Sri Anandavalli Amman Temple Manamadurai

Sri Anandavalli Amman Temple Manamadurai தென்னாடுடைய சிவனே போற்றி...!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

புராண வரலாறு:

புராண காலத்தில் தக்ஷனின் மக்களான அஸ்வினி முதலான இருபத்தேழு பெண்களை சந்திரன் மனம் புரிந்துகொண்டான். அவர்களில் ரோகிணி என்பவளிடம் மட்டும் சந்திரன் அதிக ப்ரேமை கொண்டதால் மற்றவர்கள் வெறுப்புக்குள்ளாயினர்.

மற்ற மகள்கள் சந்திரன் குறித்து தந்தை தக்ஷனிடம் முறையிட்டனர். கோபமடைந்த தக்ஷன் சாபமிட சந்திரன் "க்ஷயரோகத்திற்கு"(தொழு நோய்க்கு) ஆளாகிறான். இந்த நோயைப்போக்க அஹஸ்த்யரைச் சந்தித்து அவரது அ

ருந்துணையை வேண்டுகிறான் சந்திரன். "தேவர்களாலும், சித்தர்களாலும் சேவிக்கப்படுகின்ற வில்வவனம் என்ற திருத்தலத்துக்குச்சென்று அங்குள்ள நதியில் நீராடி எழுந்தருளியுள்ள த்ரிபாகர் என்ற திருமூர்த்தியை வழிபடு" என்று அஹஸ்த்யர் கூறினார்.

அதன்படி வைகை நதிக்கரையில் உள்ள இந்த ஸ்தலத்திற்கு வந்த சந்திரன் நீராடி க்ஷயரோகம் நீங்கப்பெற்றான் (சந்திரன் நீராடிய இடம் இன்றும் சந்திர புஷ்கரணி என்ற பெயரில் தீர்த்தக்கிணறாக இந்தக்கோவிலுக்கு எதிரே உள்ளது). நன்றிக் கடனாக காட்டை அழித்து ஆகம விதிகளின்படி கோவிலையும் அமைத்தான். சந்திரனால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் என்பதால் ஸ்வாமிக்கு "சோமநாதர்" என்றும், அவனை பீடித்த நோய் தீர்த்து ஆனந்தம் அருளியதால் அம்பாளுக்கு "ஆனந்தவல்லி" என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

இறைவன் மாலையிட்ட பிறகு தம்பதி சமேதராக ரிஷப வாகனத்தில் காட்சி அருளல்
07/08/2026

இறைவன் மாலையிட்ட பிறகு தம்பதி சமேதராக ரிஷப வாகனத்தில் காட்சி அருளல்

இறைவனே இளகிய தவத்தின் முதிர் நிலை
07/08/2026

இறைவனே இளகிய தவத்தின் முதிர் நிலை

பராபவ வருடம் ஆடி தபசு திருவிழா பத்தாம் நாள் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை செய்த தவத்திற்கு மனமிறங்கி ஸ்ரீ சோமநாதர் ரிஷப வ...
06/08/2026

பராபவ வருடம் ஆடி தபசு திருவிழா பத்தாம் நாள் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை செய்த தவத்திற்கு மனமிறங்கி ஸ்ரீ சோமநாதர் ரிஷப வாகனாரூடராய் காட்சி அருளல்

27/07/2026

2026 பராபவ வருட ஆடித் திருவிழா 9ம் திருநாள் பூப்பல்லக்கு

2026 பராபவ வருட ஆடித் திருவிழா 10ம் திருநாள் ஆடித் தவசு
27/07/2026

2026 பராபவ வருட ஆடித் திருவிழா 10ம் திருநாள் ஆடித் தவசு

Address

East Car Street
Manamadurai
630606

Opening Hours

Monday 6am - 11am
5pm - 8pm
Tuesday 6am - 11am
3:30pm - 8pm
Wednesday 6am - 11am
5pm - 8pm
Thursday 6am - 11am
5pm - 8pm
Friday 6am - 12pm
5pm - 8pm
Saturday 6am - 11am
5pm - 8pm
Sunday 6am - 11am
5pm - 8pm

Telephone

+918220376098

Alerts

Be the first to know and let us send you an email when Sri Anandavalli Amman Temple Manamadurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category