Power Of Heavenly Father Ministries.

Power Of Heavenly Father Ministries. Jesus Loves You all the Time.The Blood of Jesus Christ Cleanses us from all our Sin. Jesus Never Fails.

He is not founder the religion.He love all the People and died for all People. Because He is Risen.again He coming soon for justice judging this world

18/03/2022

சூழ்நிலைகள் உனக்கு சாதகமாக அமைந்திருக்கும் போது நீ தேவனுக்காக சாடசியாக வாழ்வது பெரிதல்ல,
சூழ்நிலைகள் மற்றும் உன்னை சூழ இருப்பவர்கள் உனக்கு எதிர்மறையாக இருக்கும் போது உன் சாட்சியைக் காத்துக்கொள்.
அதுவே தேவனுக்கு முன்பாக உகந்த அர்ப்பணம்...
சகோ.செ.மாடசாமி
+919629538180

04/01/2022
23/06/2021

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான 17:3And this is life et...

27/07/2019

Abishegam Abishegam Tamil Christian Songs

20/04/2019

உண்மையான ஊழியர்களை உருவாக்குவோம். (பாகம் - 01)

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் உங்களை நான் வாழ்த்துகிறேன். நாமோ அல்லது நம்முடைய பிள்ளைகளோ வேதாகம கல்லூரி முடித்ததும் ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் உதவி போதகராகவோ அல்லது தனித்துவமாக ஒரு சபையை ஆரம்பித்து அதை நடத்துகிறவராகவோ பயிற்சிவிக்கப்படுகிறோம், ஊக்குவிக்கப்படுகிறோம்.. மாத்திரமல்ல அவூக்குவிப்பின் மூலமாக ஆண்டவர் என்னை முழுநேர பணிக்காக அழைத்தார் என்று சொல்லி வாரத்தில் ஒருமுறை வேதாகம வகுப்பு , உபவாச கூடுகை மற்றும் ஞாயிறு தோறும் சபை கூடுகை நடத்தி விட்டு, மற்ற நாட்களில் முழுவதும் என்ன செய்கிறோமென்று நாம் நம்மை நிதானிக்காமல் வாழுகிறோம்.. உலகத்தார் கூட ஒருநாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் வேலை பார்த்தாதான் அதற்குரிய ஊதியம் தருகிறான். நாமோ அதிலும் மேலான மற்றும் மேன்மையான பணியை செய்கிறோமே! நாம் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மிகுந்த தேவபக்தியோடு ஜாக்கிரதையாக செயல்படவேண்டும். நாமோ சிலமணி நேரம் மாத்திரமே வேலை செய்துவிட்டு கூலியை சபைக்கு வருகிற தேவ பிள்ளைகளிடம் நம்முடைய பிழைப்புக்காக தசமபாகம் கொடு, காணிக்கை கொடு என்று கேட்டு கேட்டு நம்மை அழைத்த பரம எஜமானனை, சர்வத்தையும் உண்டாக்கின சர்வ வியாபியானவரை கேவலப்படுத்துகிறோம். கேள்வி கேட்டால் உடனே நீ கோடாவிட்டால் உனக்கு ஆசீர்வாதம் வராது என்று சொல்லி சபிக்கிறோம். கொடுத்தால் தான் ஆசீர்வாதம்னா நம்ம இந்தியாவுல நாமதான் அம்பானிக்கும், உலக வங்கிக்கும் கடன் கொடுத்திருப்போம் ஐயா. இயேசு சொன்னது போல, பரலோகராஜ்யத்தில் பொக்கிஷம் சேர்த்துவைக்க சொல்லிக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டோம்.. உலக ஆசைல நாமும் வளர்ந்திட்டோம், நம்மவர்களையும் வளர்த்து கொண்டிருக்கிறோம். பரிசேயர் சதுசேயரைவிட கேவலமாக வாழ ஆரம்பித்துவிட்டோம். வேதத்தில் பவுலை அநேக காரியங்களுக்கு முன் உதாரணமாக சொல்லுகிற நாம் இந்த காரியத்தில் அவரைப் போல வாழ மறுத்துவிட்டோமே ஏன்? பவுலின் வாழ்க்கையை நன்றாக கவனியுங்கள் (1கொரிந்தியர் 9, அப்போஸ்தலர் 20:17-36)
" யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?" ஆலயத்தில் வேலைசெய்வோர் ஆலய வருமானத்திலிருந்தே உணவுபெறுவர்; பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார்.
