காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன்

  • Home
  • India
  • Kayalpatnam
  • காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன்

காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன் 13:3.நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் ம?

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்

01/10/2024
06/02/2021

முன்னுரை
“கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்” (அல் குர்ஆன் 67 :1).
சிறந்த ஆட்சி என்பது உயர்ந்த ஒழுக்க ஆன்மீக அடிப்படையில் இறைக்கட்டளைகளின்படி அமைவதே ஆகும். இஸ்லாமிய ஆட்சி என்பது வெற்று வேதாந்தமல்ல; எதேச்சதிகாரமுமல்ல; பரம்பரைச்சொத்துமல்ல; முதலாளித்துவமுல்ல; ஜனநாயகமுமல்ல. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகாணும் தனித்தன்மை கொண்ட இறைவனின் ஆட்சி.

ஆட்சியும் அதிகாரமும் அல்லாஹுக்கே!
ஆட்சியும் அதிகாரமும் அரசனுக்கும் சொந்தமல்ல; மக்களுக்கும் சொந்தமல்ல; எல்லாம் வல்ல அல்லாஹுக்கே சொந்தம். அவனே விண்ணுக்கும் மண்ணுக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் ஆட்சியாளன். ஆண்டவனின் ஆட்சியை அமானிதமாகப் பெற்ற ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்களுக்குப் பணி செய்பவர்களே. அவர்களுக்கெனத் தனி அதிகாரம் இல்லை. இதுவே முறையான ஆட்சி.
ஆட்சியாளருக்குரிய பண்புகள்:
“… நாம் அவர்களுக்கு பூமியில் (ஆட்சி புரியும்) வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் செலுத்துவார்கள். மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள் (அல்-குர்ஆன் 22 :41).
தக்வா : (இறையச்சம்)
ஆட்சித் தலைவர்கள் இறையச்சமுடையவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: “… ஓர் ஆட்சித் தலைவர், அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்துக் கேள்வி கேட்கப்படுவார்” (புகாரி-884; முஸ்லிம்-3408) மறுமையில் தனது செயல் குறித்து இறைவனிடம் கேள்வி உள்ளது என்ற இறையச்சம் உடைய தலைவரே மக்களை நேர்வழியில் செலுத்த முடியும்.
“இறையச்சம் உடையவருக்கே இக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் (2:2) இறைவேதத்தின்படி அவர் மக்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
வழிகாட்டுதல்:
“மேலும் நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்டு (அதனால் ஏற்பட்ட இன்னல்களில்) அவர்கள் பொறுமை காத்தபோது நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்தே ஏற்படுத்திக் கொடுத்தோம்” (32:24).
தலைவர்கள் இறைவனின் கட்டளையைக் கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டுதல் வேண்டும். திருமறையிலும் ஹதீஸ்களிலும் ஆதாரம் காட்டி எந்த முடிவும் எடுக்க வேண்டும். வணக்க-வழிபாடு, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளாக இருந்தாலும் சரியே.
இஸ்லாமிய அறிவு:
இஸ்லாமிய ஆட்சியாளர் என்பவர், இஸ்லாம் பற்றிய முழுமையான அறிவுடையவராகவும் நாட்டிலிருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், அஞ்ஞான சக்திகள், இஸ்லாத்தை வேரறுக்க விளையும் சக்திகள் ஆகிய அனைத்தையும் அறிந்தவராக இருக்க வேண்டும்.
எளிமை:
இஸ்லாமியத் தலைவர் என்பவர், இஸ்லாம் கூறும் அடிப்படையில் எளிய வாழ்க்கை வாழ்பவராகவும் உறுதியான நெஞ்சம் கொண்டவராகவும் எளிதில் பொதுமக்கள் அணுகக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
இஜ்திஹாத்:
மாறிவரும் வாழ்க்கைக்குத் தகுந்தாற்போல் இஸ்லாமிய உலகை முன்னேற்றிக் கொண்டே செல்ல வேண்டும்.
மக்களின் உரிமைகள்:
