புனித பனிமய அன்னை ஆலயம். உடையாப்பட்டி

  • Home
  • India
  • Manapparai
  • புனித பனிமய அன்னை ஆலயம். உடையாப்பட்டி

புனித பனிமய அன்னை ஆலயம். உடையாப்பட்டி Our Lady of Snows Church at K. Udayapatty is a Roman Catholic Parish Community in the Diocese of Tir

15/04/2017

உயிர்த்த இயேசுவில் அன்பின் பலத்தை உணர்வோம்!
மரண அச்சம் களைந்து அனைவரும் ஒரே மக்களாய் இணைந்து ஆர்ப்பரித்து பாடுவோம் இயேசு ஆண்டவர் உயிர்த்து விட்டார், அல்லேலுயா!

உயிர்த்த ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!

15/04/2017
புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழாதிருக்குடும்பத்தின் பாதுகாவலரும், அனைத்துக் குடும்பங்களுக்கும் எடுத்த...
19/03/2017

புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

திருக்குடும்பத்தின் பாதுகாவலரும், அனைத்துக் குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டான தலைவருமான புனித சூசையப்படைய திருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.

அவரைப் பற்றி அவர் ஒரு "நேர்மையாளர்" என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. அவருடைய நேர்மைத்தன்மையின் ஓர் அடையாளமாக "அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே இன்றைய நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

ஒருவர் நேர்மையாளர் என்று சொல்வதற்கான அடையாளங்களுள் ஒன்று பிறரைப் பற்றி அவர் கொண்டிருக்கிற நல்லெண்ணம். "எல்லாரும் நல்லவரே", "அனைவரும் நேர்மையாளர்களே" என்னும் அடிப்படை மனநிலை ஒரு நேர்மையாளரின் அடையாளம். நேர்மையாளர்களே பிறரையும் நேர்மையாளர் என ஏற்றுக்கொள்வர். எனவே, சூசையப்பரும் மரியாவின்மீது நல்லெண்ணம் கொண்டு, அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பிறர்மீது அவர் கொண்ட நல்லெண்ணம், பரிவு அவரது நேர்மையின் ஓர் அடையாளம்.

நம் நல்ல தந்தை சூசையிடமிருந்து இந்த நற்பண்பை நாம் கற்றுக்கொள்வோம். "பிறர் நல்லவர், நேர்மையாளர்" என்னும் மனநிலையில் வளர்வோம். ஒருவேளை சிலர் நேர்மையாளர்களாக இல்லாவிட்டாலும், அவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், அவரது நற்பெயரைக் கெடுக்காமல், அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவோம்.

மன்றாடுவோம்:
அன்புத் தந்தையே இறைவா, புனித சூசையப்பரைக் குடும்பங்களின் பாதுகாவலராகத் தந்ததற்காக உம்மைப் போற்றுகிறோம். அவரது நல்மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நேர்மையாளர்களாய் வாழவும், பிறர்மீது நல்லெண்ணத்தில் வளரவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

13/01/2017

பொங்கும் பாலும், பொங்கலும்

மஞ்சள், சந்தனத்தின் மணமும்,

கரும்பும், அதன் தீஞ்சுவையும்

நம் நாட்டிலும், வீட்டிலும், மனதிலும்

மகிழ்ச்சியை பொங்க வைக்கட்டும்.

நம் வாழ்வின் இன்பத்தை கூட்ட்டும்.

கடவுளின் அருளும் ஆசிரும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!!

பொங்கும் மங்கலம் என்றும் தங்கட்டும்;

உங்கள் அனைவருக்கும் நமது பங்கின் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

வளரட்டும் தமிழகம்! வாழ்க தமிழ்!!!

29/11/2015

திருவருகை காலம்: முதல் ஞாயிறு. சிந்தனை:

நமக்காக பிறந்த குழந்தையே பாலன் இயேசு. இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே... நமக்கு அமைதியை தருபவர்

வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலரின் வருகைக்காக காத்திருக்கிறோம். பல செயல்களைச் செய்ய காத்திருக்கிறோம். இவை அனைத்துமே நொடிப்பொழு திலோ, மணித்துளியிலோ சந்தோசத்தை தந்து மறைந்துபோகும் மாயங்கள் ஆனால் திருவருகைக் காலம் என்பதோ கடவு ளின் வருகைக்காக காத்தி ருப்பது. அவர் நம்மிடையே வரவேண்டும். நம்மில் வரவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். நம் விருப்பம் நிறைவேற நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இயேசுவே நற்செய்தியில் விழிப்பாயிருங்கள் ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது... எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்; மானிட மகன் வருவார். (மத்தேயு 24„ 42, 44) என்று கூறியுள்ளார்.

