Maktabah AsSunnah Wa AsSalafiyyah

Maktabah AsSunnah Wa AsSalafiyyah 📖 உலமாக்களின் வார்த்தைகள் தமிழ் மொழியில்

🔸*அரபி மொழியை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்*🔸- *அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி*- *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக்* - *அஷ்ஷைஃ...
20/08/2026

🔸*அரபி மொழியை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்*🔸

- *அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி*
- *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக்*
- *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி*

📌 *அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி ஹஃபிதஹுல்லாஹ்:*

எவரொருவர் ஷரீ'அஹ்வை சரியான, துல்லியமான புரிதலோடு புரிந்து கொள்ள விரும்புவாரோ, அவர் மீது அரபி மொழியை புரிந்து கொள்வதும், மேலும் (அரபி) பேச்சை எதனைக் கொண்டு புரிந்து கொள்ள இயலுமோ (அத்தகைய) அரபி மொழி தொடர்பான அடிப்படைகளை அறிந்து கொள்வதும் அவர் மீது கடமையாகும்.

இதன் காரணமாகவே கல்வியைத் தேடும் மாணவர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரிடத்தில் தற்போது இருக்கக்கூடிய தவறுகளில் உள்ளதாவது அவர்கள் அரபி மொழியை, அது காரணங்களில் இருந்துள்ள ஒரு விடயம் (இலட்சியமோ, நோக்கமோ அல்ல) என்பதை ஆதாரம் காட்டி அதனை அலட்சியம் செய்கின்றனர்.

இன்னும் நாவானது எதைக் கொண்டு சீர்படுத்தப்படுமோ அந்த அளவிற்குக் கூட அரபி மொழியில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. இதனால் குர்ஆன் ஸுன்னாஹ்விலுள்ள, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுகளுடைய விடயத்தில் அவர்களது புரிதல் கெட்டு விடுகிறது.

குர்ஆன் ஸுன்னாஹ்வில் உள்ளவற்றையும், மேலும் மார்க்க அறிஞர்களின் புத்தகங்களில் உள்ளவற்றையும் புரிந்து கொள்வதில் அரபி மொழிக்கென பெரும் தாக்கம் இருக்கின்றது.

ஆகையால் கல்வியைத் தேடும் மாணவர்களை (அரபி) மொழி கற்பதில் கவனம் செலுத்துவதற்கு நான் ஊக்குவிக்கின்றேன்; நான் நாடுவதாவது: (அதிலுள்ள) சொற்களையும், பொருள்களையும் புரிந்து கொள்ளும் அளவிற்கான (கற்றலாகும்). இது ஒரு கல்வியைத் தேடும் மாணவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [1]

📌 *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் ஹஃபிதஹுல்லாஹ்:*

(மார்க்கக்) கல்வியிலும், த’அவாவிலும் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய மன்ஹஜோடு (வழிமுறையோடு) தொடர்புள்ள ஒரு விடயம் இருக்கின்றது. அதானது அரபி மொழியில் கவனம் செலுத்துவதாகும்.

குர்ஆனானது தெளிவான அரபி மொழியில் தான் இறக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு குர்ஆனை நாம் விளங்கிக் கொள்வோம்? அதனுடைய செய்திகளை விளங்கிக் கொள்வோம்? அதனுடைய ஏவல்கள், விலக்கல்கள், வரம்புகள், வாக்குறுதிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்?

அல்லாஹ் அதில் நமக்கு விவரித்தவற்றை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வோம்?
இன்னும் எவ்வாறு அவற்றைக் கொண்டு உள்ளங்கள் அசைக்கப்படும்? அது அபி மொழியைக் கொண்டு மட்டுமே.

எனவேதான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வாளுக்கும் ஈட்டிக்கும் முன்பாக, கல்வியையும் குர்ஆனையும் கொண்டு வென்றெடுத்த எந்தவொரு தேசத்திலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் முதன்முதலாக அரபு மொழியையே மக்களுக்குக் கற்றுக்கொடுப்பர். எனவேதான் அரபி மொழியும், அரபி மொழியின் புரிதலும் (அந்நாடுகளில்) பரவியது.

(எந்த அளவிற்கு அரபி மொழி பரவியது என்றால் அரபிகள் அல்லாத) மற்ற சமூகங்களில் பிறந்தவர்கள் கூட நமக்கு அரபி மொழியின் அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தனர். அதற்கு காரணமாவது அவர்கள் அதற்கு கொடுத்த அக்கறையும், அவர்கள் அதற்குக் காட்டிய அதீத முக்கியத்துவமும் ஆகும்.

இதன் காரணமாகவே பூமியின் கிழக்குப் பகுதியிலும், அதனுடைய மேற்குப் பகுதியிலும் உள்ள மார்க்க அறிஞர்களிலுள்ள ஸாலிஹீன்களை மக்களுக்கு அரபி மொழியை கற்பிப்பதில் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

ஏன்? அது அரபி இனத்தின் மொழி என்பதற்காக அல்ல, இல்லை. அது இஸ்லாத்துடைய மொழி, குர்ஆனுடைய மொழி, அல்லாஹ்வை - ஜல்ல வ அலா - பற்றியும், அவனது தூதரைப் பற்றியுமான மார்க்கப் புரிதலை பெறுவதற்கான மொழி என்பதற்காக ஆகும்.