ஆட்சித் தலைவருக்கு மக்கள் மீது ஏகோபித்த அதிகாரம் கிடையாது. அவர் மக்களுடைய பிரதிநிதி, இறைச்சட்டதின்முன் அனைவரும் சமமே. தலைவரும் மக்களும் இறைவனின் சட்டத்திற்குப் பணிந்து அவரவர் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இறைக்கட்டளைப்படி ஆட்சி செய்யும் தலைவருக்கு ஒத்துழைப்பது மக்கள் கடமை. இறைக்கட்டளைகளின்படி ஆட்சி செய்யும் ஓர் ஆட்சியாளரை எதிர்ப்பது, இறைவனை எதிர்ப்பதாகும்.
“ஆட்சியாளர் இறைவனின் சட்டத்தைப் பின்பற்றத் தவறினால், அதை மக்கள் ஆதரிக்கத் தேவையில்லை” என இறைத்தூதர் (ஸல்) தனது இறுதி உரையில் கூறியுள்ளார்கள். இதையே அவர்களுக்குப்பின் வந்த ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பாக விடுத்துள்ளார்கள்: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட்டு விலகிச் சென்றால் பணிந்து நடப்பது உங்கள் மீது கடமையாகாது”.
ஓர் ஆட்சியாளரை மக்கள் தேர்ந்தெடுக்கும்போது குலம், கோத்திரம், பணம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட சிறந்த தனித் தகுதிகளான தக்வா, ஹிதாயத், இல்ம் ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டியதும், அவரைப் பின்பற்ற வேண்டியதும் மக்கள் கடமை.
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் …“ (4:59).
பரம்பரை அரசுரிமை, ஆயுள் முடியும்வரை அரசுரிமை ஆகியவை இஸ்லாத்தில் கிடையாது. ஆட்சி என்னும் அமானிதத்தைத் தவறாகப் பயன் படுத்தினால் அதை அவர்கள் இழக்கும் நிலை ஏற்படும்; அதை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு உண்டு.
நீதி:
“தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்த மறுமை நாளில், ஏழு வகையினருக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருவான். (அவர்களில் ஒருவர்) நீதிவழுவாத அரசன்” (புகாரி-6308; முஸ்லிம்-1712). இவ்வளவு பெரும் பாக்கியம் பெறக்கூடிய தலைவர்கள் ஹலாலை நிலைநிறுத்தி, ஹராமைத் தடுத்து, இறைவன் நமக்களித்த சட்டப் புத்தகமாம் குர்ஆனில் அருளியுள்ளபடி நீதியை நிலைநாட்டி குடிமக்களை நிறம், குலம், கொள்கை பேதமின்றிப் பாதுகாக்க வேண்டும்.
“… நீதியின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள் …” (4:135).
அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்டும் இஸ்லாமிய அரசு எந்த மாற்றுச் சக்திக்கும் கட்டுப்படாத சுதந்திர அரசாக இருக்க வேண்டும்.
கலந்தாலோசித்தல்:
குடிமக்களுக்கும் அறிஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குக் கருத்து தெரிவித்திடும் உரிமையும் கடமையும் உண்டு. கலீஃபாக்களின் ஆட்சியில் அறிஞர்களும் அனுபவம் முதிந்தவர்களும் சாதாரணக் குடிமக்களும் தங்கள் யோசனைகளை வழங்கியுள்ளனர். இது மார்க்கக் கட்டளையாகும். நமது நபிமார்களும் இதைப் பின்பற்றி வந்தனர் ஆலோசனை கேட்பதும் வழங்குவதும் இஸ்லாமியக் கடமை; ஈமானின் ஒரு பகுதி. இதையே நபி(ஸல்) அவர்களுக்கும் இறைவன் தன் திருமறையில் அறிவுறுத்துகின்றான்:
“… (நடைமுறைப் படுத்தவிருக்கும்) எல்லாச் செயல்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! முடிவு செய்து விட்டால் (முடிவை நிறைவேற்றித் தருவதற்கு) நீர் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவீராக …“ (3:159).
உரிமையும் சுதந்திரமும்:
நம்பிக்கை, சுதந்திரம், பேச்சு, சிந்தனை, தொழில், உழைப்பு, பொருளீட்டல், விரும்பியதை ஏற்க, வேண்டாததை மறுக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு. இவை அனைத்தும் இறைவனின் சட்ட வரையரைக்குட்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்தும் பிறருக்கு பயனுள்ள நன்மை பயக்கக் கூடிய விதத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் பிறருக்கு கஷ்டம்-குழப்பம் விளைவிக்காததாக இருக்க வேண்டும். பொதுப் பிரச்சினைகளில் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய இறைச் சட்டத்திற்குட்பட்ட பெரும்பான்மையோரின் கருத்தையே அமல் படுத்த வேண்டும்.
