Arulmigu Palaniandavar Bala Dhandayuthapani

Arulmigu Palaniandavar Bala Dhandayuthapani Dedicated to Lord Muruga.

அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனேதெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே                                            ...
13/05/2016

அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே
அழகெல்லாம்
பழஞானப் பசியாலே பழனிக்கு வந்தவன்
பழமுதிர்ச் சோலையிலே பசியாறி நின்றவன்
அழகெல்லாம்
குன்றெல்லாம் ஆள்பவன் குகனாக வாழ்பவன்
குரவல்லிக் காந்தனவன் குறிஞ்சிக்கு வேந்தனவன்
பூவாறு முகங்களிலே பேரருள் ஒளிவீசும்
நாவாரப் பாடுகையில் நலம்பாடும் வேலனவன்
அழகெல்லாம்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியசண்முக கவசம்அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்தொண்டர்கள் குருவுமாக...
23/04/2016

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. ... ... ... ... (1)

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. ... ... ... ... (2)

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. ... ... ... ... (3)

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. ... ... ... ... (4)

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. ... ... ... ... (5)

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. ... ... ... ... (6)

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. ... ... ... ... (7)

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. ... ... ... ... (8)

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. ... ... ... ... (9)

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. ... ... ... ... (10)

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. ... ... ... ... (11)

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. ... ... ... ... (12)

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. ... ... ... ... (13)

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. ... ... ... ... (14)

சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. ... ... ... ... (15)

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. ... ... ... ... (16)

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. ... ... ... ... (17)

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. ... ... ... ... (18)

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. ... ... ... ... (19)

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. ... ... ... ... (20)

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. ... ... ... ... (21)

மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. ... ... ... ... (22)

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. ... ... ... ... (23)

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. ... ... ... ... (24)

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க. ... ... ... ... (25)

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. ... ... ... ... (26)

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. ... ... ... ... (27)

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. ... ... ... ... (28)

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. ... ... ... ... (29)

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. ... ... ... ... (30)
.. ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று

14/04/2016
பச்சை மயில் வாகனனே சிவபால சுப்பிரமணியனே வா - இங்குஇச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்எள்ளளவும் ஐயமில்லை - (பச்சை மயில்)  1 கொ...
05/04/2016

பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமணியனே வா - இங்கு
இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லை - (பச்சை மயில்) 1

கொச்சை மொழியானாலும் - உன்னைக்
கோஞ்சிக் கோஞ்சிப் பாடிடுவேன் - இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா - (பச்சை மயில்) 2

வெள்ளமது பள்ளந்தனிலே பாயும்
தன்மை போல உள்ளந்தனிலே - நீ
மள்ள மள்ள புகுந்து விட்டாய் எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சை மயில்) 3

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அதில்
நேர்மை என்னும் திபம் வைத்தேன் - நீ
செஞ்சிலம்ப கொஞ்சிட வா மருகா
சேவற் கொடி மயில் வீரா - (பச்சை மயில்) 4

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - மருகா
எங்கும் நீறைந்தவனே - (பச்சை மயில்) 5

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் - (பச்சை மயில்) 6

"திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்மருவடிவான வதனங்கள் ஆறும் மலர...
17/03/2016

"திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!"

[கந்தரலங்காரம், திருப்பாடல் 102]

["திருமுருகக் கடவுளின் திருவடிகளும், அவற்றை அலங்கரிக்கும்
தண்டை எனப்படும் அணிகலனும், உள்ளே மணிகள் ஒலிக்கும்
சிலம்பும், கிரவுஞ்ச மலையைத் தொளைத்துப் போர் செய்த கூர்மையான
வேலாயுதமும், கடப்ப மலர்களும், அம்மலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பெற்ற விசாலமான பன்னிரண்டு திருத்தோள்களும்
பொருந்திய அழகுமிக்க ஆறு திருமுகங்களும், குருமூர்த்தியாக
எழுந்தருளிவந்து அடியேன் மனம் குளிருமாறு ஆனந்தக்கூத்தாடின!"]

