Christian Arts and Literary Association,Karaikal

Christian Arts and Literary Association,Karaikal Its is the Platform for the Talented Christians to Shine in the Society....... Rev. Msgr.

CALL (Christian Arts and Literary Association, Karaikal) is blessed and inaugurated by the Arch – Bishop of Pondicherry and Cuddlore, the Most Rt. Dr. Anthony Anandarayar on 02/12/2012

CALL is formed for the welfare of Christians in general and talented Christians in Arts – Fine Arts and Literature in particular.

Friday of the Second Week of Lent | Blog | Order of Carmelites
15/03/2019

Friday of the Second Week of Lent | Blog | Order of Carmelites

GOSPEL Jesus said to the chief priests and the elders of the people: “Hear another parable. There was a landowner who planted a vineyard, put a hedge around it, dug a wine press in it, and built a tower. Then …

13/07/2017
01/03/2017

"நான், இனி, இவ்வுலகில், ஒரு சாதாரண திருப்பயணி " – முன்னாள் திருத்தந்தை

மார்ச்,01,2017. "வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் நான், இனி, இவ்வுலகில் ஒரு சாதாரண திருப்பயணி. திருஅவைக்காக செபிப்பது என் முக்கியப்பணி" என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன், பிப்ரவரி 28ம் தேதி கூறினார்.
2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை துறப்பதாகக் கூறியத் திருத்தந்தை, வத்திக்கான் பாப்பிறை இல்லத்திலிருந்து பிப்ரவரி 28 மாலை கிளம்பி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவின் மேல்மாடத்தில் தோன்றி, அங்கு கூடியிருந்த மக்களை, திருத்தந்தை என்ற முறையில், இறுதி முறையாகச் சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப்பொறுப்பைத் துறந்த 4ம் ஆண்டு நிறைவன்று, அவருக்காக, உலகின் பல நாடுகளிலும், சிறப்பான செபங்களை எழுப்பி வரும் பல்வேறு குழுக்கள், இச்செவ்வாயன்று தங்கள் செபங்களை வலைத்தளங்கள் வழியே பகிர்ந்துகொண்டனர் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
மேலும், இவ்வாண்டு ஏப்ரல் 16ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் 90வது வயதை நிறைவு செய்யவிருக்கும் வேளையில், அவருக்காக சிறப்பான செபங்களையும், நன்றியையும் கத்தோலிக்க வலைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

போலந்து கர்தினால் Macharski இறைபதம் சேர்ந்தார்ஆக.,02,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகர் முன்னாள் பேராயர் கர்தினால் Fr...
02/08/2016

போலந்து கர்தினால் Macharski இறைபதம் சேர்ந்தார்
ஆக.,02,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகர் முன்னாள் பேராயர் கர்தினால் Franciszek Macharski அவர்கள், இச்செவ்வாய்க்கிழமை காலை இறைபதம் சேர்ந்தார்.
கர்தினாலின் மறைவு குறித்து, போலந்து விசுவாசிகளுக்கும், திருஅவைத் தலைவர்களுக்கும், மறைந்த கர்தினாலின் உறவினர்களுக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, கிரக்கோவின் தற்போதைய பேராயர் கர்தினால், ஸ்தனிஸ்லாவ் ஜீவிச் அவர்களுக்குத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கிரக்கோவ் பெருமறைமாவட்டத்தை 2005ம் ஆண்டுவரை வழி நடத்திச் சென்ற கர்தினால் மக்சார்ஸ்கியின் அர்ப்பண வாழ்வு குறித்து இத்தந்திச் செய்தியில் தன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்கு செபிப்பதாக உறுதிகூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அண்மைத் திருப்பயணத்தின்போது, கடந்த வியாழனன்று, கிரக்கோவ் மருத்துவமனையில் நோயுற்றிருந்த கர்தினால் Macharski அவர்களை நேரில் சென்றுப் பார்த்து, அவருக்காக செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
89 வயது நிரம்பிய கர்தினால் Macharski அவர்களின் மறைவோடு, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 211 ஆக குறைந்துள்ளது, இதில் 112 பேர், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டோர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

பானமா நாட்டில், 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்ஜூலை,31,2016. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் இறுதித் திருப்...
01/08/2016

