ISKM Paramakudi

ISKM Paramakudi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISKM Paramakudi, Religious Center, Katchathanallur, Ilayangudi.

30/04/2023
28/04/2023

ஸ்ரீல பிரபுபாதா: "ஹைதராபாத் 23-ஏப்ரல்-1974"
---------------------------
"கிருஷ்ணர் நடனமாடுகிறார் – நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் – அதேபோல் நமது நிலை கிருஷ்ணருடன் வெறுமனே நடனமாடி மகிழ்ந்திருத்தலே. அதுவே நமது நிலைப்பாடு. ஆனால் நாம் கிருஷ்ணரை விட்டுத் தனியாக இந்த ஜட உலகிற்குக் மகிழ்வதற்காக வந்திருக்கிறோம். அதனால் நாம் மாயையின் சக்தியினால் பிணைக்கப்பட்டுள்ளோம்."

20/04/2023

ஸ்ரீல பிரபுபாதா: "ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் 15-ஏப்ரல்-1973"
---------------------------
"எனதன்பு ஆண் மற்றும் பெண் குழந்தைகளே, நீங்கள் பகவான் கிருஷ்ணரின் கமல பாதங்களின் புகழைப் பரப்ப மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள். இவ்வாறு என் குரு மஹாராஜா தங்களின் பொருட்டு மிகவும் மகிழ்ச்சியடைவார். நிச்சயமாக எனது குரு மஹாராஜா அவரது வாழ்த்துக்களை என்னை விட ஆயிரம் மடங்‘கு தங்களுக்கு அளிப்பார். இது எனது திருப்தியாகும். கூடியுள்ள பக்தர்களுக்கு அனைத்துப் புகழும் உரித்தாகுக."

19/04/2023

🙏🏻ஹரே கிருஷ்ணா!

