24/09/2015
தேவனுடைய வார்த்தையை நாம் அறிக்கையிட்டால் அது அப்படியே நம் வாழ்க்கையில் நடந்து விடுமா ?
இதை சற்று விளக்கமாக பார்ப்போம் :
நீங்கள் டில்லி செல்வதற்க்காக ரயில் நிலையத்திற்க்கு செல்கிறீர்கள்.
அங்கு டில்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருக்கிறது.
அந்த வண்டி டில்லி செல்கிறது என்று அறிவிப்பு வருகிறது.
இப்போது கேள்வி என்னவென்றால்,
அந்த ரயில் டில்லி செல்லுவது உண்மையாக இருந்தாலும்,
அந்த ரயில் டில்லி தான் செல்லுகிறது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும் , நீங்கள் டில்லி செல்ல முடியுமா ?
முடியாது இல்லையா ?
எப்போது போக முடியும் என்றால்,
நீங்கள் அந்த ரயிலில் ஏறி ... அது டில்லி செல்லும் வரை நீங்கள் அந்த ரயிலில் இருந்தால் மட்டுமே டில்லி செல்ல முடியும்.
அது போலவே ... !
தேவனுடைய வார்த்தைகள் என்றும் மாறாத உண்மையான வைகள்.
அவைகள் உண்மையாய் இருப்பதாலோ,
அதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பதாலோ, உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை.
எப்போது அதை உங்கள் வாயில் வைத்து அதை பேசுகிறீர்களோ, அப்போது நீங்கள் ரயிலில் ஏறுவது போல,
பேசினால் (அறிக்கை) மட்டும் போதாது, அந்த ரயில் டில்லி போகும் வரை அதில் பிரயானம் செய்ய வேண்டும்.
அதாவது, நீங்கள் எதை எதிர்பார்த்து பேசினீர்களோ அது நிறைவேறும் வரை அதையே பேசி....
அதையே சிந்தித்து..
அதையே விசுவாசத்தில் பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
கிரியை இல்லாத விசுவாசம் செத்தது.
இங்கு நீங்கள் விசுவாசித்து பேசி அறிக்கையிட்டால் மட்டும் போதாது.
அறிக்கையிட்டதை பெற்றுக் கொள்ளும் வரை உங்கள் கிரியையினாலே காத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு கிரியை என்பது
நீங்கள் எதை எதிர்பார்த்து பேசினீர்களோ அது நிறைவேறும் வரை அதையே பேசி அதையே சிந்தித்து, அதையே விசுவாசத்தில் பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
இப்படி விசுவாசித்து அறிக்கையிட்டால் மட்டுமே நிச்சயமாக அறிக்கையின் 100% பலனை அடைய முடியும்.
நீங்கள் அறிக்கையிட்டு விட்டு அதற்க்கு எதிர்மாறாக (பேசிக் கொண்டு) கிரியைகளை செய்தால் , நீங்கள் அறிக்கையிட்டது வீணாயிருக்கும்.
விசுவாசம் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
யாக்கோபு 2 :17
ஆமேன்.
Pastor Vijayakumar,
Apostolic Faith Confession church,
Erode-2
உங்கள் சபைகளில் பேச அழையுங்கள்
+91-84 -2 -83-70 -777