ஆகமம் அறிவோம்

ஆகமம் அறிவோம் சிவநெறிக் கல்விக் கழகம்

கோயிலைக் காப்போம். நாட்டைக் காப்போம்.
25/05/2026

கோயிலைக் காப்போம். நாட்டைக் காப்போம்.

முஹூர்த்த நிர்ணயம் ப்ரஹ்மஸ்ரீ Dr. ஸே. அருணஸுந்தரகுருக்கள், திருமயிலை.
21/01/2026

முஹூர்த்த நிர்ணயம்

ப்ரஹ்மஸ்ரீ Dr. ஸே. அருணஸுந்தரகுருக்கள், திருமயிலை.

*சைவ ஆகமங்கள் (சில கேள்விகளும் - பதில்களும்)* எனும் நூலிலிருந்து.
22/12/2025

*சைவ ஆகமங்கள் (சில கேள்விகளும் - பதில்களும்)* எனும் நூலிலிருந்து.

சைவர்கள் விபூதி தரித்துக்கொள்ளாமல் தர்பணம் செய்யலாமா?சைவர்கள் விபூதியின்றி ஒரு கணம் கூட இருக்கக்கூடாது.
12/09/2025

சைவர்கள் விபூதி தரித்துக்கொள்ளாமல் தர்பணம் செய்யலாமா?

சைவர்கள் விபூதியின்றி ஒரு கணம் கூட இருக்கக்கூடாது.

சிவ ஆகம நெறிகளை மீறுபவர்களுக்கு சிவபெருமான் தாமே சண்டேச்வரர் வடிவம் தாங்கி தண்டனை தந்து அருளுகிறார்.
11/09/2025

சிவ ஆகம நெறிகளை மீறுபவர்களுக்கு சிவபெருமான் தாமே சண்டேச்வரர் வடிவம் தாங்கி தண்டனை தந்து அருளுகிறார்.

ஆகமங்கள் எப்பொழுது? யாரால்? எதற்காக? யார்பொருட்டு? தோற்றுவிக்கப்பட்டன.
20/06/2025

ஆகமங்கள் எப்பொழுது? யாரால்? எதற்காக? யார்பொருட்டு? தோற்றுவிக்கப்பட்டன.

சைவத்திருக்கோயில் தொடர்பான எந்த விஷயத்தையும் ஆராய்வதற்கு நாம் சைவசமய நூல்களையே நாடவேண்டும். அவ்வகையில் இன்று 2016 விவாதப...
15/06/2025

சைவத்திருக்கோயில் தொடர்பான எந்த விஷயத்தையும் ஆராய்வதற்கு நாம் சைவசமய நூல்களையே நாடவேண்டும். அவ்வகையில் இன்று 2016 விவாதப் பொருளாகியுள்ள “ஆடை கட்டுப்பாடு தொடர்பாக” சைவசமய நூல்கள் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.

சைவசமயத்திற்கான முதன்மையான நூல்கள் சிவாகமங்கள். அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை பத்ததிகள். இவையிரண்டும் மூலச் சட்டமும், நடைமுறைச் சட்டமும் போன்றவை. இக்கருத்ததை திருச்செந்தூர் திருக்கோயில் யாகசாலை தொடர்பான வழக்கில் மாண்பமை உயர்நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிடுகிறது.

“If Agamas could be equated to statutes, Paddhatis could be compared to the rules of practice. Therefore both have not only sanctity but also the force of law and authority, in so far as rituals in Hindu temples are concerned. But if Paddhatis contain any prescription that would militate against a rule enunciated in the Agamas, the scholars opine that the Agamas will prevail over the Paddhatis. This is based upon the theory of hierarchy of laws, which appear to have reached an advanced stage here in India, centuries before Kelson could formulate it”

மேற்கூறிய இருவகை நூல்களுள் “ஸகலாகம ஸார ஸங்க்ரஹம்” மற்றும் சிவார்ச்சனா சந்த்ரிகா எனும் இருநூல்களும் இரண்டாவது வகையைச் சார்ந்தவை.

இவ்விருநூல்களிலும் திருக்கோயில் வழிபாடு தொடர்பான பகுதி அமைந்துள்ளது.