*உலகியல் துன்பத்திலிருந்து* *மீளுதல்*

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பகவத்கீதையில் பகவான், ஒருவன் பிற எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு தம்மையே சரணடைய வேண்டும் என்று கூறுகிறார், அதில் சரண்புகுந்த ஆத்மாக்களை அவர் எல்லாவிதமான பாவச் செயல்களில் இருந்தும் காத்தருள்வார் என்று கூறுகிறார்.
ஶ்ரீல ரூபகோஸ்வாமி, அவர்கள் பாவச் செயல்களினால் உண்டாகும் துன்பங்களுக்கு, அப்பாவங்களும், முற்பிறப்பில் செய்த பாவங்களுமே காரணம் என்று கூறுகிறார். பொதுவாக ஒருவன் அறியாமையினாலேயே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான், அதனால் பாவங்களில் இருந்து தப்புவதற்கு அறியாமை ஒரு பரிகாரம் ஆகிவிட்டது. பாவச் செயல்கள் இரு வகைப்படும் அவை முதிர்ந்த பாவச்செயல்கள், மற்றும் முதிராத பாவச் செயல்கள் . எந்தப் பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்து கொண்டிருக்கிறோமோ அவை முதிர்ந்த பாவச்செயலாகும். நம்மிடம் சேர்ந்திருக்கும் பாவச் செயல்களின் காரணமாக நாம் இன்னும் துன்பம் அனுபவிக்க வில்லை என்றால் அவை முதிராத பாவச்செயலாகும். இதற்கு உதாரணமாக பல குற்றங்களைச் செய்த ஒருவன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதை கூறலாம். இப்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சிறைவாசம் அவனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், நமது சில பாவச் செயல்களின் காரணமாக எதிர்காலத்தில் துன்பம் அனுபவிப்பதற்கு நாம் இப்போது காத்துக் கொண்டிருக்கிறோம். நமது முதிர்ந்த சில பாவச் செயல்களின் காரணமாக நாம் இப்பொழுது துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பாவச் செயல்களும் அவற்றோடு ஒருங்கிணைந்த துன்பங்களும் என்று ஒரு சங்கிலித்தொடர் இருக்கின்றது. இப்பாவங்களின் காரணமாக பந்தப்பட்ட ஆத்மா பிறவிகள்தோறும் துன்பம் அனுபவித்து கொண்டிருக்கின்றான். இப்பிறப்பில் அவன் தனது முற்பிறப்பின் பாவச் செயல்களினால் துன்புறுகிறான். இதனிடையே அவன் தனது மறுபிறப்பில் துன்பம் அனுபவிப்பதற்காக இப்பிறப்பில் மேலும் பாவங்கள் செய்து கொண்டிருக்கின்றான். முதிர்ந்த பாவச்செயல்கள், ஒருவன் தீராத பிணியினால் வருந்தினாலோ, ஒருவன் சட்டச்சிக்கலுக்கு ஆளானாலோ, ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறந்ததாலோ, ஒருவன் கல்வியறிவற்றவனாக இருந்தாலோ ஒருவன் பார்கச் சகிக்காத அழகற்றவனாக இருந்தாலோ அவற்றிலெல்லாம் காணப்படுகின்றன.
நமது முந்தைய பாவச் செயல்களின் விளைவினால் நாம் இப்போது வருந்திக் கொண்டிருக்கின்றோம். நமது இன்றைய பாவச் செயல்களினால் எதிர்காலத்தில் நாம் வருந்த நேரிடலாம். ஆனால் பாவச் செயல்களின் விளைவுகள் அனைத்தும் நாம் கிருஷ்ண உணர்வு பெற்றோமென்றால் உடனே செயலிழந்து விடும். இதனை ஶ்ரீல ரூபகோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதம் பதினோராம் காண்டம், பதினாலாம் அத்தியாயம் ஸ்லோகம் 19 இல் எடுத்துக்காட்டுகிறார். இச்ஸ்லோகம் பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் பற்றியதாகும். அதில் பகவான் கூறுகிறார் "அன்பார்ந்த உத்தவரே , எனக்கு செய்யும் பக்தி தொண்டு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகும். அது அதிலிடப்படும் எண்ணற்ற விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடும்" என்று. இதன் பொருள் என்னவெனில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு அதில் விடப்படும் ஏராளமான விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடும். அதேபோல பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டு பாவச்செயல்கள் என்னும் விறகுகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும்.
ஒருவன் தனது முன்வினைப்பயன் காரணமாக பிராமணகுலத்திலோ அல்லது நாயை தின்னும் புலைக் குலத்திலோ பிறக்கிறான். புலைக் குலத்தில் பிறந்ததனால் அவனது முந்தைய செயல்கள் அனைத்தும் பாவச் செயல்கள் எனலாம். ஆனால் அதே மனிதன் பக்தி தொன்டில் ஈடுபட்டுப் பகவானின் புனித நாமங்களை ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே - என்று ஓதினானென்றால் அவன் உடனே வேள்விச் சடங்குகளைச் செய்வதற்குத் தகுதியுடையவனாகிறான். அதோடு அவனது பாவச் செயல்களின் பலன்கள் எல்லாம் உடனே மட்டுப்படுத்தப்படுகின்றன.

*(ஶ்ரீல பிரபுபாதர் / பக்தி ரசாம்ருத* *சிந்து/ அத்யாயம் ஓன்று)*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*ஹரே கிருஷ்ண*
*ஹரே கிருஷ்ண*
*கிருஷ்ண கிருஷ்ண*
*ஹரே ஹரே*🙏
*ஹரே ராம*
*ஹரே ராம*
*ராம ராம*
*ஹரே ஹரே*🙏

18/04/2023

ஸ்ரீமத் பகவத்கீதை உண்மையுருவில் *17ஆம் அத்தியாயம் நம்பிக்கையின் பிரிவுகள் 10ஆம் ஸ்லோகம்.*

யாத–யாமம் கத–ரஸம்
பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டம் அபி சாமேத்யம்
போஜனம் தாமஸ–ப்ரியம்

*வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:-*

யாத–யாமம்—சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு சமைக்கப்பட்ட உணவு; கத–ரஸம்—சுவையற்ற; பூதி—துர்நாற்றமுள்ள; பர்யுஷிதம்—ஊசிப்போன; ச—மற்றும்; யத்—எது; உச்சிஷ்டம்—பிறரால் உண்ணப்பட்ட உணவின் மீதம்; அபி—கூட; ச—மற்றும்; அமேத்யம்—தீண்டத் தகாத; போஜனம்—உணவு; தாமஸ—தமோ குணத்தில் இருப்பவர்களுக்கு; ப்ரியம்—பிரியமானது.

