Kesavanputhenthurai

Kesavanputhenthurai Kesavanputhenthurai is a Indian coastal Roman Catholic village, located in the south part of Tamilnadu.

05/07/2025

Beauty of kesavanputhenthurai

17/01/2025
58வது பொங்கல் திருநாளான இன்று (14-01-2025) காலை கோலபோட்டி நடைபெற்ற போது
14/01/2025

58வது பொங்கல் திருநாளான இன்று (14-01-2025) காலை கோலபோட்டி நடைபெற்ற போது

16/08/2024
Feast started ✨✝️
16/08/2024

Feast started ✨✝️

Even the sun sets in paradise.
04/08/2024

Even the sun sets in paradise.

04/08/2024
18/02/2024

பொழிக்கரை அருகில் உள்ள கேசவன்புத்தன்துறை ஊரின் வரலாற்றை ஆலயம் அறிவோம் என்ற முகநூல் பார்த்த போது திருவிதாங்கூர் அரசர் கேசவன் அந்த ஊரில் வந்ததாக மீனவ முன்னோர்கள் கூறியுள்ளனர்.

"""முற்காலத்தில் பஞ்சத்தில் வாடிய ஒரு கூட்டம் மக்கள் இங்கு வந்து தங்கி தங்களது பஞ்சம் போக்கிக் கொண்டார்கள் என்றும், அதனால் இவ்வூருக்கு 'பஞ்சம் தவிர்த்த நாடு' என்று ஒரு சிறப்பு பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அப்பெயர் மருவி பஞ்சங்காடு என்று ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊரை ஸ்ரீபத்மநாபன் புத்தன்துறை என்ற மன்னன் ஆண்டு வந்ததாகவும், அவரது மகன் கேசவன் தாம் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ள தடைகூறியதாலும், அதனால் அரண்மனையைத் துறந்து இவ்வூரில் வந்து வாழ்ந்துள்ளார் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசர் கேசவன். பின்னர் மகனைத் தேடியலைந்த அரசன், அவனைக்கண்டு சமாதானம் செய்து, அவனது விருப்பத்தையும் நிறைவேற்றி இவ்வூருக்கு கேசவன் புத்தன்துறை என்று பெயரிட்டு அழைத்ததாகவும், முன்னோர்கள் கூறியுள்ளனர்."""

இது புனை கதையாக, கட்டு கதையாக இருக்கலாம் என்றே தோன்றுயது !
ஆனால் இராஜாக்கள்மங்கலம்துறை ஊரில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரண்மனை இருந்த தகவல் அது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. கேசவன் பெயரை கொண்ட ராஜா வாழ்ந்ததாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் குறிப்புகள் இல்லை. ஆனால் பெயர் மாறுபாடுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. ராஜாவின் பெயரை இப்பகுதி மீனவ மக்கள் கேசவன் என்று அழைத்து இருக்கலாம். ஆனால் திருவிதாங்கூர் ராஜா கேசவன்புத்தன்துறை ஊரில் வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
குமரி கடலோர பகுதி மீனவ கிராமமான இராஜாக்கள்மங்கலம்துறை முற்காலத்தில் இராஜாக்கள்மங்கலம் என்றே அழைத்தனர்.ஆதாரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இராஜாக்கள்மங்கலம் என்றே உள்ளது. மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் உள்ள வரைபடத்தில் இராஜாக்கள்மங்கலம் என்றே உள்ளது.

information link :
https://www.instagram.com/p/CytPV8tyeI-/?img_index=1

https://www.facebook.com/photo/?fbid=1177648613139079&set=pcb.1160663171504290

திருவிதாங்கூர் அரண்மனை மீனவ ஊரில் இருந்தது என்றால் அந்த ஊரின் பாதுகாப்பு கட்டமைப்பு வலிமையாக இருந்திருக்க வேண்டும். பண்டைய காலத்தில் மீனவர்கள் வலிமையானவர்கள் என்பதை இது குறிக்கிறது.
காரணம் இராஜாக்கள்மங்கலம்துறை மற்றும் கேசவன்புத்தன்துறை மிக அருகில் உள்ள ஊர்கள் ஆகும்.
1774 - 1789 ஆண்டில் இந்திய வந்த ஆஸ்திரியா நாட்டு பயணி நூலில் இந்த தகவல் உள்ளது.

மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் என்ற கோவைக் குளத்தில் பாண்டியர் வம்சத்து செண்பகராமன் பள்ளு என்ற பரதகுல பாண்டிய மன்னன் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் கோவளத்தை கோவைக் குளம் என்றே அழைத்தனர்.