ஸகலாகம ஸார ஸங்க்ரஹத்தில், சிவாலய தர்சன விதி என்ற பகுதியில்,

வஸ்த்ரேணாச்சாத்ய தேஹம் ஸ்வம் யோ நர:ப்ரணமேத்து மாம் |
த்ரிஜன்ம ஜாயதே மூக: ஸப்தஜன்மஸு நிர்தன: ||

இ.பொ: எந்த மனிதன் என்னை(சிவபெருமானை) தேஹம் (மேலுடம்பை) வஸ்த்ரத்தால் மூடிக்கொண்டு வழிபடுகிறானோ, அவன், மூன்று பிறவிகளில் வாய்பேச இயலாதவனாகவும், ஏழுபிறவிகளில் பணமற்றவனாகவும் பிறப்பான். என்றும்,

தைலாப்யங்கம் க்ருதாப்யங்கம் சிரஸோ வேஷ்டனம் ததா |
கஞ்சுகாவரணம் சாபி வர்ஜயேச்சிவ மந்திரே ||
உபாநதாதபத்ராதிரஹித: க்ஷமயாந்வித: ||

இ.பொ: திருக்கோயிலில் எண்ணை தேய்த்துக்கொள்ளுதல், நெய் தேத்துக் கொள்ளுதல், தலைப்பாகை(தொப்பி, க்ரீடம்), சட்டை, காலணி ஆகியவற்றை அணிதல், குடை எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்த்து, பொறுமையோடு செல்ல வேண்டும்.

- 184-185, ஸகலாகம ஸார ஸங்க்ரஹம், மயிலை அழகப்ப முதலியார், கலி-5012, மூன்றாம் பதிப்பு.

சிவார்ச்சனா சந்த்ரிகையில், பரார்த்தாலய தர்சன விதி என்ற பகுதியில்,

அபராதா⁴ஶ்ச, ஶிவாலயமத்⁴யே வாஹநாரோஹண ஸோபாநஹ-ஸஞ்சார கோ³புர-ப்ரதிமாச்சா²யாலங்க⁴ந நிர்மால்யஸ்பர்ஶ தல்லங்க⁴ந ஶிவப³லிபீட²மத்⁴ய ஸஞ்சார ப்ரமாதா³ஸ்பர்ஶ ராக³பூர்வகதத்³வீக்ஷண வ்ருʼதா²ஹாஸ கா³நபா⁴ஷண ஸோத்தரீயப்ரத³க்ஷிணநமஸ்கார ஏகஹஸ்தநமஸ்கார வாமபா⁴கா³தி³ நமஸ்கார ப்ரப்⁴ருʼதய꞉ । ஏதேஷு ஸம்பா⁴விதான் வர்ஜநீயான் அபராதா⁴ன் க்ஷமாப்ய நிர்க³ச்சே²த்।

இ.பொ. (சிவாலயத்தில் நேரக்கூடிய) அபராதங்கள் வருமாறு:-

1. ஆலயத்துக்குள் வாகனத்தில் ஏறிச்செல்லல்,
2. பாதரக்ஷையுடன் ஸஞ்சரித்தல்,
3. கோபுரப் பிரதிமையின் நிழலைத் தாண்டுதல்,
4. நிருமால்யத்தைத் தீண்டுதல் - தாண்டுதல்,
5. சிவபெருமானுக்கும் பலிபீடத்துக்கும் நடுவே செல்லுதல்,
6. பெண்களைத் தீண்டுதல், அவர்களை ஆசையுடன் உற்றுப்பார்த்தல்,
7. பயனின்றிச் சிரித்தல்,
8. கானம் செய்தல்,
9. பயனில்லாத வார்த்தைகளைப் பேசுதல்,
10. உத்தரீயத்துடன் ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்தல்,
11. ஒரு கையால் நமஸ்கரித்தல்,
12. இடது பக்கத்தில் நமஸ்கரித்தல்,
13. அகாலத்தில் நமஸ்கரித்தல் முதலியன.

இவ்வபராதங்களைப் பொறுத்தருளும்படி சிவபெருமானிடம் பிரார்த்தித்துக்கொண்டு வெளியில் செல்லல் வேண்டும். (பக். 195)

- சிவார்ச்சனா சந்த்ரிகா, அப்பைய தீக்ஷிதர், சைவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், 1922.

இவற்றைத் தவிர யாழ்ப்பாணம் ஶ்ரீ-ல-ஶ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் எழுதிய சைவவினா விடை என்ற நூலிலும் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

(இந்நூலே திருக்கோயில் செயல்அலுவலர் / நிர்வாக அதிகாரி பணிக்கான பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது)

திருக்கோயிலிலே செய்யத்தகாத குற்றங்கள் யாவை?