ஆனாலும், ஆனாலும் "இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை". நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதவுமில்லை. "அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது". எனக்குரிய மேன்மையை எவரும் அழித்துவிட முடியாது. ஏனென்றால் கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்திற்கு எந்த தடையும் வராதபடிக்கு நான் எல்லா பாடும் படுகிறேன் என்கிறார். ஆவிக்குரிய காரியங்களை ஜனங்களுக்கு போதித்து எங்கள் சரீரத்துக்குரிய நன்மைகளை கேட்டு பெற்றுக்கொள்கிறோம் என்று நம்மில் சிலர் சொல்லுவோம். ஆனால் பவுலைப் பாருங்கள் மூன்று வருடம் ஓரிடத்தில் தங்கி தேவப்பணி செய்யும்போது அவர் சொல்லுகிறார்: "யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டு விடவில்லை; பொது இடங்களிலும், வீடுவீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். நம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன்.கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள்.இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கு கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது."...எவ்வளவாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை கிறிஸ்துவுக்குள் வளர்த்திருக்கிறார் பாருங்கள் ...
ஆனாலும் பவுல் சொல்லுகிறார், இந்த மூன்று வருஷத்தில் எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. பிழைப்புக்காக உழைக்காமல் இருக்க எனக்கும் பர்னபாவுக்கும் உரிமை இல்லையா?. ஆனாலும் என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்" என்கிறார்..நாம் எப்படி ஊழியம் செய்கிறோம்?. ஆண்டவர் நம்மை சோம்பேறியாக இருக்க அழைக்கவில்லை,அழைக்கவில்லை. வீட்டில் இருக்க கூட நேரமில்லாதளவுக்கு ஊழியத்தில் ரொம்ப பிஸியா இருக்கிறேன் சகோதரரே , எவரிடமும் என்னுடைய, என் குடும்ப தேவைக்காக இதுவரை கையேந்தி நிற்காம , வாய் திறந்து கேட்காம ஓடுறேன் சகோதரரே என்று சொல்லுபவர்களை தவிர மற்றவர்கள், வேதத்தின் அடிப்படையில் அதிகாலையில் எழுந்து ஜெபியுங்கள் , இரவில் வேதத்தை தியானியுங்கள். பகலில் ஏதாவது வேலைக்கு சென்று உங்கள் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்துங்கள், அதோடு சபை நடத்துவதையும், தேவ பணியையும் குடும்பமாய் இணைந்து உற்சாகமாக செய்யுங்கள். பவுலைப் போல நீங்களும் மற்றவர்களுக்கும் தரித்திரருக்கும் கொடுக்கிறவர்களாய் மாறுங்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மற்றும் வேத தியான வகுப்புகளை இலவசமாக அறிவியுங்கள். .வாங்குகிறதை பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்று இயேசு சொன்னதை பவுல் நிறைவேற்றினேன் என்கிறார். அவரைப் போல நாமும் தேவபணியை உண்மையாக, இலவசமாக செய்வோம். இதில் நாம் மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை. இது நம் மேல் விழுந்த கடமையே.கர்த்தர் வேதத்தின் அடிப்படையில் , ஆதி அப்போஸ்தலரின் வாழ்க்கை சரித்திரத்தின் அடிப்படையில் நம்மையும் உருவாக்குவாராக. ஆமென். நமக்காக மரித்து, உயிர்த்தெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கிற இயேசுவுக்காக உண்மையும் , உத்தமுமாக பரம தேசத்தை எதிர் நோக்கி தொடந்து பயணம் செய்வோம். மீண்டும் "உண்மையான ஊழியர்களை உருவாக்குவோம் பாகம் - 02" ல் சந்திப்போம். கர்த்தருடைய கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்

In Christ
S.Madasamy@Immanuel
PHF Ministries,Chennai
9629538180,9790709922

Address

Kelambakkam
603112

Telephone

+919629538180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power Of Heavenly Father Ministries. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Power Of Heavenly Father Ministries.:

Share