Maranatha Hope Worship Centre

Maranatha Hope Worship Centre Fellowship for people to grow in faith and discipleship as well as disciple making to make an impact

05/10/2024

"What a nation needs more than anything else is not a Christian ruler in the palace but a Christian prophet within earshot" Kenneth K***a

22/08/2024

"The Lord never sacrifices truth at the expense of love; truth matters. But God has no regard for truth that is not accompanied by love" Thomas Schreiner

23/03/2024

"Church discipline is not a group of pious policemen out to catch a criminal. Rather, it is a group of brokenhearted brothers and sisters seeking to restore an erring member of the family"

28/02/2024

God is most glorified in you when you are most satisfied in Him!
John Piper

14/02/2024

மிதமிஞ்சிய கிருபை : ஒரு கழுகுப் பார்வை!

வெளி நாடுகளிலும் தமிழகத்திலும் ஹைப்பர் கிரேஸ் எவ்வாறு பிரசித்தமாய் மாறியது என்பதை நாம் வரும் பதிவுகளில் விளக்கப்போகிறோம். வெளிநாடுகளில் இந்த செய்தியைப் பிரபலமாக்கிய ஐந்து நபர்களையும் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இதைப் பிரபலப்படுத்தும் ஐந்து நபர்களையும் இங்கே நாம் அலசவிருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானோர் செழிப்பு உபதேசத்தையும் தங்கள் பிரதான செய்தியாக அறிவிக்கிறவர்கள் என்பதும் நாம் தெரிய வேண்டிய கூடுதல் தகவல். நாம் பார்க்கப் போகும் இந்த நபர்கள் மத்தியில் ஒத்தக் கருத்து அனைத்து விடயங்களிலும் இல்லை என்றாலும் பொதுவாக அவர்கள் ஒன்று பட்டு வரும் கருத்துக்களை நாம் எடுத்துத் தருவதுடன் சிலருடைய உட்சபட்ச அதிதீவிரக் கருத்துக்களையும் நாம் எடுத்துக்காட்டுவோம். இதற்கு முன்னதாக அதீதக் கிருபை என்பதன் வாயிலாக நாம் என்ன அர்த்தம்கொள்கிறோம் என்கிற கேள்விக்கு நாம் பதில் சொல்ல முயலுவோம்!

அதீதக் கிருபையின் விளக்கம்

இன்று மிதமிஞ்சிய கிருபை என்று நாம் சொல்வது நிகழ்காலத்தில் தங்களைக் கிருபை மட்டும் பேசுகிறவர்கள் என்றும் கிருபையுடன் நாங்கள் எதையும் கலந்து பேசுவதில்லை என்றும் நம்புகிறவர்களைக் குறிக்கும் சொற்றொடராகப் புரிந்து கொள்ள வேண்டியது. கிருபையை மேன்மைப்படுத்தும் நோக்கத்தில் இவர்கள் கிறிஸ்தவத்தின் மற்ற சில முக்கியமான சத்தியங்களைப் புறந்தள்ளும் பாங்கு இருப்பதை நாம் அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. மைக்கேல் பிரௌன் என்னும் அறிஞர் ஹைப்பர் கிரேஸ் என்னும் பதத்தில் முதலில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய நாடுகளில் பெருகி வரும் இந்த உபதேசத்தைக் குறித்த அருமையான ஒரு ஆய்வுப் புத்தகத்தை (*Hyper-Grace: Exposing the Dangers of the Modern Grace Message*) இவர் எழுதியுள்ளார். இவரது புத்தகத்தில் ஹைப்பர் கிரேஸ் என்பதை நேரடியாக வகையறை செய்யாமல் இந்த உபதேசம் குறித்த விவரிப்பு சம்பந்தமான விளக்கத்தையே அவர் தருகிறார். இதற்கு அவர் தரும் காரணம் என்ன? “அவர்களது செய்தி உண்மையான கிருபைக்கும் மேலாகச் செல்கிறது. எனவே அந்த வகையில் இது அதீதமானது என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்” என்கிறார் (பக்கம் 9).

