SRI Dharma Sastha Temple. Elavuvilai

SRI Dharma Sastha Temple. Elavuvilai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRI Dharma Sastha Temple. Elavuvilai, Hindu temple, Kavampattu Vilai, Nelvely, Elavuvilai (po), Marthandam.

அனபர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தின நல் வாழ்த்துகள்
15/01/2016

அனபர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தின நல் வாழ்த்துகள்

16/11/2015
16/11/2015

நாளை கார்த்திகை மாதம் 1ம் நாள் ஐய்யப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து ஒரு மண்டலம் அதாவது 41நாட்கள் பிரம்மசாரிய விரதம் மேற்க்கொள்வார்கள் பக்தர்கள்அனைவரும் சதா ஐயப்பனையே நினைத்து பாடல்கள் பாடியும் சரணங்கள் பாடியும் விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயனை காண செல்வார்கள். சுவாமியே சரணம் ஐயப்பா .இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா

14/10/2015

அன்பர்களே நமது காவம்பாட்டுவிளை ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வருகிற 22/10/2015 (வியாழன்) அன்று விஜயதசமி திருநாளில் வித்யாரம்பம் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது

சாமியே சரணம் ஐயப்பா
08/10/2015

சாமியே சரணம் ஐயப்பா

தத்வமசி என்பதன் பொருள்கருத்துகள் மாலை யணிந்து விரதம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஐயப்பனின்பிரதிபிம்பமாக விளங்குகின்றனர். 1...
22/11/2014

தத்வமசி என்பதன் பொருள்கருத்துகள் மாலை யணிந்து விரதம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஐயப்பனின்பிரதிபிம்பமாக விளங்குகின்றனர். 18 படிகளைக் கடந்து மேலே ஏறினால் ஒவ்வொருவரின் கண்ணில் படும் வேதவாக்கியம் தத்வமசி என்பதாகும். நீயே அது என்பது இதன் பொருள். மூலவராகக் காட்சி அளிக்கும் ஐயப்பசுவாமியும்,விரதமிருந்து வரும் பக்தனும் ஒன்றே என்பதை இந்த வார்த்தை உணர்த்துகிறது. காணும் காட்சியெல்லாம் இறைவனே அன்றி வேறில்லை என்ற தூய்மையான நிலையை அடைவதற்காக இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உயரிய நிலையை மனிதகுலம் பெறவேண்டும் என்பதற்காகவே ஹரிஹர புத்திரன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார்.

ஐயப்பனின் முழு விவரங்கள் இயற்பெயர்         -  தர்மசாஸ்தாபிற பெயர்கள்        - மணிகண்டன், ஹரிஹரபுத்திரன், ஐயன், சபரிகிரிவ...
22/11/2014

ஐயப்பனின் முழு விவரங்கள் இயற்பெயர் - தர்மசாஸ்தாபிற பெயர்கள் - மணிகண்டன், ஹரிஹரபுத்திரன், ஐயன், சபரிகிரிவாசன், பூதநாதன், ஹரிஹரநந்தன், ஹரிஹரன்.அவதரித்த நாள் - மார்கழி கடைசிநாள், சனிக்கிழமை, உத்திரநட்சத்திரம், விருச்சிக லக்னம்பெற்றோர் - சிவபெருமான், மகாவிஷ்ணு (மோகினி)வளர்ப்புத்தந்தை - பந்தளமன்னர் ராஜசேகர்இருப்பிடம் - சபரிமலைஆஸ்ரம நிலை - சன்னியாசம்வாகனம் - புலிகுடும்பம் - இல்லை. நித்திய பிரம்மச்சாரிவிருப்பமாக அணிவது - திருவாபரணம்திருக்கோலம் - ஒரு யோகிக்குரிய ராஜதேசுடன் சின்முத்திரையுடன் யோகாசனத்தில் யோகபட்டயம் அணிந்து, வீராசனத்தில் அருள்புரிகிறார்.உடன் உறையும் பூதகணங்கள் - கணபதி, கருப்பன், வாபர், மஞ்சமாதா, கடுத்தசுவாமி, வனதேவதைகள், இண்டலியப்பர்பணி - காவல் பணிசேவகம் புரிந்த அனுபவம் - போர் வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் பாண்டிச்சேவகம் புரிந்துள்ளார்.திருவிழாக்கள் - மகரஜோதி, மண்டல மகா உற்சவம், சித்திரை விஷு கனி காணும் நாள், ஓண பூஜை, படிபூஜை, சித்திரை ஆட்டத்திருவிழாபிடித்தது - நெய், தேங்காய், அப்பம், அரவணை, அவல், சந்தனம்பார்க்கும் சிவத்தலம் - சுந்தர மகாலிங்கம் (விருதுநகர் மாவட்டம்)

