அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திரு அன்பில்.

  • Home
  • India
  • Lalgudi
  • அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திரு அன்பில்.

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திரு அன்பில். 108 திவ்ய தேசங்களில் ஐந்தாவது திவ்யதேசம், திருஅன்பில்.

தல வரலாறு:

ஒருமுறை படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு உலக உயிர்களின் அழகுக்குத் தாமே காரணம் என்ற அகந்தை பிறந்தது. பெருமாள் அறிவுரைத்தும் பிரம்மனுக்கு ஆணவம் அழியவில்லை. பூமியில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படிச் சபிக்கிறார் திருமால். பூமியில் தன் தவறுக்குக் பிராயச்சித்தம் தேடி பிரம்மன் ஒவ்வொரு தலமாக வழிபட்டு இங்கு வருகிறார்.

பேரழகு பொருந்திய மனிதர் ஒருவரைக் காண்கிறார். இவ்வளவு அழகுமிகுந்த ஒருவரை

க் கண்டதில்லை என்கிறார். அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டையும் பெற்றவர் சிறப்பான வாழ்வைப் பெறுவதில்லை என்ற உண்மையை உணர்த்தி அவருக்குப் பள்ளிகொண்ட கோலத்தில் எழிலான காட்சியை அருள்கிறார். பிரம்மன் ஆணவம் அழியப் பெறுகிறார். பிரம்மன் மீது அன்பு கொண்டு திருமால் காட்சிதந்ததால் இத்தலம் அன்பில் என அழைக்கப்படுகிறது.

தலபெருமை:

சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் – தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம், “உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய்,’ என்றார். அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.

அமர்ந்த நிலையில் ஆண்டாள்: முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.

மங்களாசாசனம்:

திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசுரம்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் '''பேரன்பில்''', - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான் (2417)
-திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதி

நேரலை செய்யப்பட்ட திருமஞ்சனம்!ஓம் நமோ நாராயணா!
10/08/2025

நேரலை செய்யப்பட்ட திருமஞ்சனம்!

ஓம் நமோ நாராயணா!

அன்பில் அருள்மிகு சுந்தரராஜ் திருக்கோயில்திருமஞ்சனம் சிறப்பு நேரலை Powered by Trend Loud Digital Website - https://tr...

ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம்!
02/08/2025

ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம்!

05/05/2025

🙏அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம்🙏 ஓம் நமோ நாராயணாய🙏

🙏மகா கும்பாபிஷேகம்🙏
19/04/2025

🙏மகா கும்பாபிஷேகம்🙏

வட திருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டு அருளும் சுந்தரராஜர்.
22/03/2025

வட திருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டு அருளும் சுந்தரராஜர்.

தீர்த்தவாரி பெருவிழா!
07/03/2025

தீர்த்தவாரி பெருவிழா!

🙏வைகுந்த ஏகாதசியில் அருளும் அன்பில் வடிவழகிய நம்பி மற்றும் கோவிலடி அப்பகுடத்தான்🙏எம்பெருமானே கோவிந்தா கோவிந்தா🙏
10/01/2025

🙏வைகுந்த ஏகாதசியில் அருளும் அன்பில் வடிவழகிய நம்பி மற்றும் கோவிலடி அப்பகுடத்தான்🙏எம்பெருமானே கோவிந்தா கோவிந்தா🙏

🙏எம்பெருமானே கோவிந்தா🙏
24/12/2024

🙏எம்பெருமானே கோவிந்தா🙏

எம்பெருமான் பள்ளிகொண்டிருக்கும் பூலோக வைகுண்டமாம்..திருவரங்கம்.ஓம் நமோ நாராயணாய!
22/09/2024

எம்பெருமான் பள்ளிகொண்டிருக்கும் பூலோக வைகுண்டமாம்..திருவரங்கம்.

ஓம் நமோ நாராயணாய!

புரட்டாசியில் அருளும் கோவிலடி அப்பக்குடத்தான்.ஓம் நமோ நாராயணாய!
21/09/2024

புரட்டாசியில் அருளும் கோவிலடி அப்பக்குடத்தான்.

ஓம் நமோ நாராயணாய!

Address

Lalgudi
621702

Opening Hours

Monday 6am - 12:30pm
4pm - 8pm
Tuesday 6am - 12:30pm
4pm - 8pm
Wednesday 6am - 12:30pm
4pm - 8pm
Thursday 6am - 12:30pm
4pm - 8pm
Friday 6am - 12:30pm
4pm - 8pm
Saturday 6am - 12:30pm
4pm - 8pm
Sunday 6am - 12:30pm
4pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திரு அன்பில். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திரு அன்பில்.:

Share

Category