25/08/2026
திருஏடகம்
ஆவணி பெளர்ணமி
திருப்பாசுர ஏடு ஏதிரேறிய ஐதீகவிழா
சோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி திருக்கோயிலில் வரும் வியாழக்கிழமை காலை ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுகிறது
புனல் வாதத்தின் போது எம்பிரான் திருஞானசம்பந்தர் எழுதிய
வாழ்க அந்தணர் என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம் திருஏடகம்
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே- திருப்பாசுரம்
திருச்சிற்றம்பலம்..
திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா.
திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பெளர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும். 7ம் நூற்றாண்டில் சங்க தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த அந்த சமணர்கள் வசம் அப்போது மதுரை ஆண்ட கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாரபாண்டியனும் அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ் நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும் வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் " வாழ்க அந்தணர் " என்னும் திருப்பாசுர ஏடு மதுரையிலிருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து இத்தலமாகிய திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது என்பது வரலாற்றுச்சான்றாகும். தமிழகத்திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இத்திருவிழா ஒன்றுதான் வேறு எந்த திருக்கோயில்களிலும் இல்லாமல் இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமை படைத்தது. இக்கோயில் ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றும் ஒரு சேரக்கொண்டதாகும். இத்திருத்தலத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று ஏடு எதிரேறிய திருவிழாவனது வரும் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 10ம் தேதி 27.08.2026வியாழக்கிழமை பெளர்ணமி, அவிட்டம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், நடைபெறவுள்ளது. அவ்வமயம் மெய்யன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளித்து ஏலவார் குலழி உடனுறை ஏடகநாதரை தரிசித்து திருவருள் பெற்றுய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
(சைவத்தின் மிகப்பெரிய விழாவான இந்த நிகழ்வை முன்னிட்டு அடியார் பெருமக்கள் தங்குவதற்கும் திருஅமுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
இடம் : மீனாட்சி மஹால் திருவேடகம்
மேலும் தகவலுக்கு
Siva Visnu karthik
6369644628,
Siva Darmaraj
9940870325,
Siva Rajan
9751672034
#மதுரை #ஆலவாய் #திருவேடகம் #ஏடகநாதர் #திருக்கோயில் #ஆவணி #பெளர்ணமி #திருப்பாசுர #ஏடு #எதிரேறிய #ஐதீகவிழா