சிவன்மலை ஆண்டவர்

சிவன்மலை ஆண்டவர் Sri Sivanmalai Andavar - Sri Subramanya Swamy Temple, Sivanmalai, Kangayam, Tamilnadu
(631)

கந்த வேலை வணங்கு – நம்கவலையெல்லாம் போக்க – தினம்கந்த வேலை வணங்கு – நம்கவலையெல்லாம் போக்கநாளும் பொழுதும் தீபம் ஏற்றி!கந்த...
22/10/2024

கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க – தினம்
கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க

நாளும் பொழுதும் தீபம் ஏற்றி!
கந்த வேலை வணங்கு – நன்மை
யாவும் வீடு சேரும் பக்தியை நீ விரும்பு
பிறப்பு என்பது ஒருமுறை – அதில்
இறப்பு என்பது ஒருமுறை
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்

உண்மை அன்பு கொண்ட
நெஞ்சில் வாழுகின்ற தெய்வம்
உள்ளம் உருகி அழுபவர் – தமக்கு
துயரம் தீர்க்கும் தெய்வம்
கருணை பொங்கும் ஒருமுகம் – அது
கந்தன் குமரன் திருமுகம்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்

பாதம் நோக பயணம் – போக
பழனியப்பன் வருவான்
விதியை மாற்றி வினைகள் – அகற்றி
புதிய வாழ்வு தருவான்
ஆறெழுத்து மந்திரம் – அதை
சொன்னால் சுகம் தரும்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்..

ஸ்ரீ சிவன்மலை ஆண்டவருக்கு அரகரா அரகரா அரோகரா ..!!

Like -> சிவன்மலை ஆண்டவர் - 8973355333

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்துதோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் – அந்தக்கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்சாற்...
27/09/2024

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் – அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்..

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அதிபர் சிந்தனைசெய் நெஞ்சமே – அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே..

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் யாருமே – பரங்
குன்றுவளர் குகனோடு தாங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாருமே..!!

#வீரவேல் #வெற்றிவேல் #வேல் வேல்

Like -> சிவன்மலை ஆண்டவர் - 8973355333

ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் உத்திரவு பொருள்: **********************************************************திருப்பூர் மாவட்டம், கா...
26/09/2024

ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் உத்திரவு பொருள்:
**********************************************************

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் திருக்கோவில் உத்திரவு பெட்டியில் சிகப்பு புடவை வைத்து இன்று காலை முதல் பூஜை நடைபெற்று வருகின்றது.

உத்திரவு பொருள்: சிகப்பு புடவை
நாள் : 26/09/2024
இடம்: சிவன்மலை, காங்கேயம்.

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும்..!!

#சிவன்மலை_ஆண்டவர்
#சிவன்மலை_ஆண்டவர்_உத்திரவு_பொருள்
#உத்திரவு_பொருள்
#சிவன்மலை


Like -> சிவன்மலை ஆண்டவர் - 8973355333

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – அரோகராதினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன் –...
13/09/2024

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா

தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அரோகரா

அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான் – அரோகரா

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அரோகரா

அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ! – அரோகரா

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – அரோகரா

ஆண்டிவேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ! – அரோகரா

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச்
சேர்ந்து வணங்கிடுவோம் – அரோகரா

அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று கனிந்து நிற்போம்! – அரோகரா

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அரோகரா

அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்! – அரோகரா

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அரோகரா

அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ! – அரோகரா

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – அரோகரா

முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! – அரோகரா

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம் – அரோகரா

சில ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்! – அரோகரா

ஊறுகள் தீர்க்கின்ற உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – அரோகரா

கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! – அரோகரா

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – அரோகரா

இரு கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு! – அரோகரா

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அரோகரா

அவன் கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்! – அரோகரா

Like - சிவன்மலை ஆண்டவர்


காரண மூர்த்தி, அகிலலோக நாயகன், தோடு சிறு காதலன், தோகை மயில் வாகனன், கலியுக தெய்வம், அன்னதான பிரபு சிவன்மலை ஸ்ரீ சுப்பிரம...
26/12/2023

காரண மூர்த்தி, அகிலலோக நாயகன், தோடு சிறு காதலன், தோகை மயில் வாகனன், கலியுக தெய்வம், அன்னதான பிரபு சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அரகரா அரகரா அரோகரா..

#சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.

Like -> சிவன்மலை ஆண்டவர்

,

கருணை கடலே கந்தா போற்றி..! போற்றி..!!
14/04/2023

கருணை கடலே கந்தா போற்றி..! போற்றி..!!

ஶ்ரீ சிவன்மலை ஆண்டவர் புதிய  #உத்திரவு_பொருள்: உத்திரவு பொருள்:  #வேல் உத்திரவு நாள்: 27/02/2023காரணமின்றி காரியமில்லை.....
27/02/2023

ஶ்ரீ சிவன்மலை ஆண்டவர் புதிய #உத்திரவு_பொருள்:

உத்திரவு பொருள்: #வேல்
உத்திரவு நாள்: 27/02/2023

காரணமின்றி காரியமில்லை..

காரண மூர்த்தி, அன்னதானபிரபு #சிவன்மலை சிவாசல ஶ்ரீ சுப்பிரமணிய பெருமானுக்கு அரகரா அரகரா அரோகரா...

காலம் அறிவான் கருணை புரிவான் ஶ்ரீ சிவமலையான்..

ஶ்ரீ சிவன்மலை ஆண்டவர் புதிய  #உத்திரவு_பொருள்: உத்திரவு பொருள்:  #நெற்கதிர். உத்திரவு நாள்: 14/01/2023காரண மூர்த்தி, அன்...
14/01/2023

ஶ்ரீ சிவன்மலை ஆண்டவர் புதிய #உத்திரவு_பொருள்:

உத்திரவு பொருள்: #நெற்கதிர்.
உத்திரவு நாள்: 14/01/2023

காரண மூர்த்தி, அன்னதானபிரபு #சிவன்மலை சிவாசல ஶ்ரீ சுப்பிரமணிய பெருமானுக்கு அரகரா அரகரா அரோகரா...

காலம் அறிவான் கருணை புரிவான் ஶ்ரீ சிவமலையான்..

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனர...
12/11/2022

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை 🙏🙏

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு:உத்திரவு பொருள்: இளநீர், தென்னை ஈக்கிமாறு.உத்திரவு நாள்: 10-11-2022.எம்பிரான் சிவமலையான் கந்தன...
11/11/2022

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு:

உத்திரவு பொருள்: இளநீர், தென்னை ஈக்கிமாறு.

உத்திரவு நாள்: 10-11-2022.

எம்பிரான் சிவமலையான் கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.

Like -> சிவன்மலை ஆண்டவர்

ஸ்ரீ சக்தி சிவன்மலை ஆண்டவர் ருத்ராக்ஷம், வில்வம் மற்றும் விபூதி அலங்கார தரிசனம்..கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.. 🙏
03/11/2022

ஸ்ரீ சக்தி சிவன்மலை ஆண்டவர் ருத்ராக்ஷம், வில்வம் மற்றும் விபூதி அலங்கார தரிசனம்..

கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.. 🙏

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு: உத்திரவு பொருள்: 3 கிலோ திருநீறு மற்றும் 7 எலுமிச்சம் பழம். நாள்: 04/03/2022 - பிலவ வருடம் பங...
03/04/2022

சிவன்மலை ஆண்டவர் உத்திரவு:

உத்திரவு பொருள்: 3 கிலோ திருநீறு மற்றும் 7 எலுமிச்சம் பழம்.

நாள்: 04/03/2022 - பிலவ வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாள் - ஞாயிற்றுக் கிழமை.

காலம் அறிவான் கருணை புரிவான் சிவமலையான்..

#சிவன்மலை_ஆண்டவர்_உத்திரவு
#உத்திரவு_பொருள்

Like -> சிவன்மலை ஆண்டவர்

Address

Sivanmalai
Kangayam
638701

Alerts

Be the first to know and let us send you an email when சிவன்மலை ஆண்டவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category