காராம் பசு திருநீறு விபூதி - Karam Pasu Thiruneeru Vibhuti - 8973355333

  • Home
  • India
  • Kangayam
  • காராம் பசு திருநீறு விபூதி - Karam Pasu Thiruneeru Vibhuti - 8973355333

காராம் பசு திருநீறு விபூதி - Karam Pasu Thiruneeru Vibhuti - 8973355333 எங்களிடம் தூய காராம் பசு நெய்,
காராம் பசு திருநீறு / விபூதி கிடைக்கும் - 8973355333

காராம் பசு சாணத்தில் இருந்து தயாரிக்கும் விபூதியின் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் :-1. உடலில் ஏற்படும் வெப்ப நோய்களை...
15/06/2024

காராம் பசு சாணத்தில் இருந்து தயாரிக்கும் விபூதியின் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் :-

1. உடலில் ஏற்படும் வெப்ப நோய்களை நீக்கி உடலையும் மனதையும் அமைதி அடைய செய்யும்.

2. அனைத்து மூட்டுகளிலும் ஏற்படக்கூடிய நீரினை வெளியேற்ற தக்க வல்லது.

3. உடலில் ஏற்படும் வெப்ப நோய்களுக்கு அருமருந்தாக உபயோகிக்க வல்லது.

4. விஷக்கடிகள் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் பூச வீறு தணியும்.

5. உடலில் பூச சகல தோஷங்களும் விலகும்.

6. சருமம் மற்றும் மன நோய் உள்ளவர்கள் உடல் முழுவதும் பூசி குளித்துவர சர்வ ரோகங்களும் விலகும்.

7. சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து உட்கொள்ள உடலில் ஏற்பட்ட திருஷ்டி தோஷங்கள் விலகும் மற்றும் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

8. காராம் பசு திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது.

9. பில்லி, சூனியம், ஏவல் மற்றும் கொடுவினைகள் பலவும் தீரும்.

10. முறைப்படி மந்திரித்து கொடுக்க விஷக்கடி காணாக்கடி போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

11. தலைவலி நீரேற்றம் தலைப்பாரம் இவற்றிற்கு காராம் பசு திருநீற்றை வெளிப்புறம் பூச வேண்டும்.

12. பல்வலி, ஈறில் இரத்தம் படித்தல் இவற்றுக்கு திருநீருடன் கலப்படமற்ற சூடம்(கற்பூரம்) கலந்து பல்துலக்க வேண்டும்.

13. எலும்புத்தேய்மானம், உடல் எலும்பு வளர்ச்சி இன்மை, குழந்தைகளுக்கு பற்கள் திடீரென்று விழுதல் இவற்றுக்குத் திருநீற்றை தேனுடன் 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை உண்ணலாம்.

14. துத்தநாகம், பொட்டாஷ் ஆகியவை காராம் பசு விபூதியில் உள்ளன. விதைகளை பாதுகாக்க விபூதியை பயன்படுத்தலாம்.

டாலமைட் பவுடரில் இருந்து செயற்கையாக தயாரிக்கப்படும் விபூதியால் ஆரோக்கியம் மிக்க பாதிப்பிற்குள்ளாகிறது.

இதற்கு சொல்லிலடங்கா பல நற்குணங்கள் உள்ளது அதை அனுபவத்தில் தெரிந்து கொள்வதே சிறப்பு

அறுநோய்கள் கெட வெண்நீர் அணியாராகில்-தேவாரம்-திருநாவுக்கரசர்

சகல நோய்களுக்கும் திருநீறு
திருநீற்று பதிகம் -திருஞானசம்பந்தர்

ஆகவேதான் சமயத்தில் உள்ளவர்கள் இதனை தினந்தோறும் பூசி சகல இன்னல்களிலிருந்தும் விலகுவதற்கு ஒரு உபாயமாக ஈசனின் திருவருளை நாடி இதைப் பூசி வருகின்றனர்

காராம் பசு விபூதி மதம் சார்ந்த விஷயங்களுக்கு அப்பாற்பட்டது.

காராம் பசு மாட்டு சாணத்தில் இருந்தே மிகத்தூய விபூதி கிடைக்கிறது. மிகத்தூய விபூதி நோய் எதிர்ப்பு சக்தியுடையது.

காராம் பசு திருநீற்றை அனுதினமும் யார் ஒருவர் பூசி வருகிறாரோ, அவரைச் சுற்றியுள்ள துன்பங்கள் விலகி, சிவனின் திருவடி எய்துவர். கடைகளில் கிடைக்கும் விபூதிகளில் இந்த தன்மை இருக்காது.ஏனென்றால், அவை விபூதியே அல்ல. காராம் பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் விபூதியே சுத்தமானது ,விபூதி வேதோக்தமானது!

