Vadamattam - 612201

Vadamattam - 612201 It contains about our village, events, festivals, celebrations, videos, photos, etc.

01/05/2026
காருண்ய காத்தாயி அருள்மாலை நூல் வெளியீடு
05/06/2025

காருண்ய காத்தாயி அருள்மாலை நூல் வெளியீடு

வரும் வருடம் 2026ல் சந்திப்போம்
17/05/2025

வரும் வருடம் 2026ல் சந்திப்போம்

07/05/2025

2025 வடமட்டம் தீமிதி திருவிழா

10/04/2025
HAPPY DIEALI AND LAKSHMI POOJA.
31/10/2024

HAPPY DIEALI AND LAKSHMI POOJA.

வடமட்டம் முன்னாள் ஆசிரியர்கள் - மாணவ மாணவிகள்- ஆண்டு தெரியாது
13/09/2024

வடமட்டம் முன்னாள் ஆசிரியர்கள் - மாணவ மாணவிகள்- ஆண்டு தெரியாது

Wish you all a  very HAPPY GANESH CHATHURTHI.
07/09/2024

Wish you all a very HAPPY GANESH CHATHURTHI.

காஞ்சிப் பெரியவர் கழலடி போற்றி !!!  அறமென பட்டதை அவையத்தில் வைத்தீர்,அறிவை பின்னும் அன்பை முன்னும் ஈந்தீர்,அறியா தொழிந்த...
24/05/2024

காஞ்சிப் பெரியவர் கழலடி போற்றி !!!

அறமென பட்டதை அவையத்தில் வைத்தீர்,
அறிவை பின்னும் அன்பை முன்னும் ஈந்தீர்,
அறியா தொழிந்த ஆன்மீகம் வளர்த்து,
அறனாய் கலந்தீர் குருவே சரணம்.

அன்னார் ஜெயந்தியில் அவரடி தொழுவோம்
24.05.2024 - விஜயசியாமளா.

அருணகிரிக் அருளியவா அடியேனும் அடியேனே ! 1மரிக்கவிட்டு தவிக்கவிட்டு தனிப்புகழை பெறுதற்காகிரிகிடத்தி கிழவோனை பெருநெறியில் ...
23/05/2024

அருணகிரிக் அருளியவா அடியேனும் அடியேனே !
1
மரிக்கவிட்டு தவிக்கவிட்டு தனிப்புகழை பெறுதற்கா
கிரிகிடத்தி கிழவோனை பெருநெறியில் புகுவித்தாய்
வரிமடக்கி மெய்யுருக்கி வளர்தமிழை வார்த்தாயே
சரியான சந்தங்களை கவிஎங்கும் குவித்தாயே
2
தெறிவயர் ஆசையிலே அறியாது செய்ததையே
வெறிஎன்று பழிசெய்த வீணர்வாய் அடைத்தாயே
செறிவுமிகு செந்தமிழை அருணையிலே ஒலிப்பித்து
நெறிபிறழா அறவழியே ஆண்டுகொண்ட அழகோனே
3
எரிபொறியே சரியாக சரவணத்தில் தவழ்ந்தாயே
கரிமுகனை காண்பித்து காதலிலே வீழ்ந்தாயே
கிரியேறி வருவேற்க்கு உரியசெல்வம் தருவாயே
பிரியமோடு பிதற்றுவானை பிரியாது அருள்வாயே
4
பரிவுஅறியா வள்ளாள கோபுரத்தே பாய்ந்தாரை
விரிதோகை மயில்மீது வேலோடு விரைந்துவந்து
திரியேறும் நெய்யாக சுரிஎழுதி சொல்நிறப்பி
வரிவழங்கி சும்மாயிரு சொல்லற என்றாயே
5
அறிவின்றி ஆசையிலே அவனியிலே பிறந்தோனை
குறியின்றி குற்றத்தை கொண்டாடி மகிழ்வோனை
வறிதான செல்வத்தை வளர்பதற்க்கு முயல்வானை
சிறிதேனும் குணம்மற்றி சேவிக்க செய்வாயே
6
முறிகின்ற வாழ்விதனை மூச்சிழுக்க உயிர்ப்பித்து
கறியாகி கனல்தின்ன காற்றடைத்த பையடக்கி
அறியாது ஆறடிக்குள் விழுமுன்னே வினைகழித்து
பறிபோகும் உயிருக்கு முக்தியருள் முருகோனே
7
துரிதமாக துன்பங்கள் எல்லையின்றி தொல்லைதர
எரிவிழுந்த புழுவாக யான்துடிக்க பிழைப்பின்றி
மரியாதை வாழ்வின்றி மனம்நோக நடிப்பதுவோ
உரியானே உனையன்றி எனைகாக்க யாருள்ளார்
8
அரிதாரம் மைபூசி ஆடுகின்ற பொய்யாட்டத்தில்
அரிவோனும் வருவானே ஆவியையும் பறிப்பானே
அரிபிரமன் ஆதிசிவன் அவர்வந்து அருளும்முன்
அரியவேல் கரமேந்தி ஆட்கொள்நீ இப்போதே
9
கரிமையை கசடுகளை கல்மனதில் சேர்பித்து
புரிகின்ற வினையாவும் புவனத்தே அழுக்காகி
சரிந்துயான் வாழ்வதுவோ அறிந்தும்நீ ஆதரித்து
சரிசெய்ய முயலாது சாட்சியாகி நிற்பதுவோ
10
கிரியருணை கிழவோனை கீழ்விழாது மேல்தூக்கி
உரியதமிழ் ஒப்புவித்து உன்னடியே வைத்தாயே
அரிமாவின் ஆளுமையில் அச்சந்தம் ஒளிர்கிறதே
திரிமூன்று திருமுருகா அருள்புரிய வருவாயே

-விஜயசியாமளா / வைகாசி விசாகம் /23.05.2024

Address

SOUTH Street
Kumbakonam
612302

Telephone

9480182464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vadamattam - 612201 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vadamattam - 612201:

Share

Category