Madurai Meenakshi Amman Temple

Madurai Meenakshi Amman Temple Meenakshi Sundareswarar Temple or Meenakshi Amman Temple Tamil: மீனாட்சி அம்? The Lord has been described as Alavai Iraivan in his songs.
(520)

Meenakshi Sundareswarar Temple or Meenakshi Amman Temple Tamil: மீனாட்சி அம்மன் கோவில் is an historic Hindu temple located in the holy city of Madurai, Tamil Nadu, India. History
---------

According to legend, the sacred Suyambulingam discovered by the king of Gods indira at Kadambavanam, was later enshrined by him in Madurai. The fact that the Lord is seen on the vehicle of Indira in this

temple is said to be proof for this. Many historical evidences of the temple have been found dating back from early A.D

The temple was almost completely destroyed in the year 1310 following the invasion of the Islamic conqueror Malikkapur. As kings who were followers of Islam were noted for their intolerance towards other religions, the invaders destroyed most of the ancient sculptures of the temple. Thirugnanasambandar the Hindu Saint has mentioned the temple in his songs which go back to early 7th century. The temple was restored to its pristine glory in the late 14th century when the Hindu Kings came back to power in Madurai. This can also be termed as a new beginning of a new era in the history of the temple, when it was almost rebuilt. The King Thirumalai Naicker played an important role in the construction of the new form of the temple according to records.

https://www.youtube.com/watch?v=wiPGwVGi4lY
22/10/2025

https://www.youtube.com/watch?v=wiPGwVGi4lY

Here, food is not just food. Why does Karah Prasad in a Gurdwara taste nothing like the halwa at home, what is it about tamarind rice at Meenakshi Temple tha...

16/04/2025
_/\_
30/10/2024

_/\_

02/04/2024
*மதுரை* மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருக்கு உணவு பரிமாறும் காட்சி 👇
02/11/2023

*மதுரை* மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருக்கு உணவு பரிமாறும் காட்சி 👇

14/06/2023

👨‍🦳ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!

🧑‍🦳கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "

👨‍🦳மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "

🧑‍🦲கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "

👦மனிதன் :
" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

🙍‍♂️கடவுள் :
" உன்னுடைய உடைமைகள்...! "

👦மனிதன் :
" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "

🙍கடவுள் :
" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "

🧑மனிதன் :
" அப்படியானால்
என்னுடைய
நினைவுகளா ? "

🧑‍⚕️கடவுள் :
" அவை காலத்தின் கோலம்...! "

🧑‍🦰மனிதன் :
" என்னுடைய
திறமைகளா ? "

🧓கடவுள் :
" அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...! "

🙍மனிதன் :
" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

🧓கடவுள் :
" மன்னிக்கவும் !
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...!"

🙍மனிதன் :
" அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா ? "

👨‍🦱கடவுள் :
" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள்
உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.! "

🧓மனிதன் :
" என் உடலா ? "

🧓கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல...!
உடலும் குப்பையும் ஒன்று...! "

🙎‍♂️மனிதன் :
" என் ஆன்மா ? "

👱கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

🙅‍♀️ மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை
வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டு
அதிர்ச்சியடைகிறான்...!

🙍‍♂️ கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்
" என்னுடையது என்று
எதுவும் இல்லையா ? "
என கேட்க...!

🙍கடவுள் சொல்கிறார் :

🙍‍♂️அதுதான் உண்மை !
நீ வாழும் ஒவ்வொரு
நொடி மட்டுமே
உன்னுடையது...!
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

🧓ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

🧑‍🦳ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

🙍மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

🧓உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது...!

🧓 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்...!

❤என்றும் அன்புடன்
உங்களில் நான்..

02/06/2023

பாற்கடலை கடைய அமுதம் வருமா? - பைத்தியக்காரத்தனம்!

"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம். இப்படி ஒரு Fantasy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க."

- இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர் (பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

நான் நிதானமாக சொன்னேன் இந்த கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள். மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை. இவற்றை அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும். சரி, இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

🌼 பாற்கடல் - குண்டலினி சக்தி
🌼 மேரு மலை - முதுகுத்தண்டு
🌼 வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று (உஷ்.. உஷ்னு சத்தம் வருதா?)
🌼 தேவ-சுரர் - இடகலை - பிங்கலை (நாடி)
🌼 ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை
🌼 தொண்டைக்குழி - விசுக்தி
🌼 விஷ்னு - வாழ்வு
🌼 ஆலகாலவிஷம் - கபம்
🌼 அமுதம் - நித்ய வாழ்வு (மரணமில்லா பெருவாழ்வு)
🌼 திருமகள் - செல்வம், நிறைவு
🌼 சந்திரன் - சித்தத் தெளிவு
🌼 காமதேனு, கற்பக விருட்சம் - நினைத்தது கைகூடும் ஆற்றல்
🌼 ஐராவதம் - தேக பலம்
🌼 தன்வந்திரி - ஆரோக்கியம்

அதாவது "முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்). ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசியோகம் மூலம் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்ய பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

மேலும் பாற்கடல் கடையும்போது லட்சுமி, தன்வவந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் வந்தது என்பது வாசியோகம் சித்தி பெற்ற ஒருவனுக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேக பலம் கிடைக்கும் என்பதற்கான உருவகம்.

ஆனால் இந்தப் பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும் (சந்தேகம் இருப்பின் வாசியோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)."

- இப்படி விளக்கினேன். அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார், 'விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே?!' என்று.

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) மேலும் சில உருவகங்களின் Decodings:

1. ஒரே இறைவன் (இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)

சிவசக்தி - துவைதம் (Duality)

பிதா, சுதன், பரிசுத்த ஆவி - வசிஷ்டாத்வைதம் (கிறிஸ்த்துவம்)

2. சும்மா இருந்தால் சிவம் (Static), ஓயாமல் அசைந்தால் சக்தி (Dynamic), சக்தி இல்லையேல் சிவம் இல்லை - உருவகம்

3. திரிசூலம் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியின் உருவகம்

4. கணபதியை (பூமியை), சக்தி (Dynamic force)
அழுக்கை (Dust of Universe) உருட்டி படைத்தாள் - இது பூமி தோன்றலின் உருவகம்.

5. தில்லை நடராசர் நடனம் - Cosmic dance-ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது).

6. சிவன் (யோக சக்தி) + திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன் - உருவகம்

7. முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமாணமான காலத்தை உணர்த்த மகாகாலன். அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்

8. பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாக படைத்தது ஜனனமும் மரணமும் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

9. வாயு மைந்தன் அனுமன் (குரங்கு போன்ற நிலையில்லாத மனம்), யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்
- மனதின் உருவகம்

10. கருடாழ்வார் - மூச்சின் உருவகம்

11. சூரியனின் ஏழு குதிரைகள் - நிறப்பிரிகை VIBGYOR உருவகம்

12. தசாவதாரம் - பரிணாம வளர்ச்சியின் உருவகம்

13. ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு, தான் உணர்ந்ததை உணர்த்த, ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.....

18ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். மதுர...
23/05/2023

18ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்லாமல், மதுரை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இவருடைய பொறியியல் கல்லூரியில் வசதியில்லாத மாணவர்களுக்கும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தமிழக அரசின் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரது ஆன்மா இறைவனது மடியில் இளைப்பாறட்டும்.

Address

Madurai Meenakshi Amman Temple
Madurai
625001

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 7:30pm
Wednesday 9am - 7pm
Thursday 5am - 12:30pm
4pm - 10pm
Friday 5am - 12:30pm
4pm - 10pm
Saturday 5am - 12:30pm
4pm - 10pm
Sunday 5am - 12:30pm
4pm - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Meenakshi Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madurai Meenakshi Amman Temple:

Share

Category