*மொழிபெயர்ப்பு:-*

உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருள்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.

*பொருளுரை:-*

உணவின் நோக்கம், ஆயுளை நீடித்து, மனதை தூய்மைப்படுத்தி, உடல் பலத்தை வளப்படுத்துவதாகும். உணவின் ஒரே குறிக்கோள் இதுவே, கடந்த காலத்தின் பெரும் முனிவர்கள், வாழ்நாளை அதிகரிக்கக் கூடியதும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதுமான, பால் பொருட்கள், சர்க்கரை, அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவுகளாக தேர்தெடுத்தனர். இத்தகு உணவுகள் ஸத்வ குணத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பிரிமானவை. சமைக்கப்பட்ட சோளம், வெல்லப்பாகு போன்ற இதர உணவுகள் நேரடியாக உண்பதற்கு உகந்தவையாக இல்லாவிடினும், பால் அல்லது வேறு உணவுப் பொருட்களளுடன் கலக்கப்பட்டு சுவையூட்டப்படுகின்றன. அதன் பின்னர் அவையும் ஸத்வ குணத்தில் இருப்பவையாகிவிடுகின்றன. இந்த உணவுப் பொருட்கள் யாவும் இயற்கையிலேயே மிகவும் தூய்மையானவை. தீண்டத்தகாத பொருட்களை மது, மாமிசம் போன்ற வற்றிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை. எட்டாவது பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொழுப்புச் சத்துமிக்க உணவுகளுக்கும், மிருகங்களைக் கொல்வதால் அயைடப்படும் கொழுப்பிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எல்லா உணவுகளிலும் மிகச்சிறந்ததான பாலின் உருவில் மிருகத்தின் கொழுப்பு நமக்குப் கிடைக்கின்றது. பால், வெண்ணெய், பாராடைக் கட்டி போன்ற பொருட்கள் மிருகத்தின் கொழுப்பை அப்பாவி மிருகங்களைக் கொல்வதற்கான தேவை ஏதுமின்றி வழங்குகின்றன. மிருகவதை நடைபெறவதற்கு ஒரே காரணம் கொடூர மனப்பான்மையே. தேவையான கொழுப்புச் சத்தை பாலின் மூலமாகப் பெறுவது நாகரிமான வழிமுறை. மிருகங்களைக் கொல்வது காட்டுமிராண்டித்தனம். பட்டாணி, பருப்பு, முழு கோதுமை போன்வற்றில் புரதத் சத்து தாராளமாக உள்ளது.

கசப்பான, உப்புக் கரிக்கின்ற. மிகவும் சூடான அல்லது மிளகாய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவு வகைகள் வயிற்றிலுள்ள கபத்தைக் குறைத்து வியாதிக்கு வழிவகுப்பதால் துன்பத்தைக் கொடுக்கின்றன், இவை ரஜோ குணத்தின் உணவுப் பொருள்கள் ஆகும். பழைய உணவுகள் இருளான தமோ குணத்தைச் சேர்ந்தவை. சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சமைக்கப்பட்ட எந்த உணவும் (இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தைத் தவிர) தமோ குணத்தில் இருப்பதாகவே கருதப்படுகின்றது. ஊசிப்போவதால் துர்நாற்றத்தைத் தரும் அத்தகு உணவுகள், தமோ குணத்தில் இருக்கும் மக்களை அடிக்கடி கவருக்கின்றன. ஆனால் ஸத்வ குணத்தில் இருப்பவர்களை வெறுப்பூட்டுகின்றன்..