இதன் காரணமாகவே அரபி மொழியை கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதானது, இது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய த’அவாவின் வழிமுறையிலுள்ள சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.

(அரபியல்லாத) சமூகங்களுடைய மொழிகளில் த’அவா செய்ய மாட்டார்கள், இன்னும் அவர்களை மார்க்க விளக்கம் பெறாதவர்களாக விட்டு விடமாட்டார்கள். (அவர்களிடம்) நீங்கள் வாருங்கள் எனக் கூறி, இஸ்லாத்தில் சில விடயங்களைக் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு, உங்களது மொழியைக் கொண்டு நீங்கள் த’அவாவை மேற்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்களை விட்டு விடமாட்டார்கள். (மாறாக) அவர்களுக்கு அரபி மொழியைக் கொண்டே இயன்றவரை கற்றுக் கொடுப்பார்கள்.

*அரபி மொழியை அறியாத நிலையில் உள்ளவர் அவருடைய த’அவாவில் தெளிவான ஞானமுள்ள ஒரு தா’ஈயாக இருக்க முடியாது.* [2]

📌 *அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்:*

நானும் நீங்களும் அதன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்; அதானது ஆழமான வேரூன்றலின் அவசியமாகும். மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவரே! அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளரே! அரபி மொழியின் கல்வியில் ஆழமான வேரூன்றலின் அவசியத்தின் பால் (நானும் நீங்களும் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்).

ஷரீ'அஹ்வுடைய கல்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்களில் ஒருவராக நீ இருக்க விரும்பினால், (அதனை) ஆதரவு வைத்து தேடுபவராக இருந்தால், அரபி மொழியின் கல்வியில் ஆழமாக வேரூன்றுவது கட்டாயமாகும். ஏனெனில் அதில் முக்கியமான அடித்தளமானது, அரபி மொழியின் அறிவியல்களில் நீ நன்கு தேர்ச்சி பெற்றவனாக இருப்பதாகும்.

*(கல்வியில்) வேரூன்றிய அறிஞர்களின் வரலாறுகளை எவ்வளவு நீ சிந்தித்துப் பார்த்தாலும், ஒரு வேரூன்றிய ஆலிமை உன்னால் காண இயலாது அவர் அரபுகளின் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருந்தே தவிர.*

குர்ஆனும் ஸுன்னாஹ்வும் தெளிவான அரபி மொழியில் இறங்கியுள்ளன, வந்தடைந்துள்ளன. எனவே அரபி மொழியில் நீ பலவீனமானவனாக இருந்தால், ஷரீ’அஹ்வை விளங்கிக் கொள்ள வேண்டிய விதத்தில் உன்னால் விளங்கிக் கொள்ள இயலாது, மேலும் மார்க்க அறிஞர்களின் பேச்சுக்களை உன்னால் சூழ்ந்தறிய முடியாது. எந்தளவிற்கு உன்னால் (அதில்) ஆழ்ந்து செல்ல இயலுமோ (அவ்வாறு செய்வாயாக), உன்னை (அதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதே, இன்னும் (அதில்) உன் மீது கருமித்தனம் காட்டாதே.

அரபி மொழியின் அறிவியல்களில் உனது படிப்பை அதிகப்படுத்துவாயாக; நஹ்வு மட்டுமல்ல, நஹ்வு படிப்படியாக, ஸர்ஃப் படிப்படியாக, மேலும் மொழியின் சொற்களஞ்சியம் பற்றிய கல்வியையும் படிப்பாயாக.

உதாரணத்திற்கு கைரோவில் உள்ள மஜ்மஉல் லுகத்தில் அரபியா தொகுத்த அல்முஃஜமுல் வஸீத் (என்ற அகராதியை) உன் அருகில் வைத்துக் கொள்; ஏனெனில் அது உனக்கு பயனளிக்கக்கூடிய ஒரு புத்தகமாகும்.

உன்னைக் கடந்து செல்லக்கூடிய எந்தவொரு சொல்லாயினும், நீ அதனுடைய பொருளை அறியவில்லையெனில் அல்லது அதனுடைய பொருளைக் குறித்து சந்தேகித்தாய் எனில், இந்த புத்தகத்தைத் திறந்து வாசிப்பாயாக. காலப்போக்கில் மொழியில் ஒரு நல்ல (சொல்)வளத்தை அடைந்தவனாக நீ இருப்பாய்.

இந்த புத்தகத்தை உன் அருகில் வைத்துக் கொள், அதில் பார்ப்பதை சுமையாகக் கருதாதே; அல்முஃஜமுல் வஸீத் அல்லது அல்மிஸ்பாஹுல் முனீர் (போன்ற அகராதிகளை உனது அருகில் வைத்துக் கொள்). முக்கியம் என்னவென்றால் இச்சுருக்கமான அகராதிகளில் (ஒன்றை) உன் அருகில் வைத்துக்கொள், மேலும் அதில் அதிகமாக வாசிப்பாயாக.

