ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம்

  • Home
  • India
  • Kanchipuram
  • ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம்

ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம் கோவில் கட்ட தங்களால் முடிந்த உதவிகளை செய்யாலாம் அன்பே சிவம்���

17/02/2026
17/02/2026

ஆலஞ்சேரி கிரகத்தில் அமைந்துள்ள ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம் மகா சிவராத்திரி நடைபெற்றது.... ஓம் நமசிவாய 🙏 🙏 🙏

மகா சிவராத்திரி என்பது மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவில், சிவபெருமான் லிங்கோத்பவராகத் தோன்றி, அறியாமையை அகற்றி ஞானத்தை அருளும் மிகப்புனிதமான இரவாகும். இரவு முழுவதும் கண்விழித்து, நான்கு காலப் பூஜைகள் செய்து, சிவனை வழிபடுவதன் மூலம், நம் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இது ஆணவம் நீங்கி, இறைவன் மீது பக்தி கொள்ளும் ஒரு ஆன்மீகத் திருநாளாகும்.

நான்கு கால பூஜை சிறப்பு:
முதலாம் காலம்: பால் அபிஷேகம் - சர்வ தோஷ நிவர்த்தி.
இரண்டாம் காலம்: தயிர் அபிஷேகம் - தன தான்ய விருத்தி.
மூன்றாம் காலம்: நெய் அபிஷேகம் - மோட்சம்.
நான்காம் காலம்: தேன் அபிஷேகம் - இன்பம் கிடைக்கும்.

#ஆலஞ்சேரி #சிவன்பார்வதி #சிவமயம் #ஔவ்வையார் #தீபம் #விநாயகர் #சிவராத்திரி #சிவாலயம்

31/01/2026

#ஆலஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் சன்னதியில் நேற்று நடந்த பிரதோஷ பூஜையில் ஓம் நமசிவாய 🙏🙏🙏

#ஔவ்வையார் #ஓம் #சிவமயம் #திருவண்ணாமலை #தீபம் #சிவன்பார்வதி #ஆஞ்சனேயர் #முருகன் #விநாயகர் #கிருஷ்ணர் #ஆலஞ்சேரி

ஓம் நமசிவாய 🙏🙏🙏 அறுபத்து மூன்று நாயன்மார்களின் கோட்புலி நாயனாரின் வரலாறு காவிரி பாயும் சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் கு...
03/01/2026

ஓம் நமசிவாய 🙏🙏🙏 அறுபத்து மூன்று நாயன்மார்களின்
கோட்புலி நாயனாரின் வரலாறு

காவிரி பாயும் சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல்புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன் மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன் அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!
ஓம் நமசிவாய 🙏 🙏 🙏

சிவ ஸ்வரூபமான இந்த புதிய வருடம், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் செல்வத்தைப் பொழியட்டும். ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி...
01/01/2026

சிவ ஸ்வரூபமான இந்த புதிய வருடம், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் செல்வத்தைப் பொழியட்டும். ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம் சிவ சிவ! இனிய புத்தாண்டு!"

இன்று பூஜையின் பொழுது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
28/12/2025

இன்று பூஜையின் பொழுது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

Address

Alanjeri
Kanchipuram
603107

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஓம் ஶ்ரீ அனந்த வள்ளி அம்பிகா சமேத அனந்தபுரிஷ்வர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category