Kayalpatnam Zavia

Kayalpatnam Zavia . Zaviathul Fasiathush Shathulia in Kayalpatnam founded in 1876 CE by al-Waliyyul Kamil.

Muhammad Abubakr Miskeen Sahib al-Qahiri (Periya Shaikhuna)ؒ it a Headquarters (Umm Zavaya) and a Sufi Montessori of Tariqa al-Fasithush Shathulia in India

ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வரும், அரூஸ்ஸுன் ஜன்னாஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வருமாகிய SKM ஹாஜா முஹியித்தீ...
30/07/2025

ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வரும், அரூஸ்ஸுன் ஜன்னாஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வருமாகிய SKM ஹாஜா முஹியித்தீன் ஆலிம் காஷிஃபி அவர்கள் சற்று முன் வஃபாத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

30/05/2023

அஸ்ஸலாமு அலய்க்கும் (வறஹ்)

*ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:*

((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*
*''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு* *செய்யமுடியாத இழப்பு* *நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட இலேசானது.''(தப்ரானி)*

காயல்பட்டினம் ஜாவியாவின் அடையாளங்களில் ஒன்று, ஜாவியாவின் மூத்த கலீஃபாக்களில் ஒருவர், ஜாவியாவின் மெஞ்ஞான கடலில் வளர்ந்த முத்துக்களில் ஒன்று, காயலில் நடமாடிய அறிவுக் களஞ்சியம், ஷாஃபிஈ பிக்ஹு கலையின் ஊற்று, காயல் மாநகரில் தற்போது இருக்கின்ற பல மூத்த ஆலிம்களின் ஆசான், நமதூரின் ஜுமுஆ பள்ளிகளின் கதீப்களுடைய ஆசான் அல்லது இவர்களுடைய மாணவர்களின் மாணவர், காயல்பட்டினம் ஜாவியா & குலசை ஜாவியா& அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அறபுக் கல்லூரி ஆகியவற்றின் நீண்டகால முதல்வர், தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபையின் நீண்ட கால தலைவர், சிறிய குத்பா பள்ளியின் முன்னாள் கதீப் எங்கள் பாசத்திற்குரிய பெருந்தகை *அஷ்ஷெய்க் அல்லாமா மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் S.M முஹம்மத் ஃபாறூக் ஆலிம் ஃபாஸி கலீஃபதுஷ் ஷாதுலி அவர்கள் இன்று அதிகாலை 6:30 மணி* அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிவூன்.

அன்னாரின் மறைவு எங்கள் ஸ்தாபனங்களுக்கும் நமதூருக்கும் மிகப்பெரிய பேரிழப்பு.

மேன்மைக்குரிய ஆலிம் அவர்கள் காயல்பட்டினம் ஜாவியா & மஹ்ழரா ஆகியவற்றின் ஆசிரியராக பணி செய்தவர்கள், காயலின் தவபுதல்வர் கிறுஸ்துவர்களின் தலைமையகம் வாட்டிகன் சபையின் ஏட்டில் இவர் தென் இந்தியா பகுதியில் இருக்கும் வரை கிறிஸ்துவத்தை இங்கு பரப்ப முடியாது என்று எழுதப்பட்டுள்ள மஹான் ஜாவியாவின் முதர்ரிஸ் மெஞ்ஞான களஞ்சியம் முஃப்தி முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் மற்றும் மெஞ்ஞான சுடர் ஜாவியாவின் முதர்ரிஸ் அஷ்ஷெய்க் சாவன்னா ஆலிம் முஃப்தி மற்றும் மெஞ்ஞான சுடர் ஜாவியாவின் முதர்ரிஸ் S.M ஜதுரூஸ் ஆலிம் முஃப்தி MFB ஆகிய மஹான்களின் மாணவர்களில் ஒருவர், சில வருடங்களுக்கு முன்னர் நம்மை விட்டும் பிரிந்த ஹாமிதிய்யா மார்க்க கல்வியின் ஆசிரியர் மஹான் அல்லாமா மவ்லானா நஹ்வி கலீஃபதுஷ் ஷாதுலி I.L செய்யிது அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் ஃபாஸி அவர்களின் ஆருயிர் நண்பர். தன்னுடைய பயானில் பிக்ஹு சட்டத்தை மக்களுக்கு இலகுவாக புரிய வைக்கும் தலைச் சிறந்த ஆலிம், இத்தனை சிறப்புகளை பெற்றும் எந்தவொரு பெருமையும் கொள்ளாமல் எல்லா தரப்பினருடன் சகஜமாக அன்பாக பழகும் சிறந்த ஆலிம் பெருந்தகை.

இன்னும் ஒரு சில தினங்களில் ஜாவியாவின் 159 ஆம் ஆண்டு கந்தூரி விழாவும் , ஹாஃபிள்களின் பட்டமளிப்பு விழாவும் நடைப்பெற இருக்கின்ற இந்த தருணத்தில் அவர்களை எங்கள் ஸ்தாபனம் இழந்து இருப்பது மிகவும் கவலையை தருகின்றது. அல்லாஹ் போதுமானவன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் சேவைகளை கபூல் செய்வானாக! இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னிப்பானாக!
இவர்களின் கபுருடைய கேள்வி கணக்கை இலகுவானதாக ஆக்குவானாக! இவர்களின் கபுரை விசாலமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும், சுவனத்தின் தென்றல் வீசக்கூடிய கூடிய இடமாகவும் ஆக்குவானாக! நாளை மறுமையில் நம் உயிரினும் மேலான கண்மணி முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவனத்தில் ஒன்றாக இருக்கும் பாக்கியத்தை இவர்களுக்கும் நமக்கும் தருவானாக! அன்னாரின் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் ஷாதுலிய்யா தரீக்கா இக்வான்களுக்கும் அழகிய பொருமையை தருவானாக! இவரைப் போன்ற பல ஆலிம்களை எங்கள் ஸ்தாபனத்திலிருந்து உருவாக்குவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

வஸ்ஸலாம்

*ஆழ்ந்த வருத்ததுடன்*
*ஜாவியா*
*காயல்பட்டினம்*

25/03/2023

ஜாவியதுல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா காயல்பட்டணம்

றமளான் தொடர் சொற்பொழிவு | பிறை 02

யூடியூப் நேரலை இணைப்பு கமெண்டில்

24/03/2023

அஸ்ஸலாமு அலய்க்கும் வறஹ்.

இன்ஷா அல்லாஹ் ஜாவியா-வில் றமளான் மாத தொடர் சொற்பொழிவு (பயான்) தினசரி காலை 11:15 முதல் ளுஹர் வரை (வெள்ளிக் கிழமை தவிர்த்து) நடைபெறும்.

றமளான் மாதம் இஷா 9.00 க்கும், தறாவீஹ் 09:15 க்கும், அதை தொடர்ந்து திக்ர் ஹல்காவும் நடைபெறும்.

அஸ்ஸலாமு அலய்க்கும் {வறஹ்}இன் ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமளான் பிறை சம்பந்தமான காயல் உலமாக்களின் ஆலோசனை கூட்டம் புனிதமிகு ஜ...
21/03/2023

அஸ்ஸலாமு அலய்க்கும் {வறஹ்}

இன் ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமளான் பிறை சம்பந்தமான காயல் உலமாக்களின் ஆலோசனை கூட்டம் புனிதமிகு ஜாவியதுல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவில் வைத்து நாளை மங்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெறும்

03/11/2022

Please pray for our zavia secretary

Address

Kayalpatnam
628204

Alerts

Be the first to know and let us send you an email when Kayalpatnam Zavia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kayalpatnam Zavia:

Share