அதப் (இலக்கிய) புத்தகங்களையும் படியுங்கள், உங்களுடைய (மொழி)நடை கட்டாயமாக உயரவும் மேலோங்கவும் வேண்டும்.

இலக்கிய புத்தகங்களை வாசிப்பதன் மூலமே இது ஏற்படும்; அது பண்டைய கால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி அல்லது சமகால இலக்கியவாதிகளின் புத்தகங்களாக இருந்தாலும் சரி. அதாவது கடந்த ஹிஜ்ரி நூற்றாண்டில் இருந்த வர்கத்தினர். இலக்கியவாதிகளில் ஒரு கூட்டத்தினர் இருந்தனர், அவர்களுடைய மொழிநடையானது மிகவும் மேலோங்கியதாக இருக்கும். (அவற்றை வாசிப்பதானது) உனக்கு மொழிக் கருவூலத்தையும், நல்லதொரு இலக்கிய வளத்தையும் பெற்றுத்தரும்.

முக்கியம் என்னவென்றால் இயன்ற அளவிற்கு மொழியின் அறிவியல்களில் ஆழமாக கற்றுக் கொள், இயன்ற அளவுக்கு அரபி மொழியில் தேர்ச்சி பெறுவாயாக. இது குர்ஆனையும், ஸுன்னாஹ்வையும், மார்க்க அறிஞர்களின் பேச்சுகளையும் புரிந்து கொள்வதில் மிகப்பெரும் தாக்கத்தை உன்மீது ஏற்படுத்தும்.

அல்லாஹ்விடம் - அஸ்ஸ வஜல் - உங்களுக்கும் எனக்கும் வெற்றியையும், நேர்வழியையும், உதவியையும் கேட்கின்றேன், மேலும் தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து அல்லாஹ்வின் பக்கம் த’அவா பணி செய்யக்கூடிய, அமல் செய்யக்கூடிய உலமாக்களிலும் ஆக்கி வைப்பானாக என கேட்கின்றேன். [3]

[1] https://youtu.be/GwzqEwbfUmw?si=KtZmqHzJ3RyS9K5X
[2] https://youtu.be/67BIvuvZFuA?si=l2KHsc2aUfABLGF_
[3] https://youtu.be/llKmnAdJ7ew?si=PaC4LkTmXr-0uVfs

📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/ufft94wu

🌐 வளைதளம்:
salafiyyah.in

20/08/2026
🔸நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தை...
10/08/2026

🔸நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ்🔸

கேள்வி:

ஒரு நலவிற்காக சில வேளைகளில் (ஒரு சில) ஸுன்னாஹ்களை (செய்யாது) விட்டு விடுவது அதனை நிறைவேற்றுவதை விட மிகப் பெரியதா?

பதில்:

ஆம். (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்த அல்லது ஒரு நலவிற்காக (சில) ஸுன்னாஹ்களை விட்டுவிடுவது ஆகுமானதாகும். ஆனால், ஸுன்னாஹ்களை மரணிக்கச் செய்வது (என்பது அதன் பொருள்) அல்ல.

ஏனெனில் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுவதற்காக அதை ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்கு விடுவதற்கும், ஸுன்னாஹ் மரணித்திடும் அளவிற்கு அதனை முற்றிலுமாக விட்டுவிடுவதற்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது.

எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு மனிதருக்கு திடமான மன உறுதி இருந்து, (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில வேளைகளில் அதனை விட்டுவிடுவதானது, அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.

இதன் காரணமாகவே நபி ﷺ அவர்கள் குறைஷ் (கோத்திரத்தார் ஒரு சில மாற்றங்களுடன்) கட்டிய க’அபாவை இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உடைய அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப நாடினார்கள். எனினும், ஃபித்னா ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதனை விட்டு விட்டார்கள்.

ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அன்னார் கூறினார்கள்:

لولا أن قومك حديثوا عهد بكفر لهدمت الكعبة وبنيتها على قواعد إبراهيم وجعلت لها بابين باباً يدخل منه الناس وباباً يخرج منه

“உன் சமூகத்தார் இறை நிராகரிப்பிலிருந்து சமீபமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையெனில், நான் க’அபாவை இடித்துவிட்டு, இப்ராஹீமுடைய அடித்தளத்தின் மீது அதனைக் கட்டியெழுப்பி, மக்கள் நுழைவதற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலும் என இரு வாசல்களை அதற்கு நான் அமைத்திருப்பேன்.”

இதானது இதிலிருந்து நம்மால் ஒரு பொதுவான விதியை எடுக்க இயலுமான அடிப்படையாகும்; அது (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில ஸுன்னாஹ்களை விட்டுவிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதாகும். ஏனெனில், சிறப்பில் குறைந்த மதிப்புடைய ஒரு விடையத்திற்கு சிறந்த ஒரு விடையத்தை விடவும் சிறப்பிற்குரியதாக ஆக்குகின்ற (காரணம்) ஒன்று ஏற்படக்கூடும்.