அவரது வார்த்தை உயிருள்ளது, உண்மையானது என்றும் அழியாதது. எனவே நாம் அவரின் வருகைக்காக தம்மையே தயாரிக்க வேண்டும். அதற்காகத்தான்; தாய்த் திருச்சபையானது திருவருகைக் காலம் என நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை தந்து அதன் இறுதியிலே கிறிஸ்துமஸ் விழா கொண் டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமையாகும்.

கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பு அளவிடற்கரியது, எல்லையில்லாதது, உண்மையானது. இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு எடுத்து நமக்காக துன்பங்கள் பலபட்டு சிலுவையிலே பலியாக உயிரையும் தந்து நம்மை மீட்டார். அந்த இறைவன் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அய லானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் தெரு, தெருக்களாக அதிகரிக்கும்போது, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகும்போது, கருவறையே கல்லறையாகும் போது, சிசுக்கொலையும், பாலியல் பலாத்கார மும், குழந்தை தொழி லாளர்களும் அதிகரிக்கும்போது, அநீதியின் கைகள் ஓங்கும்போது, ஜாதி, மதம், இனம் என்னும் பெயரில் இரத்த ஆறு ஓடும் போது, வரதட்சணையின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது, கலாச் சாரமும், பண்பாடும் அழியும்போது, சிகப்பு ஏரியாக்கள் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, கஞ்சா, சீரியலுக்கு அடிமையாகும்போது, முதலாளித்துவம் தழைத்தோங்கும் போது இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும். இவர்களுக்காக குரல் கொடுக்கா விட்டா லும், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இவற்றை செய்யாம லிருக்கும்போது இயேசு நம்மில் வருகிறார். இவற்றை எல்லாம்; தகர்த் தெரிந்து உடைக்கும்போது நாம் இயேசுவாகிறோம்.

இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே நமக்கு அமைதியை தருபவர். நாமும் பிறருக்கு அமைதியை அருளுவோம்.

இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். (மத்தேயு 2„ 22-23)

நமது வாழ்விலே வேதனை, சோதனை, துன்பங்கள், தோல்விகள், நோய்கள், ஏமாற்றங்கள் எது வந்தாலும் கலங்கவேண்டாம், அஞ்சவும் வேண்டாம். ஏனெனில் நமது கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.

அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. (லு}க்கா 1„ 33)

இயேசு கிறிஸ்துவே இவ்வுலகின் அரசர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரது ஆட்சிக்கு என்றென்றும் முடிவு இராது. ஏனெனில் அவர் நீதியுடனும், நேர்மையுடனும், அன்புடனும், கருணையுடனும் ஆளுகின்றார். எனவே அவர் நமது அரசராக என்றென்றும் உள்ளார்.

திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு பற்றிய மேற்கூறிய இறை வார்த்தைகளை படித்து, சிந்தித்து, தியானிப்போம்.

03/03/2014

கத்தோலிக்க பக்திமாலை

ஜெபம் என்பது என்ன?
கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே ஜெபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே ஜெபம்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். - பிலிப் 4:6-7

03/03/2014

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் நமது பங்கின் வணக்கங்கள், நமது பங்கின் மக்களை, குறிப்பாக வெளியில் வாழும் நமது மக்களுக்ககாக இந்த முயற்சியானது எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் நமது page ல் இணைந்ததற்கு நன்றி. குறிப்பு: Facebook சில மாற்றங்களுடன் webpage அக மாற்றப்பட்டு உள்ளது.
உங்களுடைய நல்ல செய்திகளை இதில் பதிவு செய்து அனைவரையும் பயன் பெற செய்ய கேட்டு கொள்கிறோம்.. நன்றி.
மேலும் கவனத்திற்கு: இது நமது பங்கின் ஆன்மீக இனையதலாகும். அகவே தயவு செய்து தனிப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டாம். ஆன்மீக செய்திகளை மட்டும் வெளியிடவும். நன்றி.

Address

க. உடையாப்பட்டி
Manapparai
621306

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித பனிமய அன்னை ஆலயம். உடையாப்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to புனித பனிமய அன்னை ஆலயம். உடையாப்பட்டி:

Share