CR astro dgl

CR astro dgl Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CR astro dgl, Religious organisation, 56 water tank Road, Dindigul.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
07/09/2024

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

தொழில் ரீதியாக முடிவுகள் எடுக்கும் போது மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த ஜாதகம் மிகச் சிறந்த உதாரணம...
21/08/2024

தொழில் ரீதியாக முடிவுகள் எடுக்கும் போது மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த ஜாதகம் மிகச் சிறந்த உதாரணம் சுமார் 32 வயது வரை ராகு மற்றும் குரு திசைகளில் இருந்த இந்த ஜாதகர் தற்பொழுது சனி திசைக்குள் நுழைந்து இருக்கிறார் சனி திசையில் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கக் கூடிய இவர் தொடர்ந்து இங்கேயே வேலை செய்யலாமா அல்லது வெளிநாட்டிற்கு முயற்சி செய்யலாமா என்பதை இவருடைய கேள்வி. லக்கினத்திற்கு ஆறாம் இடத்து அதிபதியான சனி தொழில் காரகனும் ஆகி ஆட்சி பெற்று அவரோடு உச்சம் பெற்ற பாக்யாதிபதியான செவ்வாயும் இணைந்து ஆறாம் இடத்தில் மிக வலுப்பெற்ற அமர்ந்திருப்பது இந்த ஜாதகருக்கு அடிமைத்தொழில் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சரியாக வராது பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி பெற்ற உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்து ராகுவும் அதை வலுப்படுத்துவதால் வெளி ஊரில் சொந்த தொழில் செய்ய மிக உகந்த ஜாதகம் இது. ரியல் எஸ்டேட் அல்லது அழியும் பொருள் அழுகும் பொருள் பால் பூ காய்கறி போன்ற வியாபாரங்கள் செய்வது ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்கள் செய்வது போன்றவை அனைத்தும் இவருக்கு மிக உன்னதமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய வலுவான ஜாதகம் ஆனால் இவர் கேட்பது எனக்கு வெளிநாட்டு வாய்ப்பு உண்டா என்று கேட்கிறார் எம்பிஏ படித்து இருந்தாலும் இந்த ஜாதகர் நிச்சயமாக சொந்த தொழில் மூலம்தான் முன்னேற்றத்திற்கு வரவேண்டும் அதுவும் பலருக்கும் வேலை கொடுக்கக்கூடிய யோகமான ஒரு ஜாதகம் கேள்வி எப்படி கேட்கின்றார் என்றால் எனக்கு நல்ல வேலை கிடைக்குமா என்பதுதான் இவர் வேலையின் பின்னால் சுற்றினால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் இவரால் சரியான ஒரு வேலையில் செட்டில் ஆக முடியாது ஆகவே சிறிய அளவில் சுயதொழில் செய்ய வேண்டும் என்பது விதி இப்பேற்பட்ட முடிவுகளை எடுக்கும் பொழுது ஜோதிடர்களை கேட்டு எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த ஜாதகம் மிகச் சிறந்த உதாரணம்

பள்ளி செல்லும் நாட்கள் யாருக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது? ஒரே ஒரு சேமியா ஐஸ் அல்லது ஜவ்வரிசி ஐஸ் வாங்குவது அந்த நாளின் ...
22/03/2024

பள்ளி செல்லும் நாட்கள் யாருக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது?
ஒரே ஒரு சேமியா ஐஸ் அல்லது ஜவ்வரிசி ஐஸ் வாங்குவது அந்த நாளின் லட்சியமாக இருந்ததெல்லாம் உண்டு! சரியாக மதிய உணவு இடைவேளை முடிந்து மணி அடிக்கும் பொழுது ஐஸ் வாங்கிக்கொண்டு அதையும் வெள்ளை சட்டையில் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளாசில் போய் அமர்ந்து ஆசிரியர் போர்டு பக்கம் திரும்பியவுடன் சடனாக ஐஸை எடுத்து இரண்டு சப்பு சப்பி விட்டு மீண்டும் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருந்த பள்ளி நாட்கள் நினைவில் நிற்கிறது!!
ஆசிரியர் கண்டுபிடித்து இதற்காக ஸ்பெஷல் ஆக பிரம்பை வைத்து கவனித்ததெல்லாம் தனி கதை! அதையும் நினைவில் நிற்கிறது வாங்கிய உதையும் நினைவில் நிற்கிறது!!

Address

56 Water Tank Road
Dindigul
624002

Alerts

Be the first to know and let us send you an email when CR astro dgl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share