எச்சில்பட்ட உணவுகள், முழுமுதற் கடவுளுக்கு முதலில் படைக்கப்பட்டவையாக இருந்தால், அல்லது சாதுக்களால் (குறிப்பாக ஆன்மீக குருவினால்) முதலில் உண்ணப்பட்டதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில் எச்சில்பட்ட உணவுகள் தமோ குணத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவை தொற்று நோய்களை அதிகப்படுத்துக்கின்றன. அத்தகு உணவுகள் இருண்ட குணத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சுவையானவையாக இருந்தாலும், ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் அவற்றை விரும்புவதில்லை, தொடுவதுகூட இல்லை. பரம புருஷ பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமே மிகச்சிறந்த உணவாகும். காய்கறிகள், மாவு மற்றும் பாலினால் தாயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் பக்தியுடன் படைக்கப்படும்போது, அவற்றை நாம் ஏற்றுக் கொள்வதாக பரம புருஷ பகவான் பகவத் கீதையில் கூறுகிறார். பத்ரம் புஷ்பம் பலம் தோயம். பரம புருஷ பகவானால் ஏற்றுக்கொள்ளப்படும் பொருள்களில் பக்தியும் அன்புமே தலைசிறந்தவை என்பது உண்மையே. இருப்பினும் பிரசாதமானது ஒரு குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாஸ்திர விதிகளின்படி தயாரிக்கப்பட்டு பரம புருஷ பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாத உணவு, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்டிருந்தாலும்கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். ஏனெனில், அது தெய்வீகமானதாகும். எனவே, உணவை களங்மற்றதாக, சாப்பிடத்தக்கதாக, மற்றும் எல்லாருக்கும் சுவையானதாக மாற்ற, ஒருவன் அதனை பரம புருஷ பகவானுக்கு நைவேத்யம் செய்தல் அவசியம்.

