14/06/2015
அருள்மிகு பெரியாச்சி அம்மா திருக்கோயில் வரலாறு
சோமு சாமி அவர்கள் மனிதனாக இருந்தபோது அன்னை பெரியாச்சி அம்மா ஆட்கொண்டு சீவ சக்தி ரூபமாக மாரி கடந்த 25 ஆண்டுகளாக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தெற்கு தொருவில் அன்னை உதயமாகி அருள் பாளித்து வருகிறாள். சோமு அம்மா அவர்கள் தனது உடல் பொருள் மூச்சு சிந்தனை செயல் வாழ்க்கை என அனைத்தையுமே அன்னை பெரியாச்சிஅம்மா அவர்களை பூஜிப்பதற்கும் அவர்தம் பக்தர்களை அரவணைப்பதற்குமே முழுமையாக அர்பணித்து எப்பொழுதும் இறை நினைப்புடன் தனது குடும்பத்தார்களுடன். பக்தர்களை அன்புடனும் பரிவுடனும் தாயுள்ளத்தோடு அரவணைத்து ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார்கள். எனவேதான்; அன்னைக்கான பணிகள் அனைத்தையும் அது பூஜையாக இருந்தாலும்; அலங்காரமாக இருந்தாலும் எப்பொழுதும் அன்னையின் அருகாமையிலே தொடர்ந்திருந்து அனைவரையும் கருணையோடு வழிநடத்தி பூஜிப்பதில் ஏற்படும் பேரானந்ததிலேயே முழுநேர இறைப்பணியினை செய்துவருகிறார்கள். அருள்மிகு பெரியாச்சி அம்மா அவர்கள் தன்னை நாடி வந்த பக்தர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பரிகாரம் என்பது இன்றி வேண்டும் வரம் அருள்கிறாள். அன்னையின் திருநீர் பட்டவுடன் எந்த நிலையில் உள்ள செய்வினையும் பக்தர்களின் குறைகளும் சரி ஆகும். மேலும் அன்னை பக்தர்களின் பெரிய குறையான திருமண தடை, குழந்தை இன்மை, வேலைவாய்பு, கல்வி, செல்வம், தேசம்,மனக்குறைகள், என குடும்பத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது எதன் காரணமாக உள்ளது என்பதை அன்னை கண்டறிந்து சரிசெய்து நமது வாழ்க்கையை வழி நடத்துகிறாள். மேலும் அன்னை பெரியாச்சி அம்மாவை சந்திக்க நாள் கிழமை நேரம் என்பது கிடையது எந்த நேரமும் அன்னையின் அருள் பொறலாம். இங்கு அன்னையின் அருள் பெறுவதற்கு பணம் ஒரு தடை அல்ல. அன்பும் பக்தியும் கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னை தனது அருள் தருகிறாள். மேலும் பக்தர்களும் தங்களால் இயன்ற காணிக்கை ஒன்றை மட்டுமே தான் அன்னைக்கு அளிக்கின்றனர். எழை எளிய மக்கள் அனைவரும் அன்னையின் அருள் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று எழுதுகிறேன். இப்படியாக பெரியாச்சிஅம்மாப்பற்றி எழுதிடும் வேளையில் அருள்மிகுபெரியாச்சிஅம்மாவின் அருள் பெற்ற நான் அன்னையின் புகழயை உலகிற்கு பரப்பவும் என்னை பென்று அனைவரும் அருள்மிகு பெரியாச்சி அம்மா அருள் பெற வேண்டும் என எழுதுகிறேன். நிறைவாக சோமுசாமியே. பெரியாச்சி அம்மா. நமது அருள்மிகுபெரியாச்சிஅம்மாவே உலகம். அன்னை ஆராதிப்போம் அருள்பெறுவோம். அன்னையின் புகழயை உலகிற்கு பரவ செய்வேம்.
இதனை பகிரவும் ஆன்மீக பக்தி கொண்டநண்பர்கள். அனைவரும் அன்னையின் அருள் பெற வேண்டும்.