ஐயப்பனின் அவதார பிறப்புசிவபெருமானை எண்ணி கடும் தவம் புரிந்தான் பத்மாசுரன் என்றகொடிய அரக்கன். அவன் தவத்தை மெச்சி அவன்முன்...
17/11/2014

ஐயப்பனின் அவதார பிறப்புசிவபெருமானை எண்ணி கடும் தவம் புரிந்தான் பத்மாசுரன் என்றகொடிய அரக்கன். அவன் தவத்தை மெச்சி அவன்முன் தோன்றினார் சிவபெருமான். பத்மாசுரனிடம் உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் ‘எவர் தலை மீது நான் கையை வைக்கின்றேனோ அவர் அக்கணமே எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த வரத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று கேட்டான். சிவபெருமானும் அரக்கன் கேட்ட வரத்தை தந்தருளினார். இந்த நிலையில் அரக்கன் பத்மாசுரன் மனதில் ஒரு நினைப்பு தோன்றியது.வரம் தந்த சிவனிடம் வரத்தின் மகிமையை சோதித்து பார்க்க எண்ணினான். இதையடுத்து பத்மாசுரன் சிவபெருமான் தலை மீது கை வைக்க முயன்றான். சிவபெருமான் அவனுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். இதை அறிந்த திருமால் மோகினி வடிவில் அவ்வரக்கனை மயக்கி, அவனை தன் தலைமீதே தன் கையை வைக்கும்படி செய்து பத்மாசுரனை எரித்து சாம்பலாக்கினார். இதையடுத்து சிவபெருமான் மோகினி உருவில் இருந்த திருமாலின் அழகில் மயங்கினார்.இதன்மூலம் இருபெரும் சக்திகள் இணைய ஒரு பெரும் சக்தி வடிவமாக குழந்தை ஒன்று தோன்றியது. அக்குழந்தைக்கு பிரம்மன் ‘தர்மசாஸ்தா’ என்று பெயர் சூட்டினார். சிவபெருமான் அக்குழந்தைக்கு தன் கழுத்தில் இருந்த மணிமாலையை அணிவித்து, அக்குழந்தை பிறந்ததற்கான காரணத்தை எடுத்து கூறி பம்பை நதிக்கரையில் விட்டு மறைந்தார். அக்குழந்தைதான் சபரிமலை வாசனாகிய ஐயப்பன் எனும் மணிகண்டன். ஐயப்பன் பிறந்ததின் முக்கிய நோக்கம் பிரம்மனிடம் வரம்பெற்ற மகிஷியை அழிப்பது ஒன்றேயாகும்.மணிகண்டனை கண்டெடுத்த பந்தள மன்னன்பந்தள நாட்டை நீதி நெறியுடன் ஆண்டு வந்தார் மன்னன் ராஜசேகரன். சிறந்த சிவபக்தர். தனக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்கும்படி சிவபெருமானை தொடர்ந்து தியானித்து வந்தார். அவர் ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு சென்றார். அச்சமயம் பம்பை நதிக்கரைக்கு அருகே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அக்குழந்தையை மன்னர் ராஜசேகரன் காணும்படி செய்தார் சிவபெருமான். தெய்வீக அம்சமும், அழகும் நிறைந்த அக்குழந்தை தமக்கு கிடைத்ததை எண்ணி மன்னன் அகம் மகிழ்ந்தான். அப்போது இறைவன் அடியார் உருவில் அங்கு வந்தார்.குழந்தையை நீ மணியுடன் கண்டெடுத்ததால் அக்குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனார். மணிகண்டன் பந்தள நாட்டிற்கு வந்ததின் காரணமாக ராணி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். இருகுழந்தைகளையும் ராணி கண்ணும் கருத்துமாக, கண்ணின் மணிகளாக போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தார். தனது இரு பிள்ளைகளையும் தக்க பருவத்தில் குருகுலத்தில் சேர்த்து கல்வி பயில செய்தார். ஐயப்பனை வணங்கிய குரு தன்னிடம் மாணவனாக வந்துள்ள ஐயப்பன் தெய்வ அவதாரம் என்பதை அறிந்து கொண்டார் குருநாதர்.