிகளில் கனி நிறைந்த காலமாக இருந்தது.

இதன் விளைவாக பல திருச்சபைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த நிறுவப்பட்டது.

மேலும் பல தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் மிஷனரிகளுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினர்.

https://joniestevans.blogspot.com/2022/01/18.html
03/01/2022

https://joniestevans.blogspot.com/2022/01/18.html

கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ...

11/12/2021

வாலிபர் சங்க வீட்டு கூட்டம் இன்று (சனிக்கிழமை) திரு. Selva Raj அவர்கள் இல்லத்தில் நடைபெறும்.

29/11/2021

வாலிபர் சங்கத்திற்கு 3 வருடங்களாக எல்லா நாட்களும் வருகை தந்த அருமை தம்பி I ABIN அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Address

Moongilvilai
Nagercoil
629204

Alerts

Be the first to know and let us send you an email when Youth Fellowship Moonkilvilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Youth Fellowship Moonkilvilai:

Share