Christian Irai Padalgal.

Christian Irai Padalgal. Pray Together ❤️ 🙏 Grow Together ❤️ 🙏
God Loves you All ❤️ 💖 💕
(5)

Christian ImagesChristian Irai Padalgal.
16/08/2026

Christian Images
Christian Irai Padalgal.

15/08/2026

Besant Nagar Arokiya Madha Church

Christian Irai Padalgal.



🇮🇳

*☦️ இரவு செபம் - புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா!*விண்ணகத் தந்தையே,மாலை நேரத்தின் அமைதியில்,இன்றைய நாளின் அருட...
15/08/2026

*☦️ இரவு செபம் - புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா!*

விண்ணகத் தந்தையே,
மாலை நேரத்தின் அமைதியில்,
இன்றைய நாளின் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துகிறோம்.

நீர் என்றும் கன்னியான மரியாவுக்கு அளித்த மகிமையில் நாங்களும் மகிழ்கிறோம்; அன்னையின் உடலையும், ஆன்மாவையும், என்றும் அரசராகிய உமது மாட்சிமை மிகு அரண்மனைக்குள் எடுத்துக்கொண்டதை நினைந்து இந்தப் பெருவிழாவையும், இந்நாளையும் மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறோம்.

அன்னையின் நம்பிக்கை, அன்னையின் சரணாகதி, உமது திட்டத்திற்கு அவர் பூரணமாகக் கீழ்ப்படிந்தமை ஆகியவற்றை,
எங்கள் வாழ்விலும் பின்பற்றும் அருளை அளிப்பீராக.

இன்றைய நாள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சி, துன்பம், விருப்பம், வெறுப்பு, எல்லாவற்றையும்
மரியன்னை வழியாக உம்மிடம் ஒப்படைக்கிறோம்.

அன்னை மரியின் விண்ணேற்பு,
எங்கள் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை வலுப்படுத்தி, இன்றைய இரவு ஓய்விலும், எதிர்காலப் பயணத்திலும்,
உமது நித்திய பிரசன்னத்திற்குள் பாதுகாப்பாக வழி நடத்துவதாக.

இரவு இருள் சூழ்ந்தாலும், உமது ஒளி எங்கள் இதயங்களை ஒளிரச் செய்வதாக. எங்கள் கனவுகளில் உமது அமைதி நிறைந்திருப்பதாக.

எங்கள் குடும்பத்தினரை,
நண்பர்களை, உதவியை நாடுவோரை,
இந்நாளில் துன்பத்தால் சோர்ந்துள்ளவர்களை,
அனைவரையும் மரியன்னைத் தாயின் அன்பான கைகளில் ஒப்படைக்கிறோம்.

உமது கருணையால், நாளைய பயணத்திற்கு இந்த ஓய்வைப் பயன்படுத்தி, எங்களை புதுப்பித்து
நம்பிக்கையுடனும், நன்றியுடனும் உமக்கு மகிமை செலுத்தச் செய்வீராக.

*ஆமென்.*

🌹🍁🌹🍁🌹🍁🌹🍁_*"ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.*__*அவர்கள் முதிர் வயதிலும்...
15/08/2026

🌹🍁🌹🍁🌹🍁🌹🍁

_*"ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.*_

_*அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;"*_

_*திருப்பாடல்கள் 92:13,14*_

🌹🍁🌹🍁🌹🍁🌹

*🛐 இணைந்து செபிப்போம்**ஆண்டவரே இயேசுவே, ஒளியின் பிறப்பிடமே! உம்மை ஆராதிக்கின்றேன். விடியலாய் என் வாழ்வில் வருபவரே! உம்மை...
15/08/2026

*🛐 இணைந்து செபிப்போம்*

*ஆண்டவரே இயேசுவே, ஒளியின் பிறப்பிடமே! உம்மை ஆராதிக்கின்றேன். விடியலாய் என் வாழ்வில் வருபவரே! உம்மைப் புகழ்கின்றேன். எனக்காக என் வழிகளை எல்லாம் ஆயத்தமாக்கி, ஒளியின் பாதையில் அழைத்துச் செல்லும் அருள் நாதரே! உமக்கு நன்றி கூறுகின்றேன்.*

*“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று, எலிசபேத்தம்மா அன்னை மரியாவை வாழ்த்தியதை, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கும் நானும், என் அன்னை மரியன்னையைத் துதிக்கவும்; அவரின் பரிந்துரையால் எந்நாளும் உம்முடன் இணைந்து வாழவும் அருள் பாராட்டியருளும். இயேசுவே! இன்று உம் தாயும், என் அன்னையுமான அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்ற நான், என்னிடம் இருக்கும் பகை உணர்வு, எரிச்சல், பொறாமை, உயர்வு மனப்பான்மை அனைத்தையும், அன்னையின் பரிந்துரையால் விட்டு விலகி வாழவும்; அன்னையின் அணிகலன்களான பிறர் அன்பு, தாழ்ச்சி, பணிவு ஆகிய நற்பண்புகளால், என்னை அணி செய்து கொள்ள அருள்தாரும். தூயவராக இருப்பவரே! உமது திருவுளங்களுக்குப் பணிந்து, தூயவனாய் நடந்திடக் கற்றுத்தந்து வழிநடத்திய தயவிற்காக நன்றி கூறுகிறேன். இன்று என்னையும், என் குடும்பத்தையும் மரியன்னை கரம் தருகிறேன். என் குடும்பத்தில் ஜெபமாலை பக்தி அதிகரிக்கவும், அன்னை மீது ஆழ்ந்த பக்தி கொண்டு வாழவும் வரம் தாரும்.*

