Masjidur Rahman kidc

Masjidur Rahman kidc அல் ஹகீம் ஆன்லைன் மக்தப் மதரஸா

மஸ்ஜிதுர் ரஹ்மான் மக்தப் மதரஸாவின் கோடைகால வகுப்பு-2025விண்ணப்பம்பெயர்:-.....................தந்தை பெயர்:-.......முகவரி:...
17/04/2025

மஸ்ஜிதுர் ரஹ்மான் மக்தப் மதரஸாவின் கோடைகால வகுப்பு-2025

விண்ணப்பம்

பெயர்:-.....................
தந்தை பெயர்:-.......
முகவரி:-...................
செல் நம்பர்:-......................

📚பாடத்திட்டம்:-

1.இஸ்லாமிய அடிப்படைக் கல்வி

2.சூரா மனனம் அதன் தஃப்சீர்

3.துஆ மனனம் அதன் பொருள் மற்றும் நன்மை

🗓️நாள்:-
மே 1 முதல் 25 வரை மட்டுமே

🕞நேரம்:-
காலை 9:30 மணி முதல் லுஹர் தொழுகை வரை

📌கோடைக்கால வகுப்புகான ஃபீஸ் -500₹ கட்டாயம் (ஒரு பிள்ளைக்கு)

📌வயது வரம்பு:-

⚡ஆண் பிள்ளைகள் 3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே

⚡ பெண் பிள்ளைகள் 3 வகுப்பிலிருந்து....

குறிப்பு:-

📍விண்ணப்பம் வருகின்ற 25 ஆம் தேதி மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு நடக்கும் கோடைக்கால வகுப்பு அறிமுக நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

சில நிபந்தனைகளோடு தான் இந்த கோடைக்கால வகுப்பு ஆரம்பிக்கிறோம்.

உங்கள் பிள்ளைகளை சேர்த்து விட விரும்பினால் 9524148456 என்ற நம்பருக்கு உங்கள் பிள்ளையின் பெயரை போட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நிபந்தனைகள் அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகளை படித்து விட்டு பெற்றோர்களாகிய உங்களுக்கு OK என்றால்,

இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று வாக்குறுதி கொடுத்து நீங்கள் வாங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்து போட்டு வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நேரில் பெற்றோர்கள் மஸ்ஜிதுர் ரஹ்மான் -KIDC பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.அதற்கு மேல் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ள படாது.

மேலும் கோடைக்கால வகுப்பு சம்மந்தமான தகவலுக்கு மட்டும்:-
9524148456

📍எத்தனை உபதேசங்கள்.அல்லாஹூ அக்பர் 📍 எத்தனை படிப்பினைகள். அல்லாஹு அக்பர் 📍 எத்தனை மரணங்கள். அல்லாஹ் அக்பர்.📍 எத்தனை இறைவன...
12/02/2025

📍எத்தனை உபதேசங்கள்.
அல்லாஹூ அக்பர்

📍 எத்தனை படிப்பினைகள். அல்லாஹு அக்பர்

📍 எத்தனை மரணங்கள். அல்லாஹ் அக்பர்.

📍 எத்தனை இறைவனின் சோதனைகள் கண்கள் முன். அல்லாஹு அக்பர்.

📍 எத்தனை பேர் பார்க்க முடியாமல்,பேச முடியாமல், நடக்க முடியாமல் ஆரோக்கியம் அற்ற நிலையில். அல்லாஹு அக்பர்.

ஆனால்,,,,

என்னிடத்திலும், என் குடும்பத்திலும், என் பிள்ளையிடத்திலும் எந்த மாற்றமும் இல்லையே!!!

பத்து வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தொழுகை கட்டாயக் கடமை என்று தெரிந்தும்

காலை பொழுதில் அல்லாஹ்விற்கு மாறு செய்தவனாக

தொழுகையை விட்டவனாக அல்ல புறக்கனித்தவனாக

ஷைத்தானின் கழிவறையாக எழுகிறேனே!!!
அல்லாஹு அக்பர்.