பானமா நாட்டில், 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்
ஜூலை,31,2016. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் இறுதித் திருப்பலியில் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை:
உலக இளையோர் நாள் நிகழ்வுகளை, திறம்பட ஏற்பாடு செய்திருந்த கர்தினால் Stanisław Dziwisz அவர்களுக்கும், உடன் உழைத்த அனைவருக்கும் நெஞ்சார நன்றி கூறுகிறேன். இந்நாட்களில், கிரக்கோவ் நகரில் நிலவிய உற்சாகத்தை, புனித 2ம் ஜான்பால், விண்ணகத்திலிருந்து கண்டு மகிழ்ந்திருப்பார்.
உலகினர் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உணர்வை இந்நாட்களில் நாம் இங்கு உணர்ந்தோம். செபத்தின் வல்லமையை நாம் உணர்வதற்கு இறைவன் துணை செய்தார். இந்நாட்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளை இழந்துவிட வேண்டாம் என்று, அன்னை மரியா உங்களுக்கு நினைவுறுத்துகிறார்.
1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புத முயற்சி, அடுத்த இரு ஆண்டுகள், மறை மாவட்ட அளவில் உலகெங்கும் தொடர்ந்து நடைபெறும். 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் நிகழ்வுகள், பானமா நாட்டில் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரியன்னையின் பரிந்துரையோடு, தூய ஆவியாரின் வழி நடத்துதலுக்காக நாம் மன்றாடுவோம். நம் அனைவரையும் அவர் இறைவனின் இரக்கத்தைப் பறைசாற்றும் தூதர்களாக மாற்றுவாராக!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/07/2016
அனைத்து மதங்களும் பங்குகொள்ளும் தேசிய கலந்துரையாடல் அவசியம்ஜூலை,12,2016. மதத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை இரத்து செய...
13/07/2016

அனைத்து மதங்களும் பங்குகொள்ளும் தேசிய கலந்துரையாடல் அவசியம்
ஜூலை,12,2016. மதத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்னர், அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய, தேசிய அளவிலான ஒரு கலந்துரையாடல் அவசியம் என, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் ஒவ்வொரு மதத்திற்கும் உரிய சட்டங்களுக்குப் பதிலாக, எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை அமைப்பதற்கு, இந்திய சட்டக் குழுவை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மாதத்தில் கேட்டுள்ளதையடுத்து இவ்வாறு கூறியுள்ளனர் கத்தோலிக்க ஆயர்கள்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவின் ஒற்றுமை, குறையற்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பொதுவான சட்ட விதிமுறையைக் கொண்டுவருவது குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல் அமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரத்தின் அடிப்படையிலும், பல்வேறு மதத்தவரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையிலும் இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.
திருமணம், திருமண முறிவு, சொத்துரிமை, தத்து எடுத்தல் போன்ற விவகாரங்களில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பார்சி மதத்தவர்க்கு வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால், சீக்கியர்கள், புத்தர்கள் மற்றும் ஜைனர்கள், இந்துக்களுக்குரிய சட்டங்களைப் பின்பற்றுகின்றனர்.
இந்தியாவில் அனைத்து குடிமக்களும், எந்த மதத்தையும் அறிக்கையிட்டு, அதனைப் பரப்புவதற்கு அரசியல் அமைப்பு அனுமதிக்கின்றது என்றும், இந்த அடிப்படை சுதந்திரத்தை எந்தச் சட்டமும் நீக்க முடியாது என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

14/06/2016
மலைப்பொழிவு கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில் வழிநடத்துகின்றதுஜூன்,06,2016. பேராசை, தற்பெருமை மற்றும் தன்னலத்தின் பாதைகளை விலக்...
06/06/2016

மலைப்பொழிவு கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில் வழிநடத்துகின்றது
ஜூன்,06,2016. பேராசை, தற்பெருமை மற்றும் தன்னலத்தின் பாதைகளை விலக்கி வாழும்பொருட்டு, கிறிஸ்தவர்கள், இயேசுவின் மலைப்பொழிவுப் போதனைகளைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தேயு நற்செய்தியின் இயேசுவின் மலைப்பொழிவுப் பகுதியை, தன் மறையுரைக்குச் சிந்தனையாக எடுத்துக்கொண்டு பேசினார்.
கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில் சுடர்விடும் வழிகாட்டிகளாக, இயேசுவின் பேறுபெற்றோர் மலைப்பொழிவுப் போதனைகள் பயன்படுத்தப்படலாம் என்றுரைத்த திருத்தந்தை, லூக்கா நற்செய்தியாளர், இயேசுவின் மலைப்பொழிவு பற்றிச் சொல்லும்போது, நான்கு ஐயோ கேடுகள் பற்றிச் சொல்வதையும் குறிப்பிட்டார்.
செல்வங்கள் நல்லதே, ஆனால் செல்வத்தின்மீது பற்றுக்கொள்வதே, சிலைவழிபாடாக மாறுகிறது என்றும், தற்பெருமை கொள்வது, ஒருவரை முக்கியமானவராக உணரச் செய்கின்றது மற்றும் தான் சரியான பாதையில் செல்வதாக உறுதியளிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இறுமாப்பு கொள்வதன் ஆபத்து பற்றியும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நான் இதயத்தில் தாழ்ச்சியுள்ளவர் என்று இயேசு சொல்வதை நினைவுபடுத்தி, தாழ்மையுள்ள இதயம், இயேசுவுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

24/02/2016

"In the earthly liturgy we share in a foretaste of that heavenly liturgy which is celebrated in the Holy City of Jerusalem toward which we journey as pilgrims...” – CCC 1090

"The Mass—and I mean every single Mass—is heaven on earth.” – The Lamb's Supper (S Hahn)

Address

14/1 Veerasamy Naicker Street
Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christian Arts and Literary Association,Karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christian Arts and Literary Association,Karaikal:

Share