Ramayanam

Ramayanam This page describes about places, peoples and temples related to Ramayana.

21/02/2026
17/01/2021

பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பல வருடங்களுக்கு முன்னர், அயோத்தியில் தசரத மஹாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை புத்திர கமேஷ்டி என்ற ஒரு யாகத்தின் மூலம் ஒரே சமயத்தில் நான்கு குழந்தை பெறும் பாக்கியம் பெற்றனர். அதில் கௌசல்யா தேவிக்கு பகவான் ஶ்ரீ ராமசந்திரமூர்த்தியும் கைகேயிக்கு பரதனும் .சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னனும் பிறந்தனர். இவர்களில் ராமர் மூத்தவர்.

இளவரசர்கள் நால்வரும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினர் - போர் கலை, வில் அம்பு பிரயோகிப்பது, வாள் வீச்சு, நாட்டு மக்களை பாதுகாத்தல், அரச கடமைகளை எவ்வாறு செவ்வனே செய்வது - போன்ற அனைத்தையும் கற்றனர். சில காலத்திற்கு பின்னர், ராமர் "சீதா" என்ற அழகிய இளவரசியை மணந்தார். அவர்கள் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

தனக்கு வயதாகி விட்டது என்றுணர்ந்த தசரத மகாராஜா, தனது மந்திரிகளுடன் ஆலோசித்து, ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு, தான் துறவறம் ஏற்று. கானகம் செல்ல முடிவு செய்தார். இதையறிந்த அயோத்தி மக்கள் அனைவரும் பேரானந்தம் கொண்டனர். பட்டாபிஷேக விழாவிற்காக நகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தினர். வாசனை திரவியங்கள், மலர் மாலைகள், கொடிக்கம்பங்கள், வண்ண தோரணங்கள் போன்றவற்றை கொண்டு அலங்கரித்தனர். நகரம் முழுவதும் இவ்வாறிருக்க, அரண்மனைக்குள் இருந்த கூனி என்ற பணி பெண்ணிற்கு மட்டும் இந்த பட்டாபிஷேகத்தில் இஷ்டமில்லை. அவள் தசரதரின் ஒரு ராணியான கைகேயியின் பணிப்பெண் ஆவாள். கூனி, கைகேயியிடம், ராமருக்கு பதிலாக கைகேயியின் மகனான பரதனுக்கு பட்டாபிஷேகம் நடக்க விரும்புவதாக கூறினாள். மேலும் கைகேயியின் மனதையும் மாற்றினாள். குழப்பமடைந்த கைகேயியும் தசரதரின் அறைக்கு மிகுந்த கோபத்துடன் சென்றாள். இதை கண்ட தசரதர், "எனதன்பு கைகேயி! ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? நான் என்ன செய்தால் உன் கோபம் தீரும்?" என்று வினவினார்.

கைகேயி, தன் கணவரிம் "உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நான் உங்கள் உயிரை காப்பாற்றிய போது, நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்களித்தீர்கள். அந்த வரங்களை நான் இப்போது கேட்கப்போகிறேன். முதலாவதாக என் மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டாவதாக ராமனை பதினான்கு ஆண்டுகள் வனத்திற்கு அனுப்ப வேண்டும்", என்று கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியில் தசரதருக்கு மயக்கமே வந்து விட்டது. மீண்டும் சுய நினைவிற்கு வந்த தசரதர், "உன்னுடைய வஞ்சம் நிறைந்த வார்த்தைகள் வாளை விட கூர்மையாக இருக்கிறது. நான் என் வாக்கை காப்பாற்றாவிட்டால் அது மரணத்திற்கு சமமாகும்", என்று வருந்தினார்.

ஆனால் தன் வாக்கை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திலிருந்த தசரதருக்கு வேறு வழியில்லை. கைகேயியின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டிய கட்டாயம். ஆகையால் உடனடியாக ராமரை அழைத்து இந்த விஷயத்தை கூறினார். ராமரோ எந்த வித சலனமும் காட்டவில்லை. மாறாக அழுதுகொண்டிருந்த தனது தந்தையை சமாதானப்படுத்தினார். சீதா தேவியும் லக்ஷ்மணரும், ராமர் இல்லாமல் அரண்மனையில் வாழ முடியாது என்று முடிவு செய்து, ராமாருடனே, வனவாசத்திற்கு செல்ல தயாரானார்கள். மூவரும், தங்களுடைய பட்டாடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை தியாகம் செய்து, மரவுரி தரித்தார்கள். தங்கள் குடும்பத்தினரையும், அயோத்திய நகர வாசிகளையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தி, வனத்திற்கு சென்றார்கள்.