📍படுத்தவர்கள் எழ முடியவில்லை

இது தான் வாழ்க்கை

📍எழுந்தவர் உண்ண முடியவில்லை

இது தான் வாழ்க்கை

📍உண்ண உட்கார்ந்தவர்கள் உண்டு முடிக்க வில்லை

இது தான் வாழ்க்கை

📍சென்றவர் வீடு திரும்ப வில்லை

எத்தனை எத்தனை. என் கண் முன்னே........

என் உள்ளம் கடந்த,மறந்து, ஈமானை இழந்து சென்று விடுகிறதே.....

என் உள்ளம் இறைவனை காலை பொழுதில் தொழாத உள்ளமாக , கறை படிந்த உள்ளமாக , நன்றி கெட்ட உள்ளமாக , இறந்து போன உள்ளமாக மாறி விட்டதா???
அல்லாஹு அக்பர்.

என்னில் எத்தனை எத்தனை கேள்விகள்.

என்னில் எத்தனை எத்தனை அந்த ரப்புக்கு மாறு செய்யும் செயல்கள்.

📍நபி தோழர்கள் உயிரை இழந்தார்கள்

இந்த மார்க்கத்திற்காக

நான் தயாரா❓

📍நபி தோழர்கள் குடும்பத்தை இழந்தார்கள்.

இந்த மார்க்கத்திற்காக

நான் தயாரா❓

📍நபி தோழர்கள் தன் உடல் உறுப்புகளை இழந்தார்கள்

இந்த மார்க்கத்திற்காக

நான் தயாரா❓

என்னால் தூக்கத்தை கூட தூக்கி எறிய முடியவில்லையே.............

📍நான் உண்மையாக ரப்பை நேசிக்கிறேனா❓

📍நான் உண்மையாக என் நபியை நேசிக்கிறேனா❓

📍நான் உண்மையாகவே இந்த மார்க்கத்தை தான் நேசிக்கிறேனா❓

😭எனக்கு நானே நான் என்னிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி❓❓❓❓❓❓

நாளை மறுமையில் என் ரப்புலாலமீன் விசாரணைக்கு முன் என்னை நானே இங்கு விசாரணை செய்து

என் வாழ்க்கையை சீர் படுத்தி கொண்டு

மார்க்க கல்வியை கற்று

அதன் அடிப்படையில் கடமையாக்க பட்ட ஐவேலை தொழுகையை தொழுது மரணிக்க கூடிய பாக்கியத்தை வல்ல ரஹ்மான் எனக்கு வழங்குவானாக.
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

காலை பொழுதில் வல்லோனை வணங்காமல் எழும் எவறும் வல்லாஹி வெற்றி பெற முடியாது
👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼என்ற இறுதி வரியை பதிவு செய்து

உபதேசத்தை புறக்கணிக்கும் சமூகத்தை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என்று பிராத்தனை
🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼 செய்து எனக்கான இந்த நஸிஹதை முடிக்கிறேன்.

வெளியீடு:-
மஸ்ஜிதுர் ரஹ்மான் -KIDC,
காரைக்கால்.

꧁༺மஸ்ஜிதுர் ரஹ்மான்-KIDC༻꧂          வழங்கும் மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 🗓️நாள்:-21-02-2025...
11/02/2025

꧁༺மஸ்ஜிதுர் ரஹ்மான்-KIDC༻꧂
வழங்கும்

மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

🗓️நாள்:-
21-02-2025

🕰️நேரம்:-
மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு

🎤தலைப்பு:-
குடும்பத்தைச் சீர்திருத்தும் நபிவழிகள்

🖊️ஆசிரியர்:-
உஸ்தாத் அபூ நசீபா MF அலீ
(வாவ் அகாடமி, குகைவாசிகள்)

📍இடம்:-
மஸ்ஜிதுர் ரஹ்மான் -KIDC,
லத்திஃப் நகர்,
காரைக்கால்.

✨அனைவரும் இதில் கலந்து கொள்ளுங்கள்:

📞மேலும் தொடர்புக்கு:-
94431 87805
94435 35246

﷽꧁༺சந்தா கொடுத்து உதவுங்கள்༻꧂நமது காரைக்கால் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் பணிகளை தாங்கள் அறிந்த ஒன்றே....அல்லாஹ்விற்காக ப...
02/02/2025



꧁༺சந்தா கொடுத்து உதவுங்கள்༻꧂

நமது காரைக்கால் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் பணிகளை தாங்கள் அறிந்த ஒன்றே....