ஆனால் அதன் பொருளானது ஸுன்னாஹ் மரணிக்கின்ற அளவிற்கு அதனை நாம் முற்றிலுமாக விட்டுவிடுவது என்பதல்ல. ஏனெனில் இது சத்தியத்தை மறைப்பதையும், ஷரீ’அஹ்வில் சிலவற்றை மரணிக்கச் செய்வதையும் அவசியமாக்கும். (சூழ்நிலைகளைக் கருதி) உபாயமாக மட்டும் நடந்து கொள், சமரசம் செய்யாதே; உபாயமாக நடந்து கொள், சமரசம் செய்திடாதே.

எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பை நீ கண்டால் (அதனை) செய்திடு. மேலும் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக இந்த சில ஸுன்னாஹ்களை முழுமையாக அல்லாமல் (சில சமயங்களில்) விட்டுவிடுவதை, சிறந்த ஒன்றிலிருந்தும், இன்னும் அல்லாஹ்வின் பக்கம் செய்யும் அழைப்புப்பணியிலிருந்தும் உள்ளதாக நீ கண்டால், (அதனை விட்டுக் கொள்ளலாம்). இது நல்லதாகும்; அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆம், முதலாவதிற்கு நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக: இரு காலணிகளுடன் தொழுவது; இரு காலணிகளுடன் தொழுவதென்பது ஸுன்னாஹ் கொண்டுவந்த ஒன்றாகும். நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அவர்களைத் தொட்டும் திட்டமாக உறுதியாகியுள்ளது, இன்னும் நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழும்படி ஏவியுள்ளார்கள்.

خالفوا اليهود فإنهم لا يصلون في نعالهم

“யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில், அவர்கள் காலணிகளுடன் தொழ மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆனால் இதிலிருந்து (இந்த ஸன்னாஹ்வை நிலைநாட்டுவதிலிருந்து) ஃபித்னாவும், சத்தியத்தின் மீதும், அதன் மக்களின் மீதும் வெறுப்பும் அவசியமாகும் என்றால், இந்த ஃபித்னாவை அகற்றுவதற்காக அதனை நாம் விட்டுவிடுவதில் எந்தக் குற்றமும் இல்லை.

ஆனால் இதன் பொருளாவது நாம் ஸுன்னாஹ்வை மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடாது, அதனை வெளிப்படுத்தக்கூடாது என்பதல்ல. மாறாக நாம் அவற்றை (மக்களுக்கு) தெளிவுபடுத்துவோம், இன்னும் வெளிப்படுத்துவோம்.

ஆனால் நாம் இதைச் செய்து அது வெறுப்பு, பகைமை, குரோதம் மற்றும் வெருண்டோடுதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றால், (இச்சந்தர்ப்பத்தில்) ஒரு மனிதர் காலணிகளை அணிந்து தொழுவதை விட (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதே மிகவும் முக்கியமானதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

🔗 https://youtu.be/Y8v47K6Vvk0?si=tOB3zsyGSeGtqBnW

📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/mvfr4za4

🌐 வளைதளம்:
salafiyyah.in

🔸தவ்ஹீத் இல்லாத த’அவா தலையில்லாத உடலைப் போன்றது! - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்🔸கேள்வி:(கேள்வியாளர்) கூறுகி...
03/08/2026

🔸தவ்ஹீத் இல்லாத த’அவா தலையில்லாத உடலைப் போன்றது! - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்🔸

கேள்வி:

(கேள்வியாளர்) கூறுகிறார்: சிறப்பிற்குரிய ஷைஃக் அவர்களே - அல்லாஹ் உங்களுக்கு தவ்ஃபீக் அளிப்பானாக - நம்முடைய காலத்தில் அழைப்பாளர்கள் அதிகமாகி விட்டனர். ஆனால் அவர்களில் குறைவானவர்களே தவ்ஹீதின் பக்கமும், அகீதாவின் பக்கம் த’அவா செய்கின்றனர். எனவே எவர் தவ்ஹீதை நோக்கி அழைப்பு செய்யவில்லையோ, அவர் ரஸூல்மார்களுக்கு மாறுசெய்தவராக கருதப்படுவாரா? மேலும் அவரின் த’அவாவை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

பதில்:

(அத்தகையவர் குறித்து) எச்சரிக்கப்பட வேண்டும், ஆம். எவர் தவ்ஹீதின் பக்கம் த’அவா செய்யவில்லையோ, தவ்ஹீதானது கட்டாயம் இல்லை என்று கூறுவாரோ, மேலும் குற்றங்கள், பாவங்கள், வட்டி, விபச்சாரம் மற்றும் அது போன்றவற்றை குறித்து (மட்டும்) எச்சரிக்கை செய்வாரோ (அவர் எச்சரிக்கப்பட வேண்டும்).

தலையில்லாமல் இருக்கும் உடலைப் போன்ற, இது ஒரு தலை இல்லாத த’அவாவாகும். தலை இல்லாமல் இருக்கும் உடலானது உயிரோடு இருக்குமா? இருக்காது, மய்யித்தான ஒன்றாகும்.

இது ஒரு மய்யித்தான த’அவாவாகும்; அதற்கு பின்னால் எந்தவொரு பயனும் இல்லை.

