Sri Simha Dhakshinamoorthi Vyagrapuriswarar Temple

Sri Simha Dhakshinamoorthi Vyagrapuriswarar Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Simha Dhakshinamoorthi Vyagrapuriswarar Temple, Hindu temple, Thiruppulivanam, Kanchipuram.

28/12/2016

எல்லாமே ஐந்துதான் நம் பெருமானுக்கு!!...

1.பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம்

நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்

3.சிவமூர்த்தங்கள்

1.பைரவர் - வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி - சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் - வசீகர மூர்த்தி
4.நடராஜர் - ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி

4.பஞ்சலிங்க சேத்திரங்கள்

1.முக்திலிங்கம் - கேதாரம்
2.வரலிங்கம் - நேபாளம்
3.போகலிங்கம் - சிருங்கேரி
4.ஏகலிங்கம் - காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

5.பஞ்சவனதலங்கள்

1.முல்லை வனம் - திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -*அவளிவள் நல்லூர் 3.வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4.பூளை வனம் - திருஇரும்பூளை
5.வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்

6. பஞ்ச ஆரண்ய தலங்கள்:

1.இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு - திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி

7.பஞ்ச சபைகள் :

1.திருவாலங்காடு - இரத்தின சபை
2.சிதம்பரம் - பொன் சபை
3.மதுரை - வெள்ளி சபை
4.திருநெல்வேலி - தாமிர சபை
5.திருக்குற்றாலம் - சித்திர சபை

8.ஐந்து முகங்கள் :

1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் - கிழக்கு "
3.அகோரம் - தெற்கு "
4.வாம தேவம் - வடக்கு "
5.சத்யோஜாதம் - மேற்கு "

9.ஐந்தொழில்கள் :

1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்

10.ஐந்து தாண்டவங்கள் :

1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்

11.பஞ்சபூத தலங்கள்

1.நிலம் - திருவாரூர்
2.நீர் - திருவானைக்கா
3.நெருப்பு - திருவண்ணாமலை
4.காற்று - திருக்காளத்தி
5.ஆகாயம் - திருத்தில்லை

12.இறைவனும் பஞ்சபூதங்களும் :

1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(சுவை,ஒளி ,ஊறு ,ஓசை, நாற்றம்) 2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை, ஒளி, ஊறு, ஓசை)
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி, ஊறு, ஓசை)
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு, ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்பையுடையது
(ஓசை )

13.ஆவின் அமிர்தங்கள் ஐந்து:

பால், தயிர், நெய், கோமியம், சாணம்

14.ஐங்கலைகள்:

1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டா கலை
3.வித்யா கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை

15.பஞ்ச வில்வம்

1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்

16. ஐந்து நிறங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்

17.பஞ்ச புராணங்கள்:

1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்

18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து:

1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்

19.பஞ்சோபசாரம்: (பஞ்ச உபசாரம்)

1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்

ஆடிய திருவடி சரணம்!!
தூக்கிய திருவடி சரணம்!!

தகவல் சிவபிரகாஸ்

19/02/2016

தர்பம் பற்றி ஆகமம் சொல்லும் அற்புதம்:

(1) விஸ்வாமித்ர குஸோஸீர ஸாலீ மௌம்ஜீச தர்பகா:|
தூர்வா : ஸ்ரேஸ்டா முநி ப்ரோக்தா: ஸப்த தர்பா: ப்ரகீர்த்திதா :||
விஸ்வாமித்ரம், குசம், உசீரம், ஸாலீ, மௌம்சீ, தர்பை, அருகு என்று தர்பத்தை 7வகையாக சொல்லி இருக்கிறது .

(2) அக்ரஸ்தூளா பவேந்நாரீ மூலஸ்தூலம் ந பும்ஸகம்|
மூலாக்ர ஸமம் வாபி புமா நித்யபி தீயதே ||
நுனி பெருத்ததை ஸ்த்ரீ தர்பம் என்றும்,
அடி பெருத்ததை நபும்ஸகம்( அலி) தர்பம் என்றும்,
அடியும் நுனியும் ஒரே மாதிரி இருப்பதை புருஷ தர்பம்
என்றும் சொல்லுவதுண்டு .

