24/05/2026
இயேசுவைப் போல இன்று (25.05.2026)
என் ஆண்டவர் பேசுவாரா? என்ற கேள்வி உனக்குள் அனேக நேரம் எழுவது உண்டு என்னுடைய பிரச்சனைகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் எப்போதும் என்னோடு மனிதர்கள் உரையாடுவது போல் உரையாட வேண்டும் என்று விரும்புகிறாய்,இது சாத்தியமா? வேதத்தில் அநேக மனிதர்களோடு தேவன் பேசினார், உரையாடினார், சஞ்சரித்தார்,என்றெல்லாம் வாசிக்கிறேன் என்னோடு அப்படிப்பட்ட தொடர்பை வைப்பாரா? என்று உன் எண்ணத்தில் ஒரு கேள்வி என் அன்பு மகனே/ மகளே, நான் உன்னோடு பேச விரும்புகிறேன் நான் அனுதினம் உன்னோடு பேசுகிறேன் ஆனால் உன் காதுகள் என் சத்தத்திற்கு செவி சாய்க்க மறுக்கிறது, உன் இருதயத்தை நீ என் பக்கமாய் சாய்த்து உன் பாவங்களை நீ அறிக்கை செய்து உன்னை தாழ்த்தும்போது என்னுடைய குரல் உன் காதுகளில் கேட்க்கும், இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம், இன்று நீ அதை அனுபவிக்கலாம் இன்று ஒரு மணி நேரம் என்னோடு செலவு செய் பாவங்களை அறிக்கையை செய்து ஆண்டவரே என்னோடு பேசும் என்று உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபம் செய் அப்பொழுது என்னுடைய மெல்லிய சத்தத்தை நீ கேட்பாய், நான் பேசுவதற்கு உன்னிடம் தயாராக இருக்கிறேன் நீ கேட்பதற்கு ஆவலாய் இருக்கிறாயா? உன் முழங்கால்களை முடக்கு உண்மையான இருதயத்தோடு தேடு இதோ என் சத்தம் உன்னை நோக்கி வருகிறது...
இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
( யோவான் 18 : 37 )