St.Lourdes Church, Idindakarai

St.Lourdes Church, Idindakarai நாமே அமல உற்பவம்..

அன்னையின் தங்கத் தேர் திருவிழாவிற்கு அனைவரும் வருக.. அன்னையை வாழ்த்தி வடம்பிடித்து அவர் ஆசி பெற்று செல்ல அழைக்கிறோம்..
23/01/2025

அன்னையின் தங்கத் தேர் திருவிழாவிற்கு அனைவரும் வருக..

அன்னையை வாழ்த்தி வடம்பிடித்து அவர் ஆசி பெற்று செல்ல அழைக்கிறோம்..

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மசபியேல் குகை காட்சி தந்த எம் லூர்து அன்னையின் திருவிழா என்றால் இடிந்தகரை மக்களுக்கு பேராணந்தம். ...
07/12/2024

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மசபியேல் குகை காட்சி தந்த எம் லூர்து அன்னையின் திருவிழா என்றால் இடிந்தகரை மக்களுக்கு பேராணந்தம்.

ஆம் வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி தங்கத் தேரிலே பவணி வர காத்திருக்கும் அன்னையின் திருவிழா காண ஆசிகளை பெற்று செல்ல அன்போடு அழைக்கிறோம்.

பதிவு : அன்றன் சைரஸ்

அன்னையின் ஆசிர் பெற..அனைவரும் வருக..
02/02/2023

அன்னையின் ஆசிர் பெற..

அனைவரும் வருக..

02/01/2023

கிறிஸ்துமஸ் குடில்

Rajesh Smith ❤️

அன்பான கத்தோலிக்க இறைமக்களே... உங்கள் உள்ளங்களைத் தொடும் ஒரு கேள்வி...!!!நமது ஆலயங்களில் உள்ள தூயகம் (பலிபீடம்) என்பது வ...
23/04/2022

அன்பான கத்தோலிக்க இறைமக்களே... உங்கள் உள்ளங்களைத் தொடும் ஒரு கேள்வி...!!!
நமது ஆலயங்களில் உள்ள தூயகம் (பலிபீடம்) என்பது வெறும் ஒரு அலங்கார மேடையா...????

"ஐயையோ!!!! இப்படி அபத்தமான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?
பலிபீடம் என்பது எவ்வளவு பரிசுத்தமானது.. கல்வாரி நாயகனாம் கிறிஸ்து இயேசுவின் பலிபீடமும், ஆலயமும் கத்தோலிக்க இறைமக்களாகிய நமக்கு உயிருனும் மேலானது. அதனை நீங்கள் அலங்கார மேடையா என்று கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!!!" -என்று நீங்கள் எல்லாரும் இணைந்து குரல் கொடுப்பது நமக்கு தெளிவாக கேட்கத் தான் செய்கிறது...!

அப்படியானால் தெரிந்தே தான் நாம் தவறு செய்கின்றோம். பரிசுத்தமான பலிபீடத்தை மறைத்து, தேவைக்கு அதிகமாக அலங்காரப் பூக்களை வாங்கி அலங்காரம் வைத்து விட்டு, அழகாக ஒவ்வொரு கோணங்களில் நின்று கொண்டே விலையுயர்ந்த கைப்பேசிகளில் சுயமி (செல்ஃபி) எடுத்து அழகு பார்க்கின்றோம். திருப்பலி நிறைவேறிய உடனே பரபரப்பாக சென்று அனைத்து பூக்களையும் எடுத்து பத்திரமாக ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்து, அதனை அடுத்த ஞாயிறு எடுத்து வந்து மீண்டும் பீடத்தில் வைத்து அழகு பார்க்கின்றோம். இந்த அழுகிய பூக்கள் வேண்டும் என்று இறைவன் நம்மிடம் கேட்டாரா என்ன...! பின்னர் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த ஆர்ப்பாட்டம்...!!

நம்முடைய இல்லங்களில் உள்ள பூக்களையோ அல்லது அளவாக பூக்கடையில் வாங்கி வந்தோ, பீடத்தை எளிய முறையில் அழகு படுத்தலாம்.

மேலும் தேவையில்லாமல் பதாகைகளை அடுக்கி வைத்து பலிபீடத்தின் பரிசுத்தத்தை களங்கப்படுத்தாதீர்.!

பலிபீடத்திற்கு முன்னர் தேவையில்லாமல் கூடுவதையும், கைப்பேசிகளில் பேசிக் கொண்டு திரிவதையும் தவிர்ப்போம். அலங்காரம் என்னும் பெயரில் அழுகிய பூக்களையும், தேவையற்ற அலங்காரங்களையும் பீடத்தில் வைப்பதை நிறுத்திக் கொள்வோம்.

முக்கியமாக நமக்கு இருக்கும் கலைஞானத்தை பீடத்தில் காட்டுகிறேன் என்ற பெயரில், ஏராளமான பொருட்களைக் கொண்டு பீடத்தை அடைத்துக் கொண்டு, கலைமேடையாக மாற்றுவதை மாற்றிக் கொள்வோம். நமது கலைத் திறமைகளை வெளிக் கொணர்வதற்கென ஆலய விழா, கலைவிழாக்கள், விவிவிலிய விழாக்கள் எனப் பல உண்டு. அவற்றில் திறமைகளை பயன்படுத்திக் கொள்வோம்.

முக்கியமாக ஆலயத்தினுள் அமைதி காப்போம். அரட்டைகளை வெளியே வைத்துக் கொள்வோம்.

பலிபீடம் அது "பரிசுத்தமான இடம்" என்பதை என்றும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம்.

இப்பதிவு எவரையும் குறைகூறுவதற்காக அல்ல. குறைவு படாமல் வாழ்வதற்காகத் தான். நன்றி...!!!

“விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறியிருக்க, எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?"
திருத்தூதர் பணிகள் 7:49

17/03/2022

நம் மண்ணைக்‌ காத்து நம்‌ மனங்களை ஆளும் லூர்தன்னைக்கு நன்றியாய்..

10/02/2022
02/02/2022

இடிந்தகரை புனித லூர்து அன்னையின் 116‌ வது ஆண்டு திருக்கொடியேற்ற நிகழ்வு..😍

02/02/2022

அனைவரும் வருக அன்னையின் அருள் பெற்று செல்க..

Night View..😍
20/12/2021

Night View..😍

Address

627104
Idindakarai
627104

Alerts

Be the first to know and let us send you an email when St.Lourdes Church, Idindakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Lourdes Church, Idindakarai:

Share