அல்லாஹ்விற்காக பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
الحمد لله
அந்த பணிக்கு அடிப்படையான ஒரு தேவை தான் அல்லாஹ்வின் உதவியால் மாதம் மாதம் நீங்கள் கொடுக்கும் சந்தா.

அது பல அழைப்பு பணிகளின் தேவையை பூர்த்தி செய்ய, மஸ்ஜித் சார்ந்த பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

எனவே நன்மையை நாடி உங்களால் முடிந்த மாத சந்தாவை‌ நமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் G PAY நம்பருக்கு அனுப்பி விடுங்கள்:-
9524148456
அனுப்பிய பின் அதே நம்பருக்கு ஸ்கிரின் சாட் எடுத்து அனுப்பி விடுங்கள்.

#மஸ்ஜிதுர் ரஹ்மான்,
காரைக்கால்.

بسم الله الرحمن الرحيمஅனுப்புநர்:-மஸ்ஜிதுர் ரஹ்மான்-KIDC,லத்திஃப் நகர்,காரைக்கால்.பெறுநர்:-மதிப்பிற்குரிய சகோதர-சகோதரிகள...
24/01/2025

بسم الله الرحمن الرحيم

அனுப்புநர்:-
மஸ்ஜிதுர் ரஹ்மான்-KIDC,
லத்திஃப் நகர்,
காரைக்கால்.

பெறுநர்:-
மதிப்பிற்குரிய சகோதர-சகோதரிகள்,
அல்லாஹ்வின் நல்லடியார்கள்,
காரைக்கால்.

மதிப்பிற்குரிய சகோதர- சகோதரிகளே!

இந்த கடிதம் உங்களை உடல் ஆரோக்கியத்தோடு வந்து சந்திக்கட்டுமாக...

அல்லாஹ்வின் இல்லம் உருவாக்கப்படுவது அல்லாஹ்வைப் பற்றிய கல்வியை படிப்பதற்கு. அதற்காகவே இந்த மஸ்ஜிதுர் ரஹ்மான் ரஹ்மான் பள்ளி உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் இந்த பள்ளியில் மார்க்க வகுப்பு நாம் ஏற்பாடு செய்கின்றோம். அதன் அடிப்படையில் வருகின்ற ரமலானை முன்னோக்கி பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் மிக முக்கியமான ஒரு மார்க்க கல்வி அமர்வு ஏற்பாடு செய்துள்ளோம்.

அல்லாஹ்விற்காக இதில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

மேலும் இந்த கல்வி அமர்வை பற்றி பிற மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மரணத்திற்கு முன் அல்லாஹ்வின் மார்க்க கல்வியை அறிந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

இப்படிக்கு
மஸ்ஜிதுர் ரஹ்மான்-KIDC,
காரைக்கால்.

15/01/2025

எரிமலையின் நெருப்பை டம்ளர் தண்ணீரால் அனைக்க முடியாது

ஒரு தீ குச்சியின் நெருப்பை ஒரு வாலி தண்ணீரால் இலகுவாக அனைத்து விடலாம்.

நம்மிடம் நன்மை வாலி தண்ணீரை போன்றும்

மனிதன் என்கிற அடிப்படையில் தீமை தீக்குச்சி போன்றும் உள்ளதா

நன்மை தீமையை அழிக்குமா??

மரணத்திற்கு முன் நன்மையை சேகரிப்போம்.

அதில் முதன்மையானது மார்க்க கல்வியை தேடுவது.

அதன் அடிப்படையில் வருகின்ற 17 ஆம் தேதி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடக்கும் மிக முக்கியமான கல்வி அமர்வில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த தகவலை முடிந்த வரை பிற மக்களுக்கு கொண்டு போய் சேருங்கள்.

இப்படிக்கு
மஸ்ஜிதுர் ரஹ்மான் -KIDC

Address

Karaikal

Telephone

+919524148456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidur Rahman kidc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share