Kulasai Sri Mutharamman Thirukoil குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்

  • Home
  • India
  • Kulasekharapatnam
  • Kulasai Sri Mutharamman Thirukoil குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்

Kulasai Sri Mutharamman Thirukoil குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயி?
(2)

தாய்மையின் மேன்மை நீயே அம்மாபெண்மையின் மென்மை நீயே அம்மாமெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா!அம்மா அம்மா என்றுன்னை நான் அழைக்க...
25/07/2026

தாய்மையின் மேன்மை நீயே அம்மா
பெண்மையின் மென்மை நீயே அம்மா
மெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா!

அம்மா அம்மா என்றுன்னை நான் அழைக்கையிலே நெஞ்சில் அமுதத்
தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா!

🚩குலசை ஆடிக்கொடை விழா அழைப்பிதழ் 2026💥✨தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கி வரும் குலசேகரன்பட்...
25/07/2026

🚩குலசை ஆடிக்கொடை விழா அழைப்பிதழ் 2026💥

✨தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கி வரும் குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலகப்புகழ் பெற்றது, இதற்கு முன்னதாக ஆடி மாதம் அன்னைக்கு மூன்று நாட்கள் ஆடிக்கொடை விழா மிகச்சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு ஆடிக்கொடை விழாவிற்காக ஆடி 8 (24.07.2026) அன்று பந்தக்கால் நடப்பட்டது, ஆடி 2ம் செவ்வாய் ஆடி 12 (28.07.2026) அன்னைக்கு முளைப்பாரி தெளித்து தினமும் மங்கையர்கள் கும்மியடித்து வழிபட்டு வருவார்கள்.

✨அதன்பின் ஆடி 18 (03.08.2026) திங்கள்கிழமை இரவு வில்லிசையுடன் சுவாமி அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

✨மறுநாள் ஆடி 19 மூன்றாம் செவ்வாய்க்கிழமை (04.08.2026) கொடைவிழா அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை முத்தாரம்மன் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள் அன்னையின் கும்பம் எழுந்தருளும் போது கிராமிய மணம் கமழும் நையாண்டி மேளம், உறுமி மேளம், கணியான் மகுடம், கொம்பு தப்பு, வில்லுப்பாட்டு, தப்பாட்டம், செண்டை மேளம் என ஆடிக்கொடை விழா களைகட்டும், பிறகு அன்னையின் கும்பம் திருவீதி எழுந்தருளி நகர்வலம் வந்து திருக்கோயில் வந்து சேரும். அன்றிரவு சாமக்கொடை விழாவில் அன்னையவள் கும்பத்தில் எழுந்தருளி அக்னிச்சட்டி ஏந்தி அருள்பாலிக்கும் அற்புத நிகழ்வும் நடைபெறும்.

✨ஆடி 20 (05.08.2025) புதன்கிழமை பகலில் அன்னையின் கும்பம் திருவீதி எழுந்தருளி மாலையில் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறும்.

🙏அனைவரும் வருக அம்மையப்பன் அருள் பெறுக🙏






🚩குலசை ஆடிக்கொடைவிழா 2026💥✨ குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் ஆடிக்கொடை விழாவை முன்னிட்டு கால் நாட்டுதல் வைபவம் இன்று...
24/07/2026

🚩குலசை ஆடிக்கொடைவிழா 2026💥

✨ குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் ஆடிக்கொடை விழாவை முன்னிட்டு கால் நாட்டுதல் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது ✨

⚜️ ஓம்சக்தி முத்தாரம்மா 🔱

முத்தாரம்மையும் ஞானமூர்த்தீயும் ஒன்றாக இருக்கும் காட்சி!வடதிசை நோக்கி அமர்ந்தே இருந்துஅம்மாவின் அருளாட்சி!
24/07/2026

முத்தாரம்மையும் ஞானமூர்த்தீயும் ஒன்றாக இருக்கும் காட்சி!
வடதிசை நோக்கி அமர்ந்தே இருந்து
அம்மாவின் அருளாட்சி!

அன்பெனும் கருக் கொண்டுஅகிலத்தை உயிர்ப்பித்தாய்!அன்னையெனும் உருக் கொண்டுஅரவணைத்து மகிழ்ந்தாய்!சிம்ம வாகன சிங்காரியேசிந்தை...
23/07/2026

அன்பெனும் கருக் கொண்டு
அகிலத்தை உயிர்ப்பித்தாய்!
அன்னையெனும் உருக் கொண்டு
அரவணைத்து மகிழ்ந்தாய்!

சிம்ம வாகன சிங்காரியே
சிந்தையிலே வருவாய்!
முந்தை வினைமுறித்து முக்கண்ணி முத்தாரியே அருள்வாய்!

மாயை மயக்கம் நீக்குவாயேதாயே கலக்கம் போக்குவாயே!சேயே என்று அணைத்தென் தாயேகாயம் யாவும் ஆற்றுவாயே!முத்தாரம்மா நீயே என்றன் த...
22/07/2026

மாயை மயக்கம் நீக்குவாயே
தாயே கலக்கம் போக்குவாயே!

சேயே என்று அணைத்தென் தாயே
காயம் யாவும் ஆற்றுவாயே!

முத்தாரம்மா நீயே என்றன் தாயே
எங்கும் எதிலும் உன்றன் மாயே!

அங்குச பாசம் அங்கையிலேபொங்கிடும் அருளுந்தன் கண்களிலேவெம்மையைத் தணிப்பது உன் நிழலேவேதனை தீர்ப்பது உன்னருளே!அன்பினைப் பொழி...
21/07/2026

அங்குச பாசம் அங்கையிலே
பொங்கிடும் அருளுந்தன் கண்களிலே
வெம்மையைத் தணிப்பது உன் நிழலே
வேதனை தீர்ப்பது உன்னருளே!

அன்பினைப் பொழிவது உன் விழியே
அடைக்கலம் தருவது அன்னை
முத்தாரம்மா உன் பதமே!

தாயே என்னைப் பூங்கரத்தால்வாரி அள்ளம்மா!சேயாய் என்னை உந்தன் தோளில்சாய்த்துக் கொள்ளம்மா!
20/07/2026

தாயே என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக் கொள்ளம்மா!

ஞானமூர்த்தி பக்கத்திலேஇடப்பாகம் அமர்ந்த முத்தாரம்மா!அருளை வாரி அள்ளித்தந்து இங்குஆனந்தம் கொண்டாளே முத்தாரம்மா!
19/07/2026

ஞானமூர்த்தி பக்கத்திலே
இடப்பாகம் அமர்ந்த முத்தாரம்மா!
அருளை வாரி அள்ளித்தந்து இங்கு
ஆனந்தம் கொண்டாளே முத்தாரம்மா!

Address

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்
Kulasekharapatnam
628206

Opening Hours

Monday 6am - 1pm
4pm - 9pm
Tuesday 6am - 1pm
4pm - 9pm
Wednesday 6am - 1pm
4pm - 9pm
Thursday 6am - 1pm
4pm - 9pm
Friday 6am - 1pm
4pm - 9pm
Saturday 6am - 1pm
4pm - 9pm
Sunday 6am - 1pm
4pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Kulasai Sri Mutharamman Thirukoil குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kulasai Sri Mutharamman Thirukoil குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்:

Shortcuts

Share

Category