(3) விவாஹே புருஷ தர்பா : ஸ்த்ரீ தர்பா : பும்ஸுவனே ததா |
நபும்ஸகம் த்வந்ய கர்மஸு ஏஷ தர்பஸ்ய நிர்ணய :||
விவாஹத்திற்கு புருஷ தர்பையையும்,
பும்ஸவனத்திற்கு ஸ்த்ரீ தர்பயையும்,
மற்ற கர்மாக்களுக்கு நபும்ஸக தர்பத்தையும் உபயோகிக்க வேண்டும் .

(4).அர்ச்சனம் ஜப ஹோமம்ச, தானம் ச பித்ரு தர்ப்பணம் |
அபவித்ரானு பாணிம்ச தத் ஸர்வம்ச விநஸ்யதி||
அர்ச்சனை, ஜபம், ஹோமம், பித்ரு தர்ப்பணம் ஆகிய காலங்களில் பவித்ரம் அணிந்து கொண்டுதான் காரியங்களைச் செய்ய வேண்டும். பவித்ரம் அணியாமல் அச்செயல்களை செய்தால் அவை பயனற்றதாகி விடும் என்று பாரமேஸ்வர ஸம்ஹிதை கூறுகின்றது .

(5)பவித்ரம் ஏக தர்பேன ப்ரேத கர்மணி தாரயேத்|
நித்ய கர்மணி தர்பாப்யாம் த்வாப்யாமேவ சதுர்முக ||
பித்ரு கார்யம் த்ரிபிர் தர்பை: சதுர்பிர் தேவ பூஜனே |||
பஞ்சபி: பௌஷ்டிகே தர்பை: ஷட்பிஸ் ஸாந்த்யாம் பவித்ரகம் ||
போஜனே வளயம் குர்யாது ஸப்தபி: ஸர்வ கர்மஸு||
ப்ரேத காரியங்களில் ஒரு தர்பத்தாலும், சுப காரியங்களில் இரண்டு தர்பங்களாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்பங்களாலும், தேவ காரியங்களில் நான்கு தர்பங்களாலும், யாகங்களில் ஐந்து தர்பங்களாலும், சாந்தி கர்மாக்களில் ஆறு தர்பங்களாலும் பவித்ரம் அணிந்து கொள்ள வேண்டும். போஜன காலத்தில் ஏழு தர்பங்களை வளையமாகச் செய்து போட்டுக் கொள்ள வேண்டும் .

(6) த்வியங்குலம் வளயம் ப்ரஹ்மநு க்ரம்தி ரேகாம் குலா மதா|
சதுரங்குலமாயாம : பஞ்சமுஷ்டி ஸ்ம்ருதா குஸா:||
ஐந்து முஷ்டி உள்ள தர்பத்தால் வளையம் இரண்டு அங்குலம் உள்ளதாகவும், உயரம் நான்கு அங்குலம் உள்ளதாகவும் பவித்ரம் பண்ண வேண்டும் .

(7) விஸீர்ணா விகளா ஹ்ரஸ்வா வக்ரா ஸ்தூளா க்ருஸா த்விதா |
க்ருமி தஷ்டாஸ்ச தீர்காஸ்ச வர்ஜயேத் ஸமிதோ புத:||
பிளந்தது, ஒடிந்தது, சிறியது, கோணலானது, பருமனானது, மெலிந்தது, விரிந்தது, புழு அரித்தது, மிக நீளமானது ஆகிய ஸமித்துக்களை உபயோகிக்க கூடாது .

(8) ஏதே வித்த விநாஸிந: ஸ்தூளா ராஜ பயங்கரீ|
த்விதா சோர பயங்கரீ விஸீர்ணா ஸுக மாஹரேத்||
அக்னிதாஹம் பவேத்தீர்கம் க்ருஸா காந்தா ஸுகம் ஹன்யாது ||
இவைகள் பொருளை அழிக்கும்.

1) மிகப் பருமனாயுள்ளது ராஜ தண்டனையை அழிக்கும்; 2) பிளவு பட்டது திருடர் பயத்தையும்;
3) பிளந்தது சுகத்தையும் போக்கும்;
4) மிக நீளம் அக்னி பயத்தையும்;
5) மெல்லியது உடல் நலக் குறைவையும் உண்டாக்கும்.
(9) அஸ்வத்த வட பாலாஸ ப்லக்ஷோ தும்பர ஸம்பவா :|

ஸம்யபாமார்க கதிரா : குசேன ஸமிதோ நவ :||
அரசு, ஆல், புரசு, ப்லக்ஷம், அத்தி, வன்னி, நாயுருவி, கருங்காலி, தர்பை இந்த ஒன்பதும் ஸமித்துக்களாகும்.

