Suyambuangalamman

Suyambuangalamman Suyambu Sri Angalaparameshwari Sakthi Beedam.

அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம்

தேங்காயில் சுயம்புவாக தோன்றிய அன்னை அங்காள பரமேஸ்வரியின் வரலாறு

மூல சக்தி, முதல் சக்தி, ஆதார சக்தி தலைமைத் தாய் என்றும் போற்றப்படும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கேட்டார்க்கு கேட்ட வரமருளும் கலியுகக்த்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள்.
அத்தகைய மகா சக்தியான அன்னை சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடத்தில்

தேங்காயில் சுயம்புவாக தோன்றி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரமருளி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
இங்குள்ள அன்னையின் சுயம்புத்திருக்கோலம் வேரெங்கும் காணக்கிடைக்காத ஓர் அரிய காட்சியாகும்.

பக்தர்களின் மேல்மலையனூர் பயணம்

சக்தி பீடத்தின் பக்தர்கள் அன்னையின் மேல் கொண்டுள்ள மிகுந்த பக்தியின் காரணமாக, தங்களால் இயன்ற பொழுதெல்லாம் அன்னையை தரிசிக்க அன்னை குடிகொண்டுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வருவது வழக்கம்.

அன்னையின் திருவிளையாடல்

மும்மூர்த்திகளுக்கு முதல்வியாய், சிவபெருமானுக்கே உண்டான பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவள். ஈரெழு பதினான்கு லோகங்களையும் படைத்து, காத்து, அழித்து, அனைத்திற்கும் காரணியாகவும், பரிபூரணியாகவும் தன்னை வணங்கும் பக்தனுக்கு நித்யானந்தம் அருள்பவளாக, கருணையே வடிவான அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களை தேடி தானே செல்ல எண்ணம் கொண்டு திருவிளையாடல் புரியத் தொடங்கினாள்.

அன்னையின் அருள்வாக்கு

ஆலயத்திற்கு செல்லும் சக்தி பீட பக்தர்கள் ஆலயத்தில் தங்கி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம். அதன்படி இம்முறையும் அன்னைக்கு சிறப்பு பூஜை செய்வதற்குண்டான அனைத்து ஆயத்தப் பணிகளை அனைவரும் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஈடுபட்டிருந்தனர். பூக்கட்டுதல், சமையல் செய்ய காய்கரிகளை நருக்குதல், தண்ணீர் கொண்டு வருதல், சமையல் மற்றும் பூஜைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கசெல்லுதல் பாத்திரங்களைக் கழுவுதல் என அனைவரும் ஒவ்வொரு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அன்னைக்கு படையல் போடுவதற்குத் உண்டான அனைத்து அன்னமும் தயாரிக்கப்பட்டு கரகம் அலங்காரம் செய்து உடுக்கை பம்பை முழங்க பூஜை ஆரம்பமானது "அங்காளித் தாயே அருள்வாக்காய் வருபவளே ஆரணங்கே சொற்காரணி அண்டமெல்லாம் ஈன்றவளே பாவாடைராயன் காவல் கொண்ட மாகாளி மலையனூர் மகமாயி மனமிரங்கி வாருமம்மா" என்று அன்னை மாட்சிமை, புகழ், பிரதாபங்களை பூசாரிகள் உடுக்கை, பம்பை இசைத்து பாடி அன்னை பூஜையை ஏற்றுக்கொள்ள வரும்படி அழைத்தனர்.
பம்பையும் உடுக்கையும் உச்ச கதியில் முழங்க பக்தர்களின் எண்ணமெல்லாம் அன்னையிடம் ஒன்றிய வேளை, கூப்பிய கரங்களும் மூடிய விழிகளுமாய் தியான நிலைக்கு சென்று பக்தர்கள் மனதில் எங்கள் எண்ணமெல்லாம் நிறைந்தவளே மங்காத மணிவிளக்கே, தாயே தயாபரி எங்கள் பூஜையை ஏற்றுக்கொள் அம்மா என்று வேண்டிய வேளை.
அக்கூட்டத்திலிருந்து தன்னுடைய பாலகன் மீது அருளாக இரங்கி ஆனந்தம் கொண்டு ஆடினாள்
அப்பொழுது பக்தர்கள் கூட்டத்திலிருந்து ஓரு பெண்மணியை அழைத்து தனக்கு உடைப்பதற்காக வாங்கப்பட்ட இரண்டு தேங்காய்களில் ஒன்றை எடுத்து கண்களை மூடி தன் இரு திருக்கரத்தால் உடலோடு அனைத்து அதற்கு ஆவாவரன சக்தியை உண்டாக்கி அதை அந்த பெண்மணியிடத்தில் கொடுத்தாள்.