1. ஆசாரமில்லாது போதல்,
2. கால் கழுவாது போதல்,
3. எச்சில் உமிழ்தல்=துப்புதல்,
4. மலசலங்கழித்தல் = சிறுநீர்-மனம் கழித்தல், மூக்குநீர் சிந்துதல்,
5. பாக்கு வெற்றிலையுண்டல்,
6. போசன பானம் பண்ணுதல் = உணவு அருந்துதல் நீர் அருந்துதல்,
7. ஆசனத்திருத்தல் = நாற்காலி போன்றவற்றில் அமருதல்,
8. சயனித்தல் = தூங்குதல்,
9. காலை நீட்டித் கொண்டிருத்தல்,
10. மயிர் கோதி முடித்தல்,
11. சூதாடல்,
12. சிரசிலே வஸ்த்ரம் தரித்துக் கொள்ளுதல் - தலைப்பாகை, தொப்பி அணிதல்,
13. தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளுதல் = கழுத்தில் துண்டு அணிதல்,
14. போர்த்துக் கொள்ளுதல் = உடம்பை துண்டால் மூடிக்கொள்ளுதல்,
15. சட்டையிட்டுக் கொள்ளுதல்,
16. பாதரக்ஷையிட்டுக் கொள்ளுதல் = செருப்பு அணிதல்,
17. விக்கிரஹத்தைத் தொடுதல்,
18. நிருமாலியத்தைக் கடத்தல் சுவாமி ஸந்நிதி, மண்டபம், வாஹனம், நகைகள், மாலைகள், பூக்கள், நைவேத்யப் பொருள்கள் ஆகிய நிருமாலியத்தை மிதித்தல்,
19. தூபி = ஸ்தூபி, துசத்தம்பம் = கொடிமரம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல்,
20. வீண்வார்த்தை பேசுதல்,
21. சிரித்தல்,
22. சண்டையிடுதல்,
23. விளையாடுதல்,
24. சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல்,
25. ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல்,
26. ஒரு தரம் இரு தரம் வலம் வருதல்,
27. ஓடி வலம் வருதல்,
28. சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல்,
29. அகாலத்திலே தரிசிக்கப் போதல்,
30. திரை விட்ட பின் வணங்குதல்,
31. அபிஷேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல்,
32. முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் வணங்குதல்,
33. திருவிளக்கு அவியக் கண்டும் தூண்டாதொழிதல்,
34. திருவிளக்கில்லாத பொழுது வணங்குதல்,
35. உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கேயன்றி உள்ளே (சன்னிதியில்) போய் வணங்குதல் முதலியவைகளாம்.

இக்குற்றங்களுள் ஒன்றை யறியாது செய்தவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும்.

இக்குற்றங்களை அறிந்து செய்தவர் வீழ்ந்து வருந்துவர்.

இக்குற்றங்களுள் ஒன்றை அறியாது செய்தவர் அகோரமந்த்ரத்தில் ஆயிரம் உருச் செபிக்ககின் அக்குற்றம் நீங்கும்.

இக்குற்றங்களை அறிந்து செய்பவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

- பக். 80-81, சைவ வினா விடை, ஆறுமுக நாவலர், 1873, 28ஆம் பதிப்பு 2003.

திருவாவடுதுறை ஆதீனத் தமிழ் வித்வான், தமிழ்தாத்தா டாக்டர். உ. வே சுவாமிநாத ஐயர் அவர்களின் குருநாதர், த.ச. மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளை அவர்கள், மயிலாடுதுறைத் தலபுராணத்தில், சிவாலய தரிசன விதி படலத்தில், சிதம்பரம், கண்கட்டி மறைஞானசம்பந்தர் அவர்களுடைய திருக்கோயிற் குற்றம் என்ற நூலில் இருந்து இரண்டு பாடல்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.