Uni uni என்பவரது முகநூலில் அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.
https://www.facebook.com/Uni.Unij

பரவர்களின் ஊரிலே பிறந்த திருவாங்கூர் மகாராஜா📖:

உன்னி கேரள வர்மா(1718-24) என்ற வலுகுன்றிய அரசன் திருவாங்கூரில் ஆட்சிக்கு வருகிறார்.
இவர் காலத்தில், திருவாங்கூரில் இருந்த "எட்டு வீட்டு பிள்ளைமார்" என்று அழைக்கப்படும் எட்டு நாயர் சமூகத்து குறுநில தலைவர்களும் நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
கஜானாவுக்கு போதிய வருமானம் வராததால் உன்னி கேரள வர்மன் சிறிய அளவிலான படையே வைத்திருந்தார்.
உன்னி கேரள வர்மன் திருவாங்கூருக்கு வாரிசு வேண்டி கொளத்து நாட்டு ராஜவம்ச இளவரசியை தத்தெடுத்தார்.
தத்தெடுக்கப்பட்ட கொளத்தூர் நாட்டு இளவரசி திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் உள்ள அட்டிங்கல் அரண்மனையில் அட்டிங்கல் ராணியாக வாழ்ந்து வந்தார். இவர் அட்டிங்கல் மூத்த ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
நான் மேற்சொன்ன அட்டிங்கல் மூத்த ராணி கிளிமானூர் பிரபுவாகிய ரவிவர்மா கோயில் தம்புரானை திருமணம் செய்து கொண்டார்.
நான் முன்பு சொன்ன உன்னி கேரள வர்மன் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கு அஞ்சி நெய்யாற்றின்கரைக்கு சென்று வாழ்ந்தார்.
"எட்டு வீட்டு பிள்ளைமார்" அட்டிங்கல் மூத்த ராணியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
பாதுகாப்பான இடம் தேடி எங்கு செல்வதென்று தெரியாமல் அட்டிங்கல் மூத்த ராணி தமது கணவரான கேரளவர்மா கோயில் தம்புரானுடன் கடைசி நம்பிக்கையாக நூறு கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகருக்கு சென்று அங்கு அவர்கள் அடைக்கலம் புகுந்தனர்.
பரவர்களின் இம்மாநகரில் தங்களுக்கென்று அரண்மனை அமைத்து இருவரும் கூடி வாழ்ந்து வருகையில் அங்கு அவர்களுக்கு கிபி1724 ஆம் ஆண்டில் ஒரு ராஜ குமாரன் பிறக்கிறார்.
அவரே பிற்காலத்தில் நவீன திருவாங்கூரை உருவாக்கியவர் என்று அறியப்பட்ட புகழ்பெற்ற "கார்த்திகை திருநாள் ராமவர்மா".
ராமவர்மா(1758-1798) திருவாங்கூரில் ஆட்சிக்கு வந்த பிறகு தாம் பிறந்த ஊரான பரவர்களின் ராஜாக்கமங்களம் மாநகரத்துடனான உறவு முற்றிலும் விட்டு போனது.
இதன் காரணமாக அவர் பிறந்த ராஜாக்கமங்களம் மாநகரின் அரண்மனையானது பராமரிப்பின்றி பழுதடைந்து இடிந்துவிழுந்தது.
கிபி1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பார்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தமது நூலில்.. ...
"தற்போது திருவாங்கூரை ஆட்சி செய்துவருகின்றவர் (ராமவர்மா மகாராஜா) கடற்கரையில் அமைந்துள்ள (பரவர்களின்) ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த முன்பு புகழ்பெற்று விளங்கிய அவர் குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனையில் பிறந்தவர் ஆவார். ராஜாக்கமங்களம் மாநகரில் இருந்த அவர் பிறந்த அரண்மனையானது இன்று இடிபாடுகளுடன் காணப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg.112

🎏 #பாண்டியர் வம்சத்து பரதகுல தலைவர்கள்:
நாஞ்சிவள_நாட்டு கோவைக்_குளத்தை ஆட்சி புரிந்த பரதகுல அரசன் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடை நாயகனாக கொண்டு 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்று 'செண்பகராமன் பள்ளு' என்பதாகும்.
#பாண்டியன் பிரஞ்சிஸ்:-
"பிரஞ்சிஸ் கொலிவேர்" என்பவர் நான் மேற்சொன்ன நாஞ்சிவள நாட்டு கோவைகுளத்து பரதகுல அரசனின் இளைய மருமகன் ஆவார்.
இவரை பற்றி...
"பேதகமொன் றில்லாத சுகசரணன் #பாண்டியன் பிரஞ்சிஸ்க்கு வாழ்கவே கூவாய் குயிலே"
என்று செண்பகராமன் பள்ளு இலக்கியம் குறிப்பிடுவதன் மூலம் இவர் பாண்டியரின் வம்சத்தவர் என்பதனை அறியமுடிகிறது.
#தென்னனாகிய வஸ்திய ஞாயம்:-
வஸ்திய ஞாயம் என்பவர் கன்னியாகுமரி பரதகுல தலைவர் ஆவார்.
இவரை பற்றி...
#தென்னனாகிய வஸ்திய ஞாயஞ்சொல் செந்தமிழ் பாண்டி நாடெங்கள் நாடே"
என்று பாண்டிய நாட்டை சேர்ந்த ஒரு பள்ளர்குல பெண்மணி பாடிய பாடல் செண்பகராமன் பள்ளு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.
#தென்னனாகிய வஸ்திய ஞாயம் என்று பாண்டியரின் சிறப்பு பெயரை கன்னியாகுமரி பரதகுல தலைவர் ''வஸ்திய ஞாயத்து''க்கு குறிப்பிடுவதன் மூலம் பாண்டியரின் வம்சத்தை சேர்ந்தவர் அவர் என்பதும் பெறப்படுகிறது...
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:
செண்பகராமன் பள்ளு இலக்கியம் பக். 58, 63

19/01/2024

Address

Kesavanputhenthurai
Nagercoil
KANYAKUMARI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kesavanputhenthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kesavanputhenthurai:

Share

Category