SivayogaprapanjaPeedam

SivayogaprapanjaPeedam Reg No : 6/BK4/2019
102, பாளப்பாளையம், தீர்த்தாம்பா

சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும்... ஏகாதசி வழிபாடு...!!                ஏகாதசி வழிபாடு...!!ஏகாதசி என்பது சந்திரனின் இயக்க...
23/08/2022

சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும்... ஏகாதசி வழிபாடு...!!
ஏகாதசி வழிபாடு...!!

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

ஆவணி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகிறது. இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் ஏராளமான பலன்கள் பெறலாம்.

மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.

ஏகாதசி விரதமுறை :

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

ஏகாதசி விரத மகிமை :

சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

ஆத்மஜோதி சாந்தி ஒளி மலரட்டும்..

*108 மூலிகை தூப பொடி**தெய்வீக 108 மூலிகை சாம்பிராணி தூபம்*வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மூலிகை...
06/08/2022

*108 மூலிகை தூப பொடி*

*தெய்வீக 108 மூலிகை சாம்பிராணி தூபம்*
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மூலிகை
#சாம்பிராணி தூபம்
நெருப்பில் தூவும் போது பைரவ, #சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது. எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.
தினசரி தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். *மூலிகை சாம்பிராணி பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது.*

இந்த #மூலிகை கலவையை கொண்டு தூபம்
போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
(சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு
உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக #ஹோமம் மற்றும் யாகம் செய்த
பலனை எளிமையாக பெறலாம்(தடைகள்
விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம்
உண்டாகும், #ஏவல், #பில்லி #சூனியம் போன்ற
தடைகள் நீங்கும்,நவ கிரக #தோஷங்கள்
நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்
களின் சாபம் போன்றவை போய் விடும்)

2.கடை மட்டும் தொழில் நிலையங்களில்
உபயோக படுத்த #வியாபாரம் பெருகும்,எதிரிகள்
தொல்லை விலகும்.

3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண்
சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை
போன்றவை அகலும்.

4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ
கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில்
தங்காது.

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி
தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில்
உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட
காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை
அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை
எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில்
நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல்
அதிகரிக்கும்.

தெய்வீக மூலிகை சாம்பிராணி தூபம்
இதில் கலந்துள்ள மூலிகை பொருட்கள் அனைத்தும் உயர்தரமானவை 1.மூன்று வகை சாம்பிராணி 2.குங்கிலியம் 3.தசாங்கம் 4.சந்தன தூள் 5.வெட்டி வேர் 6.மடிப்பாள் 7.கருந்துளசி 8.நொச்சி இலை 9.திருநீற்று பச்சை 10.கஸ்தூரி மஞ்சள் 11.மருதாணி விதை 12.அருகம்புல் 13.வெண்கடுகு 14.ஒம்மம் 15.வேம்பு இலை 16.வில்வ இலை 17.பச்சைக்கற்பூரம் 18.திருநீற்றுபச்சியிலை 19. ** *மேலும் 108 அதி ரகசிய மூலிகைகள் பல

#தெய்வீக மூலிகை சாம்பிராணி #தூபம் 50 gm தேவைபடுவோர் தொடர்புக்கொள்ளவும். 7010873413, 6383010626
Whatsapp 7010873413
50gm Price Rs. 50

19/05/2022

திரு ஜோதி மெய்ஞான சிதம்பரம்,

மெய் குருமார்கள் காட்டிக்கொடுத்த மரணமில்லா பெருவாழ்வு, சாகா கல்வியானது திரு ஜோதி மெய் ஞான சபையிலே ஆத்ம ஜோதி களுக்கு காட்டிக் கொடுக்கப்படுகிறது.
ஞான சித்த உலகத்தை அரங்கேற்றம் செய்வதற்கான நாள் வந்தமையால் அதற்கு உண்டான கொடியேற்றமும் நடைபெறுகிறது.