இவருக்கு எதிர்வினையாற்றும் விதத்தில் கிருபை உபதேசிகள் இந்த வார்த்தையைத் தங்களுக்குச் சாதகமான நிலையில் விளக்கம் தரும் போக்கும் இருக்கிறது. உதாரணமாக மைக்கேல் பிரௌன் புத்தகத்திற்குப் பதில் தரும் விதத்தில் பால் எல்லீஸ் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் (*The Hyper Grace Gospel: A Response to Michael Brown and Those Opposed to the Modern Grace Message*). பவுலின் வார்த்தைகளான ரோமர் 5:20 ஐ இவர்கள் எடுத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமாகவே இது இருக்கின்றது என்று அவர்கள் மறுவாதம் செய்கிறார்கள். பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று என்ற பவுலின் இந்த வாசகத்தினை வைத்துப் பார்த்தால் ஹைப்பர் கிரேஸ் என்பது பவுல் சொன்னதற்குப் பாதி நிலைக்குக் கூட வரவில்லை என்கிறார் பால் எல்லீஸ். எனவே இவரின் கூற்றுப்படி ஹைப்பர் கிரேஸ் என்பது அதிகமான, மேலான, மேலதிகத்திற்கும் மேலான ஒன்றாகவே இருக்க வேண்டும் என்கிறார் எல்லிஸ்.

அதீதக் கிருபை உபதேசத்தை அதன் பிரபல உபதேசங்களின் வாயிலாக ஒருமுகப்படுத்தும் முயற்சியை ஆன்ட்ரு நெல்சன் கிறிஸ்டியன் என்கிற அறிஞர் ஒரு ஆய்வுக்கட்டுரை (*Hyper Grace Theology: A Definition and Systematization*) வழியாகச் செய்திருக்கிறார். இவர்தம் ஆய்வில் ஹைப்பர்கிரேஸ் போதனை ஏழு மையக்கூறுகளில் இயங்குகின்றன என்று காண்கிறார். அவை கீழ்கண்டவை: கிறிஸ்து அருளும் இரட்சிப்பின் வெளிப்படையான இயல்பு, புதிய உடன்படிக்கை அடிப்படையிலான விளக்கம், பிரமாணத்திலிருந்து விடுதலை, முழுமையான மன்னிப்பு, புதிய வாழ்வின் இயல்பு, தேவனுடன் உள்ள ஐக்கியம் மற்றும் நற்செய்தியின் விரிவான பிரயோகம் ஆகியன.

நம் புரிதல் என்னவென்றால் அதீதக் கிருபை என்பது கிருபையை அளவுக்கு அதிகமாய் பூரணப்படுத்தும் நோக்கில் அதன் விளைவாக தவறான உபதேசத்திற்கு வழிநடத்திச் செல்லும் அபாயம் கலந்த ஒன்றாகவே இருக்கிறது என்பது தான். ஹைப்பர் என்கிற வார்த்தையின் கிரேக்க மூலப் பதத்திற்கு (ஹூப்பர்) மேலான அல்லது மேலதிக என்கிற அர்த்தம் மட்டுமல்லாமல் இயல்புக்கு அதிகமான அல்லது மாறான என்கிற அர்த்தமும் கொள்ளலாம். எனவே *ஹைப்பர் கிரேஸ் என்பது வேதத்தின் கிருபை வரையறைக்கும் மேற்பட்டு தங்களுக்கு முரணாகத் தோன்றும் நம் கிறிஸ்தவ விசுவாசத்தின் சில முக்கிய சத்தியங்களைத் தவிர்க்கும் போதனாமுறை* என்று நாம் புரிந்துகொள்வது சரியாக இருக்கும்.

*கடந்த சில காலமாகவே உபதேச அடிப்படையிலான பிரசங்கங்கள் நம் சபைகளை விட்டு எடுபட்டு விட்டதைக் காண்கிறோம். முதலில் உபதேசத்திலிருந்து நாம் சிகிச்சைக்குச் சென்றோம். இப்போது சிகிச்சையைக் கடந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவிற்கு நாம் முன்னேறி விட்டோம்* என்கிறார் ஜோசப் மட்டேரா. எனவே அதீதக் கிருபை என்று நாம் சொல்லும்போது இயேசுவோ அல்லது மற்ற வேத எழுத்தாளர்களோ சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கும் அப்பால் மிகைப்படுத்தப்பட்ட உபதேசம் என்றே நாம் அர்த்தம் கொள்கிறோம்.
தொடரும்….
Pr. Gabriel Antonyraj
94864 96706
8838529163

13/02/2024

குற்றவாளிக்கூண்டில் கிருபை?