ஐயப்பனுக்கு மானசீகமாக தொண்டு புரியலானார். ஒரு சமயத்தில்குரு தனது மகனின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். இதனை கண்ட ஐயப்பன் மனம் உருகினார். குருவின் மகன் வாய்பேச முடியாதை அறிந்து, தனது தாய், தந்தையான சிவபெருமான் - திருமாலை வேண்டி குரு மகனின் ஊனத்தை குணப்படுத்தினார். இதனை கண்ட குரு, ஐயப்பா ஐயப்பா என் கண்கண்ட தெய்வமே என்று கைகூப்பி வணங்கினார்.மகிஷிக்கு வரமளித்த பிரம்மதேவர்ஐயப்பனின் அவதார மகிமை மிகவும் விசேஷமானது. மகிஷாசுரன் என்ற கொடும் அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் நாள்தோறும் துன்பத்தை அனுபவித்து தாங்க முடியாத துயரத்தில் தவித்தனர். இதையடுத்து துர்க்காதேவி மகிஷாசுரனை வதைத்து சம்ஹாரம் செய்தார். இதனால் கோபம் கொண்ட அவனது தங்கை மகிஷி கடும் தவம் புரியலானாள். அவள் செய்த தவத்தின் பயனாய் பிரம்மதேவர் அவள் கண்முன் தோன்றினார். அவளிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகிஷி, பன்னிரெண்டு ஆண்டுகள் பிரம்மச்சரியம் இருந்து மனிதர்களுக்கு சேவை புரிய கூடியவனாகவும், அரிக்கும், சிவனுக்கும் பிறக்கும் மகனாகவும் இருக்கும் ஒருவனிடமின்றி வேறு யாராலும், தன் அழிவு இருக்க கூடாது என்று வரத்தை பெற்றாள். வரம்பெற்ற மகிஷி அந்த மமதையால் தேவர்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினாள். அவள் தரும் தொல்லை தாங்காத தேவர்கள் திருமாலிடம்தஞ்சமடைந்தனர். அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்தார் திருமால்.மந்திரியின் சூழ்ச்சியில் சிக்கிய ஐயப்பன்மணிகண்டன் குருகுலத்தில் கல்வி பயின்று சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார். பின்னர் அரண்மனைக்கு திரும்பினார். தந்தையான பந்தளமகாராஜாவின் பிரிய மகனாக வளர்ந்து வந்தார். நாட்டு மக்களுக்கு சகல நலன்களும் கிடைக்க அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு தனது புத்திமதிகளை வழங்கினார். இது பந்தள மகாராஜா ராஜசேகரனின் மனதை குளிர்வித்தது. தனது மணிகண்டன் சிறந்த மன்னனாக விளங்குவான் என்று அகம் மகிழ்ந்தார். இதையடுத்து மன்னர் ராஜசேகரன் மணிகண்டனுக்கு மகிடம் சூட்ட தன் மனைவியிடம் ஆலோசனை நடத்தினார்.இதை அறிந்த துர்மந்திரி ஒருவர் சதி செயலில் இறங்கினார். மகாராணியின் மனதை கெடுத்து மணிகண்டனை அழித்துவிட திட்டமிட்டார். ஒரு கட்டத்தில் தன் சூழ்ச்சியால் மணிகண்டனுக்கு பாலில் கடும் விஷம் கலந்து குடிக்க செய்தார். விஷம் அருந்தியதால் உடல் நலிந்த மணிகண்டனை குணப்படுத்த எந்த மருந்தாலும் முடியாது போனது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான் துறவி உருவில் அரண்மனைக்கு வந்து திருநீறு அணிவித்து மணிகண்டனை குணப்படுத்தினார். பின்னர்தனது விஸ்வரூப தரிசனத்தை மணிகண்டனிடம் காண்பித்து அவதார நோக்கம் குறித்து விளக்கிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.அதன்பின் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் மணிகண்டனை சதிகாரர்கள் கொல்ல முயன்றனர். அவர்கள் முயற்சியாவும் பயனற்று போயின. இதனால் அவர்கள் முழுவதுமாக சோர்வுற்றனர். பின்னர் முடிவாக ஒரு சதிசெயலில் இறங்கினர்.அரசியாருக்கு தலைவழி என்றும், புலிப்பால் கொண்டு வந்தால்தான் அரசியாரின் தலைவழியை போக்க முடியும் என்றும் கூறி மருத்துவர் ஒருவரை சொல்ல வைத்தனர். இதன்மூலம் மணிகண்டனை கானகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.