“திருக்கோயில் தன்னில் மலஜலம் விடுதல், உமிழ்தல்,
திருவிளக்குச் சாயை - லிங்கச் சாயை கடத்தல்,
ஒருக்காலாய் வலம் வருதல், ஓடி வலம் வருதல்,
ஒண்டொடிவேசியர்ப்புணர்தல், உற்றவரை நினைத்தல்,
மருக்கமழ் நின்மாலியத்தைச், சிவன்றனை, கோமுகையை
வழிகடத்தல், ஆடையின்றி மருவுதல், கான்று உமிழ்தல்,
பெருக்கநீறணியாமை, பெலிப்பற்று மிதித்தல்,
பெலிபீடம் குறுக்கிடுதல், பெருமான் சந்நிதியில்
ஏறுடனே தூபி-துசதண்டு-பலிபீடம்
இலங்குமிவை சாயை மிதித்தேகுதல், பொய்ம்மொழிதல்,
பேறிழவே யசுசி, பிறர் தாரத்தை விரும்பல்,
பெரும்புனலால் இருபாதங்கழுவாமை, சயனம்,
தேறுபாகிலைதினல், தம்பல முமிழ்தல், திருடல்,
திருக்கோயில் நியமத்தைச் செய்தவத்தோர் தங்கட்கு
ஆறணியும் சடைமுடியார் ஆகமத்தில் சொலுமிவ்-
ஆறைந்தோடு இரண்டுகுற்றம் ஆகா வன்றே.

இ.பொ:-

1. மலங்கழித்தல்,
2. ⁠சலங் கழித்தல்,
3. ⁠எச்சிலுமிழ்தல்,
4. ⁠தீபநிழல்,
5. ⁠சிவலிங்க நிழல்களைக் கடத்தல்,
6. ⁠ஒரு தரம்,
7. ⁠இரு தரம் வலம் வருதல்,
8. ⁠ஓடி வலம் வருதல்,
9. ⁠வேசை முதலியோரைப் புணர்தல்,
10. ⁠அவரை நினைதல்,
11. ⁠நிர்மாலியத்தை கடத்தல்,
12. ⁠சிவலிங்கத்தைத் தாண்டல்
13. ⁠கோமுகையைக் கடத்தல்,
14. ⁠ஆடையின்றிப் போதல்,
15. ⁠காறிச் சளியுமிழ்தல்,
16. ⁠விபூதி தரியாமை
17. ⁠பலியன்ன மிதித்தல்,
18. ⁠சிவலிங்கத்துக்கும்
19. ⁠பலிபீடத்துக்கும் குறுக்கேபோதல்,
20. ⁠இடப தேவர்
21. ⁠தூபி
22. ⁠துசத்தம்பம்,
23. ⁠பலிபீடம்,
24. ⁠சிவலிங்கம் என்னும் இவற்றின் நிழல்களை மிதித்தல் பிரசவித்தல்,
25. ⁠இறத்தல்,
26. ⁠சுத்தமில்லாதிருத்தல்,
27. ⁠பிறர் மனைவியரை விரும்புதல்,
28. ⁠கால் கழுவாமை,
29. ⁠நித்திரை செய்தல்,
30. ⁠வெற்றிலை பாக்கு தின்னுதல்,
31. ⁠வெற்றிலைத் தம்பூலம் உமிழ்தல்,
32. ⁠களவெடுத்தல் என்னும் முப்பத்திரண்டும் பிறவுமாம்.

பக். 15, சிவாலய தரிசன விதி படலம், மாயூர புராணம், த.ச. மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, 1868. மீள்பதிப்பு-2002

'ப்ரதி-ஸம்ஹிதா-க்ரமம்'  என்றால் என்ன? श्रीमन्-मकुटतन्त्रे, तन्त्रावतारपटले - श्रोतारः शिवभेदानां पारम्पर्यास्त्रयस्त्रयः...
21/03/2025

'ப்ரதி-ஸம்ஹிதா-க்ரமம்' என்றால் என்ன?

श्रीमन्-मकुटतन्त्रे, तन्त्रावतारपटले -
श्रोतारः शिवभेदानां पारम्पर्यास्त्रयस्त्रयः ॥ ३२आ
द्वौ द्वौ तु रुद्रभेदानां षष्टिरुक्ता षडुत्तरा । ३३अ

ஶ்ரீமத் மகுடாகமத்தின் தந்த்ராவதாரபடலத்தில் -

ஶ்ரோதார꞉ ஶிவபே⁴தா³நாம்ʼ பாரம்பர்யாஸ்த்ரயஸ்த்ரய꞉ ॥ 33B
த்³வௌ த்³வௌ து ருத்³ரபே⁴தா³நாம்ʼ ஷஷ்டிருக்தா ஷடு³த்தரா । 33A

ஸித்தாந்த சைவாகமங்கள் 28. அவற்றுள் முதல் பத்து ஆகமங்கள் சிவபேதமாகும். அடுத்த பதினெட்டு ஆகமங்களும் ருத்ரபேதமாகும். சிவபேத ஆகமங்களைக் கேட்டவர்கள் ஒரு ஆகமத்திற்கு 3 பேர் வீதம் 30 நபர்கள். ருத்ரபேத ஆகமங்களைக் கேட்டவர்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு நபர்கள் வீதம் 36 நபர்கள். மொத்தம் அறுபத்தாறு நபர்கள் ஆகம உபதேசம் பெற்றனர். இவ் உபதேச முறைக்கு “ப்ரதி-ஸம்ஹிதா-க்ரமம்” என்று பெயர்.