18/04/2023

விருந்தாவனம் யாத்ரா.
வ்ரஜ மண்டல் பரிக்ரமா

17a. கோபால் பட்ட கோஸ்வாமி ஸமாதி

ஸ்ரீல கோபால பட்ட கோஸ்வாமி 1585 ஆம் ஆண்டில் ஸமாதியில் அடைந்தார். மேலும் அவரது புனித உடல் இந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது ஜபத்தை செய்து கொண்டு, ராதாரமண் என்ற தனது விக்ரஹத்தை வணங்கிக் கொண்டு இருந்தார். கோபால பட்ட கோஸ்வாமி 1503 ஆம் ஆண்டு சந்திர மாதமான பௌஷாவின் (கிருஷ்ண-பக்ஷ) திரயோதசி அன்று பிறந்தார். அவர் தனது குழந்தைப் பருவத்தில் 1511 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் சைதன்ய மஹாபிரபுவின் சுற்றுப்பயணத்தின் போது, ​​ஸ்ரீரங்கத்தில் (ரங்கப்பட்டினம்) மஹாபிரபுவை முதன்முதலில் சந்தித்தார். சைதன்யர் ஸ்ரீரங்கத்திற்கு வந்த போது, ​​கோபால பட்டரின் தந்தையான வேங்கட பட்டரை சேஷசாயி விஷ்ணு, ரங்கநாத ஆலயம் என்று அழைக்கப்படும்
புகழ்பெற்ற கோவிலில் சந்தித்தார். ரங்கநாதரின் அதீத அழகைக் கண்ட பிறகு, சைதன்ய பகவான் புனித நாமங்களை உச்சரித்து, தெய்வத்தின் முன் பரவசத்தில் நடனமாடினார். அக்கோயிலில் சேவகராக இருந்த வேங்கட பட்டர், சைதன்ய பகவானுடன் சேர்ந்து, நாம உச்சாடனம் செய்து பரவச மனநிலையில் மஹாபிரபுவுடன் இணைந்து ஆடினார். கீர்த்தனை முடிந்ததும், வேங்கட பட்டர் பகவான் சைதன்யரை தனது இல்லத்திற்கு பிரசாதத்திற்காக அழைத்தார். மேலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது வீட்டில் மழைக்காலம் முழுவதையும் கழிக்குமாறு கேட்டுக் கொண்டார். மழைக்காலத்தின் நான்கு மாதங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில், மிக அதிக மழை பெய்யும் போது, ​​சந்நியாசிகள் மற்றும் பிற சாதுக்கள் பொதுவாக ஒரே இடத்தில் இருப்பர். எனவே சைதன்யர் வேங்கட பட்டரின் முன்மொழிவை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். வேங்கட பட்டர் ஸ்ரீ சம்பிரதாயத்தின் தூய வைஷ்ணவர் மற்றும் ரங்கஜி கோவிலில் அர்ச்சகராக இருந்தார். பகவான் சைதன்யர் தனது இல்லத்தில் தங்கியிருக்கும் போது ஒவ்வொரு நாளும் அவருடன் கிருஷ்ண கதையின் உன்னதமான தலைப்புகளைப் பற்றி விவாதிப்பார். வேங்கட பட்டரின் வீட்டில் பகவான் தங்கியிருந்த போது, ​​இளம் கோபால பட்டர் அனைத்து ஆன்மீகத் தலைப்புகளையும் கேட்கவும், மஹாபிரபுவின் மஹா பிரசாதங்களை கௌரவிப்பது உட்பட சைதன்ய பகவானுக்கு சேவை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. இள வயது கோபால பட்டரின் பக்தி குணங்களை அடையாளம் கண்ட சைதன்ய பகவான், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் அவருக்கு வயதானவுடன், அவர் விருந்தாவனம் சென்று தங்க வேண்டும் என்றும் கூறினார். ஸ்ரீ சம்பிரதாயத்தின் சிறந்த அறிஞர்களில் ஒருவரான கோபால பட்டரின் மாமா பிரபோதானந்த சரஸ்வதியையும் பகவான் சைதன்யர் சந்தித்தார். மேலும் கோபால பட்டரின் ஆன்மீக குருவாகவும் இருந்த பிரபோதானந்தர் கோபாலரின் கல்விக்கும் பொறுப்பாக இருந்தார். மற்றும் அவருக்கு சமஸ்கிருத இலக்கணம், தத்துவம், சொல்லாட்சி, கவிதை மற்றும் வேத கலாச்சாரத்தின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் பயிற்சி அளித்தார். பிரபோதானந்த சரஸ்வதியின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், கோபால பட்டரின் புலமை ஈடு இணையற்றது. பகவான் சைதன்யர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த போது, ​​பிரபோதானந்த சரஸ்வதியும் பகவான் சைதன்யரிடம் தத்துவத்தைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பைப் பெற்றார், மேலும் மஹாபிரபுவின் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் ஸ்ரீ சம்பிரதாயத்தை விட்டு வெளியேறி கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறி தனது எஞ்சிய வாழ்நாளை
விருந்தாவனத்தில் வாழ்ந்தார்.
அவரது பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, கோபால பட்டர், ரூப மற்றும் ஸநாதன கோஸ்வாமிகளிடம் அடைக்கலம் பெறுவதற்காக விருந்தாவனத்திற்குச் சென்றார். கோபால பட்டர் ஒரு நாள் அவர்களை சந்திப்பார் என்று சைதன்ய பகவான் ஏற்கனவே இரண்டு கோஸ்வாமிகளிடம் தெரிவித்திருந்தார். அவர்கள் உடனடியாக அவரை தங்கள் இளைய ஆன்மீக-சகோதரராக ஏற்றுக் கொண்டனர். கோபால பட்டர் விருந்தாவனத்திற்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சைதன்யர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மேலும் அவர் மேல் உள்ள துணி (சோக்கி) மற்றும் அவரது இடுப்பு துணி (கெளபின்) உள்ளிட்ட சில தனிப்பட்ட பொருட்களை கோபால பட்டருக்கு பரிசாக அனுப்பினார். சைதன்யர் பரிசாக அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு துணி போர்வை (சதர்) உள்ளது. விக்ரஹ வழிபாட்டில் நிபுணராக இருந்த கோபால பட்டர் ஸநாதன கோஸ்வாமியின் புகழ்பெற்ற புத்தகமான ஹரி-பக்தி-விலாஸத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக நம்பப்படுகிறது. ஹரி-பக்தி-விலாஸமானது பக்தி சேவையின் கொள்கைகளையும், விக்ரஹ வழிபாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வேத முறையையும் விவரிக்கிறது. ஜீவ கோஸ்வாமியின் புகழ்பெற்ற ஸத் ஸந்தர்பாவிற்கான ஆறு ஆய்வறிக்கைகளை உருவாக்க உதவியதற்காக கோபால பட்டருக்கும் பெருமை உண்டு. கோபால பட்டரின் மிகவும் புகழ்பெற்ற சீடர் புகழ்பெற்ற ஸ்ரீநிவாஸ ஆச்சார்யா ஆவார். கௌர-கனோத்தேஷ-தீபிகாவில், ஸ்ரீ கவி கர்ணபுரா கோஸ்வாமி கூறுகிறார், "என் கருத்துப்படி, விருந்தாவன லீலையில் அனங்க மஞ்சரி என்று கூறுகிறார்கள் இருப்பினும், சிலர் அவர் குண மஞ்சரி என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்."