மகிஷியை வதம் செய்த ஐயப்பன்தாயின் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத ஐயப்பன், தந்தையின் அனுமதி பெற்று புலிப்பால் கொண்டு வர இருமுடி தலையில் தாங்கி கானகத்துக்கு தனியே புறப்பட்டார். பெரும் கொள்ளைக்காரனாகிய வாவரை கானகத்தில் கண்டார். அவனை நல்லவனாக திருத்தி அவரை தன் நண்பனாக்கி கொண்டார். இந்த காட்டில் தேவர்களுக்கு தீராத தொல்லை கொடுக்கும் எருமை உருக்கொண்ட மகிஷியை மணிகண்டன் சந்தித்தார். அவரை கண்டதும்மகிஷி ஆவேசமடைந்து கொலை புரியும் நோக்கில் போர் புரிந்தாள். முடிவில் மகிஷியை மணிகண்டன் வதம் செய்தார். அதனால் சாபவிமோசனம் அடைந்த மகிஷி, அழகிய மங்கையாக உருமாறினார். தன்னை மணந்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள்.அவளிடம் தான் கொண்டுள்ள பிரம்மச்சரிய விரதத்தையும், தன் அவதார நோக்கத்தையும் மணிகண்டன் எடுத்து கூறினார். எப்போதுஎன்னுடைய சபரிமலை சன்னதிக்கு ஒரு கன்னிசாமி கூட வராமல் இருக்கின்றனரோ அப்போது உன்னை நான் மணந்து கொள்கிறேன் என்று கூறினார். தன் சகோதரியாக பாவித்து அவளுக்கு தன் வலப்பக்கத்தில் மஞ்சமாதா என்ற பெயரில் வீற்றிருக்கும் இடத்தை அருளுவதாக வாக்கு அளித்தார்.ஐயப்பனின் புலியாக மாறிய தேவர்கள்மகிஷியை அழித்த மணிகண்டனை தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். பின்னர் தேவர்கள் யாவரும் புலிகளின் வடிவமாக மாறி மணிகண்டனுடன் பந்தள நாடு சென்றனர். ஐயப்பன் பெரும் புலிக்கூட்டத்துடன் வருவதை கண்ட நாட்டு மக்கள் பயந்து நடுநடுங்கி மன்னரிடம் சென்று முறையிட்டனர். பந்தள மன்னன் மணிகண்டனின் மகிமையை அறிந்து அவரை வரவேற்று மார்புற கட்டிதழுவி கொண்டார். இந்த நிலையில் சூழ்ச்சி வெளிப்பட்டதால் மந்திரி உட்பட சதிச்செயல் புரிந்தவர்கள் மணிகண்டனின் காலில் விழுந்து வணங்கினர். மணிகண்டனும் அவர்களை மன்னித்தார். புலிக்கூட்டமாக உருவாறி வந்த தேவர்களை திரும்ப வழி அனுப்பி வைத்தார் மணிகண்டன்.காந்தமலையில் ஜோதி ரூபமாக காட்சிபந்தளமன்னன் ராஜசேகரன் ஐயப்பனுக்கு நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினார். ஐயப்பன் மன்னனிடம் தன் அவதாரம் நோக்கம் முடிவுற்றதை எடுத்து கூறினார். மகனை பிரிய மனமில்லாத பந்தளமன்னன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் காட்சி கொடுக்க வேண்டும் என்று ஐயப்பனிடம் வேண்டினார். அதற்கு ஐயப்பன் தான் எய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோயில் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தன்னை காணவரும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோயிலுக்கு வரவேண்டும் என்று கூறி மறைந்தார். பந்தளமன்னர் ஐயப்பனின் கட்டளைப்படி அவ்விடத்திலே கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.கும்பாபிஷேக தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன், சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானார். அப்போது ஐயப்பனின் அசரீரியாக, பந்தள மன்னன் மற்றும் மக்களின் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதிரூபமாக காட்சி கொடுத்து அருள் புரிவேன் என்று கூறியதாக ஐயப்பன் வரலாற்றில் கூறப்படுகிறது. அதேபோன்று அன்று முதல்இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகா சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார் ஐயப்பன்.

-மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.புகழ...
17/11/2014

-மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.புகழ்பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துசாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.இதை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அய்யப்ப பக்தர்கள் விண்ணதிர சரணகோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மேல்சாந்தி கோவிலுக்குள் சென்று குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர் சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் இரவு 7 மணிக்கு புதிய மேல்சாந்திகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, மாளிகைப்புரம் அம்மன் கோவில் புதிய மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு புனிதநீர் தெளித்து, அய்யப்பனின் மூல மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். இந்த புதிய மேல்சாந்திகளின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும்.சபரிமலை கோவிலில் நேற்று நடை திறப்பு, தீபாராதனை, மேல்சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் 18-ம் படியேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கும் நிகழ்ச்சி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்று முதல் 41 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் நடைபெறும். இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சபரிமலை அய்யப்பன்கோவில் நடை திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, பூஜைகளை நடத்துகிறார். இதுபோல் மாளிகைப்புரம் அம்மன் கோவிலில் கேசவன் நம்பூதிரி பூஜையை தொடங்குகிறார்.நடை திறப்பை முன்னிட்டு, பம்பை மற்றும் சபரிமலையில் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகளை தேவசம் போர்டும், கேரள அரசும் செய்திருந்தன.சபரிமலைக்கு வரும் னபக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படுகின்றன. தற்போது 100 பஸ்கள் விடப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை பக்தர்களின் வருகையை பொறுத்து மேலும் அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், வெளியூர்-பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு வசதியாக திருவல்லா மற்றும் செங்கன்னூர் ரெயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.இதுதவிர பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தங்கும் இடவசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ வீரர்களும் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கேரள டி.ஜி.பி. பத்மகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் சன்னிதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-மண்டல பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டு உள்ளன. சன்னிதானத்தில் 635 போலீசாரும், பம்பையில் 400 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், ஆயுதம் தாங்கிய கமாண்டோ படைவீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மைப்படை வீரர்களும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்கள் உள்பட மொத்தம் 1,300 பேர் தற்போது பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

10:57:15Thursday2013-12-26ராஜசேகர பாண்டியனும், கோப்பெருந்தேவியும் மணிகண்டனை சீராட்டி, பெரிதும்பாராட்டி வளர்த்து வந்தனர்....
30/10/2014