வனத்தில் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. ராமரும் லக்ஷ்மணரும் எளிமையாக ஒரு குடில் அமைத்தனர். சீதா தேவி, மரங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் சேகரித்து உணவு தயார் செய்தார். அதேபோல் தினமும் தங்கள் வாழ்வை இனிமையாக கழித்தனர். சாதுக்கள் மற்றும் முனிவர்களின் சங்கத்தில் பதினான்கு ஆண்டு வரை மகிழ்ச்சியாக கழித்தனர்.

ஒரு நாள், மிகவும் கொடூரமான நர மாமிசம் தின்னும் சூர்ப்பனகை என்னும் அரக்கி, இவர்களின் குடிலுக்கு அருகில் வர நேர்ந்தது. அங்கிருந்த ராமரை பார்த்தவுடன் அவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டாள். உடனடியாக ராமரை அணுகி, அவளின் விருப்பத்தை கூறினாள். ராமரோ, "நான் திருமணமானவன். என்னுடைய மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்", என்று பதிலளித்தார்.

எத்தனை முறை வேண்டியும் ராமர் சம்மதிக்காததால், கோபம் கொண்ட சூர்ப்பனகை அங்கிருந்த சீதா தேவியை தாக்க முற்பட்டார். இதை கண்ட லக்ஷ்மணர், ஒரு நொடி கூட தாமதிக்காமல், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்துவிட்டார். வலியால் அலறிக்கொண்டே, வனத்திற்குள் மறைந்தாள் அந்த அரக்கி.

சிறிது நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் சீதாதேவி தனது குடிலின் முன் ஒரு அழகிய பொன்னிற மான் நிற்பதை கண்டாள். ராமரிடம், "பிரபு! இந்த மான் எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை நான் என்னுடன் வளர்க்க விரும்புகிறேன். எனக்காக அந்த மானை பிடித்து தருவீர்களா?", என்று வேண்டினார்.

அந்த மானை பார்த்தவுடன் ராமருக்கு சந்தேகம் வந்தது. வனத்திற்குள் இவ்வாறு ஒரு அற்புத மானை இதற்கு முன் கண்டதேயில்லை. இந்த மான மாயையாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார். எனவே, லக்ஷ்மணரிடம், சீதா தேவியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த மானிற்கு பின்னால் சென்றார். "எக்காரணத்தை கொண்டும் நீ சீதா தேவியை தனித்து விட்டு வெளியே செல்ல கூடாது", என்று லக்ஷ்மணரை எச்சரித்தார். சிறிது நேரத்திற்கு பின், அந்த மான் ஓரிடத்தில் நின்றது. அதற்கு குறி வைத்தார் ராமர். அம்பு அதன் உடம்பில் பட்டதும் அது தன் சுய ரூபத்திற்கு மாறியது. உண்மையில் அதுவும் ஒரு அரக்கன். அந்த அரக்கன் இறப்பதற்கு முன்னர், ராமருடைய குரலில், "லக்ஷ்மணா! என்னை காப்பாற்று", என்று கத்திவிட்டு இறந்தது.

ஆனால் இந்த அழுகுரலை கேட்ட லக்ஷ்மணன் சிறிதும் சலனமடையவில்லை. ஏனெனில், தனது சகோதரருக்கு எந்த ஆபத்தும் நேராது என்று அவருக்கு தெரியும். ஆனால் சீதா தேவி மிகவும் வருந்தினார். லக்ஷ்மணரிடம், ராமருக்கு உதவ செல்லும்படி வேண்டினார். லக்ஷ்மணர், சீதா தேவியை தனிமையில் விட்டு செல்ல மறுத்தார். சீதா தேவி மிகவும் கோபமாக, "லக்ஷ்மணா, உன்னுடைய திட்டம் இப்போது எனக்கு தெரிகிறது. ராமர் இறந்துவிட்டால் அவருக்கு சொந்தமானவற்றை நீ அனுபவிக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறாய். ஆகையால் தான் அவரை காப்பாற்ற செல்ல மறுக்கிறாய்", என்று கடுமையான வார்த்தைகளால் லக்ஷ்மணரின் தூய இதயத்தை தாக்கினார். ஆகையால், தன்னை நிரூபிக்க வேறு வழியின்றி சீதா தேவியை தனியாக விட்டு, ராமரை தேடி சென்றார், லக்ஷ்மணர்.