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்மாஹா சிவராத்திரி நாள் 07-3-2016 திங்கக்கிழமைஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த...
07/03/2016

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்

மாஹா சிவராத்திரி நாள் 07-3-2016 திங்கக்கிழமை

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியானசதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க“மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தமசிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அதுஉத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும்மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அதுஅதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,இன்னுயிர்ச் சாலம் எல்லாம் ...
05/03/2016

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,
இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல்
நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள் செய்வாயே. ...... 1

மனதினை உன்னில் ஊன்றி வாழ்வு தாழ்வுற்ற போதும்
மனநிலை சாய்ந்தி டாமல், வாய்த்ததில் திருப்தியுற்று,
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்று மின்றி
இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே. ...... 2

எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளிணையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே. ...... 3

உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன்
பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன்
இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு
தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே. ...... 4

யானென(து) என்ற கர்வம் அணுவள வேனும் என்றன்
மானஸம் தன்னில் தோன்றா வலி, நிலை பெயராத் தைர்யம்,
ஞானசா தனத்தில் வேட்கை, நன்னெறி, குருவணக்கம்,
தானமா குணங்கள் எல்லாம் தயவுடன் அருள் செய்வாயே. ...... 5

விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன்
திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்தியும் திறனு முற்று
ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே. ...... 6

வெற்றிவேல் முருகனுக்கு அரோகராவள்ளி மணவாளனுக்கு அரோகராவேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவாஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியா...
20/02/2016

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா
வெற்றிவேல்
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா –வேலவா
வெற்றிவேல்
முத்தே ரத்தினமே முருகையா-முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
வேலவா

நான் ... அழகன் முருகனின் பிள்ளை(நான் ... அழகன் முருகனின் பிள்ளைஇங்கு அவனுக்கு வேறு ... பிள்ளைகள் இல்லைநான் ... அழகன் முர...
10/02/2016

நான் ... அழகன் முருகனின் பிள்ளை

(நான் ... அழகன் முருகனின் பிள்ளை
இங்கு அவனுக்கு வேறு ... பிள்ளைகள் இல்லை
நான் ... அழகன் முருகனின் பிள்ளை)

பழகும் அன்பருக்கு ... அவன் பிள்ளை (2)

அந்தப் பழநி வேலனுக்கு நான் ... பிள்ளை

(நான் ... )

வள்ளி தேவானைத் தாயாகவில்லை
அவர் வாழும் படைவீட்டில் தாலாட்டும் இல்லை (2)

சொல்லித் துதிப்பவர்கள் எல்லோரும் பிள்ளை (2)

பிறை சூடிய சிவனுக்கு நான் ... பேரப் பிள்ளை

(நான் ... )

நான் ... அழகன் முருகனின் பிள்ளை.

(திருப்புகழின் ஓசை கேட்க்குதுமுருகன் ... சிறப்புகளை எதிரொலிக்குது)(திருப்புகழின் ... )(திருவண்ணாமலையிலே ... தெய்வீக நிலை...
19/01/2016

(திருப்புகழின் ஓசை கேட்க்குது
முருகன் ... சிறப்புகளை எதிரொலிக்குது)

(திருப்புகழின் ... )

(திருவண்ணாமலையிலே ... தெய்வீக நிலையிலே
தேனூறும் சுவையோடு ... திருமுருகன் புகழ்பாடும்)

(திருப்புகழின் ... )

அடியெடுத்து முருகனே கொடுத்ததனால் அவன்
அருள்கிடைத்து கவி மலை தொடுத்ததனாலே

அழகு தமிழ் சந்த நடை போட்டு வந்தது ... அன்று
அருணகிரிநாதருக்கு பாட்டு வந்தது

தந்தைக்கு உபதேசம் செய்தபோதிலும்
தந்தையின் திருவருள் வேண்டுமென்றே

திருமுருகன் வேண்டி வந்து தவமிருந்த ஊர்
திருமுருகன் பூண்டியாக மாறியதென்று

(திருப்புகழின் ... ) (2)

(திருவண்ணாமலையிலே ... )

(திருப்புகழின் ... )

திருத்தல விருட்சமாக குராமரம் உண்டு
தினந்தோரும் அர்த்தஜாம பூஜைகளும் உண்டு

சிவனை பூஜித்து சிவனாக முருகனே
காட்சி தரும் தலமான திருவிடைக்கழி உண்டு

இலங்கையில் கதிர்காமம் கோயிற்கடைவைநல்லூர்
கதிரை மலையிலும் கார்த்திகேயன் உண்டு

தென்னாப்பிரிக்காவில் போர்வுட்டில் குமரன் உண்டு
லண்டனிலும் அந்தமான் தீவினிலும் முருகன் என்று

(திருப்புகழின் ... ) (2)

(திருவண்ணாமலையிலே ... )

(திருப்புகழின் ... ) (2).