14/04/2023

*இனிய புத்தாண்டு நலவாத்துக்கள்.* ஒவ்வொரு புத்தாண்டிலும் நமது ஆயுளில் ஒரு வருடம் குறைந்து கொண்டே செல்கிறது. இதை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் *கிருஷ்ண பக்தியில்* ஒரு சில நிமிடங்கள் செலவு செய்து வாழ்க்கையை இனிதாக அமைத்துக்கொள்வோம்.

தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை குறைந்தது 108 முறை உச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

12/04/2023

கிருஷ்ண உணர்வு அரிதானது

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கிருஷ்ண உணர்வு என்னும் விதை மிக அபூர்வமானதும், மதிப்புள்ளதும் ஆகும். 84 இலட்சம் உயிரின வகைகளில், எண்ணிலடங்கா உயிர்வாழிகள் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிமாறி அலைந்து திரிந்துகொண்டு இருக்கின்றன. அதில் ஆன்மீக அதிர்ஷ்டம் உள்ள ஒருவனே கிருஷ்ண உணர்விற்கு வருகிறான் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். சில நேரங்களில் கிருஷ்ண பக்தர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். பிச்சைக்காரர்கள் போல செல்வதே அவர்களது கொள்கை. ஆகையால், இந்தியாவில் பிச்சைக்காரர்கள், குறிப்பாக சந்நியாசிகளுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. ஒரு சந்நியாசி ஏதேனும் வீட்டிற்குச் சென்றால், “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று மிகுந்த மரியாதையோடு உபசரிக்கப்படுகிறார்.

பக்தர்கள் எதையும் கேட்பதில்லை, ஆனால் ஒருவன் சிறிதளவு உணவை அவருக்குக் கொடுத்தாலும், அஃது அவனை ஆன்மீக உயர்விற்கு தயார் செய்கிறது. தனது வீட்டிற்கு வந்த தூய பக்தருக்கு உணவளிக்கும் மனிதர் ஆன்மீக உணர்வில் முன்னேற்றம் காண்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் முன்னேற்றம் அடையும்போது, முடிந்தவரை பக்தர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நமது விரோதி நமது வீட்டிற்கு வந்தால்கூட, அவன் விரோதி என்பதை மறந்து, அவனை வரவேற்க வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. கடவுளுக்காக அனைத்தையும் துறந்த ஒரு தூய பக்தரை உபசரிப்பதைப் பற்றிக் கூற வேண்டியதே இல்லை.

குடும்பஸ்தர்கள் மதிய வேளையில், வெளியே வந்து, “பசியுடன் இருப்பவர்கள் யாராவது இருந்தால், சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட வேண்டும். இது குடும்பஸ்தர்களுக்கான கட்டளை. இப்படி கூப்பிட்டு யாரும் வராத பட்சத்தில் மட்டுமே குடும்பத் தலைவர் சாப்பிட வேண்டும். ஒரு மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்த அநேக நியமங்கள் வேதங்களில் உள்ளன. அவை மூட நம்பிக்கை அல்ல. தெய்வீக நிலைக்கு பயிற்சி பெற மனிதனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. என்றாவது ஒருநாள் அவன் கிருஷ்ண உணர்விற்கு வருவான் என்பதால், இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இத்தகையப் பயிற்சி காலத்தில், கடவுளின் தூய பக்தரை அவன் தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அத்தகைய தொடர்பினால் அவன் புனிதமடைகிறான். ஆகையால்தான், கடந்த வாழ்க்கையில் ஆன்மீக அறிவைப் பெற்ற அதிர்ஷ்டக்காரன் தூய பக்தரின் உறவை நாடுகிறான் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். ஆன்மீக குருவின் கருணையினால் கிருஷ்ண உணர்வு பெறப்படுகிறது, கிருஷ்ணரின் கருணையும் இதில் அடங்கும். ஒருவன் கிருஷ்ண உணர்வைப் பெற வேண்டும் என்று ஆன்மீக குருவும் கிருஷ்ணரும் விரும்பும்போது, கிருஷ்ண உணர்விற்கான விதை பலன் கொடுக்கிறது.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