இத்தனை நிகழ்வுகளையும் மரத்திற்கு பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராவணனுக்கு, இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது - தன் தங்கையின் (சூர்ப்பனகையின்) அவமானத்திற்கு பழி தீர்க்க. எனவே, லக்ஷ்மணன் அங்கிருந்து சென்றதை உறுதி செய்து கொண்டு, இப்போது சீதா தேவியை நோக்கி சென்றான். சீதா தேவியின் அழகில் மயங்கிய அந்த அரக்கன், சீதா தேவி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரின் கரத்தை பிடித்திழுத்து, கழுதைகள் பூட்டப்பட்டிருந்த தன்னுடைய ரதத்தில் வலுக்கட்டாயமாக அமர்த்தினார். சீதா தேவி, உதவிக்கு அழைத்தும், அதை பொருட்படுத்தாமல், அந்த ரதத்தை, இலங்கை நோக்கி விண்ணில் செலுத்தினான் ராவணன். மீண்டும் குடிலுக்கு திரும்பி வந்த ராமரும் லக்ஷ்மணரும், சீதா தேவியை காணாது தவித்தனர். ராமரை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்றே லக்ஷ்மணருக்கு தெரியவில்லை. இருவரும் சீதா தேவியை தேடினர். மலைகள், காடுகள், பள்ள தாக்குகள், குகைகள் என அனைத்து இடங்களுக்கும் சென்றனர். பல நாட்களுக்கு பிறகு, சுக்ரீவனோடு நட்பு கிடைக்க அவர்கள், சுக்ரீவனின் உதவியால் சீதாதேவியை தேட முடிவெடுத்தனர். சுக்ரீவனின் தலைமையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து திசைகளிலும் தேட வானரங்களை அனுப்பினார். ஆனாலும் எந்த தகவலும் இல்லை. சீதா தேவியை தேடும் முயற்சியை கைவிட்டு விடலாம் என்று அனைவரும் எண்ணிய சமயத்தில், சம்பாதி என்ற பருந்து ஒன்று, சீதா தேவி இலங்கையில் இருக்கிறார் என்று கூறியது. இந்த தகவலை உறுதி செய்ய யாரேனும் இலங்கைக்கு செல்ல வேண்டும். இந்த ஆபத்தான காரியத்தை மேற்கொள்ள ஹனுமான் முன்வந்தார். சீதா தேவியை காண்பதோடு மட்டுமல்லாது, எதிரியின் படை பலத்தையும் அறிந்து வர உத்தரவிட்டார் சுக்ரீவன். சமுத்திரத்தை ஒரே தாவாக தாவிய ஹனுமான், பல தடைகளுக்கு பின்னர் அசோக வனத்தில் சீதாதேவியை கண்டார். சீதா தேவி மிகவும் மெலிந்து காணப்பட்டார். தன் கணவரை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். ராமரின் தூதன் ஹனுமனை என்று அறிந்த சீதா தேவி மிகவும் மகிழ்ந்தார். "இந்த வருடத்தின் இறுதிக்குள் தன்னுடைய மனைவியாக வேண்டும் இல்லையென்றால் என்னுடைய சமையல்காரர்கள் உன்னை கொன்று எனக்கு விருந்தளிப்பார்கள்",என்று ராவணன் தன்னை மிரட்டுவதாக கூறி அழுதார். சீதா தேவியை சமாதானப்படுத்திய ஹனுமான், தான் ராமருடன் விரைவில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்தார்.