18/02/2016

"வலிய அம்மா" பிரார்த்தனை - "மன்னார்சாலா' பாம்பு கோவில் :


>> ஏர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது. இங்கு மிக பழமையான பாம்பு கோவில் ஒன்றுள்ளது .. நினைத்த காரியங்கள் தடங்கலின்றி நடக்கவும்; சர்ப்ப தோஷத்தால் மணப்பேறு, மகப்பேறு கிட்டாதவர்களுக்குத் தடைகள் அகலவும், நாகதோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு பிராத்தனை செய்வது விஷேசமாகும் .

>> கேரள மாநிலத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பரிவார தேவதைகளில் "சர்ப்ப யட்சி' என்ற பாம்பு தெய்வம் வழிபடப்படுகிறது. பாம்பு வழிபாட்டுக்குரிய தலங்கள் சர்ப்பக்காவுகள் எனப்படுகின்றன. அங்குள்ள "மன்னார்சாலா' என்னும் தலம் பாம்பு வழிபாட்டுக்குரிய முக்கியத் தலமாகும்.கோவிலில் எங்கு பார்த்தாலும் பாம்பு மயமாக உள்ளது ..

இக்கோவில் குறித்த ஒரு புராதன கதை :

>> இக்கோவில் குறித்த பழமையான வரலாறு ஒன்று உள்ளது. இந்த கோவிலின் அருகில் ஒரு பழய நம்பூதிரி அந்தண குடும்பத்தை சேர்ந்த புராதன வீடு (இல்லம்) ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் பெயர் "இரிங்கடப்பள்ளி வீடு" என்பதாக அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் பூர்வீக குடும்பத்தினர்கள் "மூலக் குடும்பம்" என்று அழைக்கபடுகிறார்கள் என்றும், முனிவர் பரசுராமரால், இந்த கோவிலில் பூஜை மற்றும் நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கபட்டது என்றும் நம்பப்படுகிறது.

>> " இந்த மூலக்குடும்பத்தின் ஒரு பெண் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மிக்க வேதனையுடன் பரசுராமரை வணங்கி தனக்கு குழந்தை பாக்கியம் அளிக்குமாறு வேண்டினாள். மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் பரசுராமர் அந்த பெண்மணியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து "பெண்ணே நீ சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்புகளின் தலைவரான "வாசுகியை" வணங்கி தவமிருந்தால் உனக்கு குழந்தை பிறக்கும்" என்று அருள் வாக்கு கூறினார்.

>> அந்த பெண்மணியும் வாசுகியை பூஜை செய்து தவமிருந்தார். தவத்தின் முடிவில் வாசுகி அவள் முன்பில் தோன்றி " பெண்ணே உனக்கு 5 தலையுடய பாம்பு ஒன்று உன்னுடைய மூத்த பிள்ளையாக பிறப்பான் அந்த பாம்பிற்கு மரணமே கிடையாது அவன் என்றும் சிரஞ்சீவியாக இந்த உலகம் இருக்கும் வரை இருந்து உன்னையும், உன்னுடைய வம்சா வழியினரையும் பக்தர்களையும் பாதுகப்பான் என்றும் அதன் பிறகு இளைய பிள்ளையாக ஒரு மகன் பிறப்பான் என்றும் ஆசீர்வதித்தார். அதன் படி முதல் குழந்தையாக ஒரு 5 தலை நாகபாம்பு ஒன்றும், அதன் பிறகு, ஒரு மகனும் பிறந்தனர். மகனும் பாம்பும் ஒருமிக்க வளர்ந்து வந்தனர். அந்த பெண்மணியோ தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். தன்னுடைய ஆசையை மூத்த மகனான நாகராஜனிடம் கூறினாள்.

>> நாகராஜனோ தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை என்றும், மனித வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு விலகி தனியாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறவும் அந்த பெண் நாகராஜன் எங்கும் போகவேண்டாம், இந்த வீட்டின் நிலவறையில் இருந்துகொள் என்றும் நான் இருக்கும் வரை என் கண் முன்னால் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.

