10/02/2020
இந்த தைப்பூச விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு சிங்கார வேலன் தெப்பத்தில் வருவார், " நிராகுல" என்று கந்தர் அனுபூதியில் உள்ளது. முருகப்பெருமானை வணங்குவோர் அனைவரும்,உற்சாகமாக உள்ளார் அவர்களுக்கு எந்தவித கஷ்டங்களும் மனக்குறைகள் ஏற்படாது. பாம்பன் சுவாமிகள் , ஆறுமுக சிவன் என்று குறிப்பிடுகிறார், ஆறு முகத்தோடு இருக்கின்ற சிவபெருமான் என்கிறார். அப்பேர்ப்பட்ட முருகப்பெருமான் நேற்றைய இரண்டாம் உற்சவத்தில் நடராஜராக வலம் வருகிறார். திருப்புகழில், அருணகிரிநாதர் முருகப்பெருமானை நட்ராஜ் ரோடு ஒப்பிடுகிறார். "தனதனன" என்று நர்த்தன கதிகளை சேர்த்துள்ளார். அருணகிரிநாதர் திருச்செந்தூர் சென்றபோது முருகனிடம் உங்கள் அப்பாதான் நர்த்தனம் ஆடுகிறார், நீங்கள் நர்த்தனம் ஆடி நான் பார்க்கவேண்டும் திருப்புகழ் எழுத வேண்டும் என்கிறார் உடனே சாமி பின்பாகத்தில் நடனமாடி தரிசனம் தருகிறார் .அந்த தரிசன கோலத்திற்கு சிகப்பு வஸ்திரம் இன்றைக்கும் திருச்செந்தூரில் அணிவிக்கிறார்கள். அதனால்தான் நேற்றைக்கு சிவப்பு வஸ்திரம் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. சிவபெருமானின் நர்த்தன த்தில் தான் உலகமே இயங்குகின்றது. இன்றைக்கும் பூமியின் மையப் பகுதியாக நடராஜரின் சிதம்பரம் கோவில் இருக்கின்றது, அதனால் தான் பூமியின் அசைவுகள் இயங்குகின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன, அப்பேர்ப்பட்ட நடராஜர் திருக்கோலத்தில் முருகப்பெருமான் நேற்று தெப்ப உற்சவத்தில் காட்சியளித்தார்