கிறிஸ்தவம் உலகிற்குத் தந்திருக்கும் மகத்தான மற்றும் தனித்துவமான பங்களிப்பு கிருபை என்கிறார் C. S. Lewis என்னும் கிறிஸ்தவ தத்துவ அறிஞர். கிருபையைக் குறித்த ஆச்சரியம் என்ன? இது தகுதி இல்லாதவர்களுக்கு அருளப்படும் வரப்பிரசாதம். கிறிஸ்துவுக்குள்ளான அற்புத உறவினை விளக்கும் முகமாக பவுல் அதிகம் பயன்படுத்திய சில முக்கிய வார்த்தைகளில் கிருபையும் ஒன்று (அன்பு, விசுவாசம், நம்பிக்கை போன்றவை வேறு சில அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள்). கிறிஸ்துக்குள்ளாகும் இந்த உறவில் நாம் வர அவர் தம் இன்னுயிரையே பலியாகத் தர வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ அடிப்படை விசுவாசத்தின் நடுநிலை நாயகன் கிறிஸ்து இயேசு என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும் அன்றாட விசுவாச வாழ்வில் கிருபையின் உபயோகம் மற்றும் அது குறித்த புரிதல்கள் - விளக்கங்களில் பல்வேறு அர்த்தங்களில் வெளிவந்திருப்பதற்கு சபை சரித்திரம் சான்று தருகின்றது.

கிருபையின் உபதேசங்கள் சபை வரலாற்றில் மிகப்பெரும் முரண்களைச் சந்தித்திருக்கின்றன. கிருபையைப் போன்ற மிக அழகான சத்தியத்தைச் சூழ இந்த முரண்பட்ட காரியங்கள் நிற்கக் காரணம் என்ன? ஜோசப் பிரின்ஸ் நமது எதிராளியாக சாத்தான் மீது கைகாட்டுகிறார். *தேவ சத்தியங்களை முரண்களால் சூழ்ந்து தெளிவற்றதாக்க முயற்சிப்பது பிசாசின் யுத்தி. ஆண்டவருடைய மக்கள் சத்தியங்களின் முழுமையான பலனை அடைய முடியாதபடிக்கு அவைகளைச் சுற்றிலும் தடையானவைகளையும் முரணானவைகளையும் நிறுத்துவது அவனுக்குக் கை வந்த கலை* என்கிறார் அவர்.

இன்று கிருபையின் பிரசங்கியார்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் பிரின்ஸ் போன்ற வெற்றிகரமான பிரபலங்கள் கிருபையை மேம்படுத்திக் காட்டும் போக்கில் வேதம் காண்பிக்கும் மற்ற முக்கியமான சத்தியங்களைப் புறந்தள்ளி விடும் அபாயத்தில் இருக்கின்றனர் என்பதையே எனது ஆய்வு வெளிப்படுத்த முயல்கிறது. வேதம் எடுத்தியம்பும் தனிப்பட்ட பொறுப்புணர்வு, ஒழுக்கம் சார்ந்த கொள்கைகள் குறித்த அளவீடுகள் அதீத கிருபை பேசுகிறவர்கள் பார்வையில் எவ்வாறு காணப்படுகின்றன? என்கிற கேள்விக்கான விடையையும் காண விளைகிறது இந்த ஆய்வு.

கிருபையின் செய்தி தேவ பிள்ளைகளை மதத்தின் பிடியிலும் சுய கிரியைகளின் அடிமைத்தனத்திலும் இருந்து மீட்டு சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றிய கிருபையின் செயலில் நம்பிக்கை வைக்கச் செய்ய வேண்டும் என்பதே. தற்போது கிருபையை வைத்து மிதமிஞ்சிப் போகும் போதகர்கள் சீர்திருத்தவாதிகளான மார்டின் லூத்தர், கால்வின் போன்றவர்களே கிருபையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று கருதுகின்றனர். அவர்கள் நீதிமான்களாகுதலைக் குறித்த சரியான புரிதலில் இருந்தாலும் பரிசுத்தமாகுதல் குறித்த சரியான புரிதல் அவர்களுக்கு இல்லை. அந்த வகையில் சீர்திருத்தவாதிகள் போதுமான சீர்திருத்தம் உடையவர்களாக இருக்கவில்லை என்கிறார்கள்.