கோரக்கர் சித்தர் குருநாதர் 2222 இல் ஞான சித்த உலகம் தொடங்கும் அப்பொழுது இந்த உலகம் தர்மத்தோடு நிலைகொள்ளும் என்று சந்திரரேகையில் குறிப்பிட்டிருந்தார். அதன்பொருட்டு
அருட்பெரும்ஜோதி ராமலிங்க ஞானவள்ளல் தந்தை அவர்களும் ஞான சித்தர் உலகம் தொடங்கிவிட்டது என்று கூறியிருந்தார். அவரும் ஞான கொடியை ஏற்றி வடலூரில் கருங்குழி என்னும் இடத்திலே ஞானத்தை அரங்கேற்றம் செய்து இந்த உலகெங்கும் ஒளி பெறச் செய்தார். மீண்டும் ஆதி பரம்பொருள்

ஆதிபெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையிலே, தயவொளியிலே, பச்சை மரத்திலே ஞான கொடியேற்றம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது.
இதுவரை 18 கலியுகங்கள் நடந்துள்ளது. இது பதினெட்டாவது கலியுகம். இது பிரளய காலம் என்னும் பொருள் படும் . உலகம் அழிவதற்கு அதாவது இந்த பூமியில் இருக்கக்கூடிய அனைத்து நிலைகளும் அழிவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது
என்பதால் இந்த அண்டங்களை காத்து நிற்கும் குருமார்களின் திருவடி இவ்விடத்திலிருந்து ஒளி பெற்றுக்கொண்டு, இந்த பிரபஞ்சத்தை காத்து ரட்சிக்க

ஆதி பரம்பொருளின் ,
ஆதி பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி இன் ஞான ஒளியில், இனி உத்தம ஆத்ம ஜோதி களை ஒளி பெறச் செய்து

இயற்கையை பாதுகாத்து, உயிரினங்களை பாதுகாத்து, மனிதகுலம் நல்வாழ்வு பெறுவதற்கும், மனிதகுலம் இன்புற்று வாழ தேவையான சகல ஐஸ்வரியங்களையும் ,சகல நன்மைகளையும் வழிகாட்டி ,இறவா பிறவாநிலை அதாவது
மரணமில்லா பெருவாழ்வு நிலை அடையும் வழிகாட்டி, இந்த திரு ஜோதி மெய் ஞான சிதம்பர கொடியேற்றம், அரங்கேற்றம் நடைபெற உள்ளது.
பக்தர்களும், ஞான ஒளி தேடும் ஆத்மஜோதி களும் வந்து இதில் கலந்துகொண்டு பேரொளி பெறுவீர்கள்,
, ஞானம் அடைவீர்கள்.

மே 21 சனிக்கிழமை
10 மணிக்கு
6383010626 ,6385313892,

18/05/2022

சிவயோக பிரபஞ்ச ஜோதி ,திரு ஜோதி மெய்ஞான சிதம்பரம், அஷ்ட பாலமுருகன் அருள் ஆசியுடன் மனிதகுலம் துன்பத்திலிருந்து இன்பம் பெற, நோய்களில் இருந்து விடுபட, ஞான சித்த உலக ,சத்ய யுக தொடக்க கொடியேற்றம் ஆனது நடைபெற உள்ளது. வரக்கூடிய மே 21-ஆம் தேதி வைகாசி 7 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது உலக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு நல்லருள் பெறுவீர்கள். வருக வருக என வரவேற்கிறோம்..

சிவயோக பிர பஞ்ச பீடம் அறக்கட்டளை..

பாளப்பாழையம்
கொளப்பலூர்
கோபி தாலுக்கா
ஈரோடு மாவட்டம்..

Address

102, Palappalayam, Theerthampalayam, Gobi (TK), Erode (Dt), Bus No (from Gobi) : 2B, 2C, 22
Gobichettipalaiyam
638456

Alerts

Be the first to know and let us send you an email when SivayogaprapanjaPeedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SivayogaprapanjaPeedam:

Share

Category