"லக்ஷ்மி நாராயணம் தேவம் லலனாயுத விக்ரஹம் /
ஆஸ்ரிதா (s) பீஷ்ட தாதாரம் ஆச்ரயாமோ வயம் சதா //"
மயிலாடுதுறை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் , குத்தாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகிய சிற்றூர் இந்த மாதிரிமங்கலம் என்னும் லக்ஷ்மி விவாஹபுரம் ..
தல புராணம் :-
முன்பொரு சமயம் தேரழுந்தூர் என்னும் க்ஷேத்திரத்தில் கயிலாய நாதனாம் சிவபெருமானும் - பாற்கடல் வாசனாம் மஹா விஷ்ணுவும் சொக்கட்டான் என்னும் விளைய
ாட்டினை விளையாடினர் .. அதற்கு நடுவராக உமை அம்மை பார்வதி தேவியினை அமர்த்தினர் .. அவ்விளையாட்டில் ரங்கநாதனாம் தன் அண்ணன் மகாவிஷ்ணுவே வென்றார் என்று பார்வதி தேவி தெரிவிக்க , தன் அண்ணனான மகாவிஷ்ணுவின் பால் நின்று நீ இந்த தீர்ப்பினை ஈந்தனை என்று சிவபெருமான் வெகுண்டு தன்னில் ஒரு பாதியாம் உமை அம்மையை "பசு" ஆக கடவது என்று சாபமாய் (நமக்கு வரமாய் ) அளித்தனன்.
தன் தங்கை பார்வதி தேவி பசு உரு கொண்டதை எண்ணி வருந்திய நம்பெருமான் மகாவிஷ்ணுவும் - தன் துணை மஹா லக்ஷ்மியினை பிரிந்து அங்கு தான் கொண்ட கோலமாம் "தேவாதி ராஜன் " என்னும் திருவுருவினையும் துறந்து பசுவாக , ஆவினமாக , கோமாதாவாக - மாறிய தன் தமக்கை பார்வதியினை காப்பவனாக , காத்து நம்மை அருள்பவனாக "ஆமருவியப்பனாக , கோசகனாக " திருவுருகொண்டார் .
இவ்வாறாக கோசகனாக, ஆமருவியப்பனாக மாறிய பெருமாளினை திருமங்கை ஆழ்வாரும் பலவாறு மங்களாசாசனம் செய்து துதிக்கின்றார் . ஆமருவியப்பனாக மாறிய பெருமாளும் தன் தமக்கையாம் பார்வதியினை காத்து வருங்கால் திருக்கோழம்பம் என்னும் க்ஷேத்திரத்தினில் காலடி பட்டு , திருஆவடுதுறை என்னும் க்ஷேத்திரத்தினில் சாபவிமோசனம் பெற்று திருமணஞ்சேரியினில் தன் இறையாம் பரமேஸ்வரனுடன் திருமணம் கொண்டால் ..
அவ்வாறான அந்த திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பரமேஸ்வரன் அவரவர் விரும்பிய பரிசளிக்கும் நேரத்தில் "மஹா லக்ஷ்மி தாயார்" தனது விருப்பமாக , தன் தமக்கை பார்வதி தேவி பசுவாக மாறிய காலம் அவரை காத்திட தன் நாயகன் பெருமாள் தன்னை பிரிந்ததை கூறி அவரினை தான் எங்கு மனம் முடிப்பேன் என்று கேட்க , திருமணஞ்சேரியில் இருந்து நிருருதி பாகமாம் "வில்வாரண்யம்" என்னும் தலத்தினில் சென்று மகாவிஷ்ணுவினை திருமணம் புரிந்திட தவம் புரியுமாறு கூறினார் .. அவ்வாறு தவம் புரியும் கால் தாமே அங்கு வந்திருந்து திருமணத்தினை நடத்தி வைப்பதாகவும் கூறினார் ..
இதனை கேட்டு உள்ளம் மகிழ்ந்த திருமகளாம் மகாலக்ஷ்மியும் வில்வாரன்யமாம் இத்தலம் வந்து பாற்கடல் வாசனாம் , பரந்தாமனாம், நம்பெருமாளாம் ஸ்ரீ மஹா விஷ்ணுவினை திருமனம் புரிந்திட வேண்டி பெரும் தவம் இயற்றினல் ... இத்தவம் கண்டு மயங்கிய நாதனாம் பாற்கடல் வாசனும் திருமகளை மணம்முடிக்க வில்வாரன்யமாம் இங்கு வந்து "ஆமருவியப்பனாய் " இருந்தவன் திருமகளின் தவம் கண்டு அவளை "திருமணம்" முடித்து "மா-மருவி அப்பனாய் " ஆயினன் ..
இத்தகைய திருமகளின்-திருமாலின் திருமணம் நடந்ததால் இத்தலம் அன்று முதல் "லக்ஷ்மி விவாஹபுரம்" என்று புராண ப்ரசித்தி பெற்றது அதுவே தமிழில் "மால் திரு மங்கலம் " ஆகியது .. மால்-திருமால் , திரு-லக்ஷ்மி , மங்கலம்-திருமணம் நடை பெற்ற க்ஷேத்திரம் .. இதுவே இவ்வூரின் பெயர்காரனமாகவும் ஆகியது ... இந்த மால்திருமங்கலமே பின்னாளில் மருவி மருவி "மாதிரிமங்கலம் " ஆனது ..
கைலயம் பதியாம் - பரமேஸ்வரனும் தான் அன்று கூறிய வாக்கிற்கு இணங்க இத்திருமணம் காண இந்த க்ஷேத்திரத்திற்கு ஸ்வயம்புவாய் "திரு கைலாய நாதனாய் " வந்து அகம் குளிர்ந்தான் என்று ஸ்தல புராணம் நீள்கின்றது ..
திருமகள் - திருமால் திருமணம் நடை பெற்றதால் இத்தலம் ஒரு சிறந்த திருமண பரிகார தளமாகவும் விளங்குகின்றது ..
இத்தலம் வந்து அருள்மிகு லக்ஷ்மி நாராயண பெருமாளினை வேண்டுவோற்கு எத்தகைய திருமண தோஷங்கள் இருந்தாலும் நீங்கி திருமணம் கைகூடி இல்வாழ்க்கை சிறந்து விளங்கிடும் என்பது இங்கு வந்த பக்தர்களின் நிகழ்வு மூலமாக நாம் அறியலாம் ..
ஆக இத்தலம் வருவோம் "அருள்மிகு லக்ஷ்மி நாராயண பெருமாள் " அருளினை பெறுவோம் .....