ஆத்மார்த்த-சிவபூஜையை மட்டும் தனியாக விளக்கும் வடமொழி நூல்கள்.1. பஞ்சாவரணஸ்தவம் – ஸ்ரீமத் அகோரசிவாசார்யார் (பொ.யு. 1158 -...
17/03/2025

ஆத்மார்த்த-சிவபூஜையை மட்டும் தனியாக விளக்கும் வடமொழி நூல்கள்.

1. பஞ்சாவரணஸ்தவம் – ஸ்ரீமத் அகோரசிவாசார்யார் (பொ.யு. 1158 - 12ஆம் நூற்றாண்டு) இந்நூல் 102 ச்லோகங்களைக் கொண்டது.
2. சிவபூஜா ஸ்தவம் – ஸ்ரீமத் ஞான(சம்பு)சிவாசார்யார் (12ஆம் நூற்றாண்டு) இந்நூல் 47 ச்லோகங்களைக் கொண்டது.
3. த்யானரத்னாவளி – ஸ்ரீமத் த்ரிலோசன சிவாசார்யார் (12ஆம் நூற்றாண்டு) இந்நூல் 203 ச்லோகங்களைக் கொண்டது.
4. ஆத்மார்த்த பூஜா பத்ததி – ஸ்ரீமத் நிகமஞானதேசிகர் (16ஆம் நூற்றாண்டு) உரைநடை
5. சிவத்யான பத்ததி – ஸ்ரீமத் அப்பையதீக்ஷிதர் (16ஆம் நூற்றாண்டு) இந்நூல் 151 ச்லோகங்களைக் கொண்டது.
6. சிவார்ச்சனா சந்த்ரிகா - ஸ்ரீமத் அப்பையதீக்ஷிதர் (16ஆம் நூற்றாண்டு) உரைநடை
7. சம்புபுஷ்பாஞ்ஜலி – ஸ்ரீமத் ஸௌந்தரநாததேவர் (17ம் நூற்றாண்டு) செய்யுளும் உரைநடையும்.
8. சம்புபூஜா விதி – ஸ்ரீமத் சுப்ரமண்ய சிவாசார்யார் (18 ஆம் நூற்றாண்டு) இந்நூல் 251 ச்லோகங்களால் ஆனது.

இவை தவிர வேறு ஏதேனும் நூல்கள் உண்டெனில் தெரியப்படுத்தவும். மேற்கண்ட நூல்கள் மற்றும் அந்நூலாசிரியர்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் வரும் நாட்களில் காண்போம்.

16/03/2025

शिवधर्मोत्तरे -
व्याधीनां भेषजं यद्वत् प्रतिपक्षं स्वभावतः ।
तद्वत् संसारदोषाणां प्रतिपक्षः शिवः स्मृतः ॥

ஶிவத⁴ர்மோத்தரே -
வ்யாதீ⁴நாம்ʼ பே⁴ஷஜம்ʼ யத்³வத் ப்ரதிபக்ஷம்ʼ ஸ்வபா⁴வத꞉ ।
தத்³வத் ஸம்ʼஸாரதோ³ஷாணாம்ʼ ப்ரதிபக்ஷ꞉ ஶிவ꞉ ஸ்ம்ருʼத꞉ ॥

சிவதர்மோத்தரத்தில் -

எவ்வாறு இயற்கையாகவே வ்யாதிகளினுடைய எதிரியாக மருந்து உள்ளதோ, அதுபோலவே ஸம்ஸாரதோஷங்களின் எதிரியாக சிவபெருமான் சொல்லப்படுகிறார்.

- கொற்றவன்குடி ஶ்ரீமத் உமாபதி சிவாசார்யார் இயற்றிய சதரத்ன ஸங்க்ரஹம் என்ற நூலின் உரை.

Address

Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆகமம் அறிவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share