அன்னையின் திருக்கரத்தால் வழங்கப்பட்ட தேங்காயை வணங்கிப் பெற்றுக்கொண்டாள் அந்த பெண்மணி. அப்பொழுது அன்னை அப்பெண்மணியை நோக்கி "என்னுடைய ஆவாஹன சக்தியை இந்த தேங்காயில் நிரப்பியுள்ளேன் இதை உன் இல்லத்திற்கு எடுத்துச்சென்று வைத்து 1 மண்டலம்(48 நாட்கள்) சகல விதமான அபிஷேக ஆராதனைகளை செய்து வர வேண்டும். அவ்வாறு நீ செய்து வருகின்ற வேளையில் அருவம், உருவம், அருவுருவம் என்ற வண்ணம், பஞ்சபூதத்தின் தத்துவமாக இந்தத் தேங்காயில் நானே சுயம்புவாகத் தோன்றுவேன் என்று வாக்கிட்டு மறைந்தாள்.

தேங்காயில் சுயம்புவாகத் தோன்றுதல்

அன்னையிடம் பெற்ற திருத்தேங்காயை சகலவிதமான மரியாதையுடன் மயிலையில் உள்ள தனது இல்லத்திற்கு எடுத்து வந்து, அனைத்து பக்தர்கள் உதவியுடன் அன்னையை எழுந்தருளச்செய்தார்.
அனைத்து பக்தர்களின் பேராதரவுடன் பூஜைகள் தொடங்கி அத்தனை விதமான அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடந்த வண்ணம் இருந்தது. பக்தர்களின் பூஜையில் மன மகிழ்ந்த அன்னை அங்காள பரமேஸ்வரி மும்மூர்த்திகளும் தொழும் தேவி, சதாசிவனே காண ஏங்கும் அரியவள், கலனும் கலங்கும் காளி, உலக மக்களுக்கெல்லாம் மங்களத்தை அருளும் மங்கள சண்டி. தெய்வங்களெல்லாம் தெய்வம் என்று போற்றி வணங்கும் மகாசக்தி அன்னை அங்காள பரமேஸ்வரி தேங்காயில் சுயம்பு உருவாகத் தோன்றினாள்.

தனக்குரிய சக்கரத்தை உரைத்தல்

தேங்காயில் சுயம்புவாகத் தோன்றிய அன்னை தன்னுடைய பாலகன் மேல் அருளாக வந்து தனக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகளையும் சக்தி பீட பக்தர்களிடம் வாக்கிட்டாள்.
அன்னையின் வாக்கின்படி ஸ்ரீசக்கரம், மற்றும் தனாகர்ஷண யந்திரம் வரையப்பெற்று அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு நிறைவாக ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரங்கள் பஞ்ச பூதத்தில் வைத்து அன்னையால் ரகசியமாக உபதேசிக்கப்பட்ட சக்தி வாய்ந்த மூலமந்திரம் கொண்டு உருவேற்றப்பட்டது.

அன்னையை பீடத்தில் அமரச்செய்தல்

கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், துர்கா ஹோமம், சண்டி ஹொமம், போன்ற அனைத்து விதமான ஹோமங்களும் நாங்கு கால யாக பூஜையாக நடைபெற்றது.
மறுநாள் அதிகாலை கஜ பூஜை, கோ பூஜை, சுஹாசினி பூஜை, ஏழு கன்னி பூஜை (ஏழு புண்ணிய நதிகளை ஏழு கன்னிகளாக பாவித்து செய்யப்படும் பூஜை), லக்ஷ்மி குபேர பூஜை, என்று அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூதத்தில் வைத்து உருவேற்றப்பட்ட ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரம் அன்னையின் பீடத்தில் பதிக்கப்பட்டது.
அன்னையின் பிரதிஷ்டை, பூஜைக்காக பல புண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டது. அந்த புண்ணிய நீரை ஏழு கன்னி பெண்களை ஏழு புண்ணிய நதிகளாக பாவித்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு குடம் வீதம் ஏழு புனித நீர் நிரம்பிய குடங்கள் கொடுக்கப்பட்டது.
யாக சாலையில் வைக்கப்பட்ட அனைத்து கலசங்களிலிருந்த சக்தியூட்டப்பட்ட புனிதநீர் சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏழு கன்னி பெண்கள் ஏழு புண்ணிய தீர்த்தங்களின் சொரூபமாக அன்னைக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