10:57:15Thursday2013-12-26ராஜசேகர பாண்டியனும், கோப்பெருந்தேவியும் மணிகண்டனை சீராட்டி, பெரிதும்பாராட்டி வளர்த்து வந்தனர். கானகத்தில் புல் மஞ்சத்தில் தங்கள் பிள்ளையில்லாக் குறை தீர்க்க, தங்களுக்காகவென்றே தோன்றியதுபோல கிடைத்தவன்தான் மணிகண்டன். ஆனால், அவனது பன்னிரண்டாவது வயதில் கோப்பெருந்தேவிக்கும் ராஜசேகரனுக்கும் சொந்தமாக ஒரு வாரிசு உருவானபோதுதான் பிரச்னை ஆரம்பித்தது. ராணி, மணிகண்டனை வெறுக்கத் தொடங்கினாள். தன் உதிரத்தில் உதிக்காதவன் என்று உதாசீனப்படுத்தினாள். அதுமட்டுமல்லாமல், தன் கணவனுக்குப் பிறகான அரசப் பதவி தன் சொந்தக் குழந்தைக்குதான் கிட்டவேண்டும் என்ற வேட்கையில் மணிகண் டனைக் கொல்லவும் துணிந்தாள். இதற்குகெடுமதி படைத்த மந்திரியும் சதியாலோசனை சொல்ல, தனக்கு கடுமையான தலைவலி வந்தவள்போல நடித்தாள் ராணி. ஏற்கெனவே திட்டமிட்டபடி அரண்மனை வைத்தியரும் ராணியாரின் தலைவலி நீங்க புலிப்பால் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்காக மணிகண்டன் புலிப்பாலைக் கொண்டுவர வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.மன்னன் எவ்வளவோ சொல்லி, மறுத்து, தடுத்துப் பார்த்தும், மணிகண்டன் புன்னகையுடன் கானகம் ஏகினான்.அங்கே பிரம்மனை நோக்கி அவன் தவம் செய்ய, இவனுடைய தேவையைப் புரிந்துகொண்ட பிரம்மன் தானேபெண் புலியாக வந்து ஒரு குவளையில் பால் சுரந்து கொடுத் தான். தேவர்களும் புலிகளாக மாறி சூழ்ந்திருக்க,மணிகண்டன், அந்தப் புலிப்பாலுடன் நகருக்குத் திரும்ப யத்தனித்தான். அவனைத்தடுத்தான் இந்திரன். ‘‘மணிகண்டா, நீ தனியே போகாதே, நானும் வருகிறேன்’’ என்றான். ‘‘எதற்காக?’’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் மணிகண்டன். புலியாக மாறியிருக்கும் இந்திரன் வருவதால் நாட்டில் ஏதேனும் குழப்பம் ஏற்ப ட்டுவிட்டால், மகாராணியாரின் கோபம் இன்னும்அதிகமாகிவிடுமே, அதனால் தனக்குத் தந்தையாரின் அன்பு முற்றிலும் கிட்டாமல் போய்விடுமே என்று பயந்தான் அவன். ஆனால் இந்திரனோ, ‘‘மணிகண்டா, உன்னைக் கொடுமைப்படுத்தி, எப்படியாவது நாட்டைவிட்டு உன்னைத் துரத்திவிடவேண்டும் என்பதுதான் உன் அன்னையாரின் விருப்பம். இப்போது நீ இந்தக் குவளையைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்து, ‘‘இந்தாருங்கள், புலிப்பால்.உங்கள் தலைவலி தீர இதிலிருந்து மருந்து தயாரிக்கச் சொல்லுங்கள்’’ என்று நீ எவ்வளவுதான் பாசமாகச் சொன்னாலும், உன்மீதுஅவர்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுமா என்ன? அதைவிட,‘‘இது புலிப்பால்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? நீ ஏமாற்றுகிறாய். நாங்கள் நம்பமாட்டோம். ஆகவே, இதை இங்கேவைத்துவிட்டு, மீண்டும் காட்டிற்குப் போய் சிங்கப் பால் கொண்டுவா அல்லது யானைப் பால் கொண்டுவா’’ என்று உன்னை மீண்டும் விரட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, நான் புலியாகவே வருகிறேன். நீ என் மீது ஏறிக்கொள். அரசவையில் நாம் நுழைந்தால் நீ கொண்டுவந்திருப்பது புலிப்பால்தான் என்பது ஊர்ஜிதமாகிவிடும். அவர்களும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்’’ என்று பக்குவமாக யோசனை சொன்னான்.எல்லாம் தெரிந்திருந்தும், விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்திருந்தும் மணிகண்டன், மென்புன்னகையுடன் இந்திரப் புலி மீது அமர்ந்து அரண் மனை நோக்கிச் சென்றான்.

பக்தர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
22/10/2014

பக்தர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

காவம் பாட்டு விளை தர்ம சாஸ்தா திருக்கோயிலின் எழில்மிகு தோற்றம்
03/10/2014

காவம் பாட்டு விளை தர்ம சாஸ்தா திருக்கோயிலின் எழில்மிகு தோற்றம்

Address

Kavampattu Vilai, Nelvely, Elavuvilai (po)
Marthandam
629171

Telephone

+919487411640

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Dharma Sastha Temple. Elavuvilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category