Mamadurai

Mamadurai This is my beautiful and traditional Madurai and for many. But it’s not just all temples – there is much more that you can experience in Madurai.

With magnificent temples dotting its landscape, it’s no wonder that Madurai has come to be known as the temple city. Situated on the banks of the Vaigai River, Madurai is an ancient city. Established in the 6th century BC, Madurai was an important cultural and commercial center in South India. Its importance down the ages has given Madurai a rich heritage in buildings, arts and crafts. As a result

, the city has always attracted visitors and is a poulaar place to holiday in South India. Though Madurai is popularly known as the temple city, it is also called the Athens of the East for its fantastic monuments. It’s also known as the City of Festivals and the City of Four Junctions. Since the city is always abuzz with activity, it is often referred to as the Sleepless City!

21/05/2023

மதுரையில் எது விசேஷம்?

இந்த கேள்விக்கு பெரும்பாலோர் சொல்லும் பதில் சாப்பாடு. கறி தோசை. அயிரை மீன் குழம்பு. கோனார் மெஸ். சந்திரன் மெஸ், இடியாப்பம், ஜிகர்தண்டா என ரக ரகமான சாப்பாடும் சாப்பாடு சேர்ந்த இடங்களும். சிலர் அழகர், மீனாட்சி, தெப்பக்குளம் என கோயில் சார்ந்த இடங்களை சொல்வார்கள்.

ஆனால், மூன்று நாட்கள் இங்கே இருந்ததில் என்னை கேட்டால், "மதுரையின் விசேஷம் அதன் மக்கள் என்பேன்.

விமானத்தில் எதேச்சையாக சந்தித்த மதுரைக்கார பெண் நான் தனியாக செல்கிறேன், "ஓலா", "ஊபர்" தான் அழைக்க வேண்டும் என்று தெரிந்ததும் "அய்யோ அதெல்லாம் வேண்டாம் நான் உங்களை விட்டு செல்கிறேன்" என்றார். ஒரு Formalityக்காக சொல்கிறார் என்று நான் "இல்லை வேண்டாம் என மறுத்தாலும் கேட்காமல் தன ட்ரைவரை மதுரை சிட்டியின் இந்த மூலைக்கு வண்டியை விடச்சொல்லி என்னை விட்டு விட்டு, பிறகு தன் வீடிருக்கும் அந்த மூலைக்கு சென்றார்.

வழி தெரியாமல் பைக்கில் போகும் ஒருவரிடம் வழி கேட்டால், "அதோ அது அந்த ரோடு பொய் உள்ள இன்னொரு ரோட்டுக்குள்ள போகணும் " என சொல்லிவிட்டு பின் உடனே, "இருங்க நானே வந்து காமிக்கிறேன்" என்று தன் வண்டியை திருப்பி கொண்டு உள்ரோடு வரை கூடவே பயணித்து வழி காட்டிவிட்டு செல்கிறார்.

மீனாட்சி அம்மன் கோயில் வெளியே ஒரு குடிநீர் குழாயில் தண்ணீர் குடிக்க நின்றேன். எனக்கு முன்னே ஒரு வயதான தம்பதியினர் குடித்து கொண்டிருந்தனர். தோற்றத்தில் மிக வறியவர்களாக மிக எளிமையாக தெரிந்தனர். அந்த கணவர் தான் தண்ணீர் குடித்துவிட்டு, தன மனைவிக்கு பிடித்து கொடுத்துவிட்டு, பிறகு திரும்பவும் அந்த டம்ளர் நிறைய பிடித்தார். கடுமையான தாகம் போலிருக்கிறது என்று நான் மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே, சற்றும் எதிர்பாராமல் என் பக்கம் திரும்பி என்னிடம் அதை கொடுத்து விட்டு "குடி தாயி" என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார். அவருக்கு இருந்த மனக்கவலைகளில் நான் பக்கத்தில் நின்றிருந்ததை அவர் கவனித்தததே மிக பெரிய விஷயம். அதில் இத்தனை பரிவு வேறு!

இங்கே நான் குறிப்பிட்டது இந்த மூன்று மட்டுமே. இன்னும் பல சந்திப்புகள், விருந்தோம்பல்கலாய் என்னால் இங்கே எழுதமுடியவில்லை. ஒவ்வொன்றும் உளம் நெகிழ செய்கின்றன.

