St Josephs Cathedral Dindigul

St Josephs Cathedral Dindigul The church was built between 1866 and 1872. It is the head quarters of Dindigul diocese of Roman Catholic Churches in Dindigul.

24/04/2026

கொடி அர்சிப்பு மேனால் பேராயர் அந்தோணி பாப்பு சாமி மதுரை உயர் மறைமாவட்டம்

பேராலய 161 ஆம் ஆண்டுத் திருவிழா
24/04/2026

பேராலய 161 ஆம் ஆண்டுத் திருவிழா

03/03/2026

*🏵️ திருத்தந்தையின் வேண்டுகோள்!*

மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்கள் குறித்து, திருத்தந்தை14ஆம் லியோ அவர்கள், அருட்தந்தையர்களை உடனடியாக தேவாலயங்களின் கதவுகளைத் திறந்து, புனித ஜெபமாலை ஜெபிக்கவும், நற்கருணைக்கு முன் பணிவுடன் ஜெபிக்கவும் மக்களை அழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

விசுவாசிகள் தங்கள் தேவாலயங்களுக்கு அல்லது அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யுமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

திருத்தந்தை உலகிற்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்: "மத்திய கிழக்கிலும், இப்போது உக்ரைன் மற்றும் கிரிமியாவிலும் போர்கள் மிகவும் தீவிரமாகிவிடும், மேலும் பரவும்.

அவர்களைத் தடுக்கவும், உலகத்தை ஆண்டவருடைய கருணையால் நிரப்பவும், ஆட்சியாளர்கள் நன்மை, தீமை பற்றிய அறிவைப் பெறவும், உலக அமைதி மற்றும் அன்புக்காக ஒன்றினைந்து போராடவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு, அறிவூட்டவும் நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்.

திருத்தந்தை,
அருட்தந்தையர்களை
இறை வழிபாடுகளை எளிமையுடனும், அன்புடனும் கொண்டாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது வேண்டுகோளை மீண்டும் கூறும் அவர், "ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் ஒன்றுபட்டு ஜெபியுங்கள், ஜெபியுங்கள், ஜெபியுங்கள். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருடைய பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பும்படி கடவுளிடம் ஜெபியுங்கள்!"

மூன்று முறை இயேசு கற்பித்த ஜெபத்தையும், மூன்று முறை மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஜெபியுங்கள். கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பும்படியான ஜெபமாகும்.

முடிந்தால், இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதைப் பரப்புவதற்கு நம் உதவியை கேட்டு எழுதுகிறார்:

*உலகம் முழுவதும் அமைதிக்காக:*

இன்றிலிருந்து இந்த ஜெபத்தைச் ஜெபிக்கவும், அதை மீண்டும் மீண்டும் செய்யவும், நாம் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

*மகா பரிசுத்த திரித்துவமே, சர்வ வல்லமையுள்ள இறைவனே, கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தமே, சாத்தானை அழித்து, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும்.*

*மரியாளின் மாசற்ற இருதயமே, சாத்தானை நசுக்குவீராக, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும்.*

*அதிதூதரான புனித மிக்கேலே! சாத்தானைச் சங்கிலியால் பிணைத்து, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும். ஆமென்!*

இந்த ஜெபத்தை ஒருமுறை சொல்லிவிட்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; இதனால் சிறிது நேரத்தில், பலரும் அதை ஜெபிப்பார்கள்.

நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, ஜெபத்திற்கு வல்லமை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*கடவுள் உலகத்தை ஆசீர்வதிக்கட்டும்.*

Address

Dindigul

Telephone

+918940224994

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Josephs Cathedral Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category