வேதத்தின் ஞானகான்டப் பொருளை விளக்க எழுந்த நூற்றெட்டு உபநிடதங்களுள் காராம் பசு விபூதியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் உபநிடதங்கள் பதினைந்து.அவற்றுள் பஸ்மஜாபாலம், காலாக்னிருத்ரம், ஜாபாலி என்னும் உபநிடதங்கள் பஸ்ம வைபவத்தைத் தாரண விதியோடு விளக்கிக் கூறுகின்றன. பிருஹஜஜாபாலமோ பிரம வித்தையின் அங்கமாகிய திருநீறணிதலை முறையுடன் விரித்தோதுவதன்றி திருநீற்றை வேதவிதிப்படி உண்டாக்கும் முறையையுங் கூறுகின்றது. இவ்வுபநிடத்தில் திருநீறு தரித்தல் எல்லாக் கன்மங்களுக்கும் முக்கிய அங்கமாகவும் ஞானங்கமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை.

மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை காராம் பசு விபூதி கொண்டிருக்கின்றது.

காராம் பசு விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. *(பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)

சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும்.

ஆண்கள் காராம் பசு விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்) உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

பெண்கள் - ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ *என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.

ஆண்கள் - காராம் பசு விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், *மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்பஸ்மாபிஷேகம் பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது.

அன்றியும், பரமாசார்ய மூர்த்திகளுள் ஒருவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச் செய்த தமிழ் வேதத்திலே "திருநீற்றுப்பதிகம் " ஓதி அற்புதச் செய்கை செய்து, அதன் மகிமையைப் புறச்சமயிகளும் உணரும்படி விளக்கிக் காட்டியுள்ளார்.

குளிக்கும் நீரில் காராம் பசு விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும் பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் காராம் பசு விபூதி பயன்பட்டிருக்கின்றது. காராம் பசு விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு. காராம் பசு விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.

நூற்றெட்டு உபநிடதங்களின் சாரமாய் விளங்கும் தசோபநிடதங்களில் ஆதியந்தங்களில் உள்ள ஈசாவாஸ்ய பிருஹதாரண்ய உபநிடதங்களிலும் தைத்திரீய உபநிடதத்திலும் இந்தத் திருநீற்றின் பிரபாவம் பிரகாசப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதுவுமல்லாமல் இருபத்தெட்டு சிவாகமங்களிலும் அவற்றின் பிரிவுகளாகிய உபாகமங்களினும், பராசர, கௌதம, மநுவாதி ஸ்மிரிதிகளினும் சைவம், கூர்மம், இலிங்கம், ஸ்காந்தம் முதலிய புராணங்களிலும் பாரதம் இராமாயணம் சிவரஹஸ்யம் என்னும் இதிகாசங்களினும் இத்திருநீற்றின் பெருமை விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது.

சிவனடியார்களுக்கு, சாதுக்களுக்கு, திருக்கோயில்களுக்கு, மடங்களுக்கு, பீடங்களுக்கு, தானம் அளித்து புண்ணிய பேற்றினை அடைய விரும்புபவர்களுக்கு மிகக்குறைந்த அடக்க விலையில் வழங்கப்படும்

இந்த பதிவை மற்ற குழுகளிலும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து சிவபுண்ணியம் அடைந்திடுவோமே!

சிவாயநம!!

குறிப்பு :-
*************

வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள சுத்தமான காராம் பசு விபூதி கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 089733 55333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#காராம்_பசு_விபூதி #விபூதி #காராம்_பசு #கோதானம் #காராம்_பசு_நெய்

எங்களிடம் தூய காராம் பசு நெய் (Karam Pasu Ghee), காராம் பசு திருநீறு / விபூதி (Karam Pasu Thiruneeru, Vibhuti), காராம் ப...
15/06/2024

எங்களிடம் தூய
காராம் பசு நெய் (Karam Pasu Ghee),
காராம் பசு திருநீறு / விபூதி (Karam Pasu Thiruneeru, Vibhuti),
காராம் பசு பால்,
காராம் பசு பஞ்ச காவியம்,
காராம் பசு பஞ்ச காவிய விளக்கு,
காராம் பசு சாம்பிராணி,
காராம் பசு வரட்டி,
காராம் பசு கோமியம் மற்றும்
காராம் பசு கன்று மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள்
கிடைக்கும்.

தூய காராம் பசு பொருட்கள் Courier சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தெய்வீக தன்மை வாய்ந்த தூய காராம் பசுவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த Page - ஐ Like செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Address

Karam Pasu Goshala
Kangayam
638701

Telephone

+918973355333

Website

Alerts

Be the first to know and let us send you an email when காராம் பசு திருநீறு விபூதி - Karam Pasu Thiruneeru Vibhuti - 8973355333 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to காராம் பசு திருநீறு விபூதி - Karam Pasu Thiruneeru Vibhuti - 8973355333:

Share

Category