அருள்மிகு ஒச்சாண்டம்மன் துனை

  • Home
  • India
  • Madurai
  • அருள்மிகு ஒச்சாண்டம்மன் துனை

அருள்மிகு ஒச்சாண்டம்மன் துனை அருள்மிகு ஒச்சாண்டம்மன் துணை

PAPPAPATTI Radio Competition
18/03/2023

PAPPAPATTI Radio Competition

04/04/2021
தமிழும் விவசாயமும் நமது இரு கண்களாகும்
02/02/2018

தமிழும் விவசாயமும் நமது இரு கண்களாகும்

23/08/2016

நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது. இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது. அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது. அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.

21/08/2016

உலகமெ எதிர்த்தாலும் உழவைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பேன்!!!

ஏனெனில் உணவு இருந்தால் தான் எதிர்க்க தெம்பு இருக்கும்ங்க

30/07/2016

விழிப்புணர்வு செய்தி

♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.

♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி

♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.

♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள் தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.

♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.

♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,

♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.

♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :

1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,

3⃣போலி சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.

4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.

1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்

1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.

1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.

1⃣7⃣ செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.

அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,

எனவே விலைகுறைவாக
உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விளையாடாதீர்கள! ் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

விழிப்புணர்வு செய்தி♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,...
30/07/2016

விழிப்புணர்வு செய்தி

♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.

♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி

♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.

♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள் தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.

♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.

♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,

♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.

♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :

1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,

3⃣போலி சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.

4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.

1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்

1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.

1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.

1⃣7⃣ செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.

அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,

எனவே விலைகுறைவாக
உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விளையாடாதீர்கள! ் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

3 தடவ தொழில்ல நஷ்டம் வந்தாலே தொழில மாத்துரவன் பெயர்  #தொழிலதிபர்...ஆனா 30தடவ நஷ்டம் வந்தாலும் தொழில தொடர்ந்து செய்ரவன் ப...
24/07/2016

3 தடவ தொழில்ல நஷ்டம் வந்தாலே தொழில மாத்துரவன் பெயர் #தொழிலதிபர்...
ஆனா 30தடவ நஷ்டம் வந்தாலும் தொழில தொடர்ந்து செய்ரவன் பெயர்தான் #விவசாயி.....

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது...😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ...
24/07/2016

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.பல மாதங்கள் ஆகியும...
24/07/2016

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.
பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.
சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,
"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.
அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக,
"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது,
'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,
"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.
என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,
"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால்,
இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,
அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும்தான்..!
மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..
ஆம். நண்பர்களே,
நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.
சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.
நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..
என்ன அருமை நண்பர்களே, உண்மைதானே...???

நாம் - முதல் தலைமுறைதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறைபாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறைபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுற...
24/07/2016

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலைமுறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள...
03/07/2016

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்...

Address

PAPPAPATTI, USILAMPATTI, MADURAI
Madurai
625532

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஒச்சாண்டம்மன் துனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category