Sri Rudhrambiga Rudhreshwar Temple ஶ்ரீ ருத்ராம்பிகை ருத்ரேஸ்வரர்

  • Home
  • India
  • Kanchipuram
  • Sri Rudhrambiga Rudhreshwar Temple ஶ்ரீ ருத்ராம்பிகை ருத்ரேஸ்வரர்

Sri Rudhrambiga Rudhreshwar Temple ஶ்ரீ ருத்ராம்பிகை ருத்ரேஸ்வரர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Rudhrambiga Rudhreshwar Temple ஶ்ரீ ருத்ராம்பிகை ருத்ரேஸ்வரர், Hindu temple, Kudiperambakkam, Kanchipuram.

மஹா சிவராத்திரி மற்றும் தெப்பல் உற்சவம் சிறப்பு பூஜை அழைப்பிதழ் நாள் 26-02-2025 பக்த கோடிகள் அனைவரும் வருக அம்மையின் அய்...
25/02/2025

மஹா சிவராத்திரி மற்றும் தெப்பல் உற்சவம் சிறப்பு பூஜை அழைப்பிதழ் நாள் 26-02-2025
பக்த கோடிகள் அனைவரும் வருக அம்மையின் அய்யனின் அருள் பெருக ஓம் நமசிவாய🙏

21/02/2024
மஹா சிவராத்திரி மற்றும் தெப்பல் உற்சவம் சிறப்பு பூஜை அழைப்பிதழ் நாள் 08-03-2024 பக்த கோடிகள் அனைவரும் வருக அம்மையின் அய்...
21/02/2024

மஹா சிவராத்திரி மற்றும் தெப்பல் உற்சவம் சிறப்பு பூஜை அழைப்பிதழ் நாள் 08-03-2024
பக்த கோடிகள் அனைவரும் வருக அம்மையின் அய்யனின் அருள் பெருக ஓம் நமசிவாய🙏

ஓம் நமசிவாய 🙏சிவ பக்தர்களுக்கு வணக்கம்🙏 18-02-2023 அன்று இரவு நடைபெற்ற மஹா சிவராத்திரி சிறப்பு புகைபடங்களும் மற்றும் காண...
20/02/2023

ஓம் நமசிவாய 🙏சிவ பக்தர்களுக்கு வணக்கம்🙏 18-02-2023 அன்று இரவு நடைபெற்ற மஹா சிவராத்திரி சிறப்பு புகைபடங்களும் மற்றும் காணொளிகளும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி திருச்சிற்றம்பலம்🙏

ஓம் நமசிவாய 🙏சிவ பக்தர்களுக்கு வணக்கம்🙏 வரும் 18-02-2023 அன்று இரவு நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு ...
13/02/2023

ஓம் நமசிவாய 🙏சிவ பக்தர்களுக்கு வணக்கம்🙏 வரும் 18-02-2023 அன்று இரவு நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் தெப்பல் உற்சவமும் நடைபெற இருப்பதால் சிவ பக்தர்கள் அனைவரும் வருக ஈசன் அருள் பெருக வாழ்க வளமுடன் என்றும் இறையருளுடன்🙏

16/04/2022

பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஈசன் அருள் பெறுக ஓம் நமசிவாய🙏🙏🙏

24/02/2022
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....அனைவரும்  சிவனின் அருட்கோடி பெருக🙏🙏🙏
19/02/2022

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
அனைவரும் சிவனின் அருட்கோடி பெருக🙏🙏🙏

ஓம் நமச்சிவாய🙏
08/11/2021

ஓம் நமச்சிவாய🙏

மஹா சிவராத்திரி ********************சிவராத்திரி விரத மகிமையை போற்றும் வேடனின் கதை..சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல ...
08/03/2021

மஹா சிவராத்திரி
********************
சிவராத்திரி விரத மகிமையை போற்றும் வேடனின் கதை..

சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதை கள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் பற்றி தெரிந்து கொள்வோம்.

மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி வருந்தினான்.

வேடன் வழியிலிருந்த சுனையில் நீர் அருந்தி னான். ஏதாவது மிருகம் அந்த சுனைக்கு வரும். அதைக் கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிதுநீரை ஒரு பாத்தி ரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத் திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இரு ப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன் உறங் காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான்.

அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்த து. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மா னைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான் அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிரு ந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.

வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், ''வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். எனக்கு கொஞ்சம் அவகாசம் தா.." என்றது. மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்தான்.மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.

அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்து க்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக்கொல்ல அம் பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீ ரும் லிங்கத்தின்மீது விழுந்தன.

அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வே டன் தன்மீது குறிவைப்பதை கண்டு திகைத்து, ''வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட் டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற் றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடு கிறேன். பிறகு நீங்கள் என்னை கொல்லலாம்" என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.

மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலை யும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்க த்தின்மீது விழுந்தன.

வேடன் தன்னை கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், "ஐயா, என் இரு மனைவிகளையு ம் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது.

அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான் கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாச த்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பா ர்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.

இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. இறுதியில் மூவருமே வேடனிடம் செல்வதென் று தீர்மானித்தன. பெற்றோர்கள் பலியாகச் செல்லும் போது தாங்களும் உயிர்வாழ விரும் பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற் றைப் பின்தொடர்ந்து சென்றன.

நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்க ள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந் து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவ லிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன. நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோ ம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.

நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் கார ணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது. அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து, "வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்`' என்றார்.

ஈசனைப் பணிந்த வேடன், "ஐயனே, என் பாவ ங்களைப் போக்கியருள வேண்டும்" என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல் வங்களையும் அவனுக்கு வழங்கி, "வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவு லகில் பிறந்து இங்குவருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீரா மர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத் திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.

சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்யரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்ற தாக வரலாறு.

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
நன்றி சித்தர் உலகம் அனைவரும் வருக சிவனின் அருட்கோடி பெருக🙏🙏🙏

Address

Kudiperambakkam
Kanchipuram
603102

Opening Hours

Monday 9am - 11am
6pm - 8pm
Tuesday 9am - 11am
6pm - 8pm
Wednesday 9am - 11am
6pm - 8pm
Thursday 9am - 11am
6pm - 8pm
Friday 9am - 11am
6pm - 8pm
Saturday 9am - 11am
6pm - 8pm
Sunday 9am - 11am
6pm - 8pm

Telephone

09092697401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Rudhrambiga Rudhreshwar Temple ஶ்ரீ ருத்ராம்பிகை ருத்ரேஸ்வரர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category