மீண்டும் சமுத்திரத்தை எளிதாக கடந்து, விரைவில் திரும்பிய ஹனுமான், ராமர் முன் வந்து நின்று, "கண்டேன் சீதையை", என்று மகிழ்ச்சியோடு கூறினார். அனைவரும் ஆரவாரம் செய்தனர். சிறிதும் தாமதிக்காமல், ராமர் அங்கிருந்த வானரங்களிடம், கிடைக்கும் கற்களையும் பாறைகளையும் சமுத்திரத்தில் வீசி எறியச்சொன்னார். ராமச்சந்திர மூர்த்தியின் சக்தியால், அவையனைத்தும் நீரில் மிதந்தன. வேகு விரைவில், இலங்கைக்கு செல்வதற்கான பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ராமரின் தலைமையில், அனைவரும் போர் புரிந்து சீதாதேவியை மீட்டுவதற்காக, இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் வருகையை அறிந்த ராவணன், போருக்கு தயாரானான். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த போர் மிக கடுமையாக இருந்தது. அரக்கர்கள் - பாறைகள், அம்புகள், கம்புகள் - போன்றவற்றை வானரங்கள் மீது வீசினர். பதிலுக்கு வானரங்கள் - கல் குண்டுகள், மர கிளைகள் மற்றும் பாறைகளை அசுரர்கள் மீது வீசினர். ராமரின் பக்கம் வெற்றி பெரும் தருணம் வந்தது. ராவணனின் இரு மகன்களையும் ராமர் கொன்றார். இதையறிந்த ராவணன், தன்னுடைய விமானத்தை வானரங்களின் மீது பறக்க விட்டு அதிலிருந்து ஆயுதங்கள் கொண்டு வானரங்களை தாக்கினான். சினம் கொண்ட ராமர், ராவணனை துவந்தத்திற்கு அழைத்தார். "நர மாமிசம் உண்பவனே! நீ நாய்க்கு சமமானவன். ஒரு நாய், தன்னுடைய எஜமானர் இல்லாத போது, வீட்டிற்குள் சென்று உணவு திருடும். அதேபோல், நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து நீ என் மனைவி சீதாவை கவர்ந்து வந்து விட்டாய். ஆகையால், இன்று நீ யமலோகம் செல்வாய் என்று நான் வாக்களிக்கிறேன்", என்று கூறினார். சக்தி வாய்ந்த ஒரு அம்பை தன் வில்லில் பூட்டி, ராவணனின் இதயத்தை குறி வைத்து அதை எய்தார். விஷம் காக்கும் நாகம் போல, அந்த அம்பு, ராவணனின் இதயத்தை துளைத்தது. ராவணன் தனது விமானத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து மடிந்தான். இதை கண்ட வானரங்கள் அனைத்தும் தங்களது வாலை ஆட்டியும் கீச்சிட்டும், தங்கள் மகிழ்ச்சையை வெளிப்படுத்தின.

தன் கணவரை கண்ட சீதா தேவியின் முகம், தாமரை போல மலர்ந்தது. ஒரு அழகிய விமானம் மூலம் அங்கிருந்த அனைவரும் அயோத்யா நோக்கி புறப்பட்டனர். அம்மாவாசை நாளான அன்று வானம் இருண்டிருந்தது. அந்த இருளை போக்க அயோத்யாவாசிகள் அனைவரும், நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தனர். ராமரை கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மலர் மாலைகள், பொன்னாடைகள் போன்றவற்றை கொண்டு ராமரையும் சீதாதேவியையும் வரவேற்றனர். பரதர், மிகுந்த மகிழ்ச்சியோடு ராமரை கட்டி தழுவினார். ராமரின் பட்டாபிஷேகம் நிகழ்ந்தது. ராமரின் ஆட்சியில், மக்களுக்கு உடலிலும் மனத்திலும் எந்த குறையும் இருந்ததில்லை. நோய், முதுமை, பயம், தளர்ச்சி போன்றவை யாரிடமும் காணப்படவில்லை. ஆகையால் தான் இன்றும் "ராம ராஜ்ஜியம்" அனைவராலும் புகழ்ந்து போற்றப்படுகிறது. ஒரு மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ராமச்சந்திர மூர்த்தி ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

https://suddhabhaktitamil.blogspot.com.

https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

15/04/2019

ஸ்ரீ இராமரின் பேரழகு

💐💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீ இராமரின் பேரழகில் மயங்கிய தண்டகாரண்ய வனத்தைச் சார்ந்த ரிஷிகள் அனைவரும் பெண்ணாகப் பிறந்து இராமரை மணக்க விரும்பினர். ஆனால் அவரோ ஏக பத்தினி விரதம் ஏற்றிருந்த காரணத்தினால், அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. தனது அடுத்த அவதாரத்தில் (கிருஷ்ண அவதாரத்தில்) அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தார். அதன்படி, கிருஷ்ண அவதாரத்தின்போது இராமரை விரும்பிய தண்டகாரண்யத்தைச் சார்ந்த முனிவர்கள் அனைவரும் விருந்தாவனத்தில் கோபியர்களாகத் தோன்றி கிருஷ்ணருடன் இராஸ நடனத்தில் பங்கு கொண்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