>> நாகராஜன் தன்னுடய தம்பியிடம் " இந்த நிலவறையின் அருகில் ஒரு கோவில் கட்டி, அதில் நகராஜாவின் உருவசிலையை நிறுவி, அதற்கு வேண்டிய பூஜை முறைகளையும் சொல்லிவிட்டு, கோவிலின் புனிதத்தன்மையை காக்குமாறு கூறிவிட்டு நிலவறையில் போய் யோக நித்திரையில் ஈடுபடத்துவங்கினார். அதற்கு முன்பு தன் தாயை நமஸ்கரித்து " அம்மா நான் இந்த குடும்பத்தையும் அதன் தலைமுறையையும், என்னுடைய பக்தர்களையும், இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றிக் கொண்டிருப்பேன். உனக்கு என்னை பார்க்கவேண்டும் என்று தோன்றினால், நிலவறைக்கு வந்து பார்க்கலாம்" என்ரு கூறிவிட்டு நிலவறைக்கு சென்று, கதவை மூடிக்கொண்டார். இன்றும் இந்த கோவிலை அடுத்திருக்கும் நிலவறையில் நாகராஜன் இருப்பதாக பக்தர்க்ள் நம்புகிறார்கள்.

>> பல நூற்றாண்டுகளாக நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரைத் தவிர யாருமே அந்த நிலவறைக்குள் சென்றதாக சரித்திரமில்லை. அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணி என்று சொல்லப்படும் "வலிய அம்மா" விற்கு மட்டுமே நிலவறைக்கு செல்லும் அனுமதியுண்டு. நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த "வலிய அம்மா" விற்கு மாத்திரமே உண்டு. கோவில் கடவுளான நாகராஜனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தவர் இந்த "வலிய அம்மா". இன்றைக்கும் இது நடைமுறையிலுள்ளது. "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்த குடும்பத்தின், மூத்த பெண்மணி, அந்த பொறுப்பை ஏற்றுகொள்கிறார். அப்படி அந்தப் பெண் திருமண வாழ்க்கையிலிருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி, தன்னுடய பொறுப்பை ஏற்றுக்கொண்டு "வலிய அம்மா" ஆகி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

>> சென்ற1920ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை "வலிய அம்மா" வாக இருந்த மூத்த தாயின் பெயர் "சாவித்திரி அந்தர்ஜனம்". தன்னுடய 14ம் வயதில் இந்த வலிய அம்மா பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தன்னுடய வாழ் நாள் முழுவதையும் நாகராஜவிற்கே அற்பணித்தார். இப்போது இந்த வலிய அம்மா பொறுப்பில் இருக்கும் பெண்மணியின் பெயர் "உமாதேவி அந்தர்ஜனம்". 1993ம் ஆண்டு இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இன்றும் பணியாற்றி வருகிறார். கோவில் பூஜை செய்வதோடல்லாமல், விசேஷ ப்ரார்த்தனைகளையும், பக்தர்க்ளின் வழிபாடுகளையும் கோவிலின் நிர்வாகத்தையும் மேற்பார்வை செய்து வருகிறார்.

>> வருடம் ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக கூறுகிறார்கள். இன்றும் அந்த நிலவறையில் நாகராஜன் இருந்துகொண்டு பக்தக்ளுக்கு அருள் பாலிப்பதாக நம்புகிறார்கள். கேரள மக்கள் நாகராஜனை "அப்பூப்பன்" என்று பக்தியோடு அழைக்கிறார்கள்.

>> நம் இந்து மதத்தில் பாம்புகளை வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. இந்துக் கடவுளர்கள் அனைவருக்கும் பாம்புடன் ஒரு தொடர்பு உண்டு..மனித வாழ்க்கையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நம்பினால் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.

குழந்தை பாக்கியம் பெற "உறுளி பிராத்தனை" :

>> குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, "உறுளி பிராத்தனை" என்ற வழிபாட்டு பிராத்தனை செய்வது இன்றும் நடந்துவருகிறது. நூற்றுகணக்கான பக்தர்க்ள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையை சொல்லி "வலிய அம்மா" வை வேண்டி, தங்களுடைய உறுளி ப்ரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். உறுளி என்பது ஒரு நல்ல கனமுள்ள வட்ட வடிவமுள்ள வெங்கலப் பாத்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த உருளி பாத்திரத்துடன் "வலிய அம்மா" விடம் தங்களுடய வேண்டுதலை சொல்லவேண்டும். வலிய அம்மா அந்த உறுளி பாத்திரத்தை புஜை செய்து அதற்கென்று நிர்ணையிக்கபட்ட ஒரு அறையில் உறுளியை கவிழ்த்தி வைத்துவிடுவார்.