அதீத கிருபைப் பிரசங்கங்கள் சமீப காலமாக சமுக ஊடகங்கள் வழியாக மிகத் தாராளமாக உலா வருகின்றன. இளைஞரைக் கவரும் வகையிலான பிரசங்க அணுகுமுறை, மக்களின் வசதிக்கேற்ப கவர்ச்சிகரமான செய்திகளைத் தருதல் போன்றவை காட்டுத்தீ போலப் பரவும் இந்தக் காலத்தில் இவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆராய வேண்டியது அவசியம். *கிறிஸ்தவ உலகில் இந்த உபதேசம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? தேவ ஆலோசனையில் முழுமையையும் போதிக்கிற ஒரு சபையாக இந்த உபதேசத்தை அணுகுவது எப்படி என்கிற கேள்விக்கான பதிலை நாம் கண்டுணர வேண்டியது மிக அவசியம்.*

*சினிமாப் பாடல்கள் கூட நாங்கள் பாடுவோம். ஆனால் பாவத்தைக் கண்டித்து உணர்த்த மாட்டோம் என்கிற போக்கு அதீத கிருபை வட்டாரத்தில் சகஜமாய்த் தோன்றுகிறது.* பரிசுத்தம் குறித்து சபையில் பேசினால் அந்த சபை நியாயப்பிரமாணம் பேசும் சபை. அது பழைய உடன்படிக்கைப் போதனை என்றெல்லாம் முத்திரை குத்துவது மிகவும் இயல்பான ஒன்று தான். இந்த அக்கறை இல்லாத அணுகுமுறை கட்டுப்பாடு இல்லாத வாழ்வுக்கு வழிவகை செய்து விடும் அபாயம் இருக்கிறது. கிருபையைக் குறித்த இத்தகைய புரிதல்கள் பலவகைகளில் வேதத்தின் முழுமையை அங்கிகரிக்கத் தவறுகின்றன. பழைய ஏற்பாடு குறித்த அவர்களது புரிதல்கள், புதிய ஏற்பாட்டிலும் தவிர்க்க வேண்டிய பழைய ஏற்பாட்டுப் போதனைகள் போன்ற விளக்கங்கள் எல்லாம் வேதத்தின் அடிப்படையில் ஏற்புடையது தானா? நமது சமகாலத்திற்கும் முன்பாக ஈராயிரம் ஆண்டுகால வேத போதனைப் புரிதல்களின் தொடர்ச்சியாகவே இந்தப் போதனை இருக்கிறதா என்கிற கேள்விகளை எழுப்பி நாம் பதில் பெற வேண்டியது அவசியம்.

அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பல கேள்விகளை இந்த உபதேசம் எழுப்பினாலும் ஏன் அநேகர் இதில் ஈர்க்கப்படுகிறார்கள்? இந்த செய்தி எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. விடுதலை உணர்வைத் தருகிறது. நவீன வாழ்வு முறைகளைப் பிரதிபலிக்கிறது. கேட்கிறவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. இந்த செய்தியைப் போதிக்கிறவர்கள் நவநாகரீக வியாபார நுணுக்கங்களை தங்கள் பிரசங்க பீடங்களிலும் சபைகளிலும் அருமையாய் நடைமுறைப்படுத்துகின்றனர். கடந்த சில தசாப்தங்களில் பெரும்பாலான செய்திகள் தனி மனித மகிமையைப் புனிதப்படுத்தி விட்டன. சுயத்தை வெறுப்பது, சத்தியத்திற்கேற்ற பரிசுத்த வாழ்வு, மெய்யான சீஷத்துவம் போன்றவை அலமாரிகளில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய தூசி படிய மட்டுமே தகுதியான பாரம்பரியக் கருத்துக்கள். அவை இந்தக் காலத்துக்கு உதவாத போதனை என்கிற பாங்கு பெருகி வருகிறது.

கிருபைப் பிரசங்கிகள் என்று தங்களை மேன்மையாக அழைத்துக்கொள்பவர்கள் மற்ற சபை போதனைகளை நியாயப்பிரமாணப் பிரசங்கம் என்றும் குற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் அடிமைத்தன முயற்சி என்றும் கிரியைகளை மட்டுமே நம்பி இருக்கும் போதனைகள் என்றும் பட்டம் சூட்டி அகமகிழ்கின்றனர். சபைக்கு ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புத்திமதிகளே அவசியமற்றது என்பது போன்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்துவதில் காணும் வெற்றி ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதையும் நாம் கவனித்தில் எடுக்க வேண்டியது முக்கியம். இவர்களை ஏற்றுக்கொள்ளாத மற்ற சபைகள் வெறும் மனித நியமங்களையும் பாரம்பரியக் கட்டுகளையும் மட்டுமே போதிக்கின்றன என்பது அவர்களின் சாடல்.

