Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோவில்

  • Home
  • India
  • Madurai
  • Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோவில்

Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோவில் The Meenakshi temple is located in the heart of historic Madurai city, about a kilometer south of th

==============🙏🙏மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா 2024 🙏🙏🙏==============ஏப்.,12-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்.சித...
06/04/2024

==============
🙏🙏மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா 2024 🙏🙏🙏
==============
ஏப்.,12-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்.

சித்திரை திருவிழாவால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.அன்று மாலை கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

3-ம் நாள் (14-ந்தேதி) காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

5-ம் நாள் 16-ந் தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்புகிறார்கள்.

6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது.

7-ம் நாளான 18-ந் தேதி காலை தங்கசப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

20-ந் தேதி காலை மரவர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

22-ந்தேதி காலை திருத்தோரோட்டம் நடக்கிறது. 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 5 கோபுரங்களுக்கு செப்.4ல் பாலாலயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த 4-ந...
31/08/2023

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
5 கோபுரங்களுக்கு செப்.4ல் பாலாலயம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த 4-ந்தேதி பாலாலயம். கோவில் மாநகரமாக போற்றப்படும் மதுரையின் அடையாளமாக திகழ்வது மீனாட்சி அம்மன் கோவில். ஆண்டின் அனைத்து மாதங் களிலும் பல்வேறு திரு–விழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் கள், வெளிநாடுகளில் இருந் தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷே–கம் நடத்தப்படும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு–கள் செய்யப்பட்டு வருகின் றன.இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம் மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் வருகிற 4-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவி–லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதி–யில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடை–பெறுகிறது. இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவி–லில் ரூ.25 கோடியில் திருப் பணிகள் நடத்தவும், வீர–வசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத் தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப் படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும்.

😍மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்கு ரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜ–கோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெறும். 4-ந்தேதி காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக் குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண் டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, 😍மகா பூர் ணாஹூதி, தீபாராதனையு–டன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்த–ரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கோவில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், கண்காணிப் பாளர் பானுமதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

😍🙏குழந்தைகள் வடிவில் மதுரை மீனாட்சி 🙏😍
02/05/2023

😍🙏குழந்தைகள் வடிவில் மதுரை மீனாட்சி 🙏😍

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் 😍🥰😍-----------------...
13/02/2023

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் 😍🥰😍
-------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 முதல் மே 8 வரை நடை பெறும்..

ஏப்ரல் 23, 2023– ஞாயிறுக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 24, 2023 – திங்கள்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 25, 2023- செவ்வாய்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 26, 2023 – புதன்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 27, 2023– வியாழக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 28, 2023– வெள்ளிக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 29, 2023– சனிக்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 30, 2023– ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

மே 01, 2023– திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

மே 02, 2023– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

மே 03, 2023– புதன்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

மே 04, 2023 – வியாழக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை. இரவு - தல்லாகுளத்தில் எதிர் சேவை

மே 05, 2023 – வெள்ளிக்கிழமை - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா 2022🙏🙏🙏==========மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆவணி ...
11/08/2022

🙏🙏🙏மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா 2022🙏🙏🙏
==========

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

விழாவில் 23-ந் தேதி காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அன்றைய தினத்தில் இருந்து 28-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகர் சுவாமி வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் 29-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 30-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 31-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது. 4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 9-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

🙏🙏🙏
01/08/2022

🙏🙏🙏

😍Celestial Wedding - Ticket Registration 😍😍😍மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நேரில் தரிசிக்க முன்பதிவு அவசியம் பக்தர்களே!!😍...
06/04/2022

😍Celestial Wedding - Ticket Registration 😍

😍😍மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நேரில் தரிசிக்க முன்பதிவு அவசியம் பக்தர்களே!!😍😍

https://maduraimeenakshi.org/celestial/TicketBooking.php
மேல உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளவும்...

😍😍2022 சித்திரை திருவிழா இனிதே தொடங்கியது!!😍😍 #சித்திரைத்திருவிழா    #மீனாட்சி  #சுந்தரேஸ்வரர்  #அழகர்  #கள்ளழகர்
05/04/2022

😍😍2022 சித்திரை திருவிழா இனிதே தொடங்கியது!!😍😍

#சித்திரைத்திருவிழா #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் #அழகர் #கள்ளழகர்

🔥💥 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி!! 🔥💥========🔥💥 சித்திரை திருவிழா 2022!...
09/03/2022

🔥💥 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி!! 🔥💥
========
🔥💥 சித்திரை திருவிழா 2022!! 🔥💥
========
🔥💥 ஏப்ரல் 14, 2022 – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 🔥💥

🔥💥 ஏப்ரல் 16, 2022 – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல்🔥💥

ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்

ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

மதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயிலின் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள்

ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.

ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..

அனைவரும் மாமதுரை வருக!!
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வார், கள்ளழகரின் அருள் பெருக!!

மீனாட்சி அம்மன் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி அறிவிப்பு வாபஸ் (12-12-2021)🤓🥱===========உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம...
11/12/2021

மீனாட்சி அம்மன் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி அறிவிப்பு வாபஸ் (12-12-2021)🤓🥱
===========
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் டிச.,13ம் தேதி முதல் , இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மதுரை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். நாளை முதல் வழக்கம் போல், தரிசனம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளார்.

மதுரை 🙏🙏மீனாட்சி கோவிலில்🙏🙏 தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி!!💉💉🩺🩺 (11-12-2021)
===========
டிசம்பர் 13ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கொரோனா நோய் தொற்றின் 3ஆவது அலை தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் திருக்கோயிலின் 🧐நான்கு கோபுர வாசல்களிலும்🧐 கீழ்க்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1) கோவிட் தடுப்பூசி🩺💉 சான்றிதழ் நகல் வைத்திருப்பது.

2) கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்.

3) பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது

4) Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்.

5) கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது

என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

🙏 நவராத்திரி முதல் நாள் 2021 🙏--------------------------🙏🙏🙏 மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் - இராஜராஜேஸ்வரி திருக்கோலம் 🙏🙏🙏
07/10/2021

🙏 நவராத்திரி முதல் நாள் 2021 🙏
--------------------------
🙏🙏🙏 மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் - இராஜராஜேஸ்வரி திருக்கோலம் 🙏🙏🙏

 #20-08-2021 #மதுரை அருள்மிகு  #மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில்  #ஆவணித்திருவிழா 2021  #10ம்  திருநாள் #அன்னை  #மீனா...
20/08/2021

#20-08-2021

#மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில்

#ஆவணித்திருவிழா 2021 #10ம் திருநாள்

#அன்னை #மீனாட்சியுடன்_திவ்ய_தரிசனம் தங்கசப்பரத்தில் திருவீதியுலா.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category