சமுதாய ஒற்றுமை:
“… நீங்கள் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள் …” (3:103).
முஸ்லிம்களிடையே பிளவு, பிரச்சினை ஏற்படும்போது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவற்றைக் களைந்து வேரறுத்து அன்பின் அடிப்படையில் சகோதரர்களாக வாழ வழி வகுக்க வேண்டும்.
“.. உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்தான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் …” (3:103).
அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்த மார்க்கச் சகோதரர்களுடன் மார்க்க விஷயங்களிலும் பொது விஷயங்களிலும் இணைந்து வாழ்ந்து, அடுத்தவரின் உரிமைகள், உடமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்து வாழ்வது ஒரு முஸ்லிமின் சமுதாயக் கடமையாகும்.
கல்வி:
முஸ்லிம்களையும் முஸ்லிம் உலகையும் மார்க்கக் கல்வியிலும் உலகக் கல்வியிலும் முன்னேற்றி வழிநடத்துபவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும்.
“… இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று நபியே நீர் வேண்டுவீராக!” (20:114).
மனிதன் தனது அறிவுச் செல்வத்தை உண்மையான, தீவிரமான தொடரான முயற்சிகள் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் அறிவு நிறைந்தவனாக விளங்க வேண்டும். கல்வி அறிவை முஸ்லிம்கள் அவசியம் தேடிப் பெற்றிட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. “கல்வியைத் தேடியவராக ஒரு வழியில் ஒருவர் நடந்தால் அவருக்கு அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான்” என்று நபி (ஸல்) கூறினார்கள் (முஸ்லிம்-4867).
ஜிஹாத்:
இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள். இது அமைதியான மார்க்கமாகும். எதுவரை என்றால் மற்ற மதத்தவர்கள் முஸ்லிம்களின் மீதோ, இஸ்லாத்தின் மீதோ ஆக்கிரமிப்புச் செய்யாத வரை. அநீதி, முறையற்ற ஆசை, அடக்குமுறை, ஆணவம் உலகில் இருக்கும்வரை போர்களும் போராட்டங்களும் இருக்கும் எனக் குர்ஆன் கூறுகிறது. எனவே இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட, எல்லைகளைப் பாதுகாக்க ஜிஹாதிற்காக முஸ்லிம் சமுதாயத்தை தயார் நிலையில் ஆட்சியாளர்கள் வைத்திருக்க வேண்டும்.
“… நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத (திரைமறைவில் செயல்படும்) வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் நன்கறிவான் …” (8:60).
“… மக்களில் (நன்மை செய்யும் ) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரை அல்லாஹ் தடுக்காவிட்டால் உலகம் சீர் கெட்டுவிடும் …” (2:251).
முடிவுரை:
“மனிதர்களின் அரசன் அல்லாஹ் ஒருவனே!” (114:2).
இறைவனுக்குச் சொந்தமான ஆட்சியையும் அதிகாரத்தையும் அமானிதமாகக் கிடைக்கப் பெற்றவர், ஆட்சியதிகாரத்தை விரும்பிக் கேட்காதவருக்கு அது வழங்கப் பட்டால் அதற்காக அல்லாஹ் உதவி செய்வான் (புகாரி). அல்லாஹ்வின் உதவி கொண்டு குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பின்பற்றி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தைச் செலுத்தி நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, நீதி-நேர்மையை நிலைநாட்டி, சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்து, உறுதி கொண்ட நெஞ்சுடன் எளிதில் யாவரும் அணுகக் கூடியவராகவும் மறுமையில் தனது பொறுப்புப் பற்றிக் கேள்வி கேட்கப்படும் எனும் இறையச்சத்துடன் சிறந்த வழிகாட்டியாக ஆட்சி புரிய வேண்டும். அவரே இஸ்லாமிய ஆட்சித் தலைவர். அவ்வாறான ஒரு தலைவரை உலக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.

