13/06/2026
https://www.facebook.com/share/p/18kC4mGm3U/
திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயிலில் தலைமுறை தலைமுறையாக நாகசுர சேவையை அர்ப்பணித்து வரும் குடும்பத்தில் பிறந்து, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் திருக்கோயிலில் இடையறாது நாகசுர கைங்கர்யம் செய்து வரும் நாகசுர வித்வான், 'கலைமாமணி', 'ராஜரத்தினா' திரு. வடுவூர் S.N.R. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ராம கைங்கர்யத்தைப் போற்றும் வகையில் இந்த அரிய சம்ஸ்கிருத ஸ்லோகம் அமைந்துள்ளது.
ஒரு சமயம் வடுவூருக்கு எழுந்தருளிய, நினைத்த மாத்திரத்தில் சம்ஸ்கிருதக் கவிதைகளைப் பொழியும் வேதகவி, ஸ்ரீமதுபயவேதாந்த மஹாவித்வான், ஸ்ரீவில்லிபுத்தூர்–வில்லூர்–நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசன ஆசுகவி சார்வபௌமர், ஸ்ரீநிவாஸராகவார்ய மஹாதேசிகன் (ஸ்ரீநிதி ஸ்வாமிகள்) அவர்கள், புனர்பூசம் புறப்பாட்டின்போது தமது ஞானத் திருக்கண்ணால் கண்ட தெய்வீக அனுபவத்தை சம்ஸ்கிருதக் கவியாக வடித்தருளினார்.
அந்த ஸ்லோகத்தில், சீதா சமேத ஸ்ரீ கோதண்டராமனின் பேரருளும், அவனது திருவடிகளுக்கு இசையால் தொண்டு புரியும் நாகசுர வித்வானின் பக்தி நிறைந்த கைங்கர்யமும் அபூர்வமாகப் போற்றப்படுகின்றன.
அச்ச்லோகம் பின்வருமாறு:-
*"திருவந்திக்காப்பு திருவுரையாடல்"*
।। श्रीमते रामानुजाय नमः।।
।।कुम्भारार्तो लक्ष्मणाग्रजसीतालपितम्।।
“कुम्भारार्तिविधौ विदेहतनये! बाष्पाविलः श्रीनिधिः स्वागश्शान्तिमिहार्थयन् तव शिरःकंपेन चिन्ताकुलः” ।
“मा मा तत् किल कृष्णमूर्तिपठितश्रीवाद्यरागादभूत् तस्याप्यस्य मुदे”ति पातु लपितं श्रीरामसीताकृतम् ॥
*"கும்பா,ரார்திவிதௌ4 விதே3ஹதநயே! பாஷ்பாவில: ஸ்ரீநிதி:4 ஸ்வாக;ஸ்ஸாந்திமிஹார்த்தயந் தவ ஸிர:கம்பேந சிந்தாகுல:" | "மா மா தத் கில க்ருஷ்ணமூர்த்திபடி2தஸ்ரீவாத்3யராகா3த3பூ4த் தஸ்யாப்யஸ்ய முதே,”தி பாது லபிதம் ஸ்ரீராமஸீதாக்ருதம்||*
"திருவந்திக்காப்பு திருவுரையாடல்"என்று போற்றப்படும் இந்த ஸ்லோகம், திருக்கோயில்களில் நாகசுரம் மற்றும் தவில் சேவை செய்து வரும் அனைத்து வித்வான்களுக்கும் சமர்ப்பணமாக விளங்குகிறது.
இச்ச்லோகத்தின் ஆன்மீகப் பெருமையையும், அதில் மறைந்துள்ள பகவத் அனுபவத்தையும், ஆசுகவி சார்வபௌமர் ஸ்ரீநிவாஸராகவார்ய மஹாதேசிகன் (ஸ்ரீநிதி ஸ்வாமிகள்) அவர்களின் தவப்புதல்வரும், வேத உபன்யாச வித்தகருமானஸ்ரீமதுபயவே. மஹாவித்வான் வில்லூர். நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸநம் ஆசுகவி ஸார்வபெளம் ஸ்ரீ கருணாகரச்சாரியார் ஸ்வாமிகள் அவர்கள் நமக்கெல்லாம் அருளிச் செய்து வருவது நமது பெரும் பாக்கியமாகும்.
ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்டராம பரபிரம்மணே நம: