ஆன்மீக சிந்தனைகள்

ஆன்மீக சிந்தனைகள் This site is about Manthras,yanthras and so many things beyond our life.

we can solve our life problems by this way...
you can also call us and mail us and solve ypur problems

இன்று... சித்ரா பௌர்ணமி சிறப்பு யாகம்...
05/05/2023

இன்று... சித்ரா பௌர்ணமி சிறப்பு யாகம்...

01/02/2022
12/01/2022

Sri Maha Yohini Beedam,Mannargudi...

26/12/2021

*_பானு ஸப்தமி ஸ்பெஷல் !_*

*சூர்ய கவசம் !*

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம்.

இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்
ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,
சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்
மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,
ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,
ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான
சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:
நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே
வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்
காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே
ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:
ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே
ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட
ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.
மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு
உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.
அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ
அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்.

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:
ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்
சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி
மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்
வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !
ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !
அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி !

https://youtu.be/HimJoI55RJU
14/11/2021

https://youtu.be/HimJoI55RJU

ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார்ஸ்ரீ மஹா யோகினி பீடம்.மன்னார்குடி.Subscribe Our Another Channel -----------------------------------https://youtube.com/channel/U...

03/11/2021

எளிமையான பரிகாரம்..

25/10/2021

நாளை தேய்பிறை சஷ்டி.. கந்தனின் அருளைப் பெற... என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்?
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

💫 விரதங்கள் என்பது ஆன்மிக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியலும், ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர்.

💫 எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம்.

💫 சஷ்டி விரதத்தை எளிமையாக எப்படி மேற்கொள்ளலாம்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.

கோவிலில் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

💫 குழந்தை பாக்கியத்தை அருளும் இந்த சஷ்டி விரதத்தை எளிமையாக கோவிலிலும் கடைபிடிக்கலாம். முடிந்த வரை முருகன் கோவிலில் விரதம் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

வீட்டில் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

💫 வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம்.

💫 பிறகு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும்.

💫 முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம். அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம்.

💫 இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

💫 வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

💫 வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

💫 மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம்.

விரதத்தின் பலன்கள் :

சஷ்டி விரதம் இருந்தால்,

👉 குழந்தைப் பேறு கிட்டும்.

👉 திருமணத்தடை அகலும்.

👉 செல்வ வளம் பெருகும்.

👉 நினைத்தது நிறைவேறும்.

👉 பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனையும் தவிடு பொடியாகி விடும்...

25/10/2021

தீபாவளி அன்று எம தீபம் ஏற்றலாம்... பித்ரு சாபம் தீரும்...

https://youtu.be/LK4_Qf5G_6Q
19/09/2021

https://youtu.be/LK4_Qf5G_6Q

ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார்ஸ்ரீ மஹா யோகினி பீடம்.மன்னார்குடி.Subscribe Our Another Channel -----------------------------------https://youtube.com/channel/U...

29/08/2021

🙏💱 *இரவில் தயிர் சாப்பிடலாமா?* 💚❤️

தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

* பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

* சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது.

* அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும்.

* ஆனால் மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சளி பிரச்சினை ஏற்படாது.

Address

Bharathidasan Nagar
Mannargudi
614001

Opening Hours

Monday 9am - 2pm
Tuesday 9am - 2pm
Wednesday 9am - 2pm
Thursday 9am - 2pm
Friday 9am - 2pm
Saturday 9am - 2pm
Sunday 9am - 2pm

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீக சிந்தனைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share