23/12/2019
கடவுளுக்கு நிகரானவர் நீங்க, கடவுளுக்கும் பக்தருக்குமான பாலம் நீங்க.....
அதனால்தான் உங்கள சாமி, குருக்கள்னு சொல்றோம் அப்படினு அவங்க(பக்தர்கள்) உண்மையா நினைக்கறதா நாம் நம்பினால் அது மூடத்தனம்.
அதுதான் உண்மைனு நாம நெனச்சு கிட்டு இருந்தா நாம பாவம்.
அப்படி அவங்களில் சிலர் நெனச்சாலுமே அதுக்கு நாம் அனைவரும் இன்றைய சூழலில் தகுதியானவர்கள் தான்னு நம்ம முடிவு பன்னிக்கிட்டோம்னா....
நம்ம சமூகத்துக்கான முதல் தோல்வியும் நமக்கான முதல் முட்டாள்தனமும் அதுவாகத்தான் இருக்கும்....
குருக்களை கௌரவமா நடுத்துவதெல்லாம் சோழர் காலத்தோடு முடிந்த விசயம்.
ஏனென்றால் இன்றைய நிலையில் பக்தர்கள் யாரும் கடவுளையே அந்த நிலையில் வைத்து பார்க்கவில்லை.
இன்ஸ்டன்டா உடனே பலன் தரக்கூடிய விரைவில் அடைந்து விடக்கூடிய கடவுள்களைதான் பக்தர்களில் பலர் வணங்குகின்றனர்..
அதாவது கடவுளுக்குள்ளயே யாரு எதுல எக்ஸ்பெர்ட்டோ நேரடிய அந்த கடவுள போய் வணங்க ஆரம்பிச்சுட்றாங்க..
அவங்கள பொருத்தவரை அந்தமாதிரி அவர்கள் வணங்க வரும்பொழுது அவர்களுக்கு பனி செய்து தர ஒரு ஊழியர்,எதையும் எதிர்பார்க்காத, அல்லது எதிர்பார்த்தாலும், முரண்டு பிடிக்காத பரிசுத்தமான வேலைக்காரர் வேண்டும் அவ்வளவே...
கோயிலில் உள்ள பல தொழிலாளிகளில் குருக்களும் ஒரு தொழிலாளி அவ்வளவே - இதுவே சமூக பார்வை
அதாவது சொன்னதை செய் என்ற அளவிலான கௌரவ அடிமையாக ஒரு நபர் தேவை. அந்த நபராக குருக்களை கோயிலில் வைத்துள்ளார்கள். அவ்வளவே.
கோயிலில் குருக்கள் அதிக கௌரவம் பார்த்தால்,
நீ சாஸ்திரவிதிப்படி முறையாக பூஜை செய்தாலும், உன்னை வெளியேற்ற தயங்கமாட்டார்கள்.
மற்றபடி ஆகமம், சாஸ்திரத்தில் கூறியபடி எல்லாம் குருக்களை கோயிலில் நடத்த இங்கு எவருக்கும் மனம் இல்லை.
தயவுசெய்து இன்றைய நிலையில் சிவாச்சாரியார் என்பது மரியாதைக்குரிய வருமானம் குறைந்த பனி அவ்வளவுதான் .
அதற்குமேல் நாமாக நம்மை அதீதமாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்....
எனவே அடுத்ததலைமுறையை எவ்வாறு நல்ல முறையில் முன்னேற்றலாம் என யோசிங்க.
முக்கியமாக நாம் ஆலயங்களில் செய்யும் பரார்த்த பூஜையில் எவ்வளவு ஆத்மார்த்தமாக பூஜை செய்தாலும் அதன் பலன்,புண்ணியம் அனைத்தும் அந்த ஆலயத்தின் பக்தர்களையே சென்றடையும்.நமக்கு ஓரளவே.
எனவே நமக்கான ஆத்மார்த்தம் என்பதும் புண்ணியத்தை சேர்ப்பதும் என்பதும், நம் வீட்டில் செய்யும் பூஜையும்,
நாம் பக்தராக இதர கோயில் சென்று திருத்தலங்களை வணங்குவதுமேயாகும்...
இப்பதிவு என் புரிதலில்.....