12/02/2021
*புத்தம் புதிய தீங்கு*
(பிப்ரவரி 12, 2021)
(Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்)
"பண்ணையிலிருந்து புத்தம் புதிய (fresh) முட்டைகள்." "மிக அண்மையில் தயாரிக்கப்பட்ட கேக்குகள்." "புது மலர்ச்சி வாய்ந்த காய்கறிகள்." டப்பாவில் அடைக்கப்படாத; பதனிட்டதல்லாத உணவு, சாறு, பானங்கள்… போன்றவை. காலையில் புதியதாக காய்ச்சும் காபி நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க பலரை தூண்டுகிறது. பொதுவாக, பழையது ‘காலாவதியானது’ அல்லது தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது. "இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்" (யாத்திராகமம் 16:35). தேவன் இஸ்ரவேல் தேசத்தை ஏராளமாக ஆசீர்வதித்தாலும், இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ள மற்றும் மனக் கடினமான ஜனங்களாக இருந்தார்கள் (யாத்திராகமம் 32:9).
இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய வாழ்க்கை கெட்டதில் இருந்து மிக மோசமாக மாறியது. அடுத்தடுத்த தலைமுறையினரும் தங்கள் பாவங்களை அதிகரித்தனர். தேவன் ஜனங்களை எச்சரிப்பதற்காக ஒன்றின் பின் ஒன்றாக தீர்க்கதரிசிகளை அனுப்பினார், ஆனால் அவர்கள் கேட்கவோ மனந்திரும்பவோ தயாராக இல்லை. எரேமியா இஸ்ரவேல் தேசத்தைப் பற்றி புலம்புகிறார்: "ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது, அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது, துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது. எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்" (எரேமியா 6:7,8). ஒவ்வொரு கணமும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதற்கும், அவருடைய பிரமாணத்திற்கு விரோதமாக பாவம் செய்வதற்கும், மனசாட்சியற்ற வன்முறையை நிலைநிறுத்துவதற்கும் அவர்கள் ‘புதிய புதிய’ யோசனைகளை வளர்த்துக் கொண்டனர்.
*1) இயல்பானது:*
இஸ்ரவேல் தேசம் இயல்பாகவே பாவம் செய்தது எனலாம். எந்தப் பொருட்களை உயரமாக வீசினாலும், ஈர்ப்புவிசை காரணமாக கீழே விழுகிறது; அதுபோல மனிதன் வலிமையாக பாவத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறான்.
*2) பழக்கம்:*
நம் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் சில நல்ல பழக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல் துலக்குவது அல்லது குளிப்பது போன்ற உடல் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒவ்வொரு நாளும் வேதாகமத்தைப் படிப்பதும் தியானிப்பதும், ஜெபிப்பதற்கான நேரம் ஒதுக்குவதும், நல்ல ஆவிக்குரிய காரியங்கள் சார்ந்தவற்றில் ஐக்கியம் கொள்வதும் என இருப்பது நல் பழக்க வழக்கங்கள். ஆனால், இஸ்ரவேல் தேசத்தைப் பொறுத்தவரை, கலகங்களும் நாசங்களுமே (அழிவு) அவற்றின் ஆவிக்குரிய அந்தஸ்தைக் குறைத்தன.
*3) தன்னுணர்வற்ற மறுமொழி:*
அவர்கள் பாவப் பழக்கத்தில் மூழ்கிவிட்டார்கள்; அவர்கள் அறிந்தோ அறியாமலோ பாவம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, அவர்கள் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பு ஒரு முறை கூட யோசிக்கவில்லை எனலாம்.
*4) வசதியானது:*
உண்மையில், அவர்கள் பாவத்தில் மூழ்கி மகிழ்ந்தார்கள் அல்லது அனுபவித்தார்கள். பாவச் சேற்றிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு பாசாங்கு கூட இல்லை.
மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய புதிதான அன்பிற்காக, கிருபைக்காக மற்றும் இரக்கங்களுக்காக தினமும் காலையில் ஏங்கி நிற்க வேண்டும். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள், உமது உண்மை பெரியதாயிருக்கிறது"
(புலம்பல் 3:22,23).
*ஒவ்வொரு காலையிலும் நான் அவருடைய உறுதியான அன்பையும் உண்மைத்தன்மையையும் நாடி நிற்கின்றேனா?* என சிந்திப்போம்.
#ஜேஎன்மனோகரன்
#உயிரூட்டும்மனவெளிச்சம்
#புதிய_தீங்கு
#வணங்கா_கழுத்துள்ள_மக்கள்
வாட்ஸ்அப்: +91 9444027221
4GT MOVEMENT REV J N Manokaran Contact Us Today’s Igniting Insight Sermons New Every Morning ‘New Year’ brings New Cheer! Beginning something new, receiving something new, experiencing something new is … Home Read More »