அனைத்திற்கும் மூலமாகவும், முதல் தெய்வமாகவும், அண்டத்தின் இயக்கம் அத்தனைக்கும் ஆதாரமாகவும் தனக்கு மேலான தெய்வம் இல்லை என்ற நிலையில் "தலைமைத் தாய்" என்ற வண்ணம் ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரத்தை பீடமாகக் கொண்டு சுயம்புவாக அமர்ந்தாள்.
தேங்காயில் தானே சுயம்புவாக தோன்றியதால் தன்னுடைய திருநாமம் "ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேசஸ்வரி" என்றும் மேலும் தான் அமர்ந்த இந்த இடம் "ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம்" என்று அழைக்கப்படும் என்று வாக்கிட்டாள்.

அங்காள பரமேஸ்வரி அன்னையின் சிறப்பு

1. பஞ்சபூதங்களையும் தன்னுள் கொண்ட தேங்காயில் தோன்றியதால் இங்கு அன்னை பஞ்சபூதங்களின் தத்துவமாக விளங்குகிறள். அன்னையின் தரிசனம் பஞ்சபூதங்களினால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து காக்கும்.
2. அருவம், உருவம், அருவுருவம் என்ற வண்ணம் அருள்வதால் போகியர்க்கு போகமும், யோகியர்க்கு யோகமும், சித்தியை நாடுபவர்களுக்கு சித்தியும் அளிக்க வல்லவள்.
3. ஸ்ரீசக்கரம் மற்றும் தனாகர்ஷண யந்திரத்தை பீடமாக கொண்டு அமர்ந்துள்ளதால் சகலவிதமான செல்வங்களையும், குறையில்லாத வாழ்வும் அருள்வாள்.
4. அன்னையின் வலது கண் லக்ஷ்மி சொரூபமாகவும் இடது கண் சரஸ்வதி சொரூபமாகவும் விளங்குவதால் லக்ஷ்மி கடாட்சமும் சரஸ்வதி கடாட்சமும் தன்னுடைய கடைக்கண் பார்வையிலேயே தன்னுடைய பக்தனுக்கு கிடைக்கச் செய்யும் அம்பிகை.
5. அங்கத்தில் காளனைக் கொண்டதால் அங்காளம்மன் எனப் பெயர் பெற்றாள். அங்கமெல்லாம் லிங்கம் கொண்டதால் அவள் அங்காளம்மன், முக்கண் உடையவள், விஷ்ணுவின் மாயா ரூபிணி, பிரம்ம சொரூபிணி இப்படி அன்னை மும்மூர்த்திகளின் வடிவாக விளங்குகிறாள். அன்னையின் தரிசனம் மும்மூர்த்திகளளின் முதலான அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் உண்டாகும்
6. மந்திரத்தின் தலைவியாக அன்னை விளங்குவதால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மந்திர சித்தி விரைவில் அருளும் ஆற்றல் படைத்தவள்.
7. பில்லி சூன்யம், ஏவல், வைப்பு, பேய், பிசாசு, போன்ற தீவினைகள் அன்னையின் பெயரை கேட்டாலே ஓடிவிடும்.
8. அன்னை தன்னுடைய அவதாரத்தில் மருத்துவச்சியாக (மருத்துவம் பார்க்கும் பெண்) வேடம் பூண்டு வந்ததால் தன்னை நாடி வரும் பக்தர்களின் தீராத நோய்க்கு மருத்துவராகவும் விளங்குகிறார்
9. சிவபெருமானுக்கு உண்டான பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கியவள் அன்னை. எனவே அவளை வணங்கும் பக்தர்கள் பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவர்.
10. அன்னை நாக சொரூபமாக, நவகிரக நாயகியாக விளங்குவதால் நாக தோஷமும், நவகிரக தோஷமும் மற்றும் சகலவிதமான தோஷங்களும், சகலவிதமான சாபங்களும் நீங்கப்பெற்று நன்மை அடைவர்.

https://youtu.be/8WeQzEq3q7A?si=bG139a8sPTq6ND6Y
08/10/2024

https://youtu.be/8WeQzEq3q7A?si=bG139a8sPTq6ND6Y

அம்மா தன் பொற்கரங்களால் கலசம் நிறுத்துதல்நவராத்திரி மற்றும் பிரதிஷ்டா தின விழாவை முன்னிட்டு 02-10-24 புதன் அமாவாச....