மேலும் இது ரஸூல்மார்களின் த’அவாவிற்கு - அலைஹிமுஸ் ஸலாது வஸ்ஸலாம் - மாற்றமான ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் தவ்ஹீதைக் கொண்டு முதலாவதாக ஆரம்பிப்பார்கள்; தவ்ஹீதானது உறுதியாக நிலைபெற்று, தவ்ஹீதானது (வாழ்வில்) உண்மைப்படுத்தப்பட்டுவிட்டால், மக்களுக்கு அவர்களுடைய (மற்ற) மார்க்க விடயங்களை கற்பிப்பவர்களாக இருப்பார்கள்.

إن يكن أول ما تدعوهم إليه شهادة لا إله إلا الله فإن هم أجابوك لذلك فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في اليوم إن هم أجابوك لذلك...

“நீங்கள் அவர்களை எதை நோக்கி அழைக்கின்றீர்களோ அவற்றுள் முதலாவதாக ஷஹாதது லா இலாஹ இல்லல்லாஹ் இருக்கட்டும், அவர்கள் அதற்கு உனக்கு பதிலளித்தார்கள் என்றால், அல்லாஹ் அவர்களின் மீது ஐந்து நேரத் தொழுகைகளை ஒரு நாளில் கடமையாக்கி இருக்கின்றான் என்பதை அவர்களை அறியச் செய்வீராக - அவர்கள் அதற்கு உனக்கு பதிலளித்தார்கள் என்றால் -”

ஆனால் அவர்கள் (அதற்கு) பதிலளிக்கவில்லை என்றால், எந்தவொரு பயனும் இல்லை. அவர்கள் இரவும் பகலும் தொழுதாலும் எந்தவொரு பயனும் இல்லை.
எனவே, தவ்ஹீதைப் பற்றி கவனம் கொள்ளாத அனைத்து த’அவாவும், மய்யித்தான த’அவாவாகும்; அது எந்தவொன்றையும் ஒருபோதும் விளைவிக்காது, ஆம்.

கேள்வி:

சிறப்பிற்குரிய ஷைஃக் அவர்களே - அல்லாஹ் உங்களுக்கு தவ்ஃபீக் அளிப்பானாக - சில அழைப்பாளர்கள் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைக்காமல் இருக்கின்றனர். மாறாக அவர்களின் அதிகமான வகுப்புகளிலும், ஃகுத்பாக்களிலும் நற்பண்புகளின் பக்கமே த’அவாவை மேற்கொள்கிறார்கள், அவர்கள் தவ்ஹீத்தைப் பற்றிப் பேசினாலும் அதை பிரத்யேகமாக (எடுத்துரைப்பதில்லை). அவர்களைக் குறித்தான கருத்தென்ன?

பதில்:

இந்த த’அவாவானது எந்த பலனையும் அளிக்காது. இதானது தலையில்லாத இறந்து போன ஒரு உடலைப் போன்றது. ஒரு உடலானது அதனுடைய தலை வெட்டப்பட்டுவிட்டதெனில், அதில் எந்தவொரு பயனும் மீதமிருக்காது.

எனவே தவ்ஹீத் இல்லாத த’அவா என்பது தலை துண்டிக்கப்பட்ட உடலைப் போன்றது, (அது) எந்த பயனுமில்லாத அலுப்பே.

அவர்களுடைய நற்குணங்கள் நல்லதாயிற்று, உண்மை பேசுகிறார்கள், தொழுகை, ஸதகாக்களை அதிகப்படியாக செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஷிர்க் அவரிடமிருந்தால் அவையனைத்தும் அழிக்கப்பட்டு விடும் ஏற்றுக்கொள்ளப்படாது, அவரது அமல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். எனவே, அமல்களைச் சரிசெய்யக்கூடியது தவ்ஹீதே, மேலும் அதனை அழிக்கக்கூடியது ஷிர்க்கே.

இது விடயத்தில் அவர்கள் கவனம் கொள்வது கடமையாகும்.

தவ்ஹீத் இல்லாத த’அவா, இல்லாத ஒரு த’அவாவைப் போன்றது. மாறாக தவ்ஹீத் இல்லாத த’அவாவானது, அது இருப்பதை விட அது இல்லாமல் இருப்பது சிறந்தது! ஏனெனில் அது மக்களை வழிகெடுக்கும், (அவர்களோ) அதனை உண்மை என எண்ணுவார்கள். ஆம்.

ரஸூல்மார்கள் முதலில் தவ்ஹீதுடன் (த’அவாவை) தொடங்கினர். நீ ரஸூல்மார்களுடைய வழிமுறையல்லாமல் - அலைஹிமுஸ் ஸலாது வஸ்ஸலாம் - வேறொரு வழிமுறையைக் கொண்டு ரஸூல்மார்களுக்கு மாறு செய்கிறாயா!? இது இயலாத ஒன்றாகும், ஆம்.

