16/10/2024
*நீ அல்ல...😊 நானே நிரூபிப்பேன்*😎
இயேசு அவனை நோக்கி நீ இதை ஒருவருக்கும் சொல்லாதே என்று கட்டளையிட்டார்.
*அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாய் பரவிற்று லூக் 5 :15*
கீர்த்தி என்பதும் புகழ் என்பதும் மனித முயற்சிகளால் கூடுவதும்,
பகைவர் சூழ்ச்சியால் அழிவதும் அல்ல.!
ஒருவேளை அப்படித் தெரிந்தாலும் புகழ்ச்சி என்றாலும் இகழ்ச்சி என்றாலும் அது அதிக நாட்கள் நிலைக்காது.
தேவன்ஒருவரே ஒரு மனிதனுடைய கீர்த்தி பரவுவதை நிர்ணயம் பண்ணி பரவச் செய்கிறவர்.
அப்படி தேவன், உங்கள் வாழ்வில் உங்கள் கீர்த்தியை பரவச் செய்ய முடிவெடுத்து விட்டால்
எத்தனை எதிரிகள் கைகள் அதை மறைக்க முயற்சி எடுத்தாலும் உங்கள் கீர்த்தி மறைவதில்லை.
*காரணம் தேவனோடு போர் செய்ய ஒருவனாலும் கூடாது*.
ஆகவே உங்கள் நற்பெயரை நிலைநிறுத்த உங்கள் நண்பர்களிடம் முயற்சி செய்ய வேண்டாம் ஏனென்றால் உங்களை நேசிப்போருக்கு அது தேவையில்லை. *(They dont need it.)*
உங்கள் நற்பெயரை நிலைநிறுத்த உங்கள் எதிரிகளிடமும் முயற்சி செய்ய வேண்டாம். ஏனென்றால் அதை அவர்கள் நம்பப் போவதில்லை.. *(they wont believe it.)*
நீங்கள் அமைதியாய் இருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி நான் மோசேயோடு கூட இருந்தது போல *உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக நான் உன்னை மேன்மைப்படுத்துவேன் என்றார்.*
*யோசுவா 3: 7.*
Pr Samuvel raj
Revival Voice International Ministries
India
IND +91 8778968686
Srilanka +94 742433890