இன்றைய தினம் நம்முடைய சக்தி பீடத்தில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விஷ்ணு சஹஸ்ரநாம  பாராயணம...
05/10/2024

இன்றைய தினம் நம்முடைய சக்தி பீடத்தில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் தளிகை பூஜை சிறப்பாக நடைபெற்றது.

அன்னை இன்று கிருஷ்ணமாரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்...

🪷 🪷 🪷 🪷 🪷 🪷

https://www.youtube.com/watch?v=_3K9lvaWFxE
05/10/2024

https://www.youtube.com/watch?v=_3K9lvaWFxE

பாடல்: மஹாசிவராத்திரிபாடியவர்:சக்தி சண்முகராஜா பாடலைஇயற்றியவர்:சக்தி சண்முகராஜா இசை:சக்தி சண்முகராஜாSong: Maha Shivaratr...

02/10/2024
அட்சரப்பியாசம் -  வித்யாரம்பம்நாள் : 12-10-24 நேரம் : 11 முதல்                                                          ...
29/09/2024

அட்சரப்பியாசம் - வித்யாரம்பம்
நாள் : 12-10-24 நேரம் : 11 முதல்
மாணவ மாணவியருக்கு கல்விக்கு உகந்த விஜயதசமியன்று வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தல் நிகழ்வு சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும் அன்னையின் அருட்பார்வைமுன் நடைபெறவுள்ளதால் உங்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்

குழந்தைளின் நாவில் தேன் தடவிய தங்க /வெள்ளி எழுதுகோல் கொண்டு 'ஓம்' என்னும் பிரணவம் எழுதி வித்யாரம்பம் செய்து வைக்கப்படும்.

பள்ளி , கல்லூரி அனைவரும் வித்யாரம்பம் குரு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம் வயது வரம்பில்லை

முன்பதிவு செய்து கொள்ளவும்

அன்னையின் பூஜையில் வைத்த பேனா , பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும்.

மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடம் பகவத்சிங் நகர் , மாதவரம், சென்னை -60 கை பேசி : 9940416474 / 7200726942 / 7200438241.

தீர்க்க சுமங்கலி வரம் தரும்    " 108  சுமங்கலி பூஜை "நாள் : 04.10.24 (வெள்ளிக்கிழமை)நேரம் : மாலை 6 மணிமுதல் லலிதா சகஸ்ரந...
29/09/2024

தீர்க்க சுமங்கலி வரம் தரும்
" 108 சுமங்கலி பூஜை "

நாள் : 04.10.24 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணிமுதல்

லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஸினி ' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.

சுவாஸினி என்று போற்றப்படும் அன்னைக்கு நவராத்திரி நாட்களிலும் செய்யப்படும் மிகவும் முக்கியமான பூஜை " சுமங்கலி பூஜை " ஆகும்.

சுமங்கலி பூஜை செய்வது மூலம் கணவனின் ஆயுட்காலம் நீடிப்பதன் மூலம் தங்களது மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது மட்டுமின்றி, வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி செல்வ செழிப்போடு வளமாக வாழ்வார்கள்.

வெளியூரில் உள்ள பக்தர்களுக்கு சங்கல்பம் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

காணிக்கை : ரூ . 501
பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் சக்திபீடத்தில் கொடுக்கப்படும்.

பூஜையின் நிறைவாக நம்முடைய குருஜி அவர்கள் அம்மாவின் அருளால் சௌபாக்கிய திரவியங்களை தந்து ஆசீர்வதிப்பார்கள்.

முன்பதிவிற்கு :
மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடம்
பகவத்சிங் நகர் , மாதவரம், சென்னை -60
கை பேசி : 9940416474 / 7200726942 / 7200438241.

Address

No 9 , BHAGAVATH SINGH NAGAR
Madavaram
600060

Alerts

Be the first to know and let us send you an email when Suyambuangalamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Suyambuangalamman:

Share