(திருமுருகன் வாழும் அறுபடை வீடுதினந்தோறும் கந்தன் திருப்புகழ் பாடு)அவனே கதியென வணங்கிடும்போதுஅருள்வான் குமரன் தாயன்போடுத...
04/01/2016

(திருமுருகன் வாழும் அறுபடை வீடு
தினந்தோறும் கந்தன் திருப்புகழ் பாடு)

அவனே கதியென வணங்கிடும்போது
அருள்வான் குமரன் தாயன்போடு

திருச்செந்தூரில் சக்திவேல் பெற்றான்
தேவரைக் காத்திட சூரனை வென்றான் (2)

திருப்பரங்குன்றத்தில் தேவர் குஞ்சரியின்
திருக்கரம் பற்றித் திருக்காட்சி தருவான்
திருக்காட்சி தருவான்

(திருமுருகன் வாழும் ... )

சுவாமிக்கு வேதாந்த ரகசியம் சொன்னான்

சுவாமிமலை சுவாமி நாதனென்றானான் (2)

கனிவேண்டுமென்று கனியாக வந்தான்
கனியாகி பழநியில் அருள் கூறுகின்றான்
ஞான அருள் கூறுகின்றான்

(திருமுருகன் வாழும் ... )

அழகர் மலை என்னும் பழமுதிர்ச்சோலை
அழகன் வடிவேலன் அருள்தரும் சோலை (2)

வள்ளல் போலே நல்லருள் புரிவான்
வள்ளியை மணந்த திருத்தணி முருகன்
திருத்தணி முருகன்

(திருமுருகன் வாழும் ... ) (2)

அவனே கதியென வணங்கிடும்போது
அருள்வான் குமரன் தாயன்போடு (2)

(திருமுருகன் வாழும் ... ) (2).

(திருமுருகன் தன்னை ... தெய்வமே எனப் பணிந்தால்தீவினை அகலும் ஐயா)(திருமுருகன் ... )ஐயா ... தீவினை அகலுமய்யாஒருமுறைக் குமரே...
17/12/2015

(திருமுருகன் தன்னை ... தெய்வமே எனப் பணிந்தால்
தீவினை அகலும் ஐயா)

(திருமுருகன் ... )

ஐயா ... தீவினை அகலுமய்யா

ஒருமுறைக் குமரேசன் ... திருவடி வணங்கி நின்றால்
உள்ளமே துள்ளுமய்யா (2)

உனது ... உடலெல்லாம் சிலிர்க்குமய்யா

அரனின் மகனே ... ஷண்முகனே குகன் என்றால் (2)

ஆறுதல் மலருமய்யா ... உனது ஆயுளும் வளருமய்யா

(திருமுருகன் ... )

கருணைக் கடல் அந்த ... கவின் மிகு சரவணனைக்
காண்பதில் நன்மை ஐயா (2)

உனது ... கனவெல்லாம் பலிக்குமய்யா

கிருபை செய்வாய் என்று ... கேட்டிடும் அனைவோர்க்கும் (2)

கீர்த்திகள் மலருமய்யா ... வந்த கேடுகள் மறையுமய்யா

(திருமுருகன் ... )

ஐயா ... தீவினை அகலுமய்யா.

Address

Palani
Dindigul
624619

Opening Hours

Monday 5am - 10pm
Tuesday 5am - 10pm
Wednesday 5am - 10pm
Thursday 5am - 10pm
Friday 5am - 10pm
Saturday 5am - 10pm
Sunday 5am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Palaniandavar Bala Dhandayuthapani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Palaniandavar Bala Dhandayuthapani:

Share