>> அந்த தம்பதியர், தங்களுக்கு குழந்தை பிறந்த பிற்பாடு, குழந்தையுடன் கோவிலுக்கு வந்து "வலிய அம்மா" வை பார்த்து, வெள்ளியில் ஒரு பாம்பு உருவத்தை செய்து காணிக்கையாக கொடுத்த பிற்பாடு, வலிய அம்மா அந்த வெள்ளி பாம்பு உருவத்திற்கு புஜை செய்து, அந்த கவிழ்த்தி வைத்திருந்த உறுளியை நிமிர்த்தி வைத்து பிராத்தனையை முடித்து தம்பதியையும் குழந்தையையும் ஆசீர்வதிப்பார். இப்போது உள்ள கணக்குப்படி, வருடத்திற்கு 5000 உறுளி பிராத்தனைகள் நடை பெற்று வருகிறது.

>> கோவிலில் உருளி பாத்திரம் (220 ரூபாய்)..கிடைகிறது. கோவிலுக்கு அருகே தேவஸ்தானத்தில் தங்கும் வசதி உள்ளது ..ஹரிபாட்டில் இறங்கி கோவிலுக்கு வர ஆட்டோ வசதி உள்ளது .மிக அருமையான கோவில் வந்து பாருங்கள் ..

09/02/2016

நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

01/02/2016

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:!!!

ஏமாற்றும் மனைவி,
போலியான நண்பன்,
சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

��ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

��ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

��ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

��நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

��உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

��கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

��காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

��பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

��சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

��சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

��கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

��கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

��அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

��யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

��எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

��அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

��சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

��வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

��அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

��எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

��மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

��பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

��கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

��வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

��பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

��வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

��கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்

30/12/2015

👌👌👌🙏🙏🙏👌👌👌

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
~~~~~~~~~~~~~~~~~

சிவம் என்றால் மங்களம்.

லிங்கம் என்றால் அடையாளம்.

மங்கள வடிவம் அது.

மங்களம் என்றால் சுபம்.

சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால்,

சித்தம் சிவமாக மாறிவிடும்.

பிறப்பின் குறிக்கோள் அதுதான்.

பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது.

நான் உன்னை வணங்குகிறேன் . . .

என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு,

உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது, . .
உபநிடதம்,
(தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா)

சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு சர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான்.

பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது.

தாருகா வனத்தில். . . .
ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும்.

மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும்,

கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான்.

கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, . . .

பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து,

பற்றற்ற நிலை தோன்றிடும்.

அதற்குத் தியாகம் என்று பொருள்.

தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம்.

பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை,

இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை,

வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்!

பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே,
விட்டுவிடு. . . .

என்னைப்பார். . .
என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று . . .
சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம்.

வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் . . . (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:)

லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

அபிஷேகத் தண்ணீர் தங்காது,

அணிகலன்கள் அணிய இயலாது,

வஸ்திரம் உடுத்த இயலாது,

அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும்.

சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது,

அதாவது, அது உணராது.

சுக துக்கங்கள் தெரியாது.

சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான்.

பனிப்பொழிவு என்றாலும் சரி,

வெயில் கொளுத்தினாலும் சரி அது அசையாது.

சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம்.

கண்ணனும் . .,
சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது.

அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது.

அவன் அசையாமலே உலகம் அசையும்.

உடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி . . .

எங்கும் நிறைந்து,
உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

உடல் உறுப்புகள் இருந்தால், அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து . . .

வெளிவர முடியாமல் திண்டாடி
கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும.

பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம்.

வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம்.

நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம்.

மங்கள ஆரத்தி எடுப்போம்.

கச்சேரியின் முடிவு மங்களம்.

சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும்.

பஜனையில் அத்தனை
பேருக்கும் மங்களம் பாடுவோம்.

மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு.

எங்கும் எதிலும் இருப்பது சிவம்.

அதுதான் சிவலிங்கம்.

உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

👌🙏👌

🙏ஹர ஹர மஹா தேவா 🙏
🙏திருச்சிற்றம்பலம்🙏
🙏ஓம் நமசிவாய🙏

Address

Thiruppulivanam
Kanchipuram
603406

Opening Hours

Thursday 6:01am - 8pm
Saturday 8am - 11am
5pm - 7:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Simha Dhakshinamoorthi Vyagrapuriswarar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category