(பத்ம புராணம், உத்தர காண்டம்)

15/04/2019

பகவான் ஶ்ரீ ராமரின் பக்தை சபரி
*****************************

"பகவான் ராமர், சபரியின் மீது கருணை யினை பொழிந்தார்"

ஒரு வேடனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சபரி. அவள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லையென்றாலும், அவள் மனது தூய்மையான தங்கம் போன்றது. தனது திருமண நாள் முன் அவளது தந்தை ஆயிரக்கணக்கான, ஆடுகள் மற்றும் செம்மறிகளை பழியிடுவதற்காக, கொண்டு வந்திருப்பதை பார்த்தாள். அந்த நேரத்தில் வேட்டைக்காரர்கள் மத்தியில் அது ஒரு வழக்கமாக இருந்தது,

அவளால் அந்த விலங்குகள், கொல்லப்படுவதை பார்க்க முடியவில்லை , எனவே அவள் அந்த மிருகங்கள் கொலை செய்யப் படுவதைத் தவிர்ப்பதற்காக, அதிகாலையில் எழுந்து காட்டை நோக்கி ஓடினாள்.

அவள் பல ஆசிரியர்களிடம் சென்று தன்னை சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உண்மையான ஞானம் ( பிரம்மா ஞானம் )கற்றுத் தர வேண்டினாள். அனைத்து ஆசிரியர்களும் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஏனெனில் அவள் ஒரு தாழ்ந்த சாதியினரின் வகுப்பினை சார்ந்தவள் என்றும் அவளுக்கு 'பிரம்ம ஞானத்தைக்' கற்றுக் கொடுப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கருதினர்.

முனிவர் "மதங்கர்" அவளை வரவேற்று அவருடைய சீஷ்யையாக, ஏற்றுக் கொண்டார். மற்ற ரிஷிகள் மற்றும் யோகிகள் அனைவரும் , அவளை சிஷ்யையாக ஏற்றுக் கொண்டதற்கு வன்மையா கண்டித்தனர். , அவர்கள் , அவரை, தூய்மையற்றவர் என்றும் தாழ்ந்த ஆத்மா என்றும் கூறினர்.

முனிவர் "மதங்கர்" சபரியிடம் கூறினார் " மகளே , என் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு, இந்த இடத்தை சுத்தம் செய்தல் , வேலைகளைச் செய்தல் , ஆகிய பணிகளை செய்வாயாக! அதுவே உனக்கு நன்மை பயக்கும் என்றார்." ஆனால் "காட்டில் வாழும் மற்ற ரிஷிகளுக்கு, நான் உன்னை எனது சிஷ்யையாக ஏற்றது குறித்து எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. என்று சபரியிடம் கூறினார்.

நீ சிறந்ததைத் தேடியே என்னை வந்தடைந்துள்ளாய். நான் உனக்கு அடைக்களம் தருகிறேன். முனிவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறினார்."

அவள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு, அவளது நித்தியக் கடமைகளைச் செய்தும், ஆசிரமத்தில் உள்ள பல பசு மாடுகளின், மேய்ச்சல் இடங்களைப் பராமரித்தும் வசித்து வந்தார். இன்னும் அறியாமையில் இருந்த மற்ற ரிஷிகள், அவரை ஒரு தூய்மையற்றவள் என்று அழைத்து , சபரியின் குருவினை நிராகரித்தனர்.

ஒரு நாள் "மதங்கர்"முனிவர் மிகுந்த வயோதிக நிலையை அடைந்து, அவரது சீடர்களில், சபரியை அழைத்து "என் மகளே , நான் இந்த உடலை விட்டுப் போகிறேன் உனக்கு எதுவும் வேண்டும் எனில் என்னிடம் கூறுவாயாக?" நான் உனக்குத் தருகிறேன். என்று கூறினார்.

சபரி வேண்டினாள் "தெய்வமே தாங்கள் செல்லும், உயர்ந்த உறைவிடத்திற்கே என்னையும் அழைத்து செல்லுங்கள். நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது "

முனிவர் மதங்கர் "மகளே, ஒரு நாள் ராமர் , உன்னைக் காண வருவார். அது வரை நீ உயிருடன் இருப்பாயாக! அதன் பிறகு நீ என்னிடம் வருவாயாக" என்று கூறினார்.

சபரி ராமரை எதிர்ப்பார்த்து உயிரைத் தாங்கி, அவள் ஒவ்வொரு நாளும் அதி காலையில் எழுந்து காட்டிற்கு சென்று, ராமர் வரும் போது அவருக்கு சேவை செய்ய அவருக்கு பழங்களை சேகரித்து வந்தாள், அவர் எப்பொழுது வருவார் என்று அவளுக்குத் தெரியாது , தினமும் காட்டிற்கு சென்று பழங்களை சேகரித்து வாழ்ந்து வந்தாள். இவ்வாறு அவள் பல வருடங்கள் வாழ்ந்து வந்தாள்.

சபரியின் குரு ஆசிரமம் அருகே "பம்பேஸர்" என்ற அழகிய மிகப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. மிகவும் வயதான சபரி மண்பானையுடன் நீரினை சேகரிக்க அந்த ஏரிக்கு சென்றாள். அங்கே நீண்ட தாடியும்,படர்ந்த முடியும், வைத்திருந்த ரிஷி ஒருவர் உட்கார்ந்து, மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.
அவர் மிகுந்த வயோதிகர், மற்றும் மிகத் தவறாக மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். அவர் தாழ்ந்த சாதி பெண்ஒருத்தி தெய்வீக ஏரியின் நீரை தனது பானையில் நிரப்புவதா என்று கேட்டுக் கொண்டே, அவர் " இந்த தாழ்ந்த சாதி பெண் நாங்கள் பயன்படுத்தும் நீரினை தூய்மையற்றதாக செய்து விட்டாள் " என்று நினைத்து, அவர் , கோபத்துடன் அவள் மீது ஒரு கல்லை வீசினார். அது அவளது காலில் விழுந்து இரத்தம் வெளியே வந்தது , அவளது ஒரு துளி இரத்தம் ஏரிக்குள், விழுந்த ஒரு விநாடியில் ஏரி, நீர் முழுவதும் இரத்தமாக மாறியது.

ரிஷி ," பாருங்கள், இந்த விலக்கப்பட்டவளின் ஒரு துளி இரத்தம் ஒரு முழு ஏரியையே இரத்தமாக மாற்றிவிட்டது இப்போது நாங்கள் என்ன செய்வோம்?. " என்று சத்தமாக கத்த தொடங்கினார்.

சபரி, மிகுந்த வலியுடன் அழுதுகொண்டே தனது பானையில் நீரினை நிறைத்து தனது ஆசிரமம் சென்றார். ரிஷிகளுக்கு குடிப்பதற்கும், புனிதமான காரியங்கள் செய்வதற்கும் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்கள் சுத்திகரிப்பு மந்திரங்களை ஜபம் செய்யத் தொடங்கினர். யாகங்களும், யாகக் குண்டங்களும் வளர்த்தனர். ஏரியினை, புனிதமாக்க புனித பொடிகளைத் தூவினர். ஆனால் எதுவும் உதவாது போனது . நீர் இன்னும் இரத்தம் நிறைந்து தான் இருந்தது. அவர்கள் அதில் , கங்கை நீரை கொண்டு வந்து தெளித்தனர் ஒரு பயனும் இல்லை, யமுனை நீரைக் கொண்டு வந்து தெளித்தனர், ஒரு பயனும் இல்லை.

குழுவில் இருந்த எவரோ கூறினார் "ராமர் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். அவரால் மட்டும் தான் நமக்கு உதவ முடியும். நாம் அவரிடம் சென்று மீண்டும் இந்த இரத்தம் தண்ணீராக மாற்றித் தரும் படி பிரார்த்தனை செய்வோம், என்றார் .

ராமர், ரிஷிகளின் கோரிக்கையை ஏற்று "பம்பை சரோவருக்கு" வருகை தந்தார். அனைத்து இடங்களிலும் சிவப்பாக காட்சி தந்தது. அவரை சுற்றி அனைத்து ரிஷிகளும் நின்றனர்.

