Thittachery Welfare Organization - TWO

Thittachery Welfare Organization - TWO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thittachery Welfare Organization - TWO, Tittachcheri.

15/05/2026
திட்டச்சேரி சிறுவர், சிறுமியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சிதிட்டச்சேரி வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் (TWO) ச...
11/05/2026

திட்டச்சேரி சிறுவர், சிறுமியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

திட்டச்சேரி வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் (TWO) சார்பில் ஆண்டு தோறும் பள்ளி கோடை விடுமுறையில் சிறுவர், சிறுமியர்களுக்கு பயனுள்ள வகையில் அடிப்படை மார்க்க கல்வி, துஆ&குர்ஆன் சூராக்கள் மனனம், அகீதா வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல் இவ்வருடம் (2026) ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்கி இன்று (11/05/2026) வரை 15 நாட்கள் *"கோடைகால பயிற்சி முகாம்"* நடைபெற்று, இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டார்கள்.

இம்முகாமின் நிறைவாக இன்று (11/05/26) கலந்துக்கொண்ட அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வக்ஃப் நிர்வாக சபை தலைவர் ஜனாப்.ஹைதர் அலி, செயலாளர் ஜனாப்.செய்யது இப்ராஹிம், பொருளாளர் ஜனாப்.முகம்மது காமில், துணை செயலாளர் ஜனாப்.முகம்மது சாதிக், TWO செயலாளர் ரியாஸ், TWO து.செயலாளர் சஹீர் ஆகியோர் கலந்துக்கொண்டு அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

இம்முகாமிற்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக தினமும் தங்களின் உடல் உழைப்பை அளித்து களப்பணியாற்றிய TWO-வின் செயற்குழு உறுப்பினர்கள்: குபேர், ஷரீப், இஸ்மாயில், முஸ்தாக், நமாஜ் ஆகியோர்களுக்கு திட்டச்சேரி வெல்ஃபேர் ஆர்கனைஷேசன் (TWO) சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து ஊர் நலனிலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியிலும் நம் அனைவரும் ஒன்றினைந்து களப்பணியாற்றிட வல்ல இறைவன் அருள் புரிவானாக...

Address

Tittachcheri
609703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thittachery Welfare Organization - TWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share