*ஆண்டவரே இயேசுவே! இதோ! உம் மகன் என்று எனக்கு அன்னையாகத் தந்த மரியாவின் பரிந்துரையும், வழிகாட்டலும் எந்நாளும் என்னுடன் கூட இருக்க வேண்டும் என்றும்; எவ்வாறு உமது திட்டங்களுக்கு அன்னை மரியா தன்னை அர்ப்பணித்தாரோ! அதே போல் நானும், உமது திட்டங்கள் திருவுளத்திற்குப் பணிந்து வாழ அருள்தர வேண்டும் என்று, இயேசுவின் பரிசுத்த நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.*

நன்றி - தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்

*🙏🏻 பரிசுத்த பரலோகமாதாவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை 🙏🏻*👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑*தேவமாதா மோட்சத்துக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதின்  ...
15/08/2026

*🙏🏻 பரிசுத்த பரலோகமாதாவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை 🙏🏻*
👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑

*தேவமாதா மோட்சத்துக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதின் பேரில் செபம்.*

மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின புனித தேவமாதாவே ! நீர் சரீரத்தோடு விண்ணேற்றமடைந்த மகிமை, உம்முடைய புனித வாழ்வுக்கு ஏற்ற பரிசு அல்லவா ! அது என்னவென்றால், மண்ணால் உண்டாக்கப்பட்ட உடல் மண்ணாய்ப் போகவேண்டுமென்று ஆதாம் செய்த பாவத்துக்கு கட்டளையிட்டிருந்தாலும் , உம்மிடத்தில் அப்படிப்பட்ட பாவத்தின் அடையாளம் காணவில்லையே, அதனால் ஆண்டவர் தாம் மரித்தோரிடத்தில் நின்று உயிர்த்தெழுந்தது போல் உம்மையும் உயிரோடு எழுந்தருளப் பண்ணினார். அவர் தாமே உடலோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அதுபோல ஆத்ம சரீரத்தோடு ஏறப்பண்ணினாரே, நீர் பரலோகத்துக்கு ஏறின போது சந்திரன் உம்முடைய பாதத்தை தாங்க , சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய்ப் படிய ,விண்மீன்கள் உமது தலையில் மகுடமாய் விளங்க , தூதர்கள் ஸ்துதியங்கள் பாட , விண்ணகத்தில் சேர்ந்தவுடனே பிதா சுதன் பரிசுத்த ஆவியால் நித்திய பரலோக இராக்கினியாக முடிசூட்டப்பட்டீரே . ஆ ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கெழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்றுதானே உம்மோடே பறந்துவரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் , இப்படிப்பட்ட நன்மைபெற நான் பாத்திரமாகாதபடியால் , இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்குயர்த்தி , இவ்வுகலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகும்வரை உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணிசெய்து ,என் ஆத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும், உம்மை கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும் .

*🙏🏻ஆமென்.🙏🏻*

🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹

*பரிசுத்த பரலோக மாதா புகழ்மாலை*

👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே, கிருபையாயிரும்

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா

-- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

மோட்ச இராக்கினியாகிய புனித மரியாளே,

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பரலோக பூலோக இராக்கினியாக மாசில்லாமல் உற்பவித்த புனித மரியாயே,

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஆதிமுதல் நிகரற்ற பரிசுத்தத் தனமாய்ப் பிறந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே
மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த
நாமதேயம் சூட்டப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும்
அதிகரித்து விளங்கின பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும்
ஞான தீபமாகவும் ஒளிர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அருள் நிறைந்த மரியே வாழ்க என்று
தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே
கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் ,
பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய்,
பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த்
தேவாலயமுமாய் விளங்கிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய
திருப்பாடுகளுக்குப் பங்காளியான பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும்
அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு
ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும்
ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட
சீவிய காலமளவும் இப்பரதேச துன்பங்களை அத்தியந்த
தைரியம், பக்தி, பொறுமை முதலிய சற்குணங்களோடு அனுபவித்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இவ்வுலகில் இருந்த நாளளவும் அதிகமதிகமாய் எல்லா வரங்களிலும்
அதிசயித்து நிகரற்ற புண்ணிய சம்பாவனை அடைந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை
முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே
சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால்
பேரின்ப சந்தோஷமடைந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து
பரலோகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய
திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத்
தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி
அடக்கம் செய்யப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப
இராச்சியத்துக்கு எழுந்தருளின பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில்
அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக்
கொண்டாடப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற
சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும்
வணங்கிக் கொண்டாடப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால்
மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உம்முடைய திருக்குமாரனின் அண்டையில்
மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை
ஆடையாகச் சூரியனை அணிந்த பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான
பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான
பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப்
பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எண்ணிறந்த நன்மை அற்புதங்களால்
உமது வல்லமையை விளங்கச் செய்தருளின பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பல முறை இராச்சியங்களையும் , பட்டணங்களையும் ,
குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால்
உமது தயாளத்தைக் காட்டியருளிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த பாவிகளுக்கு அடைக்கலமாகிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு
அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும்
மகிமையினாலும் விளங்குகிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம்
பெற்றிருக்கிற பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும்
மன்றாடவும் வணங்கவும் படுவதற்குப் பாத்திரமான பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான பரிசுத்த பரலோக மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