ராமர் "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

பகவானே , உங்கள் பாதங்களைத் தொடுவதன் மூலம் இந்த ஏரி மீண்டும் தண்ணீராக மாறி விடும்". என்று ரிஷிகள் கூறினார். ராமர் ஏரியின் உள் நுழைந்தார். ஆனால் இரத்தம் மாறாமல், அப்படியே இருந்தது.

"பகவானே அதில் தாங்கள் ஒரு முங்கு முங்கி நீராடுங்கள்" என்று அங்கு கூடியிருந்த ரிஷிகள் அனைவரும் கூறினர். ராமரும் அது போலவே ஒரு முங்கு முங்கினார். ஆனால் எந்த மாற்றமும் இல்லை ..

"பகவானே , எங்களது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது. இதனை உங்கள் வாயின் உள்ளே வைத்து மீண்டும் துப்பி சுத்தம் செய்து தரமுடியுமா"? என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ராமரும், இரு கைகளால் இரத்தத்தை எடுத்தார் " ஆனால் அவரது சகோதரர் லக்ஷ்மண் இது இரத்தம் ஆகும்" என்று கூறினார், ராமர் அவரது வாயில் இரத்தத்தை எடுத்து அதை மீண்டும் வெளியில் துப்பினார், ஆனால் அந்த ஏரியில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை.

ராமர் அவர்களிடம் " இது எப்படி இரத்தமாக மாறியது சொல்லுங்கள்?" என்று கேட்டார்

ரிஷிகள் ஒருவர் கூறினார் முனிவர் ஒருவர் இங்கே வாழ்ந்தார். அவருக்கு தீண்டத்தகாத சாதியினைச் சேர்ந்த சிஷ்யை சபரி என்ற ஒருவள் இருக்கிறாள். முனிவர் இறந்து விட்டார். ஆனாள் அவள் இன்னும் இருக்கிறாள். அவள் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து போது , ரிஷி ஒருவர் அவள் மீது கல்லை எறிந்தார். காயமடைந்த அவளது உடலில் இருந்து வந்த ஒரு துளி இரத்தம், இந்த ஏரி அனைத்தையும் இரத்தமாக்கி விட்டது. என்று கூறினார்.

ராமர் சபரி என்ற பெயரைக் கேட்டவுடன் அவரது இதயத்தில் அவரது இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கூறினார் " ஓ ரிஷிகளே! இது சபரியின் இரத்தம் இல்லை, இந்த இரத்தம் எனது இதயத்தில் இருந்து வந்துள்ளது. என்னால் இதை சுத்தம் செய்ய முடியாது". என்றார்.

பகவானே எங்கள் வாழ்வில் , இந்த நீர் இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் கடினம். என்றனர். ரிஷிகள்.

நான் அவரைக் காண வேண்டும். யாரையாவது அனுப்பி, அவரை அழைத்து வாருங்கள். என்றார் பகவான்.

அவர்களுள் ஒருவர், விரைந்து சென்று சபரி யிடம் " உன்னைக் காண பகவான் ராமர் வந்துள்ளார், உன்னைப் பார்க்க வேண்டும் என்று பகவான் ராமர் கூறுகிறார்." என்று கூறினார்.

ராமர் பெயரைக் கேட்டவுடன் சபரி, அவரைப் பார்க்க ஓடி வந்தார், ரிஷிகள் அவரது தூய்மையற்ற நிழல் பகவானைத் தொடக் கூடாது என்று நினைத்து அவளை நிறுத்த முயற்சி செய்தனர். அவசரமாக அவள் ஓடி வந்ததால் அவளது காலில் இருந்து மண் தூசிகள் ஏரியில் விழுந்தது , ஏரியானது மீண்டும் தண்ணீராக மாறியது.

அனைவரும் ஆச்சரியமாக தங்களுக்குள் என்ன நடந்தது? என்ன நடந்தது? என்று "கேட்டுக் கொண்டிருந்தார்கள் "

பகவான் ராமர் கூறினார் " நீங்கள் அனைவரும் பார்த்தீர்களா?, சபரியின் கால்களில் படிந்துள்ள தூசியால் ஏரியானது சுத்திகரிக்கப்பட்டது . நான் அதில் குளித்தேன், என் வாயால் சுத்தம் செய்தேன் ஆனால் எதுவும் நடக்க வில்லை. தூய பக்தையின் பாதங்களில் உள்ள தூசி யினால் ஏரியானது சுத்திகரிக்கப்பட்டுவிட்டது" என்றார்.