ஒரு நவீன கிருபை பிரசங்கியார் பழைய ஏற்பாடு கிறிஸ்தவ வேதாகமத்தில் இருப்பதை மிகப்பெரிய தவறாக நினைக்கிறார். பழைய ஏற்பாட்டின் எந்தச் செய்தியும் இன்றைய விசுவாசியைக் கட்டுப்படுத்தாது. ஏன், புதிய ஏற்பாட்டில் கூட சிலுவைக்கு முன்னால் உரைக்கப்பட்ட போதனைகள் நமக்கு உரியவைகள் அல்ல! கிருபைக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரமாண விரோதப் போக்கு இவர்களின் எழுத்துக்களிலும் பேச்சுகளிலும் மேலோங்குகிறது. இந்த அளவிற்கு நியாயப்பிரமாணம் என்பது மிக மோசமான, சொல்வதற்கும் தகுதியில்லாத ஒன்றாகப் பார்க்க வேண்டியதாகப் பவுலோ மற்ற அப்போஸ்தலர்களோ எழுதினார்களா?
எந்த நிபந்தனையும் இல்லாமல் கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். ஏற்றுக்கொள்கிறார் என்கிற செய்தி உண்மையில் விசுவாசிக்கு அருமருந்தாக அமைகிறது. எனினும் அவர் நம்மில் நிபந்தனை அற்ற அன்பு வைத்திருக்கிறார் என்கிற நம்பிக்கையின விளைவாக நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டிய அவசியமே இல்லை என்று சாதிக்க என்ன அவசியம் இருக்கிறது? ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாய் இருக்கிறான். தேவன் அவனைப் பார்ப்பது கிறிஸ்துவைப் போன்றே பார்க்கிறார் என்பதால் அவன் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரமாய் நடக்க வேண்டும் என்று போதிப்பதே தேவையற்றதாகக் கருதுவது எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும்?
அதீதக் கிருபை உபதேசிகள் ஒழுக்கக்கேடான வாழ்வை ஊக்கப்படுத்தவில்லை. அதிலும் அநேகர் இந்த உபதேசத்திற்குப் பின்பு தான் தாங்கள் அதிகம் பரிசுத்தமாக வாழ்வதாகவும் அதிகம் ஆண்டவரிடம் நெருங்கி வாழ்வதாகவும் சான்று பகிர்கின்றனர். அவ்வாறு நடந்தால் அது பாராட்டப்படத்தக்கதே. அதே வேளையில் கண்டிக்க வேண்டிய கடமையை நான் செய்யாமல் வெறுமனே உற்சாகமூட்டும் கிளர்ச்சி செய்திகளை மட்டுமே நாம் கொடுத்துக் கொண்டே இருந்தால் விசுவாசிகள் மனந்திரும்பாமல் பாவத்திலேயே தொடர்வதற்கான வழிமுறையை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதே?

*செழிப்பையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் இந்த அதீதக் கிருபை செய்தி வேதம் போதிக்கும் சீஷத்துவம் பரிசுத்தமாகுதல் மற்றும் அருட்பணியின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது*.
*தொடரும் ….*
Pr. Gabriel Antonyraj
9486496706
8838529163

13/02/2024

பெரும் புயலில் அறிவிக்கப்படாதோர் கூட பெருமூச்சு விட்டனர். அழைப்புப் பெற்றவன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். இதுவே இன்றைய சபைகளின் நிதரிசனமான நிலை. தன்னைச் சுற்றிலும் எழும் புயலை உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் சபையே, நீ எழும்பு. உன் நிலையை எப்போது நீ உணர்வாய்?
மத் 24:29-31
"ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். எங்களுடைய மிகுந்த தேவை நீரே"

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கரூர் மாரநாதா சபையைச் சார்ந்த திரு. வேலுசாமி - திருமதி. கவிதா தம்பதியின் குமாரத்தி கிளாட...
28/03/2023

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கரூர் மாரநாதா சபையைச் சார்ந்த திரு. வேலுசாமி - திருமதி. கவிதா தம்பதியின் குமாரத்தி கிளாடிஸ் ஜோஸ்பினுக்கு நாளை காலை 8:30 மணி அளவில் இருதய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அவள் பிறந்து ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் ஆகிறது. இந்த சிகிச்சையில் தேவ கரம் வெளிப்பட, சிகிச்சை வெற்றிகரமாக நடக்க ஊக்கமாக ஜெபிக்க வேண்டுகின்றேன். கிளாடிஸ் பெற்றோருக்காகவும் குறிப்பாக ஜெபிக்க வேண்டுகிறேன்.

24/03/2023
23/03/2023

Address

Velusamypuram 3rd Cross
Karur
639002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maranatha Hope Worship Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share