*🙏🏻செபிப்போமாக🙏🏻*

சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே /

உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின்
உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய்
அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு
எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும்
கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்.

இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி *ஆமென்.*

Happy Independence day Christian Irai Padalgal. Holy Family
15/08/2026

Happy Independence day

Christian Irai Padalgal. Holy Family







இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை நாம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடத் தயாராகி வருகிறோம். தாய் நாட்டின் விடுத...
15/08/2026

இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை நாம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடத் தயாராகி வருகிறோம். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த வீர்ர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சார நினைவுகூரும் உன்னதமான நாள் இது. இந்த அமுதப் பெருவிழா நாளில், நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் போற்றிப் பாதுகாப்போம் என்று பெருமிதத்தோடு உறுதியேற்போம். நம் நாட்டின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வேளையில், அனைவருக்கும் நமது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

Christian Irai Padalgal.

*❣️சாத்தானின் "திசைதிருப்பும் வலை" (The Web of Distraction)*சாத்தான் மனிதர்களை நற்கருணை வழிபாட்டிலிருந்து திசைதிருப்ப, ஒ...
14/08/2026

*❣️சாத்தானின் "திசைதிருப்பும் வலை" (The Web of Distraction)*

சாத்தான் மனிதர்களை நற்கருணை வழிபாட்டிலிருந்து திசைதிருப்ப, ஒரு புதிய தந்திரத்தைக் கண்டுபிடித்தான். அவன் ஆலயங்களுக்கு வெளியே "திசைதிருப்பும் வலை" (Web of Distraction) என்ற மாய வலையை வீசினான்.

மக்கள் ஆலயத்திற்குள் நுழையும் போது, அந்த வலை அவர்களின் மனதில்:
"வீட்டில் என்ன சமையல்?"
"அடுத்த வேலை என்ன?"
"போனில் என்ன மெசேஜ் வந்திருக்கும்?"
என்ற லௌகீகச் சிந்தனைகளை நிரப்பியது. இதனால் மக்கள் ஆலயத்திற்குள் இருந்தாலும், நற்கருணையின் மகத்துவத்தை உணராமல், வெறும் சடங்காகத் திருப்பலியில் பங்கேற்றுத் திரும்பினர். சாத்தான் தன் தந்திரம் வெற்றி பெற்றதை எண்ணி, மகிழ்ச்சியில் துள்ளினான்.

அப்போது, ஒரு எளிய தொழிலாளி ஆலயத்திற்குள் வந்தான். சாத்தான் அவன் மீதும் அந்த வலையை வீசினான். ஆனால், அவன் பீடத்தின் முன் நற்கருணை ஆண்டவரைப் பார்த்ததும், "ஆண்டவரே! உலகக் கவலைகள் என்னைச் சூழ்ந்தாலும், இந்த நிமிடத்தில் நீர் மட்டுமே என் ஒரே புகலிடம்" என்று, முழு மனதோடு தன் கவலைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் சமர்ப்பித்தான்.
அந்த நொடியே, சாத்தானின் பின்னப்பட்ட மாய வலை முழுவதும் எரிந்து சாம்பலானது!

விண்ணகத்தில் இருந்து இதைப் பார்த்த புனித பீட்டர் புன்னகைத்தார். இயேசு சொன்னார்: "பீட்டர்! மனிதனின் பலவீனங்களைச் சாத்தான் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு ஆன்மா தன் கவனத்தையும் கவலைகளையும் மறந்து, நற்கருணை ஆண்டவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் போது, சாத்தானின் எந்த தந்திரமும் அங்கே பலிக்காது!"

*சிந்தனை:*

ஆலயத்தில் இருக்கும்போது, உலகக் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முழு மனதோடும், கவனத்தோடும் நற்கருணை ஆண்டவரைத் தரிசிப்பதே, நம் ஆன்மாவிற்கு உண்மையான அமைதியைத் தரும்.

Address

Pudukkadai
Marthandam

Alerts

Be the first to know and let us send you an email when Christian Irai Padalgal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christian Irai Padalgal.:

Shortcuts

Share