சபரி ராமரிடம் வேண்டினாள் " இப்போது , என் குடிசைக்கு வாருங்கள் பகவானே! வந்து, நான் தங்களுக்காக மலர்களால் அலங்கரித்துள்ளேன். நான் உங்களுக்காக இனிப்பு நிறைந்த பெர்ரி பழங்களை கொண்டு வந்திருக்கிறேன். தயவு செய்து வாருங்கள் என் பகவானே!" என்றாள்.

ராமரும் லக்ஷ்மணரும் அவளுடன் அவளது ஆசிரமத்திற்கு தொடர்ந்து சென்றனர். அவள் ஒரு மரத்தின் இலைகளால் செய்திருந்த ஒரு கிண்ணத்தில் இனிப்பு பெர்ரி பழங்களைக் கொண்டு தந்தாள் . ராமர் அவளது கடின உழைப்பினைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவள் அவருக்கு புதிய பெர்ரி பழங்களைக் கொண்டு வர சென்றாள்.

"பகவானே நான் உங்களுக்காக இனிப்பு பெர்ரி பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன், நான் ஏற்கனவே ருசி பார்த்து விட்டேன். நிச்சயமாக இது இனிமையான பழங்கள் தான், பகவானே தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்"! என்றாள்.


"ராமர் ஒரு பெர்ரி பழத்தை சாப்பிட எடுக்கப்போகும் போது லக்ஷ்மணன் "முத்தவரே இந்த பழம் பாதி சாப்பிடப் பட்டுள்ளது. இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல" என்றார். ராமர் ஒரு பழம் எடுத்து சாப்பிட்டார், அவர் லட்சுமணனிடம் கூறினார், "லட்சுமணா, சபரி தந்த, இது போன்ற இனிப்பான பழத்தை நான் எங்கும் சாப்பிட்டதில்லை. என்றார்.

ஒருவர் பழம் , இலை , மலர், நீர் ஆகியவற்றை காதலுடன் வழங்குவார் எனில், நான் அதனை "மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்பேன் ." என்று பகவான் பகவத் கீதையில் (9.26) கூறுகிறார்.

ராமர் அவளது அன்பால் கவரப் பட்டார் , அவர் இலைகளால் செய்யப்பட்ட கிண்ணத்தைப் பார்த்தார், அவர் அம்மரத்தின் இலைகள் இயல்பாகவே கிண்ணங்கள் போன்று வளர்வதற்காக ஆசீர்வதித்தார்.

ராமர் அவளிடம் " என்னிடம், நீங்கள் விரும்பும் ஏதாவது கேளுங்கள் நான் உங்கள் பக்தியில் மகிழ்ச்சி அடைந்தேன் " என்று கூறினார் .

சபரி ராமரிடம் "தூய பக்தி வேண்டும்" என்று வேண்டினாள். அவளை ஆசீர்வதித்து விட்டு பகவான் அங்கிருந்து சென்றார் . இந்த தரிசனம் பெற்ற பிறகு சபரி உடல் வாழ்க்கையின் முடிவுக்கு வந்தது . அவள் ஆன்மீக உலகில் பகவான் ராமரின் நித்திய உறைவிடம் அடைந்தார்.

*_கதையின் நியதி:-_*

1. நாம் , அனைவரிடமும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கிருஷ்ணரின் பக்தர்களிடம்... கிருஷ்ண பக்தர்களுக்கு குற்றமிழைத்தால், வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். மாறாக அவர்களை மகிழ் வித்தால் வாழ்வில் பல ஆனந்தங்களை அடையலாம். பகவானின் ஆசீர்வாதத்தினையும் பெறலாம்.

2. நாம் பகவானுக்காக செய்யும் விஷயங்கள் எவ்வளவு பெரியது அல்லது சிறியது என்பது விஷயம் அல்ல. நாம் பகவானுக்காக செய்யும் விஷயங்கள் அனைத்தும் பக்தியுடன் இருக்க வேண்டும்.

3. ஒருவர் தனது குருவின் அறிவுரைகள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும், தாய் சபரியைப் போல, அவர் தனது குரு தனக்கு வழங்கிய "ஒரு நாள் பகவான் ராமர் வருவார் என்னும் அறிவுரையினை ஏற்று வாழ்ந்தார்.

Address

1c, Bharathiyar Street
Madurai

Telephone

9790347024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramayanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share