26/11/2020

அஸ்ஸலாமு அலைக்கும், · ·
#இஸ்லாத்தின்_பார்வையில்
)
#பைபிளிலிருந்து_வந்ததே RIP(Rest In Peace) என்ற வார்த்தை.
ஒரு மனிதர் இறந்துவிட்டால் இன்று பல முஸ்லிம்களின் வார்த்தை , RIP(Rest In Peace). RIP - ன் அர்த்தம் "பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்" என்பதாகும்.
சரி இது எங்கிருந்து வந்தது என்றால் , கிருஸ்துவர்களிடமிருந்து வந்ததாகும்.
பைபிளில் , #ஏசாயா 57 : #வசனம் 2 ல் ,
"நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்"
என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தைதான் கல்லறைகளில் RIP என்று அவர்கள் எழுதிவைக்கின்றனர்.
ஆகவே பிற மதத்தினுடைய பயன்பாட்டை ஒரு முஸ்லிம் எப்படி பயன்படுத்துவான் ? கண்டிப்பாக இதை பயன்படுத்துவது கூடாது.
மேலும் , இஸ்லாத்திற்கும் அந்த வார்த்தைக்கும் என்ன சம்மந்தம் ? நபிகளார் பயன்படுத்தினார்களா ? அல்லது குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு முரணில்லாமல் உள்ளதா ?
#அமைதியான_உறக்கமா ?
ஒரு மனிதன் இறந்தபின் அவன் அமைதியாக உறங்குகிறானா அல்லது அங்கு வேதனை செய்யப்படுகிறானா என்பதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தாலே தவிர நமக்கு தெரியாது.
அறிவித்து கொடுக்க வஹி இன்றளவும் வருமா என்றால் வரவே வராது என்று நாம் உறுதியாகக் கூறலாம். பிறகு எப்படி கப்ரில் உள்ளவர் அமைதியாக உறங்குகிறார் என்று நாம் கூற முடியும் ?
முதல் அடிப்படையே தவறாக அமைந்துவிட்டது.
நபிகளாரின் காலத்தில் இதை கண்டித்து பல செய்திகளும் உள்ளன.
حدثني زهير بن حرب حدثنا جرير عن العلاء بن المسيب عن فضيل بن عمرو عن عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين قالت توفي صبي فقلت طوبى له عصفور من عصافير الجنة فقال رسول الله صلى الله عليه وسلم: ((أولا تدرين أن الله خلق الجنة وخلق النار فخلق لهذه أهلا ولهذه أهلا)).
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், "அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5174
அத்தியாயம் : 46. (தலை)விதி
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع عن طلحة بن يحيى عن عمته عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه قال: ((أوغير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم)).
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5175
அத்தியாயம் : 46. (தலை)விதி
பல ஹதீஸ்கள் இருப்பினும் இவ்விரண்டே போதுமானதாகும்.
மேற்கூறப்பட்ட இரு ஹதீஸ்களுமே நமக்கு மிகச்சிறந்த உதாரணம்.
ஒரு குழந்தை இறந்தபின் ஆயிஷா(ரலி) அவர்கள் , சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒன்று என்றும் அந்த குழந்தை எந்த தவறும் செய்யவில்லை என்றும் தவறு செய்வதற்குண்டான பருவத்தையும் அடையவில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் நபிகளார் அதை கண்டிக்கிறார்கள்.
குழந்தையாக இருப்பினும் அது சொர்க்கமா நரகமா என்பதெல்லாம் நாம் தீர்மானிக்க முடியாது , தீர்மானிக்கக் கூடாது என்கிறார்கள்.
இப்படியிருக்க இஸ்லாத்தை ஏற்காத , இன்னும் சொல்வதாக இருந்தால் இறைநம்பிக்கையில்லாத ஒருவரைப் பார்த்து அவர் அமைதியாக உறங்குகிறார் என்பதும் மார்க்கத்திற்கு எதிரான செயால்பாடே !
ஒரு மனிதன் இறந்தால் என்ன கூறுவது ?
கடந்த இரு தொடர்களில் (Rest In Peace) கூறுவது கூடாது , அது கிருஸ்துவர்களின் வழக்கம் , ஒரு மனிதன் இறந்தால் அவன் அமைதியாக உறங்குகிறானா இல்லையா என்பது யாருக்கும் தெரியாத விசயம் என்பதைப் பார்த்தோம்.
சரி ஒரு முஸ்லிம் இறந்தாலும் அல்லது முஸ்லிமல்லாதவர்கள் இறந்தாலும் நாம் என்ன கூறவேண்டும் ?
எல்லாவற்றிற்கும் இஸ்லாத்தில் பதில் உள்ளதுபோல இதற்கும் இஸ்லாம் தெளிவாக பதில் சொல்லுகிறது.
ஒரு மனிதனின் இறப்பிற்கு மட்டுமல்ல , ஒரு முஸ்லிமிற்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூட அவன் என்ன கூறவேண்டும் என்பதை குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)
மேற்கூறிய வசனத்தில் மனிதனுக்கு பலவிதங்களில் சோதனைகளை அல்லாஹ் தருகின்றான்.
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏
அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)
ஆனால் எத்தைகைய சோதனைகளை எதிர்கொண்டாலும் ஒரு முஸ்லிமின் வார்த்தை "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்) என்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக மார்க்கத்திற்கு முரணான எந்த வார்த்தைகளையும் கூறுவது கூடாது.
மேலும் அல்லாஹ் கூறுகிறான் ,
اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏
அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!
(அல்குர்ஆன் : 2:157)
என்கிறான்.
இப்படி கூறக்கூடியவர்களுக்குதான் அல்லாஹ்விடமிருந்து நல்வாழ்த்துக்களும் , நல்லருளும் உண்டாகும் என்கிறான்.
எனவே பிற மதத்தின் வார்த்தைகளையோ , மார்க்கத்திற்கு முரணான வார்த்தைகளையோப் பயன்படுத்தாமல் நம்முடைய மார்க்கம் நமக்கு தெளிவாகக் கூறியிருக்கும் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவோம்.
அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களையும் , நல்லருளையும் பெறுவோம்.
#அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருவின் வளர்ச்சியும்  திருக்குர்ஆனின் வார்த்தையும்..."உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சி...
23/10/2017