🔗 https://youtu.be/bH49j2WcY4I?si=3umPOHLysCMt6PbB

📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/4xv5h8dy

🌐 வளைதளம்:
salafiyyah.in

🔸*பித்’அஹ்வின் வகைகளும் அதனுடைய மார்க்கச் சட்டமும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்*🔸*புதுமையைத் தோற்றுவிப்பத...
02/08/2026

🔸*பித்’அஹ்வின் வகைகளும் அதனுடைய மார்க்கச் சட்டமும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்*🔸

*புதுமையைத் தோற்றுவிப்பதானது இருவகைப்படும்:*

[முதல் வகை]: பழக்கவழக்கங்களில் புதுமையைத் தோற்றுவிப்பது.

நவீன கண்டுபிடிப்புகளை தோற்றுவிப்பது போன்று, மேலும் அதில் பல்வேறு வகையான அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளும் அடங்கும். இது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்; ஏனெனில் பழக்கவழக்கங்களுடைய விடயத்தில் அடிப்படை விதி என்பது அனுமதியாகும்.

[இரண்டாவது வகை]: மார்க்கத்தில் புதுமையைத் தோற்றுவிப்பது.

இது ஹராமாகும்; ஏனெனில் இது விடயத்தில் அடிப்படை விதி என்பது தவ்கீஃப் (வஹீயில் வந்திருப்பவற்றுடன் நின்று கொள்வது) ஆகும்.

*(நபி) ﷺ அவர்கள் கூறினார்கள்:*

*من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد*

*“எவரொருவர் நமது இந்த விவகாரத்தில் (ஷரீ’அஹ்வில்) அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்”.*

*மேலும் மற்றுமொரு அறிவிப்பில்:*

*من عمل عملاً ليس عليه أمرنا؛ فهو رد*

*"நம்முடைய விடயத்திற்கு (ஷரீ’அஹ்விற்கு) ஒத்தில்லாத ஒரு அமலை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்" (என்று வந்துள்ளது).*

*பித்'அஹ்களின் வகைகள்:*

மார்க்கத்தில் பித்'அஹ்வானது இரு வகைப்படும்:

*முதல் வகை:* கூற்றுரீதியான கொள்கைசார் பித்'அஹ்; ஜஹ்மிய்யாஹ், முஃதஸிலாஹ், ராஃபிதாஹ் மற்றும் இதர வழிதவறிய கூட்டங்களின் கூற்றுகள் மற்றும் அவற்றின் கொள்கைகளைப் போன்றவை.

*இரண்டாவது வகை:* வணக்க வழிபாடுகளில் உள்ள பித்'அஹ்; அல்லாஹ் மார்க்கமாக்காத ஒரு வழிபாட்டைக் கொண்டு அவனுக்கு வணக்க வழிபாடு செய்வது போன்று.

அவை பல வகைகளாகும்:

1️⃣ வழிபாட்டின் அடிப்படையில் உள்ளவை: அதாவது மார்க்கத்தில் அதற்கென எந்த ஒரு அடிப்படையும் இல்லாத ஒரு வழிபாட்டைத் தோற்றுவிப்பது; மார்க்கமாக்கப்படாத ஒரு தொழுகையை அல்லது மார்க்கமாக்கப்படாத ஒரு நோன்பை அல்லது மவ்லித் மற்றும் அதல்லாத மார்க்கமாக்கப்படாத பண்டிகைகளை தோற்றுவிப்பது போன்று.

2️⃣ மார்க்கமாக்கப்பட்ட ஒரு வழிபாட்டில் அதிகப்படுத்துவதில் உள்ளவை: உதாரணமாக ‘துஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில் ஐந்தாவது ஒரு ரக்’அஹ்வை அதிகப்படுத்துவது போன்று.

3️⃣ வழிபாட்டை நிறைவேற்றும் விதத்தில் உள்ளவை; அதாவது மார்க்கமாக்கப்படாத விதத்தில் அதனை நிறைவேற்றுவது: அதானது மார்க்கமாக்கப்பட்ட ‘திக்ருகளை இனிமையான கூட்டுக்குரலில் நிறைவேற்றுவது போன்று, மேலும் வழிபாடுகளில் ரஸூல் ﷺ அவர்களின் ஸுன்னாஹ்வை விட்டும் வெளியேறும் அளவிற்கு நஃப்ஸின் மீது கடுமை காட்டுவது போன்று.

4️⃣ மார்க்கமாக்கப்பட்ட ஒரு வழிபாட்டிற்கு ஷரீ'அஹ் பிரத்யேகமாக்கிடாத ஒரு நேரத்தை பிரத்யேகமாக்குவதன் மூலம் உள்ளவை: ஷ'அபானின் நடுபகுதியினுடைய பகல் மற்றும் இரவினை, நோன்பு மற்றும் இரவுத் தொழுகையைக் கொண்டு பிரத்யேகமாக்குவது போன்று; ஏனெனில் நோன்பும், இரவுத் தொழுகையும் அவற்றின் அடிப்படையில் மார்க்கமாக்கப்பட்டவையே. எனினும் நேரங்களில் ஒரு நேரத்தைக் கொண்டு அதனை பிரத்யேகமாக்குவது என்பது ஆதாரத்தின் பக்கம் தேவையுடையதாக இருக்கின்றது.