உண்மையில் மதுரை மக்கள் எல்லோரும் இப்படி தானா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் பார்த்த ஊர்களில், இரண்டே நாட்களில் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இத்தனை பரிவை, அக்கறையை ஈரத்தை, இவ்வளவு குறுகிய காலத்தில் அடுக்கடுக்காக நான் வேறு எங்கேயும் எதிர்கொள்ளவில்லை.

என்னை பொறுத்தவரை மதுரையின் விசேஷம் அதன் மக்களே!!

Article by:

#மதுரை

20/10/2022

Hi,

Can Anybody share about Pazhamudircholai Sasti festival Invitation...
Like to know ""Kangana Kayir kattum"" time

      #மதுரை
04/05/2022

#மதுரை

20/04/2022
Madurai Chithirai Peruvizha 5th Day
10/04/2022

Madurai Chithirai Peruvizha 5th Day

தங்க குதிரையில் மீனாட்சியும்...🙏பல வருடம் கழித்து முகலாயர் கிரீடம் அணிந்திருக்கிறார் சொக்கநாதர்....முகலாயர் கிரீடம்பச்சை...
10/04/2022

தங்க குதிரையில் மீனாட்சியும்...🙏
பல வருடம் கழித்து முகலாயர் கிரீடம் அணிந்திருக்கிறார் சொக்கநாதர்....

முகலாயர் கிரீடம்

பச்சை நிற வைர கல்,
சிகப்பு நிற வைர கல்,
வெள்ளை நிற வைர கல் மற்றும் சிகப்பு வெள்ளை முத்துக்கலான கிரீடம் மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து இன்று அணிவிக்கப்பட்டது....

Photo credit :Sira photography

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை பெருவிழா 2022 - நான்காம் திருநாள் காலை - சுவாமி அம்பாள் தங்க பல்லக்கு - பாவக்காய் ...
08/04/2022

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை பெருவிழா 2022 - நான்காம் திருநாள் காலை - சுவாமி அம்பாள் தங்க பல்லக்கு - பாவக்காய் மண்டபம் எழுந்தருளல்.

07/04/2022

Chithirirai Thiruvizha 2nd day

#மதுரை #சித்திரைபெருவிழா

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நாள் திருவிழாவாக இன்று காலை 10.30 மணி முதல்10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்...
05/04/2022

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நாள் திருவிழாவாக இன்று காலை 10.30 மணி முதல்10.54 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் மற்றும் வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலுக்குள் குலசேகர மண்டகப்படியில் ஏழுந்தருளுதல்‌ மாலை 7 மணியளவில் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர்

#மதுரை #சித்திரைபெருவிழா

17/03/2022

22/01/2022

இன்று நடந்த மதுரையை பற்றிய நிகழ்வு :

தமிழக முதல்வர் இன்று மதுரைக்கு தேவையான அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளர்

1. மதுரை மத்திய சிறை சாலை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல படுகிறது. அப்பகுதியில் பெரிய பூங்கா வருகிறது

2 .இன்னும் 2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என்ற அறிவிப்பு

3.மதுரை நகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்பட்டுள்ளது .இதற்கென 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

4.மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் 500 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த படும் என்று அறிவிப்பு

5. அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் 28 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும்

6.மதுரையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள் புறநகர்க்கு மாற்றம் செய்யப்படும் போக்குவரத்து செரிசல் சற்று குறையும்.

7. மேலக்கால் சாலை அகலப்படுத்த படும்

மேம்பாலங்கள் :
8. விரகனூர் சந்திப்பு , அப்போலோ மருத்துவமனை சந்திப்பு( மேலமடை) , மண்டேலா நகர் சந்திப்பு , ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு

9.. மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்

10. உலகில் இருந்து வரும் மக்களை கவர கூடிய வகையில் அலங்காநல்லூர் பகுதியில் மாபெரும் நவீன அரங்கம் அமைக்க பட உள்ளது.

உங்கள் கருத்து? #மதுரை

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Mamadurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mamadurai:

Share