Kuzhithurai Diocese News

Kuzhithurai Diocese News Hello Kuzhithurai Friends, This page focuses on Kuzhithurai Diocese News. Please Like this page and share this page to your friends also.

Please send event photos from Kuzithurai Diocese.

பாடுகளின் நற்கருணை ஆராதனை
26/02/2024

பாடுகளின் நற்கருணை ஆராதனை

தவக்கால நற்கருணை ஆராதனை கார்மெல் அன்னை ஆலயம் போத்தனூர், கோவை.

22/02/2024

Join us in the Episcopal Ordination Ceremony of Most Rev. Dr. Albert Anastas as the Bishop of Kuzhithurai.Place : THE SHRINE OF DEVASAHAYAM, NATTALAM Check ...

14/01/2024
குளித்துறை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தி...
14/01/2024

குளித்துறை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை எனும் ஊரில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர். இறையியல் மற்றும் தத்துவஇயலை திருச்சி புனித பவுல் கல்லூரி, மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பயின்றவர்.

06/04/2023

எத்தனையோ மக்கள் தம் உயிரைப் பிறர்க்கெனக் கொடுத்துள்ளார்கள். எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் தனது நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் எவரது இரத்தமும் பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. பலருக்காக ஒருவர் இறந்த சரித்திரம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரத்தமே “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:29). நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5:9). விலை மதிக்கப்படாத இரத்தம் (1பேதுரு 1:19). கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இவ்விரத்தமே நம்மை மீட்கும் இரத்தம். இந்த இரத்தம்தான் நம் அடிமைத்தனத்தை மாற்றி எழுதியது. இப்படி இயேசு மக்கள் அனைவரையும் கடவுளுக்கு முன்பாக தனது சிலுவையின் மூலமாகக் கூட்டிச் சேர்த்தார். அவருக்கு முன் நிற்கத் தகுதியுள்ளவர்களைத் தரம் உயர்த்தினார்.

அநியாயக் குற்றம் சுமத்தி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, சிகப்புப் போர்வைப் போர்த்தி, மரக்கட்டையில் அமர்த்தி, கோலால் தலையில் அடித்து, இவரைப் போலி அரசரெனக் கேலி செய்தனர் போர் வீரர்கள். உருக்குலைந்து நிற்கும் திருக்குமாரனை, “இதோ மனிதன்” என்று கூறி அடையாளம் காட்ட வேண்டிய நிலையில் இருந்தார் இயேசு. அவரைக் கொல்ல வேண்டுமென கொக்கரித்தது கூட்டம். “அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்று கூறிச் சிலுவைத் தீர்ப்பிட்டான் பிலாத்து. இதுவரை உலகில் நீதிமன்றங்கள் அளித்தத் தீர்ப்புகளில் மிகவும் அநீதியான தீர்ப்பு இது.

அந்நிலையிலும் தன்னைக் காட்டிக் கொடுத்தவருக்காக, மறுதலித்தவர்களுக்காக, விட்டுவிட்டு ஓடியவர்களுக்காக, ஏளனம் செய்தவர்களுக்காக, ஆடையைக் குலுக்கல் போட்டுப் பிரித்தவர்களுக்காக, தன்னைச் சாட்டையால் அடித்தவர்களுக்காக, தன்னை ஆணியால் அறைந்தவர்களுக்காக, தன்னை ஈட்டியால் குத்தியவர்களுக்காக தொடர்ந்து பரிந்து பேசி மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார் நமது மீட்பின் இயேசு. அவரின் மனநிலை நமதாகட்டும்.

இறைவாக்கினர் எலியா ஆலயம் தக்கலையில் புனித யோசேப்பு திருவிழா (19-03-2023) அன்று பொதுநிலையினர் தியானம் நடைபெற்றது. அன்றைய ...
05/04/2023

இறைவாக்கினர் எலியா ஆலயம் தக்கலையில் புனித யோசேப்பு திருவிழா (19-03-2023) அன்று பொதுநிலையினர் தியானம் நடைபெற்றது. அன்றைய மாலை 4.30 மணி திருப்பலியில் பாதுகையற்ற கார்மெல் பொதுநிலையினர் சபை உறுப்பினர்கள் 54 பேர் தங்களது நிரந்தர வாக்குறுதிகளை ஏற்றனர். நிகழ்வுகளை தமிழ்மறைமாநில பாதுகையற்ற கார்மெல் துறவற சபையினர் ஏற்பாடு செய்தனர்.

அழகிய கார்மெல் மலை அன்னை ஆலயம், வாவறை, குழித்துறை மறைமாவட்டம்.
05/04/2023

அழகிய கார்மெல் மலை அன்னை ஆலயம், வாவறை, குழித்துறை மறைமாவட்டம்.

புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மூவொரு இறைவன்  பேராலயம், திருத்துவபுரத்தில் நடைபெற்றது. வியாழன்...
05/04/2023

புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மூவொரு இறைவன் பேராலயம், திருத்துவபுரத்தில் நடைபெற்றது. வியாழன் காலையில் கோட்டாறு ஆயர் நசரேன் சூசை அவர்களின் தியானம் நிகழ்ந்தது. மாலையில் பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள் புனித எண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலிக்கு தலைமையேற்று மறையுரை ஆற்றினார்கள். சுமார் 85 அருட்பணியாளர்கள்.திருத்தொண்டர்கள், மற்றும் பல துறவியர், பொதுநிலையினர் பங்கேற்றனர். அருட்பணியாளர் சார்லஸ் விஜு வழிபாட்டை ஒருங்கிணைத்தார்கள். அனைவருக்கும் அறுசுவை விருந்தும் ஒவ்வொரு பணித்தளத்திற்கும் அர்ச்சிக்கப்பட்ட புனித எண்ணெயும் வழங்கப்பட்து.

Address

Holy Trinity Church
Kuzhithurai
629163

Alerts

Be the first to know and let us send you an email when Kuzhithurai Diocese News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share