*மார்க்கத்திலுள்ள அனைத்து வகைப்பட்ட பித்'அஹ்வுடைய சட்டம்:*

*وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ ؛ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ*

*“புதுமையான விடயங்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஏனெனில் ஒவ்வொரு புதுமையும் பித்'அஹ்வாகும், மேலும் ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும்”*

*மேலும் அவர்களது கூற்றான:*

*من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد*

*“எவரொருவர் நமது இந்த விவகாரத்தில் (ஷரீ’அஹ்வில்) அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்”.*

*மேலும் மற்றுமொரு அறிவிப்பில்:*

*من عمل عملاً ليس عليه أمرنا فهو رد*

*"நம்முடைய விடயத்திற்கு (ஷரீ’அஹ்விற்கு) ஒத்தில்லாத ஒரு அமலை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்"*
என்ற (நபி ﷺ) அவர்களின் கூற்றுகளின் காரணமாக மார்க்கத்திலுள்ள அனைத்து பித்’அஹ்வும் தடுக்கப்பட்டதும், வழிகேடுமாகும்.

மேலும் இந்த ஹதீஸ்களானது மார்க்கத்திலுள்ள ஒவ்வொரு புதுமையும் பித்'அஹ்வாகும், இன்னும் ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும், நிராகரிக்கப்பட்டதாகும் என்பதைக் காட்டுகின்றன. அதனுடைய பொருளாவது வழிபாடுபகள் மற்றும் கொள்கைகளிலுள்ள பித்’அஹ்கள் தடுக்கப்பட்டதாகும். எனினும் அத்தடையானது பித’அஹ்வுடைய வகையைப் பொருத்து வேறுபடும்.

➡️ அவற்றிலே சில தெளிவான குஃப்ரானவை: அடக்கம் செய்யப்பட்டவர்களின் பக்கம் நெருக்கத்தைத் தேடி கப்ருகளை தவாஃப் செய்வது, அவற்றிற்கு பலிப்பிராணிகள் மற்றும் நேர்ச்சைகளை முற்படுத்துவது, அவற்றில் அடக்கம் செய்யப்பட்டவர்களை அழைத்துப் பிரார்த்திப்பது, அவர்களைக் கொண்டு கஷ்டத்தைப் போக்கிட வேண்டுவது மேலும் ஜஹ்மிய்யாஹ் மற்றும் மு'ஃதஸிலாஹ்வில் வரம்புமீறியோரின் கூற்றுகளைப் போன்றவை.

➡️ மேலும் அவற்றிலே சில ஷிர்கிற்கு இட்டுச் செல்லும் காரணிகளிலிருந்து உள்ளவை: கப்ரின் மீது (கட்டிடங்களைக்) கட்டுவது, இன்னும் அதனிடத்தில் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வது போன்றவை.

➡️ மேலும் அவற்றிலே சில கொள்கைரீதியான பாவமானவை: தங்களின் கூற்றுகளிலும், நம்பிக்கைகளிலும் ஷரீ’அஹ்வின் ஆதாரங்களுக்கு மாற்றமான ஃகவாரிஜ், கதரிய்யாஹ் மற்றும் முர்ஜியாஹ்களின் பித்'அஹ்களைப் போன்றவை.

➡️ மேலும் அவற்றிலே சில (செயல்ரீதியான) பாவமானவை: துறவறம், சூரிய (வெயிலில்) நின்றபடி நோன்பு நோற்பது, இன்னும் உடலுறவின் இச்சையை துண்டிக்கும் நோக்கத்துடன் காயடிப்பது போன்ற பித்’அஹ்களாகும்.

📖 _அல்இர்ஷாத் இலா ஸஹீஹில் இஃதிகாத், பக்கம்: 321, 322_

📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/y9mpcf25

🌐 வளைதளம்:
salafiyyah.in

🔸வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ்🔸கேள்வியாளர்: மத்ஹப்களு...
12/07/2026

🔸வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ்🔸

கேள்வியாளர்: மத்ஹப்களுடைய இமாம்களில் யார் இஜ்மா'விற்கு ஆதாரத்தன்மை இல்லை எனக் கூறியுள்ளார்? அதோடு (அதற்கான) மூலத்தை சுட்டிக்காட்டுங்கள்.

அஷ்ஷைஃக்: வழிகெட்ட கூட்டங்களைத் தவிர வேறு எந்த ஒருவரும் (இஜ்மா'வானது மார்க்க) ஆதாரத்தன்மை அற்றது என்று பேசமாட்டார். (மத்ஹப்களுடைய) நான்கு இமாம்கள் மற்றும் அவர்கள் அல்லாத மற்ற (இமாம்களைப்) பொறுத்தவரையில், அவர்கள் இஜ்மா'வை (ஆதாரம்) எனக் கூறுகின்றனர்.

இஜ்மா’ என்பது உறுதியான ஒரு விடயமாகும் - நாம் என்றென்றும் எப்போதும் கூறுவது போல - நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வின் பால் அழைப்போம்; இது மட்டுமல்ல மாறாக (அவ்விரண்டையும்) ஸலஃபுஸ் ஸாலிஹுடைய வழிமுறையில் (விளங்கிக் கொள்வதன் பால் அழைப்போம்).