கருவின் வளர்ச்சியும் திருக்குர்ஆனின் வார்த்தையும்...

"உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்
பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்".....

#உலகபொதுமறை
திருக்குர்ஆன் 22:5

அல்குர்ஆன் மாநில மாநாடு விரைவில்

*பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_கூறிய_வழிமுறை*ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு க...
03/10/2017

*பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_கூறிய_வழிமுறை*

ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள்.

அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவ அறையில் பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவ நேரத்தில் அந்த தண்ணீர்தொட்டியில் அமர வைத்து விடுகின்றனர். குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. தாயும் சிரமமின்றி பிரசவிக்கிறாள்.

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்! - http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118298-normal-delivery-water-birth.html

Proof Wikipedia : Http://ta.m.Wikipedia.org/wiki/நீரில்_பிரசவம்

வீடியோவாக பார்க்க:YouTube சென்று Water birth videos என்றோ Baby under water, Natural water Birth என்றோ தேடி பார்க்கவும்.

இந்த நீருக்குள் பிரசவம் செய்வதை இன்று அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைப் படுத்தியதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

மர்யம் (அலை) என்ற பெண்மணி பிரசவ வலி வந்தது பற்றியும், அப்பிரசவ வலியை குறைக்க இறைவன் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி வலியை குறைத்தாகவும் கீழ் காணும் உலக மக்களின் நேர்வழிக்காட்டியான திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் வசனம்:

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

திருக்குர்ஆன்-19: 23, 24

மர்யம் (அலை) வலியை உணர்ந்த போது ஜிப்ரில் (நீர்) ஊற்றை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகிறார்.

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நடைமுறை சாத்தியம் என விஞ்ஞானம் நிருபித்துள்ளது.

*திருக்குர்ஆன்_மாநாடு*

Address

Tuticorin
Kayalpatnam
628204

Alerts

Be the first to know and let us send you an email when காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன்:

Share