Our Lady of Assumption Church -Mathiravilai

Our Lady of Assumption Church -Mathiravilai தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை

மாத்திரவிளை, புனித ஆரோபண அன்னை ஆலய வரலாற்றினை நோக்கி ஓர் பயணம்

படைப்புத்தலைவனாம் இறைவனின் மகிமையைப் பறைசாற்றும் குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும் மகுடம் தரித்து மகிழும் ஏற்றமிகு நிலமாகி காண்பவர் கண்களை கவர்ந்து வளம் பலப் பெற்றுத் திகழ்வது குமரிமாவட்டம், எழுத்துக்கள் தோன்றி எண்ணங்கள் ஏற்றம் பெற்று இறைவனை போற்றும் மதங்கள் வளர்ந்த மலர்ப்பூங்காவும் இதுவே. இஸ்ரயேல் மன்னன் சாலமோன் காலத

்திலேயே குமரிமாவட்ட மக்கள் அந்நாட்டுடன் தொடர்பு வைததிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். குழந்தை யேசுவை சந்திக்க சென்ற கீழ்த்திசை நாட்டு மன்னரில் ஒருவர் சேரமான் பெருமாள் என்றும் கூறப்படுகிறது,.

அந்த வழியில் அண்டிவந்தோரை அரவணைக்கும் அன்னையாக அருள் நிறைந்தவளே, ஆரோபண அன்னையே. இறைவனின் தாயே என்று மதவேறுபாடின்றி திருயாத்திரையாக வருகைதந்து அன்னை வழியில் இறைவனை வழிபடும் புனித ஆரோபண அன்னை ஆலயம் கோட்டாறு மறைமாவட்டத்தில் முளகுமுடு மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மாத்திரவிளையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த திருத்தலமாகும்.
பாரம்பரியம்

அன்று பட்டன்காடு என அழைக்கப்பட்ட மாத்திரைவிளையில் பட்டன்நாடார் என்பவர் பனை ஓலை வேய்ந்த நாலுகட்டு வீட்டில் தனது நான்கு புதல்வர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டு முன்பகுதியில் பத்திரகாளி கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். அவரது மக்களில் ஒருவர் வடக்கன்குளத்தில் தோன்றி நமது மறைமாவட்டத்தில் பல உள்நாட்டுப் பகுதிகளில் மீட்பர் கிறிஸ்துவின் விதையை துாவிய புண்ணியவதி அருளாயி வழியாக வடக்கன்குளம் சென்று திருமுழுக்குப் பெற்று சத்தியகுட்டி எனப்பெயர் மாற்றம் பெற்றார். சிறிது காலத்தில் புண்ணியவதி அருளாயி முயற்சியால் சத்தியகுட்டியின் குடும்பத்தினர் கிறிஸ்தவராயினர். தங்கள் வீட்டு முன்பகுதியிலிருந்து பத்திரகாளி கோயிலை அகற்றிவிட்டு அங்கு இரட்டை ச் சிலுவையை தோமையார் காலச் சிலுவை நட்டுவைத்து ஜெபவழிபாடு நடத்தி வந்தனர்
மாத்திரைவிளையில் பெயர்க்காரணம்

அன்னை அவர்கள் ஆலயம் அமைத்து அதிலே குடியமர்த்தினால் துாய ஆரோபண அன்னை பவனியாக வந்து தன்னுடைய மக்களைக் கண்ணின் கருவிழிபோல் காத்து வழிநடத்தினார்கள். எனவே மாதா யாத்திரை செய்யும் விளை என்று கூறப்பட்டது, நாளடைவில் அது மருவியே மாத்திரைவிளை எனப்பெயர் ஏற்பட்டது,
வழிபாட்டின் முதல் ஆலயம்

கி. பி 1435ல் குருசடியாகத் தோன்றி 1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயமாக உருவெடுத்தது, ஆலயத்தைச் சுற்றிலும் இரவில் விளக்கு வைப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்ட தீப விளக்குக் துாண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த விளக்குத் துாண்கள் சமீபகாலமாக வரை தற்போதைய ஆலய வளாக வீதியில் இருந்து வந்தன.

கி,பி 1555ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக புதுப்பிக்கப்பட்டது இக்காலகட்டத்தில் உழைக்கும் மக்கள் உயர்சாதியினரால் கொடுமைபடுத்தப்பட்டனர். உரிமைகள் மநறுக்கப்பட்டன. அந்த நேரத்தில் இவ்வட்டார மக்கள் ஒன்றுபட்டுப் போராடினர். துணிந்து நின்று மேல்சாதிகாரரின் ஆதிக்கத்தை எதிர்த்தனர். இந்த விடுதலை போரட்டத்திற்கு கிறிஸ்தவர்களே காரணம் எனப் பொய்க்குற்றம் சாட்டினதோடு சமுக விரோதிகளால் மாதா ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் கல்லில் செதுக்கப்பட்டிருந்த சிலுவையும் விளக்குக் கூடும் மட்டுமே மிஞ்சின உள் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சொருபம் எங்கும் காணப்படவில்லை

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!🎄✨கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழா உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும்அன்பு, அமைதி, மகி...
25/12/2025

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!🎄✨
கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழா உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும்
அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்த ஆசீர்வாதங்களை
அள்ளித் தரட்டும்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளும், ஆரோபண அன்னையின் பாதுகாப்பும்
எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் 🙏

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயம் 🙏🏻🙏🏻🙏🏻
11/09/2025

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயம் 🙏🏻🙏🏻🙏🏻

மாத்திரவிளை  புனித ஆரோபண அன்னை ஆலய பெருவிழா தேர் பவனி  #தினகரன்  #தினமலர்  #தினத்தந்தி  #தமிழ்முரசு
17/08/2025

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பெருவிழா தேர் பவனி
#தினகரன் #தினமலர் #தினத்தந்தி #தமிழ்முரசு

ஆரோபண அன்னை 🙏🙏
15/08/2025

ஆரோபண அன்னை 🙏🙏

அன்னையின் தேர் 🙏
15/08/2025

அன்னையின் தேர் 🙏

ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா பத்தாம் திருவிழா - தேர்ப்பவனி
15/08/2025

ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா பத்தாம் திருவிழா - தேர்ப்பவனி

Address

Our Lady Of Assumption Church/Mathirvilai
Kanyakumari
629804

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Assumption Church -Mathiravilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady of Assumption Church -Mathiravilai:

Share