அது ஏனெனில், அனைத்து இஸ்லாமியப் பிரிவுகளும் - அதனுடைய புதியதும், அதனுடைய பழைமையானதும் - அவர்களில் “நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்ள மாட்டோம்” என்று கூறுகின்றவரை நீங்கள் காணமுடியாது. அவர்கள் அனைவரும் இதை (குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்வதை) கூறுகின்றனர். ஆனால் அவர்களில் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களோ தங்களின் மனோ இச்சைகளுக்கு ஒத்துப்போவதற்காக குர்ஆன் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களை இரட்டை அர்த்தம் கொண்ட விளக்கமாக விளக்கம் கொடுக்கின்றனர்.

நான் உங்களுக்கு பலமுறை காதியானிகளை உதாரணம் கூறி இருக்கின்றேன், ஒரு புதிய கூட்டத்திற்கு உதாரணமாக. அவர்கள் எதார்த்தத்தில் - நான் அறிந்தவாறு - ஸுன்னாஹ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை மறுக்கின்ற போதிலும் அவர்கள் அதை மறுப்பதாக பகிரங்கமாக கூறுவது கிடையாது. எனினும் அவர்களால் மறுக்க இயலாத ஸுன்னாஹ்வை மாற்று விளக்கம் கொடுத்து திரிக்கின்றனர்; மொழியை விட்டும் தூரமான,மேலும் நமது முன்சென்ற நல்லோர்களுடைய (ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள்) விளக்கத்தை விட்டும் தூரமானதான (மாற்று) விளக்கத்தை அவற்றிற்கு அளிக்கின்றனர்.

மேலும் இவ்வாறே அவர்கள் குர்ஆனிலும் செய்கின்றனர். இதன் காரணமாகவே “இஸ்லாத்தை - அதன் இரு மூலங்களான குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்து - சரியான புரிதலாக புரிந்து கொள்வது அவசியம் என்று நாம் கூறுகின்றோம்; அதாவது அதில் (சரியாக புரிந்து கொள்வதில்) ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் எதன் மீது இருந்தார்களோ அதன்பால் திரும்புவது (அவசியமாகும்).

நாம் அதை (அந்தக் கூற்றை) மார்க்க ஆதாரங்களின் மூலமாக வலுப்படுத்துகின்றோம்.

அவற்றிலிருந்து உள்ளதாவது அல்லாஹ்வின் - அஸ்ஸ வஜல் - கூற்றான

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ

இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ (4:115)

இங்கு தூதர் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - அவர்களுக்கு மாறு செய்வதுடன் முஃமின்களின் வழிக்கு மாற்றம் செய்வதையும் குறிப்பிட்டுள்ளான். இந்த ஆயத்தில் நமது இறைவன் அஸ்ஸ வஜல் முஃமின்களின் வழியை வீணாகக் குறிப்பிடவில்லை.

நாம் என்றென்றும் எப்போதும் சுற்றிவரும் அந்த முக்கிய கருத்திற்காகவே (குறிப்பிட்டுள்ளான்). அதாவது முஃமின்களின் வழியானது, அல்லாஹ் தனது நபியின் மீது இறக்கிவைத்ததில் அல்லது அவனது தூதர் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் பேசியவற்றில் நாடப்பட்ட பொருளை நமக்கு விளக்கவும் தெளிவாக்கவும் செய்யும்.

உதாரணமாக “என்னுடைய ஸுன்னாஹ்வையும், எனக்குப் பின்வரும் நேர்வழிகாட்டும் நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடியுங்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறும் பொழுது, இந்தக் குர்ஆனிய ஆதாரத்திலிருந்து அதை பெற்றுக் கொண்டார்கள்.

“என்னுடைய ஸுன்னாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்” என்பதைக் கொண்டு அவர்கள் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - போதுமாக்கிக் கொள்ளவில்லை, அத்துடன் “கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும்” என்ற தனது கூற்றையும் சேர்த்துக் (கூறினார்கள்).

(இதற்கான) காரணமாவது நாம் சற்று முன்னர் குறிப்பிட்டதாகும். அதாவது அவர்களுடைய ஸுன்னாஹ்வானது அல்லாஹ்வின் தூதர் - ஸல்லல்லாஹு அலைஹி அலா ஆலிஹி வஸல்லம் - அவர்கள் எந்த நேர்வழி மற்றும் ஒளியின் மீதிருந்தார்களோ அதனை நமக்கு தெளிவுபடுத்தும்.

எனவே இஜ்மா'வானது (மறுக்க) இயலாத மாறாக மறுப்பதற்கு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். எவரொருவர் அதை மறுப்பதாக பிரகடனம் செய்வாரோ, அது முஸ்லிம்களுடைய ஜமாஅத்தில் இருந்து வெளியேறியதாக அவரிடமிருந்து வரும் வெளிப்படையான அறிவிப்பாகும்.

🔗 https://alathar.net/home/esound/index.php?op=codevi&coid=155449

📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/4jd2p5fb

🌐 வளைதளம்:
salafiyyah.in

Address

Melapalaiyam
627005

Alerts

Be the first to know and let us send you an email when Maktabah AsSunnah Wa AsSalafiyyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Maktabah AsSunnah Wa AsSalafiyyah:

Shortcuts

Share