10/04/2023

पिबन्ति ये भगवत आत्मनः सतां कथामृतं श्रवणपुटेषु सम्भृतम् । पुनन्ति ते विषयविदूषिताशयं व्रजन्ति तच्चरणसरोरुहान्तिकम् ॥३७॥
pibanti ye bhagavata ātmanaḥ satāṁ
kathāmṛtaṁ śravaṇa-puṭeṣu sambhṛtam
punanti te viṣaya-vidūṣitāśayaṁ
vrajanti tac-caraṇa-saroruhāntikam

pibanti - who drink;ye - those;bhagavataḥ - of the Personality of Godhead;ātmanaḥ - of the most dear;satām - of devotees;kathā-amṛtam - the nectar of the messages;śravaṇa-puṭeṣu - within the earholes;sambhṛtam - fully filled;punanti - purify;te - their;viṣaya - material enjoyment;vidūṣita-āśayam - polluted aim of life;vrajanti - do go back;tat - the Lord's;caraṇa - feet;saroruha-antikam - near the lotus.
Those who drink through aural reception, fully filled with the nectarean message of Lord Kṛṣṇa, the beloved of the devotees, purify the polluted aim of life known as material enjoyment and thus go back to Godhead, to the lotus feet of Him [the Personality of Godhead].
The sufferings of human society are due to a polluted aim of life, namely lording it over the material resources. The more human society engages in the exploitation of undeveloped material resources for sense gratification, the more it will be entrapped by the illusory, material energy of the Lord, and thus the distress of the world will be intensified instead of diminished. The human necessities of life are fully supplied by the Lord in the shape of food grains, milk, fruit, wood, stone, sugar, silk, jewels, cotton, salt, water, vegetables, etc., in sufficient quantity to feed and care for the human race of the world as well as the living beings on each and every planet within the universe. The supply source is complete, and only a little energy by the human being is required to get his necessities into the proper channel. There is no need of machines and tools or huge steel plants for artificially creating comforts of life. Life is never made comfortable by artificial needs, but by plain living and high thinking. The highest perfectional thinking for human society is suggested here by Śukadeva Gosvāmī, namely, sufficiently hearing Śrīmad-Bhāgavatam. For men in this Age of Kali, when they have lost the perfect vision of life, this Śrīmad-Bhāgavatam is the torchlight by which to see the real path. Śrīla Jīva Gosvāmī Prabhupāda has commented on the kathāmṛtam mentioned in this verse and has indicated Śrīmad-Bhāgavatam to be the nectarean message of the Personality of Godhead. By sufficient hearing of Śrīmad-Bhāgavatam, the polluted aim of life, namely lording it over matter, will subside, and the people in general in all parts of the world will be able to live a peaceful life of knowledge and bliss.

For a pure devotee of the Lord, any topics in relation with His name, fame, quality, entourage, etc., are all pleasing, and because such topics have been approved by great devotees like Nārada, Hanumān, Nanda Mahārāja and other inhabitants of Vṛndāvana, certainly such messages are transcendental and pleasing to the heart and soul.

And by the constant hearing of the messages of the Bhagavad-gītā, and later of Śrīmad-Bhāgavatam, one is assured herein by Śrīla Śukadeva Gosvāmī that he will reach the Personality of Godhead and render Him transcendental loving service in the spiritual planet of the name Goloka Vṛndāvana, which resembles a huge lotus flower.

Thus by the process of bhakti-yoga, directly accepted, as suggested in this verse, by sufficient hearing of the transcendental message of the Lord, the material contamination is directly eliminated without one’s attempting to contemplate the impersonal virāṭ conception of the Lord. And by practicing bhakti-yoga, if the performer is not purified from the material contamination, he must be a pseudodevotee. For such an imposter there is no remedy for being freed from material entanglement.

Thus end the Bhaktivedanta purports of the Second Canto, Second Chapter, of the Śrīmad-Bhāgavatam, entitled “The Lord in the Heart.”

Address

Katchathanallur
Ilayangudi
623701

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISKM Paramakudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share